(Reading time: 28 - 56 minutes)

““ங்களை பார்த்தா அரக்க பறக்க வந்தவர் மாதிரி தெரியலையே?”” என்று அவள் வினவ, அவன் அஸ்வத்தை பார்த்தான். பதிலுக்கு சிரித்த அஸ்வத் ““எல்லாரும் இங்க வந்திட்டோம், உங்க வீடு பூட்டி இருக்கும் அதனால் நான் தான் மாமாவை எங்க வீட்டுக்கு அழச்சிட்டு போனேன், மாமா ரெடி ஆனதும் ஆட்டோவில் வந்திட்டோம், surprise தரத்துக்காக மாமா கொஞ்சம் நேரம் கழித்து வந்தார்”” என்று கூறினான்.

““இப்போது உன் சந்தேகம் முடிந்ததா?”” என்று அர்ஜுன் ஒரு அடி முன்னே வைக்க, ““இல்லை ஒரு குறை இருக்கு”” என்றாள். என்ன என்பது போல் அவன் பார்க்க, ““இதை என்கிட்ட சொல்லிருக்கலாமே, அஸ்வத்கிட்ட சொல்லிருக்கீங்க”” என்று அவள் சிறுபிள்ளை போல் சிணுங்க, அதை கண்டு அஸ்வத்திற்கு சிரிப்பாக இருந்தது.

““யாரு உன்கிட்ட தானே??? உன் அண்ணி பாவம்னு முதல் ஆளாய் அஹல்யாகிட்ட சொல்லிருப்ப”” என்றான் அர்ஜுன். அவன் கூறியது உண்மைதான் என்று தோன்றவே அவனை அஹல்யாவிடம் விட்டுவிட்டு சேலைகள் பார்க்க திரும்பினாள் அனு.

சோகமாக திரும்பியவளிடம் “”ஹே வாயாடி நீ பாட்டுக்கு நான் அவங்க வீட்டுக்கு தான் போனேன்னு அம்மாகிட்ட உளறிடாத நான் என் ப்ரிண்டு வீட்ல ரெடி ஆனேன்னு சொல்லிக்குறேன்”” என்று அர்ஜுன் கூற, “”ஹ்ம்ம் அது எனக்கே தெரியும்”” என்று சிலிர்த்துக்கொண்டாள் அனு. ஹேமாவிற்கு தெரிந்தால் கல்யாணத்திற்கு முன்பே அங்கு சென்றமைகெல்லாம் திட்டு விழும் என்பதால் அந்த விஷயம் அந்த நால்வருக்குலேயே இருந்தது.

அதன் பின் முகுர்த்த பட்டு, நிச்சயதார்த்த பட்டு என்று ஒவ்வரு சடங்கிற்கும் சேலைகள் தேர்ந்தெடுத்தனர் அஹல்யாவும் அர்ஜுனும். ஒவ்வொன்றாக அவள் வைத்து பார்க்க, அர்ஜுன் எது எடுப்பது என்று பார்த்து பார்த்து தேர்வு செய்தான். மணப்பெண் கூட விரைவில் தேர்ந்தெடுத்து முடித்தாயிற்று ஆனால் தன் முன் நான்கு சேலைகளை வைத்து பார்த்தவண்ணம் குழம்பி போயிருந்தாள் அனு. தான் சொன்னாள் ஏதாவது மறுப்பு கூறுவாள் அவளே தேர்ந்தெடுக்கட்டும் என்று ஹேமா அழுத்து நகர்ந்து செல்ல, அஸ்வத் அருகே வந்தமர்ந்தான். அவனை ஒருமுறை பார்த்துவிட்டு சேலையை மீண்டும் பார்க்க துவங்கினாள் அனு. அவள் செயல்கள் அனைத்தும் அவனுக்கு சிரிப்பாக இருந்தது. எப்படியோ இருவரும் சேர்ந்து அலசி இரு புடவைகள் தேர்ந்தெடுத்தனர்.

ஒன்று சிகப்பு நிற சேலையில் உடல் முழுவதும் கொடிபோன்று அலங்கரித்து வெகு நேர்த்தியாக செய்யபட்டிருந்தது. இன்னொரு புடவை ரோஜா பூ நிறத்தில் அங்காங்கே சிறு ரோஜா போன்று அலங்கரித்து அழகாக இருந்தது. இரண்டுமே அனுவிற்கு பிடித்திருந்தது. முன்பே கல்யாணத்தன்று கட்ட வேண்டியவற்றை எடுத்தமையால் ஒரு புடவை மட்டும் தான் வாங்கவேண்டும் என்று ஹேமாவின் கட்டளை எனவே வேறு வழியின்றி யோசித்துக்கொண்டிருந்தாள். அங்கு வந்த ஹேமா, இரண்டின் விலையையும் பார்த்துவிட்டு ரோஜா நிற புடவையை வாங்கும்படி கூறி சென்றார். என்னதான் சம்பந்தியின் கடை என்றாலும் விலை கொடுக்காமல் வாங்க அவர்களுக்கு மனம் இல்லை எனவே அனுவை ஒரு புடவை வாங்க சொல்லி கூறினார் ஹேமா. அவர் கூறி சென்றுவிட, அனுவிற்கு தான் ஏக்கமாக இருந்தது. இனி வாங்க முடியாது என்று தோன்றிவிட ரோஜா நிற சேலையை மட்டும் தேர்வு செய்தாள் அனு.

வெளியே வந்ததும் அந்த நினைப்பே அனுவிற்கு மறந்துப் போக, நால்வரும் சேர்ந்து ஒரு திட்டம் போட்டனர். அனு வெங்கட்டையும், அஸ்வத் துளசியையும் அணுகினர். ““ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் நான்தான் கூட போகிறேன்ல ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்  சீக்கரம் வந்திருவோம்....””என்று நச்சரித்து ஒருவழியாக permission வாங்கி நால்வரும் அருகில் உள்ள ஒரு restaurant சென்றனர். போகும் வழியெல்லாம் ஒரே சிரிப்பும் சத்தமும் தான். கூட்டம் அதிகம் இல்லாத, மெல்லிய விளக்கொளியில் குளுமையாக இருந்தது அவர்கள் சென்ற restaurant. அஹல்யா அமர்ந்ததும் அனு அவள் அருகில் அமர செல்ல அர்ஜுன் பாவமாக பார்த்தான். அவனின் முகத்தை பார்த்து தலையில் அடித்துக்கொண்டவள் எதிர்புறும் அஸ்வதிற்கு அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

உணவினை ஆர்டர் செய்து சாப்பிட துவங்கினர். எதிர்புறம் இருப்பவர்கள் என்ன பேசுகிறார்கள் என்றே புரியவில்லை, அர்ஜுன் சன்ன குரலில் ஏதோ கூற, அஹல்யா அதற்கு வெட்கப்பட என ஒரு குறும்படம் போனது. இவற்றை பார்த்துக்கொண்டிருந்த அனுவிற்கு ஒன்றுமே புரியவில்லை. திரும்பி பார்த்தால் அஸ்வத்தும் தனது கைபேசியில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தான். இவன் ஒருத்தன் செல்லே கதின்னு இருப்பான் என்று எண்ணிக்கொண்டு மெதுவாக உண்டுகொண்டிருந்தாள். இவள் அமைதியாய் அமர்ந்திருப்பதை பார்த்தவன்.

““எதிர்ல இருக்கவங்க எப்படி பேசிட்டே இருக்காங்க உனக்கு ஒரு வார்த்தை பேச தோணலையா?”” என்று சாப்பிட்டுக்கொண்டே கேட்டான்.

தன் கேட்கவேண்டியதை இவன் கேட்கிறானே என்று கோவம் வர, ““போடா சாப்பாட்டு ராமா.... நல்லா தின்னு ஹ்ம்ம் உன்கிட்டே பேசி பேசி போர் அடிக்குது அதான்”” என்றுகூறி திரும்பிக்கொண்டாள்.

““ஆமா இவள் பெரிய இவள் ஹ்ம்ம், போடி ஒட்டடைக்குச்சி...””

““நீ பேசாத போடா””

““நீ போடி””

இப்படி சில்லிதனமாக இருவரும் சண்டை போட்டுக்கொள்ள எதிரில் இருந்த இருவரும் உண்பதை நிறுத்திவிட்டு இவர்களை பார்த்துக்கொண்டிருந்தனர். அதுவும் அஹல்யா கன்னத்தில் கைவைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்... இருவரும் அமைதியாகிவிட, ““ஏன்டி இப்படி சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறிங்க?”” என்று அலுத்துக்கொண்டான் அர்ஜுன்.

““நான் ஏதும் பண்ணலை இவன் தான்”” என்று அவள் அஸ்வத் பக்கம் கை காட்ட, அவன் பதிலுக்கு ““நான் என்ன பண்ணேன் நீ தான் முதல ஆரம்பித்தாய்”” என்று மீண்டும் துவங்கினர். இருவரின் செயலும் மற்ற இருவருக்கும் சிரிப்பைதர, ““நீங்க எப்பவும் இப்படி தான் சண்டை போட்டுகிட்டே இருப்பிங்களா?”” என்று சிரித்துக்கொண்டே அர்ஜுன் வினவினான்.

அவனுக்கு பதில் தராமல் இருவரும் அமைதியாக சாப்பிட்டுக்கொண்டிருக்க, ““சண்டை மட்டும் தானே நீங்க பார்த்திருக்கிங்க? நான் அதுக்கு மேலயும் பார்த்திருக்கேன்”” என்று ரகசியமாய் அவர்களைப் பார்த்து கண் அடித்தவாறு அவள் கூற, அஹல்யா திருவிழா அன்று நடந்ததை கூறுகிறாள் என்று உணர்ந்த இருவருக்கும் ஒரே சமயத்தில் புரையேறியது இருவரும் அவளை பார்க்காதது போல் தண்ணீர் அருந்த, அனுவின் கண்கள் மட்டும் தன் அண்ணியிடம் கெஞ்சியது... பதில் வராமல் இருக்க அர்ஜுன் குழப்பத்துடன் அஹல்யாவை பார்த்தான், அவள் ஒன்றுமில்லை என்பது போல் தலை அசைத்து, பேச்சை மாற்றினாள்.            

ஒருவாறு நால்வரும் நல்ல ஆட்டம் போட்டு அவரவர் வீட்டிற்கு திரும்பினர். அதன் பின் நாட்கள் வேகமாக செல்ல மாதங்கள் வாரங்கள் ஆயின, வாரங்கள் நாட்கள் ஆயின, நாளை மறுநாள் திருமணம் என்ற நேரத்தில் வந்து நின்றது... அப்பறம் என்ன, வீட்டில் முறைப்படி பார்த்து திருமணம் நடக்கிறது அதுவும் மனதிற்கு பிடித்த அவர்களது மனம் கவர்ந்தவர்களோடு... தூக்கம் வருமா??? சந்தேகம் தான்.... பலநாள் ஏங்கிய ஒன்று இன்னும் இரண்டு நாளில் முடிகிறது சந்தோசஷத்தில் தலை கால் புரியவில்லை அஹல்யாவிற்கும் அர்ஜுனுக்கும். விடுமுறை வாங்கியாயிற்று, பந்தக்கால் நட்டாயிற்று, மனபெண்ணின் கைகள் முழுதும் மருதாணியால் கோலங்கள் போட்டாயிற்று, சொந்தங்கள் வந்தாயிற்று இப்படி பலது நடந்தாயிற்று... மனமும் சந்தோஷத்தின் உச்சில் நின்று ஆடியது...

நாளை மறுநாள் திருமணம், தன் சகோதரிகளோடு தன் அறையில் படுத்திருந்த அஹல்யாவை வாய் நிறுத்தாமல் கிண்டல் செய்தனர். அனைவரை பொறுத்தவரை அஹல்யாவிற்கு இது வீட்டில் பார்த்து செய்த சம்பந்தம், அந்த வீட்டில் உண்மை அறிந்த ஒரே ஆள் அஸ்வத் மட்டுமே. அர்ஜுன் கேட்டுக்கொண்டபடி அவனது பெற்றோரும் அவர்களின் காதலை பற்றி யாரிடமும் சொல்லிகொள்ளவில்லை. சொல்லிகொள்வதில் தவறில்லை என்றாலும், வரவர்கள் சேர்ந்தவர்களை நினைத்து வாழ்த்தாமல் காதலித்ததையே குறியாக சொல்லிக்காட்டி புறம் பேசுவார்கள்.. முன்னாடியே லவ் பண்ணாங்களாம் என்றில் துவங்கி கதை வெவ்வேறு பக்கம் செல்லும் எனவே யாரிடமும் எதுவும் கூறிக்கொள்ளவில்லை ரகசிய காதலர்கள்.... 

அஹல்யாவின் கைபேசி சிணுங்கியது...

““காதல் கணவா உன்னை கைவிட மாட்டேன்....

சத்தியம் சத்தியம் இது சத்தியமே...””

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.