(Reading time: 17 - 34 minutes)

நிலாயுகத்தின் காட்டுப்பகுதியின் எல்லைப்பக்கம் அது.  அங்கே ஆடுகளும் மாடுகளும் அங்கே நிறைந்திருந்த புற்களை மேய்ந்துக் கொண்டிருந்தன. மாதவனின் வண்டி அங்கே இருந்தது. ஆனால் மாதவன் அங்கே இல்லை. அரவிந்த் அங்குள்ள குதிரைகளுக்கு கொல்லு வைத்துக்கொண்டிருந்தான். அந்த இடமே அழகாக இருந்தது. அரவிந்த் காலில் உள்ள காயமும் மறைந்திருந்தது.

“அவனிடம் அங்கே மறைவாக வந்த ராஜேந்திரன் “காயத்தை குணப்படுதிடாங்களா அரவிந்த்?” என்று கேட்டான்.

“பதறி திரும்பிய அரவிந்த்  ராஜேந்திரனை விநோதமாக பார்த்தான்.

“எனக்கு பொம்முவை தெரியும்....நான் கழுகுகளின் அரசன் ராஜேந்திரன்...உன்ன காப்பாத்த வந்திருக்கேன்...வா போகலாம் ” – ராஜேந்திரன் அரவிந்த் கையை பிடிக்க முயன்ற போது

அரவிந்த் எதையும் கேட்காதது போல மீண்டும் குதிரைகளுக்கு கொல்லு வைத்து கொண்டிருந்தான். கோவம் கொண்ட ராஜேந்திரன் அரவிந்தின் சட்டை பிடித்தான்.

“ஏய் முட்டாள்...நான் உன்ன காப்பாத்த வந்திருக்கேன்....உன்னை எதிர்பார்த்து அங்கே பொம்மு காத்திட்டு இருக்கா” – ராஜேந்திரன். கோவமாக.

“அப்போ எங்க அவ?...ஏன் என்னை காப்பாத்த வரலை?” – அரவிந்த் முறைத்தபடி.

“நான்தான் அவளை என்கூட வரவேணாம்னு சொன்னேன்....” – ராஜேந்திரன் அவன் சட்டையை விட்டார்.

“ரொம்ப நல்லாருக்கு கேட்க....ஆனா இனி அந்த பொம்மைய நம்பி நான் எங்கும் வரமாட்டேன்....” – அரவிந்த்.

“ஏய்...என்ன ஆச்சு உனக்கு?...நீ யாரு பக்கம் போயிருக்க தெரியுமா? ஜென்மங்களை அழிக்கிற மோசமான சூனியக்காரி அந்த ஷானுதா...நேரம் வந்தா உன்னையே கொன்னுடுவா” – ராஜேந்திரன் சத்தமாக.

“அவங்க கூட போனேன் என் காயத்தை குணபடுத்திடாங்க...இன்னும் கொஞ்ச நாளில என்னை இங்கிருந்து என் வீட்டுக்கு அனுப்புறதா சொல்லிருக்காங்க....அதனால இனி நீங்க என்னதான் சொன்னாலும் என்னால அந்த சுயநல பொம்மைய மறுபடியும் பாக்க வரமாட்டேன்.” – அரவிந்த்.

“நேத்து ராத்திரி நீ முழிச்சு பாக்கும் போது பொம்மு காணாம போனதால தான நீ அவள் மேல நீ கோவமா இருக்க?....நான்தான் பொம்முவோட ஒரு இடத்துல பேசிகிட்டு இருதேன்....அப்போதான் அந்த ஷானுதாவும் அவளோட காடேரிகளும்க் அங்க வந்திருக்காங்க....பொம்மு மேல எந்த தப்பும் இல்ல...அவ உன்னை இப்போ எதிர்பாத்துகிட்டு இருக்கா அரவிந்த்” – அரவிந்த் பொறுமையாக.

ஆனால் அரவிந்த் முகத்தில் அதே முறைப்பு இருந்தது, அவன் மனது மாறவில்லை.

“என்னால வரமுடியாது....மாதவன் எனக்கு தெளிவா புரிய வச்சான்.....பொம்மு என்னை பத்தி கொஞ்சம் கூட கவலைபடாம. அவளோட வாழ்கையை ஆராய்ஞ்சுக்கிட்டு இருக்கா...இனி அவகூட நான் சேரமாட்டேன்..நான் சீக்கிரம் என் வீட்டுக்கு போகணும்னா மாதவன் சொன்னபடி நான் வேலைய  செஞ்சாகனும்...” – அரவிந்த்.

“என்ன சொல்ற? அவங்க உனக்கு என்ன வேலை செய்ய சொல்லிருக்காங்க?” – ராஜேந்திரன் அதிர்ச்சியுடன்.

“அதை உங்க கிட்ட சொல்ல முடியது!” – அரவிந்த்.

“அரவிந்த்....நீ எவ்வளோ பெரிய ஆபத்துல சிக்கிருக்கனு உனக்கு...” – ராஜேந்திரன் சொல்லும்போதே அவன் முன் பல்லிளித்தபடி வந்து நின்றான் மாதவன்.

“அவன்தான் உன்கூட வரமாட்டேன்னு சொல்லிட்டானே....அவனை எதுக்கு தொந்தரவு பண்ற?” – மாதவன் தன் கையில் குச்சியை வைத்து விளையாடிபடி.

“பொடிபயலே...மாதவா.....நீ அந்த ஷானுதாவோட வேலைகாரன்னு எனக்கு முன்னாடியே சொல்லிருந்தினா நீ சொன்ன வேலைகளை செய்திருக்க மாட்டேனே....” – ராஜேந்திரன் பல்லைகடித்தபடி.

“ஓ!....பொம்முவுக்கு நிலம் தொட்ட நியாபக வித்தையை சொல்லி குடுத்திட்ட போல?...அவள்தான் எல்லாத்தயும் உனக்கு சொன்னாளா?” – மாதவன் சிரித்துக்கொண்டே..

“டேய்....மாதவா....நடக்குற எல்லா குழப்பத்துக்கும் நீதான் காரணம்னு எனக்கு தெரியும்...நீ பண்ண போற பாவங்களுக்கு உனக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்....” ராஜேந்திரன் ஆத்திரமாக.

“கிடைக்கட்டும் கிடைக்கட்டும்! கிளம்பு!” – மாதவன் கண்டுகொள்ளாமல்.

ராஜேந்திரன் அங்கிருந்து கிளம்பும் முன் அரவிந்தை பார்த்தான்.

“உன்னை பொம்மு ரொம்ப நம்பினாள்...ஆனா  நீதான் துரோகி!” – ராஜேந்திரன்.

ந்த குட்டிச்சாத்தான் கோக்கியும் அதன் நண்பர்களும் பொம்முவிடம் மன்னிப்பு கேட்டன. அதுமட்டுமில்லாமல் அவை தங்களது இருப்பிடத்துக்கு போம்முவை அழைத்து சென்றன. குட்டிச்சாத்தான்கள் வாழும் இடம் நிலத்தில் பொந்து வழியை கொண்டிருந்தது. அந்த பாதை ஒரு பெரிய  குகைப்போன்று இடத்துக்கு வந்தது. அங்கே எங்கேயும் குட்டிச்சாத்தான்கள் நிறைந்து காணப்பட்டன. அவைகள் எல்லாமே ஒரே குடும்பமாக இருந்தது. அங்கே கோக்கியுடன் பொம்மு வருவதை கண்ட அத்தனை குட்டிச்சாத்தான்களும் பொம்முவை அதிர்ச்சியுடன் கண்டன. குட்டிச்சாத்தான்கள் தங்கள் இனத்தைவரை தவிர வேறெதையும் உள்ள அனுமதிக்காது என்பதை பொம்மு அவைகளின் பார்வையிலேயே புரிந்துக் கொண்டது. அங்கே ஒரு வயதான குட்டிச்சாத்தான் ஒன்று கம்பை பிடித்து நடந்து வந்தது.

“டேய் கோக்கி...என்ன இது பொம்மை? இங்க நம்மளை தவிர யாரும் உள்ள இருக்ககூடாதுன்னு உனக்கு தெரியாதா?” – அந்த வயதான குட்டிச்சாத்தான்.

“என்னை மன்னிச்சுடுங்க.....நான் இங்க வந்திருக்க கூடாதுதான்...இந்த கோக்கி ஒரு ராட்சத செடிகிட்ட மாட்டிகிச்சு....நான் அதை காப்பாத்தினேன்....உங்களை சந்திச்சிட்டு போகணும் கோக்கிதான் சொல்லிச்சு....அதான் வந்தேன்....” – பொம்மு திரும்பி செல்ல முயன்றாள்.

உடனே அந்த வயதான குட்டிச்சாத்தான் பொம்முவை தடுத்தார்.

“என்னை மன்னிச்சிடுங்க....நீங்க என் பேரனை காப்பதிருக்கீங்க...உங்களுக்கு எப்பாடு நன்றி சொல்றது?” - வயதான குட்டிச்சாத்தான் பொம்முவின் கைகளை பிடித்தது.

“இருக்கட்டும்...இது ஒரு எதிர்ச்சிதான்...” – பொம்மு சிரித்தபடி.

“என் பெயர் சியாத்....இந்த குட்டிச்சாத்தாங்களக்கு தலைவரா இருக்கேன்....நீங்க யாரு? எதுக்காக இந்த காட்டில வந்திருக்கீங்க?” - வயதான குட்டிச்சாத்தான்

“நான் இதுக்கு முன்னாடி இந்த நாட்டோட அரசன் மகேந்திரன்...இப்போ என் பெயர் பொம்மு...இந்த காட்டில அமிர்தத்தை தேடி வந்தேன்...” – பொம்மு சாதரணமாக.

பொம்மு கூறியதை கெட்ட அங்கிருந்த அத்தனை குட்டிசாத்தான்களும் ஆச்சர்யத்துடன் ஏதோ கிசு கிசுவென பேச ஆரம்பித்தன. அந்த வயதான குட்டிச்சாத்தான் சியாத்தும் போம்முவை ஆச்சிரியமாக பார்த்தார்.

“என்ன? சொல்றீங்க?...நீங்க அரசர் மகேந்திரனா?....அரசர் இறந்திட்டார்னு தானே நாங்க கேள்விப்பட்டோம்?” – சியாத் கண்கள் விரித்தபடி

“நான் இன்னும் இறக்கலை....இப்போ நான் பொம்முவா இருக்கேன்” – பொம்மு கூறியவுடன் அத்தனை குட்டிச்சாத்தான்களும் பொம்முவின் கால்களில் விழுந்தன. போம்முவு அதிர்ச்சியில் ஒன்றும் புரியவில்லை. எல்லா குட்டிச்சாத்தான்களும் தெய்வம் போல பார்த்தன.

“என்ன ஆச்சு?” – பொம்மு  மூச்சு வாங்கி.

“உங்களோட போன ஜென்மத்தில ஒரு குட்டிச்சாத்தானா பிறந்தீங்க.....நீங்க எங்களுக்கு ராஜாவா இருந்தீங்க...எங்களை காக்குற கடவுளா எங்ககோட வாழ்ந்து வந்தீங்க...உங்க பெயர் தான் விஹான்...நான் உங்க மகன் நான்.” என்று சியாத் போம்ம்மு முன் மண்டியிட்டார்.

பொம்மு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தாள். தன்னுடைய ஐந்தாவது ஜென்மத்தில் அவள் “விஹான்” என்னும் பெயர் கொண்ட  ஒரு குட்டிசாத்தானாக பிறந்திருக்கிறாள். 

தொடரும்

Go to Bommuvin Thedal episode # 06

Go to Bommuvin Thedal episode # 08

{kunena_discuss:697}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.