(Reading time: 28 - 56 minutes)

ல்லூரி திருவிழா செவ்வாய் முதல் வெள்ளி வரை இருக்க, தொடர்ந்து இருந்த சனி ஞாயிறு கிழமைகளை வீட்டில் கழிக்க சென்றுவிட்டனர், அனுவும் அஸ்வத்தும். என்னதான் இருவரும் ஒரே ஊருக்கு சென்றாலும் இருவரும் சேர்ந்து சென்றது இல்லை. அஸ்வத்தும் கேட்டதில்லை, அப்படி கேட்டாலும் செல்ல அனுவும் தயாராக இல்லை. என்னதான் நல்ல பிள்ளையாக இருந்தாலும் இரவில் சேர்ந்து அவனுடன் செல்ல அனு தயங்கினாள்....(நோ நோ ஹீரோவ தப்பா நினைக்காதிங்க) அனுவிற்கு எங்கே தான் விரல் சுப்புவது அவனுக்கு தெரிந்து விடுமோ என்றே பயந்தாள். அவனிடம் வேற மானம் போக வேண்டுமா என்று எண்ணிக்கொண்டு சேர்ந்து செல்லாதது நல்லதே என்று எண்ணினாள்.  

““என்னம்மா அண்ணா வரலையா?”” என்று ஆச்சர்யமாக கேட்டாள் அனு.

““சேலை எடுக்க அவன் எதுக்குடி?”” மாமியார் தோரணையில் கேட்டார் ஹேமா.

அவரை மேலும் கீழும் பார்த்த அனு, ““அதெல்லாம் உங்களுக்கு புரியாது”” என்று சொல்லிவிட்டு, ““எப்படிம்மா வராமல் இருப்பாங்க?”” என்று மீண்டும் மீண்டும் நச்சரித்தாள்.

““ஏதோ வேலை இருக்காம் அதான் வரலைன்னு சொன்னான்”” என்று பதில் தந்தார் ஹேமா.

வரலையா? தப்பாச்சே?!?! என்று தன் மூளையை கசக்கிக்கொண்டிருந்தாள். அண்ணி விட மாட்டாங்களே, கண்டிப்பா வர சொன்னதால்ல அண்ணா சொன்னாங்க. என்ன யோசித்தாலும் ஒன்றும் தோணாமல் போக சரி என்று விட்டு அவள் கிளம்ப சென்றாள். திருமணம் நிச்சயம் செய்த நாளில் இருந்து அனு தன் அண்ணனிடம் பேசுவது போல் அஹல்யாவிற்கும் பேசினாள். இருவரும் நன்றாக பழகினர். போனாபோகின்றது என்று இரவில் மட்டும் அவர்களை தொந்தரவு செய்யாமல் மற்ற நேரத்தில் எப்போது எல்லாம் தோனுகின்றதோ அப்போதெல்லாம் அழைத்து பேசினாள்.

““அம்மா நான் ரெடி””, என்ற அனுவிடம், ““நீ எதுக்கு வரனே எனக்கு புரியலை நாங்க போனா போதாதா?”” என்று ஹேமா வெளியே வந்தவாறு கூறினார்.

““ஹை நீங்க மட்டும் போய் எனக்கு ஒரு மொக்கை சேலை எடுத்துட்டு வருவிங்க, அதனால நான் கண்டிப்பா வருவேன், அப்பறம் நான் தான் என் அண்ணிக்கும் எடுப்பேன்”” என்று கூறி சேர்ந்து கிளம்பினாள்.

பிரம்மாண்டமான கடை... எல்லா கடைகளை போலவே ac பொருத்தி குளுமையாக இருந்தது. பல தளங்கள் பொருந்திய கடை அந்த தெருவிலேயே வெளிபுரமே ஈர்க்கும் வண்ணம் இருந்தது, கண்ணன் டெக்ஸ்டைல்ஸ். கிருஷ்ணருக்கு எப்படி அத்தனை பெண்களும் மயங்கினாரோ, அதே போல் அவர் பெயர் கொண்ட கடையும், கூட்டத்தை முக்கியமாக பெண்களை தன்புறம் இழுத்தது.

எல்லாவகை உடைகளும் ஒவ்வரு தளத்தில் இருக்க, பட்டு புடவை பிரிவிற்கு சென்றனர். அனுவிற்கு மிகவும் பிடித்தகடை...மெல்லியதான இசை பின்புறம் ஓடிக்கொண்டிருக்க, கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு புடவை எடுப்பதே ஒரு தனி உற்சாகம் தான் என்று தோன்றியது அவளுக்கு. ஒவ்வரு தளத்திலும் அலங்காரத்திற்காக அவர்கள் வைத்திருக்கும் தஞ்சாவூர் painting பார்ப்பதற்காகவே வரவேண்டும் என்று அவள் பல நாட்கள் நினைத்தது உண்டு.

வள் சந்தோஷமாக உள்ளே நுழைய, மனதில் அர்ஜுனை அடித்து துவைத்து வெளுத்துக்கொண்டிருந்தாள் அஹல்யா. எத்தனை தடவை சொன்னேன் கண்டிப்பா வரணும், நீ தான் புடவை செலக்ட் பண்ணி தரணும்னு ஹ்ம்ம் நல்லா ஏமாத்திட்டான். நேத்து ஃபோன் பண்ணி வேலை இருக்கு வரலைன்னு சொல்ல ஒன்னும் குறைச்சல் இல்லை என்று திட்டி தீர்த்தாள். மனதில் இவை அனைத்தும் ஓடிக்கொண்டிருக்க, அனு அவளிடம் வந்தாள் ““என்ன அண்ணி அண்ணனுக்கு சரியான பூஜை போடுறிங்க போல”” என்று வினவ, கொஞ்சம் அசடு வலிந்துவிட்டு அமைதியாக இருந்தாள்.

அவள் அருகில் அமர்ந்தவள், ““சும்மா விடாதிங்க அண்ணி, நல்லா திட்டுங்க”” என்று நன்றாக துபம் போட்டாள். அவள் எதிர் பார்த்ததுக்கு மாறாக, ““வேலை இல்லாட்டி கண்டிப்பா வந்திருப்பாரு அனு விடு பரவால்லை”” என்று அரைமனதாக கூறவும். அவளின் பதிலில் ஆச்சர்யபட்டவள் ““நீங்க எல்லாம் குடும்பம் நடத்தி ஹ்ம்ம்”” என்று தலையில் அடித்துக்கொண்டாள் அனு.  

““நானா இருந்தால் வராமல் இருந்ததுக்கு தனியா கூட்டிட்டு போய்....”” என்று அவள் இழுக்க, அஸ்வத் ஆர்வமாக அருகில் வந்து ““கூட்டிட்டு போய்????”” வினவினான். அவனது ஆர்வத்தில் சிரிப்புவர, ““நல்லா அடிபின்னிருப்பேன்....”” என்று சிரிப்பின் ஊடே கூறினாள். அவள் சொல்லிய பதிலில் அஹல்யா சிரித்துவிட, அஸ்வத்தோ ““ஹ்ம்ம் சரி சரி அதையும் பார்க்கலாம்....”” என்று அவன் ரகசியமாக சிரித்துவிட்டு நகர்ந்தான். இவர்கள் பேச்சையெல்லாம் கவனித்தவளுக்கு இவர்கள் சீண்டல்கள் பிடித்திருந்தது. இருப்பினும் அர்ஜுன் வராதது சலிப்பாக இருக்க, ஆர்வமே இன்றி சேலைகளை பார்த்தாள். சிறிது நேரம் ஓரமாக நின்று பார்த்துக்கொண்டிருந்த அஸ்வத்தின் கைபேசி சிணுங்க அவசரமாக வெளியே சென்றான்.

சிறிது நேரம் கழித்து உள்ளே வந்தவன் நேராக அஹல்யாவின் அருகே சென்று அமர்ந்தான். அவளிடம் கை பேசியை நீட்டி ““அக்கா மாமா பேசனுமாம்”” என்று கூற, கோவமாக வந்தது அஹல்யாவிற்கு, மற்றவர்முன் எதுவும் காட்டிகொள்ளாமல் காதில் வைத்தாளே தவிர எதுவும் பேசவில்லை.

““லியா சாரிடா”” என்று அவன் பம்ம, “”ம்ம்ம்ம்”” என்றது மறுபுறம்.

““வேலை இருக்குடா அதான் வரலை”” என்று கூற அவள் மீண்டும் எதுவும் கூறாமல் ““ம்ம்ம்ம்”” என்று மட்டும் கூறினாள்.

““ப்ளீஸ் ஏதாவது பேசு”” என்று அவன் கெஞ்ச, ““நான் அப்பறமா பேசுறேன் ஃபோனை வைக்குறேன்”” என்று கூறி வைத்துவிட்டாள்.

இவள் பேசுவதை கேட்டுகொண்டிருந்த அனுவிற்கும் அஸ்வத்திற்கும் சிரிப்பாக இருந்தது. அஹல்யாவின் கோவம் குறைய விடாமல் பார்த்துக்கொண்டான் அஸ்வத், ““அக்கா இந்த கலர் மாமாக்கு புடிக்கும் இல்லை.... இந்த கலர் கட்டினால் கூட அவருக்கு புடிக்கும், நீ இந்த கலர் எடு அப்போதான் அதுக்கு ஏத்த மாதிரி மாமாக்கு சட்டை எடுக்க முடியும்”” என்று திரும்பி திரும்பி அர்ஜுனை பேச்சில் இழுத்தான் அஸ்வத். அவன் சொல்லும் சேலைகளைத்தவிர மற்ற சேலைகளை பார்த்தாள் அஹல்யா. இவன் ஏன் இப்படி செய்கிறான் என்று புரியாமல் பார்த்தாள் அனு, ஆனால் அவனின் மர்ம சிரிப்பை மட்டும் கண்டுக்கொண்டாள்... ஏதோ தப்பா இருக்கே என்று யோசித்துக்கொண்டிருக்க, மீண்டும் அஸ்வத்தின் கைப்பேசி சிணுங்கியது.

இம்முறை அவன் எடுக்காமல் அழைப்பை எடுத்து அஹல்யாவின் காதில் வைத்தான். அவள் தட்டிவிட முயற்சித்தாலும் அஸ்வத் விடவில்லை. ““சரி சரி உன் கோவத்தில் இருந்து கொஞ்சம் இறங்கும்மா நான் தான் உன் பக்கத்திலேயே இருக்கேனே”” என்று அர்ஜுன் கூற, சிறிது யோசித்தவள், ““போதும் உங்க விளையாட்டு ஃபோனை வைங்க அப்பறம் பேசுறேன்”” என்றாள்.

ஆனால் அர்ஜுன் விடவில்லை, ““அட என் அருமை மனைவியே பின்னாடி பாரு”” என்று கூற, அவனது வார்த்தைகளை நம்ப முடியாமல் திரும்பினாள். அரக்க பறக்க பேருந்தில் வந்த களைப்பில் இருப்பான் என்று பார்த்தாள் ஒய்யாரமாக பக்கா கெட்டப்பில் இருந்தான் அர்ஜுன். ஆனால் அவை எவையும் அவள் கண்களில் படவில்லை அர்ஜுன் வந்துவிட்டான். தான் கோவபடுவேன் என்று தெரிந்தமையால் வந்திருக்கிறான் என்று தோன்றவும் மனம் முழுவதும் நிறைந்தது. இவர்கள் இருவரும் பார்வை பரிமாறிக்கொள்ள, ஹேமா விசாரித்தார்.

““எப்போ அர்ஜுன் வந்த? ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லை”” என்றார்.

““இல்லைம்மா திடிர்னு கிளம்பினேன், நான் கிளம்பும் போதே ரொம்ப நேரம் ஆகிடுச்சு அதான் சொல்லலை சரி வரது surprise ஆ இருக்கட்டும்னு அஸ்வத்கிட்ட மட்டும் சொன்னேன்”” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து அஸ்வத், அஹல்யா, அனு இருக்கும் இடத்திற்கு வந்தான்.

அஹல்யா அர்ஜுன் அருகே வரவும் படபடப்பாக இருக்கவும், திரும்பி சேலைகளில் கண் செலுத்தினாள். அருகே வந்தவனை அனு தடுத்தாள், ““எனக்கு ஒரு டவுட்”” என்று கூற, ஆசையாய் வந்தவன் அவளை முறைத்தான்.

““என்ன?””

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.