(Reading time: 12 - 23 minutes)

ந்த பொம்மையதான் நான் குப்பைல போட்டேனே...ஏன் இத மறுபடியும் கொண்டு வந்த?” – தேவி

“இல்லமா...இந்த பொம்மை மேல எந்த தப்பும் இல்ல....இது இனிமே என்கூட தான்  இருக்கும்.” – அரவிந்த்

Bommuvin Thedalஅன்றிலிருந்து அரவிந்தின் சந்தோஷக் காலம் ஆரம்பித்தது. பொம்மு அரவிந்தை தவிர மற்ற எல்லோருக்கும்  பொம்மையாக நடித்து வந்தாள். அவள் செய்யும் மாயாஜாலங்களுக்கும் குறும்புகளுக்கும் அளவே இல்லை. அரவிந்த் பொம்முவுடன் அவன் வாழும் சென்னையை சுற்றி காட்டினான். அவளுக்கு தெரியாத விஷயங்களை சொல்லி கொடுப்பான். சஞ்சய்யை குறிந்து அவன் கண்ணில் படாமல் நிறைய குறும்பு செய்வாள் பொம்மு. வீட்டு வேலைகளை சலிக்காமல் செய்வாள். அதிசய பொம்முவும் அரவிந்த் நெருங்கிய நட்பில் இருந்தனர்.

ஒருநாள் அரவிந்த் பொம்முவை கையில் வைத்து கொண்டு வெளியே உல்லாசமாக சென்று வர கிளம்பினான். அரவிந்த் பொம்முவுடன் தன் வீட்டின் அருகில் இருக்கும் மாந்தோப்பின் பக்கம் சென்றான்.

“ப்பா...எவ்வளோ மாங்காய்...ஒன்னு பறிக்கலாமா? ” – பொம்மு.

“ஒரு பொம்மைக்கு இதெல்லாம் ஓவர் ஆசை. தோட்டக்காரன் உள்ள எங்காவது உள்ள இருப்பான். மாட்டினோம்னா மரத்தில கட்டிவச்சுடுவான்.” – அரவிந்த்.

“என்னால சாப்பிட முடியாதுதான். ஆனா வாசனைதான் என்னோட உணவு...தயவு செஞ்சு பறிச்சு தாயேன்” – பொம்மு.

“முடியாது!” – அரவிந்த்.

“முடியாதா?...அப்போ சரி. நான் வந்த வழியில் திரும்பி போறேன். வழியில வர்றவங்க எல்லார்கிட்டயும் பேசறேன். எல்லோரும்  அலறி ஓடப் போறாங்க..கிளம்பிட்டுமா?” என்று பொம்மு வந்த பாதை பக்கம் திரும்பினாள்.

“ஏய்..அப்படி செஞ்சுடாதனு உன்கிட்ட ஏற்கனவே சொல்லிருக்கேன்!” – அரவிந்த் பதறியபடி.

“அப்போ எனக்கு மாங்காய் பறிச்சு போடு!” – பொம்மு பாடியபடி.

அரவிந்த் வேண்டாவிருப்பமாக மாந்தோப்பில் பொம்முவுடன் மெல்ல நுழைந்தான் மெல்ல சுற்றி பார்த்தபோது அங்கே தோட்டக்காரன் இல்லை.

“ம்ம்..சீக்கிரம் மரத்துல ஏறு!” – பொம்மு

“இரு “ என்று அரவிந்த் நொடிக்கு ஒருதடவை பார்த்து ஒரு மரத்தில் ஏற ஆரம்பித்தான். ஏறமுடியாமல் சருகினான். மீண்டும் ஏறினான். மீண்டும் வழுக்கியது. இப்படியே செய்துக்கொண்டிருந்த போது.

“டேய்...நீ ஏறமாட்டே.” என்று பொம்மு குரல் கொடுத்தாள். அரவிந்த் மரத்தின் மேல் பார்த்தபோது பொம்மு மரத்தில் எப்போவோ ஏறி அமர்ந்திருந்தாள்.

“ஏய்.ஏறிட்டியா?” – அரவிந்த் ஆச்சர்யமாக.

“ஆமா...நீ நாளைக்கு தான் ஏறுவனு புரிஞ்சிகிட்டேன்..நானே பறிச்சு போடுறேன்!” – பொம்மு கிண்டலாக.

“நான் எல்லா மரத்திலும் ஏறுவேன்..ஆனா மாமரத்தில ஏறினதில்ல..அதான்...சரி சரி ..மாங்காய் பறி..சீக்கிரம்” – அரவிந்த்.

 பொம்மு ஒரு மாங்காயை பறித்து கிழே போட்டாள்.

“இது உனக்கு...ஆனா எனக்கும் வேணுமே”  என்றான் அரவிந்த் மாங்காயை. எடுத்தபடி.

பொம்மு இன்னொரு மாங்கையை பறித்து போட்டாள்.

“ஒன்னுனா ஒண்ணுதான் பறிப்பியா?” – அரவிந்த்..

பொம்மு மாயாஜாலம் செய்ய உடனே மரத்திலிருந்த அத்தனை மாங்காய்களும் கிழே விழுந்தன. அரவிந்த் அதிர்ந்து போனான். பொம்மு சிரித்து கொண்டு இருந்தாள்.

“அட குரங்கே...இப்படி பண்ணிட்டியே...வா ஓடிடலாம்.” என்று அரவிந்த் பதறி ஓட ஆரம்பித்தான்.

பொம்மு சிரித்துக் கொண்டே கிழே குதித்தாள். அவள் சட்டென மாந்தோப்பை கண்ட போது அங்கே தூரத்தில் ஒரு மாமரம் பக்கத்தில் தெருவில் அவள் கண்ட அதே கருப்பு நாய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தது. பொம்மு முகத்தில் சிரிப்பு மறைந்தது. அவளுக்கு ஏதோ நியாபகம் வருவது போல் இருந்தது. அவள் நினைவுகளில் ஏதோ ஒரு போர்களத்தில் அவள் நிற்பதுபோன்ற நியாபகம் அது.

“ஏய்..பொம்மு சீக்கிரம் வா....” என்று பொம்முவை தூக்கிகொண்டு அங்கிருந்து ஓட ஆரம்பித்தான் அரவிந்த். பொம்முவின் பார்வை அந்த நாய் மேல்தான் இருந்தது. நீல வானம் மழை மேகங்களால் கருப்பாக மாற ஆரம்பித்தது.

ரவு வந்தது. மழை தூறல் பொழிந்து கொண்டிருந்தது. அரவிந்த் அவன் அறையில் டிவி பார்த்துக்கொண்டிருந்தான். சட்டென பொம்முவை கவனித்தான். அன்று முழுவதும் பொம்மு எதையோ யோசித்தபடியே இருந்தாள்.

“என்னாச்சு பொம்மு..என்ன யோசிக்கிற?” என்று அரவிந்த் டிவியை ஆப் செய்தான்.

“இல்ல... ஒரு கருப்பு நாயை அடிக்கடி பாக்குறேன். அதை பாக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு நியாபகம் எனக்கு வருது..” – பொம்மு அமைதியாக.

“என்ன நியாபகம்?” – அரவிந்த்.

“நான் ஒரு போர்களத்துள நிக்குறேன்...என்னை சுற்றி பயங்கரமா சண்டை நடக்குது...மணல் காத்து அங்க வீசுது...” – பொம்மு யோசித்தபடி.

“இது உன் கற்பனையா இருக்கும்..அது வெறும் தெரு நாய்...“  - அரவிந்த்.

“இல்ல. அந்த நாய் மேல எனக்கு எதோ ஒரு சந்தேகம்..” – பொம்மு.

 “என்ன பேசுற நீ?..நாய்கள் நம்மை பாக்குறது சாதாரண விஷயம்” – அரவிந்த்.

“இந்த நாய உனக்கு எத்தனை நாளா தெரியும்?” – பொம்மு

“அந்த நாய கொஞ்ச நாளாதான் பாக்குறேன்” – அரவிந்த்.

பொம்மு யோசிக்க ஆரம்பித்தாள். அதே நேரம் வெளியே மழையில் அந்த தெருவில் ஒரு காரின் அடியில் அந்த நாய் படுத்திருந்தது. அதன் பார்வை அரவிந்த் வீட்டு ஜன்னல் பக்கம் தான் இருந்தது.

தொடரும்

Go to Bommuvin Thedal episode # 01

Go to Bommuvin Thedal episode # 03

{kunena_discuss:697}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.