(Reading time: 28 - 56 minutes)

நாட்கள் சுமைன்றி சுகமாக மெல்ல நகர, கல்லூரி வாழ்க்கை ஒரு புறம் தேர்வு மதிப்பெண், internals என்று கழிந்தாலும், ஆட்டம், பாட்டு, கல்லூரி விழா, அரட்டை, காதல் தூது, பதிலுக்கு அரை அல்லது காதல், பேய் கட்டுகதைகள் என்று நாட்கள் கடந்தது. அன்றிலிர்ந்து நான்கு  நாட்கள் கல்லூரியில் culturals நடந்தது. ஒரு ஒரு நாளும் ஒரு ஒரு கொண்டாட்டம். ஒரு நாள் மாலை இசை நிகழ்ச்சி, ஒரு நாள் intracollege நடன போட்டி, ஒரு நாள் பாடர்களின் வருகை, ஒரு நாள் traditional day என்று நான்கு நாளும் திருவிழா கலைகட்டும். வருடம் முழுதும் அழுத்து போகும் மாணவர்கள். இந்த culturals வரும் பொழுது மட்டும் high voltage பல்பு போல பிரகாசமாக எறிவார்கள். பல கல்லூரியில் இருந்து வரும் மாணவ மாணவிகளை பார்க்கவே பகல் முழுவதும் கல்லூரியை சுற்றி வருவார்கள் அந்த கல்லூரி மாணவர்கள். பகல் முழுவதும் பாடல் dedicate செய்வது, மெகந்தி, mac donalds, dominos, cafe coffeday, என்று பல குட்டி குட்டி tent- களும், இதர அலங்கார பொருட்கள் என்று பலவித கடைகளும் கல்லூரி க்ரௌண்டை ஆக்கிரமித்து இருக்கும். இதை தவிற, மூளை வளர்க்கும் பல போட்டிகளும் காலை வேலையில் நடக்கும் ஆனால் அதுல யாருடா சேருவா எல்லாம் வேஸ்ட் என்று அழுத்துகொள்வார்கள் வேடிக்கை பார்க்கும் மாணவர்கள். அந்த போட்டிகளிலும் கலந்து certificate வாங்கும் மாணவர்களும் உண்டு...

இவை அனைத்தையும் பார்த்து கலந்து அனுபவிக்கும் கூட்டம் ஒருபுறம் இருந்தால், இதை அனைத்தையும் தயார் செய்யும் குழு ஒன்று இருக்கும், கடைசி வருட மாணவர்கள் மட்டும் தான் பொருப்பெடுக்க வேண்டும் என்றில்லாமல் எந்த ஆண்டாக இருந்தாலும் அதற்காக ஒரு தனி குழு அமைத்து இந்த நான்கு நாட்களை வெற்றி விழாவாக நடத்த போராடும் ஒரு தனி அமைப்பே உண்டு.. நோட்டீஸ் ஒட்டி, வரும் மாணவர்களுக்கு தங்க இடம் அமைத்து, போட்டிகள் நடத்தி, பரிசு தந்து, அனைத்தையும் சரியான நேரத்திற்கு நடத்தி, இந்த முயற்சிகிடையில் எதுவும் பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்ள தனி குழு வைத்து, அவர்களின் பொறுப்பே மாணவர்களுள் எங்கும் பிரச்சனைகள் செய்யாமல் பார்த்துக்கொள்ளும் spy வேலையே.. ஒருவாறு பல நாள் உழைப்பிற்கு பலனாய் culturals துவங்கியது. காலை முழுதும் நிகழ்ச்சி தொகுப்பதில் பிஸியாக இருந்த அஸ்வத் மற்றும் அவன் தோழர்கள், அனு மற்றும் அவள் தோழிகள் கூட மாலை நேரத்தில் உள்ள நிகழ்ச்சியை தவறுவது இல்லை.

““ஹே அனு சீக்ரம் ரெடி ஆகிட்டியா? இன்னைக்கு ஜி.வி ஷோ இப்படியா லேட்டா போறது? ஆடில இடமே கிடைக்காது சீக்கரம்வா”” என்று அனத்தி ஒருவழியாக தோழிகள் அனைவரும் தங்கள் கல்லூரியில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்கு சென்றனர்.    

ஓபன் கிரௌண்ட் ஆடிட்டோரியம் என்பதால் ஒரு புறம் மாணவர்கள் பாடலுக்கு ஏத்த ஆட்டம் போட்டனர். மறுபுறம் மாணவிகள் அவர்களுக்கு ஈடுகொடுத்து ஆட்டம் போட்டனர். ““எப்பா பொண்ணுங்களா இதுங்க”” என்று பெற்றோர்கள் கண்டால் முகம் சுளிக்கும் வண்ணம் தான் அங்கு ஆட்டம் இருக்கும், திடிரென்று விசில் அடிப்பார்கள், திடிரென்று கூச்சல் இடுவார்கள், அந்த கூடத்திலும் ஆடுவார்கள், ரயில் போல் பிடித்துக்கொண்டு ஓடுவார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைக்கும் ஒரே சந்தர்ப்பம் அது மட்டும்தான் என்பதால் அதை முழுதாய் அனுபவித்தனர். பல சேட்டைகள் இவர்கள் செய்ய, இவர்கள் செய்வதையும் சேர்த்து பல அடாவடிகள் செய்வார்கள் ஆண்கள். ஆட்டம், கத்துவது என்று போய்க்கொண்டிருக்க, திடிரென்று ஒருவன் மேலே பரப்பான். என்னவென்று பார்த்தால் அந்த ஒருவனை பந்தை போல் தூக்கிப்போட்டு பிடிப்பார்கள் மாணவர்கள். எப்பப்பா சொல்லி சொல்லி வாய் வலிக்கும் அளவிற்கு சேட்டைகள் ஆட்டங்கள், அரட்டைகள் எல்லாம் பார்த்தாலே தலைசுற்றும். பாடகர்கள் ஒரு பாதி பாடி மைக் கூட்டத்தின் முன் நீட்ட, மீதி பாதியை இவர்கள் பாடுவார்கள். இப்படி ஆடி பாடி உடல் முழுவதும் சோர்ந்து போகும் நிலைக்கு வந்த பின்னரே அந்த கச்சேரி முடியும்.

““நாளைக்கு காலைல சீக்கரம் எழுப்பி விட்டுடு பிருந்து, நாளைக்கு traditional day சேலை நீ தான் கட்டி விடனும் அப்பறம் உன் பாடு...”” என்று சொல்லி இழுத்து பொத்திக்கொண்டு தூங்கினாள் ஆர்த்தி.

அவள் கூறியதும், ““என்னது நான் மாட்டுமா? 6 பேருக்குமா? அனுவும் நல்லா கட்டிவிடுவா அவளையும் கட்ட சொல்லு”” என்று அவள் கொஞ்சம் அலுத்துக்கொள்ள, முகத்தில் இருந்த போர்வையை விளக்கி, ““அவளும்தான். உங்க ரெண்டு பேருக்கும் நாளைக்கு எங்களை தயார் செய்வது தான் வேலை”” என்று கூறிவிட்டு படுத்தாள் ரியா.

காலை சூரியன் சுள்ளென்று முகத்தில் பட அழுத்து தூங்கிக்கொண்டிருந்தனர் தோழிகள். ““ஹே அனு இவளை எழுப்புடி நான் போய் மத்தவங்களை எழுப்பனும், சீக்கரம் எழுப்புன்னு சொல்லிட்டு தூங்கிரதை பார்”” என்று படுத்திருந்த ரியாவை திட்டிவிட்டு நகர்ந்தாள் பிருந்து.

அதன் பின் சுழற் கடிகாரம் போல் அனைவரும் சுற்றிக்கொண்டே இருக்க, அலங்காரம் எல்லாம் பரம திருப்தியாக நடந்தது, ஒவ்வருத்தரும் ஒவ்வரு நிற புடவையில் ஒளிர்ந்தனர். (சரி நம்ம ஹீரோயினை focus பண்ணுவோம்) அனைவரையும் தயார் செய்த பின் அனுவும் ப்ருந்துவும் தயார் ஆனனர். பிருந்து பச்சை நிற காட்டன் நிறத்தில் சேலை கட்டியிருக்க, அனு மரூன் மற்றும் சாண்டல் நிறம் கலந்த சிந்தெடிக் புடைவை கட்டி அழகாக வந்தாள். மிக நேர்த்தியாக கடிகொள்ள, அவளுக்கு புடவை எடுப்பாக இருந்தது. தோழிகள் எல்லாம் பாராட்ட தன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள். அலங்காரத்தில் புரியாத ஒன்றும் உள்ளது, அலங்கரிப்பது என்னவோ தன்னைத்தான் ஆனால் அலங்கரித்துகொள்வது என்னவோ மற்றவருக்காக... அப்படி அவள் கண்ணாடியில் பார்த்துக்கொள்ள, அஸ்வத் என்ன சொல்லுவான் என்றுதான் மனம் கேட்டது அனுவிற்கு...              

நினைத்தாலும் வேகமாக நடக்க முடியாமல் அன்ன நடைபோட்டு நடந்தனர் தோழிகள். வெயில் அடித்தால் தான் பிரச்சனை என்று நினைத்தால், அன்று திடிரென்று குளிர் காற்று அடித்துக்கொண்டு இருந்தது. ஒரு புறம் அய்யோ மாலை கச்சேரி கெட்டுவிடுமே என்று ஒரு குழு வருத்தப்பட, சேலை கட்டி பொம்மைகள்ப் போல் சுற்றி வந்த பெண்களுக்கெல்லாம் சேலை பறக்கும் கவலை.. லேசாக உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் என்று மழை துளி தெளிக்க, மெதுவாக நடந்து ஒரு department வாசலில் நின்று விடலாம் என்று அனு முன்னே நடக்க, அவள் தோழிகள் அதற்கு முன்னே உள்ள department வாசலுக்கு ஓடினர். திரும்பி பார்த்து திரும்பி பின்னே நடக்கவேண்டுமா என்று அலுத்துபோனவள் சரி பிறகு பார்த்துகொள்ளலாம் என்று முன்னால் இருந்த department வாசலில் ஒதுங்கி நின்றாள் அனு.

பின்னால் இருந்து ““ஹாய்”” என்று குரல் திடிரென்று கேட்க, பயந்துப்போனால் அனு. பயத்தில் திரும்பியவள் அங்கு அஸ்வத் நிற்பதை பார்த்து முறைத்தவள், ““எப்பவும் உனக்கு இதே வேலை தானா?”” என்று கேட்டாள். முன்பு இது போல் எப்போது செய்தோம் என்று யோசித்தவன் தேஜுவின் பெற்றோரின் விழா அன்று செய்ததை கூறுகிறாள் என்று உணர்ந்து சிரித்தான்.

““It happens...”” என்று கூறி மெல்லியதாக சிரித்தான். அதன் பின் வந்த சில நொடிகள் மௌனமாகவே சென்றது. மழை கொஞ்சம் பெய்ய அதை வெறித்து பார்த்துக்கொண்டு தங்கள் நினைவுகளில் இருந்தனர் இருவரும். என்னதான் மழைக்கு சிலர் அங்கே ஒதுங்கினாலும் அவ்வப்போது அனுவின் கண்கள் அஸ்வத்தை ஆராய்வதும், அஸ்வத்தின் கண்கள் அவளை ஆராய்வதும் என்று நடந்தது. அவன் மரூன் நிற casual சட்டை, ஜீன்ஸ் அணிந்து காதில் தனது headset அணிந்து பாடல் கேட்டுக்கொண்டிருந்தான். எப்போதுமே பாடல் கேட்டுக்கொண்டிருக்கிரானே என்று அலுத்துக்கொண்டு, ஏதும் பேச இல்லாததால் மௌனமாகவே இருந்தாள். அவனாக தன் உடையை பற்றி ஏதாவது சொல்ல மாட்டனா? என்று சிறிது ஏங்கியவள், அவன் வேறுபுறமே தலையை திருப்பிக்கொண்டு இருக்க அவளும் தன் என்னத்தை கைவிட்டாள்... ஹீரோ தாவணிக்கே மயங்கியவர் ஆயிற்றே சேலைக்கு மயக்கம்தான், லேசாக மழையில் நனைந்து குளிர் காற்றுக்கு உடல் சிலிர்க்க அருகில் நின்றவளை பார்க்க மனம் தடுமாறாமல் இருந்தால் அதிசயமே என்று எண்ணிக்கொண்டு பார்வையை திருப்பிக்கொண்டான்.

சிலமணி நேர அமைதிக்கு பிறகு போர் அடிக்க, ““அப்படி என்னதான் பாட்டு கேட்கிற?”” என்று கேட்க, எதுவும் பேசாமல் ஒருபுற ஹீட்செட்டை அவளிடம் நீட்டினான்.

““மழை வருது மழை வருது...குடை கொண்டுவா....

மானே உன் மாராப்பிலே...ஹோய்

வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டுவா...

மன்னா உன் பேரன்பிலே...

மழை போலே.... பொலிந்தாய் தேனே...””

என்று இளையராஜாவின் இசையில் அந்த தருணத்தில் தன்னை மறந்தவள், அந்த பாடல் வரிகளில் சிரிப்பு வந்தாலும் வேண்டும் என்றே அவனை முறைப்பது போல் பார்த்தாள். அவனும் தான் இதற்கு பொறுப்பில்லை என்பதுபோல் தலை ஆட்டிவிட்டு ““it happens...”” என்று தோள் குலுக்கினான், அவனிடம் இருந்து பார்வை அகற்றியவள் கண்ணில் மழை நின்று லேசாக வெயில் வருவது தெரிய, எல்லாம் தானாக அமைகிறதா? இல்லை எதுவும் தந்திரமா? என்று சற்று குழம்பிப் போக வைத்தது. அவனிடம் வெறும் தலை அசைப்பில் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் அனு... போகும் வழியெல்லாம் நடந்தவையே மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்த, பொறுமையாய் தன் தோழிகளிடம் சென்றாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.