(Reading time: 28 - 56 minutes)

சிணுங்கிய பாடலை வைத்தே சகோதரிகளுக்கு புரிந்துப் போக கிண்டல் செய்தனர். அவர்களுக்கு முன் பேச கூச்சப்பட்டு கைபேசியை எடுத்துக்கொண்டு அறையின் ஓரம் இருந்த சன்னலின் அருகே சென்றாள்..

““ஹாய் பொண்டாட்டி”” மனம் முழுதும் காதலோடு, கண் முழுதும் கனவுகளோடு அவன் குரல் கிறங்கி அழைக்க, அஹல்யா வெட்கத்தை வெளியே காட்ட முடியாமல் தவித்தாள். அவள் பேசாமலிருக்க, ““ஹே இருக்கியாடி... என் பொண்டாட்டி”” என்று வேண்டும் என்றே “டி” போட்டு அவன் அழைக்க, அதை ரசித்தவண்ணம் ““ம்ம்ம்ம்”” என்று கூறினாள்.

“”ஹலோ இது என் பொண்டாட்டி தானே”” அவன் வேண்டும் என்றே கேட்க, மீண்டும் ““ம்ம்ம்ம்”” என்றே பதிலே வந்தது... அவள் வெட்கத்தை அதிகபடுத்தும் வகையிலே பேசிக்கொண்டே இருந்தான் அர்ஜுன்.

““இது என் செல்ல லியா தானே...”” என்று மீண்டும் அவன் கொஞ்ச இம்முறை வெட்கத்தோடு சேர்ந்து அவளுக்கு சிரிப்பும் வந்தது. பதில் சொல்லாமல் அவள் சிரிக்க, அவள் சன்ன சிரிப்பை ரசித்து கேட்டான்.... ““இது...”” என்று அவன் மீண்டும் ஆரம்பிக்க, ““ஐயோ போதும் அஜு என்னால முடியலை”” என்று வெட்கப்பட்டு ஜன்னலோடு ஒட்டிக்கொண்டாள் அஹல்யா.

சிறிது நேரம் மௌனத்தில் கரைய, ““நான் வைக்கவா....?”” என்று அஹல்யா கேட்டாள்.

““அதுக்குள்ளயுமா?””

““ம்ம்ம்ம்... நாளைக்கு கொஞ்சம் வேலை இருக்கு, காலைல சடங்குனு சொன்னாங்க தூங்கனும் இல்லை....””

““ஹ்ம்ம்ம்ம்ம்ம் வைக்கணுமா.....””

““கண்டிப்பா....””

““லியா....””

““ம்ம்ம்ம்...””

““கொஞ்ச நேரம் பேசேன்....””

““இன்னும் ஒரு நாள் தான், அடுத்த நாளே நான் உங்க மனைவி. சோ, கொஞ்சம் பொறுமையா இருக்கலாமே...””

““சரி.....””

““வைக்கவா?””

““நீ என்ன வைக்குரதிலேயே குறியாய் இருக்க??”” என்று கொஞ்சம் அலுத்துக்கொண்டான் அர்ஜுன்.

““ஹய்யோ புரிஞ்சுகோங்க எல்லாரும் இருக்காங்க...”” என்று ஒருவழியாக பேசி கெஞ்சி அவனை அழைப்பை வைக்க செய்தாள்...

““ஹே கிளம்பிட்டியாடி?”” என்று அனு கேட்க.

““ஆச்சு ஆச்சு பஸ் ஏறிட்டோம், விடிய காலைலேயே திருப்பூர் வந்திடுவோம்...”” ஜன்னலோரம் அமர்ந்து வேடிக்கை பார்த்தவண்ணம், நிரஞ்ஜன் அருகில் அமர்ந்திருந்த தேஜு பேசினாள். 

““என்ன நீ ஏறிட்டோம் வந்திடுவோம்னு சொல்லுற? வேற யாரு உன்கூட வரா?”” என்று அனு புரியாமல் கேட்டாள்..

அவள் கேட்டதில் நாக்கை கடித்துக்கொண்டு, ““அப்படியா சொன்னேன்?!?! அப்படியெல்லாம் இல்லையே நான் மட்டும் தான் வரேன்”” சமாளித்தாள் தேஜு.

““ம்ம்ம்ம்ம் சரி பார்த்துவா... தனியா வேறவர... வரதும் வர ஒரு வாரம் முன்னாடி வர சொன்னாள். கடைசி நேரத்தில் வரதை பாரு”” என்று கிடைத்த நேரத்தில் திட்டினாள் அனு.

““சரி சரி விடுடி..”” என்று எப்போதும் போல் சமாளித்து அழைப்பை துண்டித்தாள்.

““என்ன ஸ்ரீ, அனுகிட்ட நீ இன்னும் என்னை பத்தி சொல்லலையா?””

““இல்லை ஒரு surpriseஆ இருக்கட்டுமேனு சொல்லலை”” என்று மனதில் உற்சாகத்தோடு கிளம்பி வந்துக்கொண்டிருந்தனர் தேஜுவும் நிரஞ்ஜனும்...

தே நேரம் அர்ஜுனின் வீட்டில் அவன் அறையில்....

““எங்கே செல்லும் பாதை....

யாரோ யாரோ அறிவாரோ... “”

என்று தன் கணீர் குரலில் பாடினான் நவீன். அவனது பாடலை கேட்டு காதை போத்திக்கொண்டவன் ““ஏன்டா என்னை கொல்லுற?”” என்று அலுத்துக்கொள்ள... ““எல்லாம் உனக்கு நியாபகம் படுத்ததான். மவனே.... உன் கல்யாணம் முடிஞ்சதும் என் கதையை மறந்தினா, இரவில் உனக்கு ஃபோன் போட்டு இப்படிதான் பாடுவேன் ஜாக்கிரதை”” என்று அவன் மிரட்ட... எல்லாவற்றையும் தாங்கிகொள்ளலாம் இவன் பாடுவதை யார் கேட்பது என்று எண்ணிக்கொண்டு இவனுக்கு ஒரு வழி பண்ணனும்... என்று முடிவு செய்தான் அர்ஜுன்...

““அம்மா இந்தாங்க இந்த மாத்திரையை போட்டுகோங்க...”” என்று தண்ணீரோடு மாத்திரையை தந்தாள் அர்ச்சனா...

““நாளை மறுநாள் தானேம்மா அஹல்யாவுக்கு கல்யாணம்?””

““ஆமா அம்மா உங்களை கண்டிப்பா கூட்டிட்டு வர சொன்னா... அதனால எப்பவும் போல காரணம் சொல்லாம ஒழுங்கா சமத்தா கிளம்பி வாங்க..”” என்று அன்புகட்டளை போட்டாள் அர்ச்சனா.         

““கண்டிப்பா போகணும் அர்ச்சு... அந்த பொண்ணு இல்லைன்னா நம்ப இப்படி சகஜமா இருந்திருப்போமா?”” என்று குரலில் சோகத்தின் சாயல் தெரிய எதிரில் இருந்த, இறந்த தன் கணவரின் புகைப்படத்தை பார்த்துக்கொண்டார் அவளது தாய் அன்புக்கரசி....

““சரிம்மா நீங்க தூங்குங்க எதையும் யோசிக்காம படுங்க...”” என்று கூறி விளக்கை அணைத்துவிட்டு அவர் அருகில் படுத்துகொண்டாள் அர்ச்சனா...         

Go to Kadhal payanam # 11

Go to Kadhal payanam # 13

பயணம் தொடரும்...

{kunena_discuss:676}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.