(Reading time: 34 - 67 minutes)

நான் உன்கிட்ட ஒன்னு சொல்லனும்...” என்று அவன் துவங்க சிறிது நேரம் அவனையே பார்த்தவாறு அமைதியாய் இருந்தவள் அவன் செய்தி புரிந்துவிட சிறு புன்முறுவலோடு “எல்லாரும் வெயிட் பண்ணுவாங்க வா உள்ளே போகலாம்” என்று கூறி முன்னே நடந்தாள். அவளுக்கு தான் சொல்ல வந்தது புரிந்ததா இல்லையா என்றே ஒரே குழப்பம் இருப்பினும் அவளது புன்முறுவல் ஏதோ ஒரு இதத்தை தரவும் வேறேதும் கூறாமல் கூடவே நடந்தான்.

அவர்கள் மௌனமாக வாயிற்புரம் வரவும், அவர்களுக்காக தேஜுவும், நிரஞ்ஜனும் காத்திருப்பது தெரியவும் இப்போது சங்கடப்படுவது அனுவின் முறையாயிற்று. அவள் குனிந்தவாறே உள்ளே நுழைய தோழியின் கையை பிடித்துக்கொண்டு முன்னே சென்றாள் தேஜு.

“என்ன மேடம் செம romance போல?” என்று கண்ணடித்து கிண்டல் செய்த தோழியை பதிலுக்கு சீண்டினாள் அனு, “உன் அளவுக்கு இல்லை தேஜு” என்று அவள் கூறி சிரிக்க, தேஜுவும் சேர்ந்துக்கொண்டாள்.

முன்னே இவர்கள் சிரித்துக்கொண்டே போக, நிரஞ்ஜன் அஸ்வத்தின் கையை பிடித்து தடுத்தான், “என்னடா சொல்லிட்டியா?” அவன் கேட்டதற்கு என்ன பதில் சொல்வதென்றே அஸ்வத்திற்கு புரியவில்லை. “தெரியலைடா மச்சா” அவன் பாவமாக கூறவும், “என்னடா ஒளருற? இவ்ளோ நேரம் தனியா தானே இருந்த?” என்று வெறுப்பாக வினவினான் நிரஞ்ஜன்.

“தனியா தான்டா இருந்தோம், நான் சொல்லுறதுக்கு முன்ன வரைக்கும் அமைதியா தான்டா இருக்காள் நான் சொல்ல போற நேரத்தில கரெக்டா பேச்சை மாத்திடுராள்டா எனக்கு என்ன பண்ணுரதுனே தெரியலை, அவளுக்கு புரிஞ்சுதா இல்லையானே தெரியலைடா” என்று பரிதாபமாக பேசும் நண்பனை பார்த்தவன் “சரி விடுடா நான் பேசி பார்க்கிறேன்.”

“நீ என்னடா பேச போகிற?”

“அதெல்லாம் உனக்கெதுக்கு நான் பாத்துக்குறேன்” என்று கூறவும் அமைதியாக பின் தொடர்ந்தான் அஸ்வத். விழா ஒருவழியாக நிறைவு பெறவும், அர்ஜுன் அஹல்யா இருவரும் மேடையில் இருந்து கீழே வந்து அமர்ந்திருக்க, அர்ச்சனா அஹல்யாவின் அருகேவும், நவீன் அர்ஜுனின் அருகேவும் அமர்ந்தனர்.

வெகுநேரமாக பேசிக்கொண்டிருக்க, அர்ச்சனாவிற்கு ஏதோ உறுத்தியது, சில நொடிகள் சேர்ந்திருந்தாலும் தன்னை பேச்சில் இழுப்பவன் இன்று அமைதியாய் ஏதோ யோசனையில் இருக்கவும் தன்னையும் அறியாமல் அவ்வப்போது நவீனின் முகத்தை ஆராய்ந்தாள். நவீனோ மெதுவாக அர்ஜுனுடன் பேசிக்கொண்டிருந்தான்.

“அர்ஜுன், அங்க உங்க அம்மா பக்கத்தில் இருப்பது தானே அர்ச்சனாவின் அம்மா?”

“ஆமாம்டா, என்னடா இப்போவே ஏதாவது ஐஸ் வைக்கும் ஐடியா போட்டிருக்கியா?” என்று அவன் சந்தேகமாக நவீனை கேட்கவும்.

“ச்சே ச்சே அதெல்லாம் இல்லை” என்று தொடர்ந்து யோசனையாகவே இருந்தான் நவீன்.

“டேய் நீ ஏதோ யோசனையில் இருக்கணு மட்டும் தெரியுது ஆனால் என்னனு தான் புரியலை என்ன விஷயம்டா?”  என்று அர்ஜுன் பலமுறை கேட்டும் நவீன் எதுவும் இல்லை என்று மழுப்பிநானே தவிர காரணத்தை கூறவில்லை.

இப்படி நால்வரும் பேசிக்கொண்டிருக்க, மீதம் இருந்த இரண்டு ஜோடிகளும் வந்தமர்ந்தது.

“இவ்வளவு நேரம் எங்க உங்களை ஆளையே காணம்?” என்று அர்ச்சனா இலகுவாக கேட்க, “இங்கதான் பக்கத்தில இருந்தோம்...” என்று மேலோட்டமான பேச்சுக்களே சென்றது. சிரிப்பும் பேச்சுமாக செல்ல அங்கே நவீன் வாய் திறந்தாள் தானே அவனும் அமைதியாக இருக்க சிறிது நேரத்திலேயே அனைவருக்கும் போர் அடித்தது. மண்டபத்திலேயே சாப்பிட்டுவிட்டு சொந்தங்களெல்லாம் களைந்துவிட, பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் வீட்டிற்கு திரும்பினர். எவ்வளவு கூறியும் அர்ச்சனா அன்று தன் தாயுடனே இருப்பதாக கூறவும் தோழிகளும் விட்டுவிட்டனர். அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பிய அர்ச்சனாவின் கண்கள் ஒரு நொடி நவீனை தழுவிதான் சென்றது. ஆனால் நவீன் அவளை பார்த்தாள் தானே அவன் வேறு சிந்தனையில் இருக்க, குழப்பத்துடனே கிளம்பிசென்றாள் அர்ச்சனா.

அவனை பிடித்திருகிறது என்றெல்லாம் அவனை பார்க்கவில்லை ஆனால் அவனது மௌனம் அவளை குழப்பியது, என்றுமே வாய்மூடாமல் பேசுபவன் யோசனையோடு இருக்கவும் கொஞ்சம் குழம்பி போனாள்.

ருவாறு அனைவரும் சென்றுவிட அனைவரும் படுப்பதற்கு ஆயத்தம் ஆனனர். புதுமண தம்பதிகள் அனைவருக்கு முன்னரே உறங்க சென்றுவிட உறக்கம் வராததால் அஸ்வத், நிரஞ்ஜன், அனு, தேஜு மட்டும் ஹாலில் அமர்ந்து பொதுவான கல்லூரி பேச்சுக்களில் சிறிது நேரம் கடத்தினர்.

“ஹே மணி என்ன ஆச்சு இன்னும் பேசிட்டு இருக்கீங்க? போய் படுங்க போங்க” என்று துளசி அதட்டவும் நால்வரும் படுக்க சென்றுவிட்டனர். சிறிது நேரம் புரண்டு புரண்டு படுத்து பார்த்த தேஜுவிற்கு மண்டபத்தில் நிரஞ்ஜன் பேசியதும், அந்த இனிமையான தருனமுமே நினைவிற்கு வர, தன் தோழியை கூட எழுப்பாமல் அறையை அடுத்த உள்ள வரண்டாவில் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.

வெளிச்சமே இன்றி இருட்டில் நின்றுக்கொண்டு ஆங்காங்கே தெரியும் தெரு விளக்குகளையும், கட்டிடங்களையும் பார்த்தவண்ணம் யோசனையில் இருந்தவளின் அருகில் ஒரு உருவம் வந்து நிற்க, பயந்து போய் வாய் திறந்து கத்த போனவளை “ஹே நான் தான் கத்திடாத” என்று தானும் பயந்து அடக்கினான் அர்ஜுன்.

“நெஞ்சம் ஒரு நிமிடம் படபடத்து போக நீயா? தூங்கலையா?” என்று தன்னை அசுவாசபடுத்தியவாறு கேட்டாள் தேஜு.

“ம்ம்ம் ஹ்ம்ம் தூக்கம் வரலை” என்று எங்கோ பார்த்தவாறு கூறினான் அஸ்வத்.

“ஏன்டா என்ன யோசனை?”

“ஒன்னும் இல்லை” என்று யோசனையாக இருந்தவன் தானே தொடர்ந்து “ஏன் தேஜு இது உனக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும் அனு என்னை காதலிக்குராளா இல்லையா?” என்று பட்டென கேட்டவனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை தேஜுவிற்கு, “ஏன்? இதை நீ அவளிடமே கேட்கலாமே” என்று அவள் கூறினாள்

“ஹ்ம்ம் நீ வேற தேஜு கேட்குறது என்ன... என்னை சொல்லவே விட மாட்டிங்குராள்” என்று அழுத்துக்கொண்டான்.

அவனது பேச்சில் சோர்வை கண்டவுளுக்கு பாவமாக தான் இருந்தது ஆனால் தோழி தன்னிடம் சொல்ல கூடாதென்றல்லவா சொல்லிருக்கிறாள். அவனிடம் சொல்லாவிட்டாலும் தேறுதலாக ஏதேனும் கூறலாம் என்று, “அதெல்லாம் தெரிய வேண்டிய நேரத்தில் தெரியும் நீ ரொம்ப confuse ஆகாத” என்று தேற்றினாள்.

“அப்போ உனக்கு அவள் நினைக்குறது தெரியும் தானே” என்று அவன் ஆர்வமாக கேட்டான்

அந்த ஆர்வம் தொற்றிக்கொண்டாலும் சொல்ல முடியாதே என்ற வருத்தத்தில் மறைத்தாள் “அதெல்லாம் என்கிட்டயும் மழுப்புறாள் நான் உன்னை பற்றி கேட்டாலே பதிலே வர மாட்டிங்குது, நானும் உன்னை மாதிரி தான் காத்திட்டு இருக்கேன்” என்று பொய் சொல்லி சமாளித்தாள். இதை கேட்டதும் மௌனமாக வேடிக்கை பார்க்க துவங்கினான் அஸ்வத்.

“அஸ்வத்...”

“ம்ம்ம்ம் என்ன தேஜு”

“நான் ஒன்னு கேட்கவா?”

“இது என்ன புதிர் கேளு...” என்று இலகுவாக பதில் தந்தான்

“இல்லை நிரஞ்ஜனுக்கு அம்மா அப்பா இல்லைன்னு தெரியும் ஆனால் உறவுகள்னு எதுவும் இல்லையா? இதை நான் அவன்கிட்டவே கேட்டிருப்பேன் ஆனால் அது அவன் பழைய விஷயங்களை நினைவு படுத்திற மாதிரி இருக்கும் அதான்...” என்று இழுத்தாள்

“ஏன் திடிர்னு இந்த கேள்வி?”

“இல்லை அவன் ஒரு தடவை கூட சொந்தங்கள் பத்தி பேசின மாதிரி இல்லை அதான் ஒரு ஆர்வத்தில் கேட்குறேன்”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.