(Reading time: 34 - 67 minutes)

ம்ம்ம்ம், அவனுக்கு சொந்தங்கள் என்று எதுவும் இல்லை தேஜு. அவங்க அம்மா அப்பாக்குமே சொந்தம் இல்லை, இருவருமே இவனை போலத்தான் ஒரு டிரஸ்ட் மூலமா வளர்ந்தாங்க, பின்பு வேலை செய்த இடத்தில் பழகி பிடித்து திருமணம் செஞ்சிகிட்டாங்கனு நிரஞ்ஜன் சொல்லுவான். அவன் அம்மா அப்பா இறந்த போது இவனுக்கு வயசு 10 இருக்கும் எப்படிதான் தாங்கிநானோ!!!!” என்று கூறி சற்று இடைவெளி விட்டவன். “அப்போ இருந்தே சொந்தங்கள் கூட இருக்க அவனுக்கு ரொம்ப புடிக்கும் தேஜு அதான் வீட்டில் நான் எப்போவெல்லாம் இருக்கேனோ அப்போவெல்லாம் ஆஜர் ஆகிடுவான். அம்மா அப்பாக்கும் நிருவை ரொம்ப பிடிக்கும்... நான் சொல்லித்தான் உனக்கு புரியணும்னு இல்லை அவனுக்கு இப்போ எல்லாமே நீ தான் வெளியில் ரொம்ப திடமானவன் போல தான் பேசுவான் ஆனால் சோகத்தை வெளியே காட்ட தெரியாமல் தனக்குள்ளேயே அழுவான் சோ நீ தான் எப்பவும் அவன் கூட இருக்கணும்” என்று அவன் சொல்லி முடிக்க தேஜுவின் மனம் முழுக்க நிரஞ்ஜனின் நினைவே சுத்தியது.

ஏதோ பெரிய பொறுப்பினை எர்த்துகொண்டது போல் ஒரு உணர்வு வர, அங்கு அதற்கு மேல் மௌனமே நிலைத்தது. சில நொடிகள் அப்படியே கரைய தேஜு, “சரி அஸ்வத் நான் போய் தூங்குறேன் பாய்” என்று கூறி நகர்ந்தாள்.

மனதில் ஒரு முடிவு பிறந்திட அமைதியாக தூங்கி போனாள் தேஜு. போர்வைக்குள் முகத்தை புதைத்து அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த அனு அருகில் அசைவு தெரியவும் முழித்துக்கொண்டாள். அதன்பின் தூக்கம் வராமல் போக காதில் headset போட்டுக்கொண்டு மொட்டை மாடிக்கு சென்றுவிட்டாள். அவள் எழுந்த நேரம் விடியற் காலை என்பதால் வானம் கொஞ்சம் கொஞ்சமாக கருமையை குறைத்து கொண்டிருந்தது.

விடியல் நேர இதமான காற்றினை மூச்சை இழுத்து சுவாசித்தவள் ரம்யமான விடியலை பார்த்தவாறும், பறவைகள் செட்டு செட்டாக சேர்ந்து பறந்து செல்வதையும் பார்த்தவண்ணம் நின்றாள். அமைதியாய் நின்றவள் முன் சொடுக்கு போட்டு ஒரு கை அழைக்க, சட்டென பயந்து தான் போனாள். திரும்பி பார்த்தவள் அருகில் நிரஞ்ஜன் நிற்கவும் காதில் இருக்கும் headset ஐ எடுத்துவிட்டு “ஏன் இப்படி பயமுடுத்திர” என்று லேசாக அதட்டினாள்.

தேஜுவின் மூலம் பழகியதாலும் ஒரே வயதை ஒத்தவர் என்பதாலும் அந்த கொஞ்ச நாட்களே நிரஞ்ஜனுடன் நட்பு பாராட்ட போதுமானதாக இருந்தது அனுவிற்கு.

“பின்ன என்ன பண்ணுறது கூப்பிட்டு பார்த்தேன் நீ திரும்பளை அதான் இப்படி கூப்பிட்டேன்” என்று பதில் கூறிவிட்டு அவனும் சேர்ந்து வேடிக்கை பார்க்க துவங்கினான்.

“அனு நான் ஒன்னு கேட்கவா?” என்று பொடிப் போட்டான்.

“ம்ம்ம்ம் கேளேன்” என்று இலகுவாக கூறினாள்

“நீ அஸ்வத்தை காதலிக்குறியா? இல்லையா?” என்று அவன் நேரடியாகவே கேட்டுவிட அனு கொஞ்சம் தடுமாறினாள்.

“ஏன் திடிர்னு இந்த கேள்வி?”

“சுத்தி வளைக்காம நேராக சொல்லு அனு... அவன் உன்னை காதலிக்குறானு உனக்கு தெரியும் தானே”

சிறிது நேரம் மௌனமாக இருந்தவள் “ம்ம்ம்ம் தெரியும்” என்றாள் மெல்லிய முறுவலோடு எங்கோ பார்த்தபடி.

“ம்ம்ம்ம் அப்பறம் ஏன் அவன்கிட்ட நீ நேரடியா சொல்ல மாட்டிங்குற? உன் வாயால் தெரிஞ்சிக்கணும்னு அவனுக்கு ஆசை” என்று அவன் அவள் முகத்தில் தெரிந்த சந்தோஷம் தொற்றிக்கொள்ள வினவினான்.

“ஏன் உன் ப்ரிண்டு புலம்ப ஆரம்பிச்சுட்டானா?” என்று கிண்டலாக கேட்டுவிட்டு, “நான் அவனிடம் காதல் சொல்லுற சமயம் ஸ்பெஷல்லா இருக்கணும்னு நினைக்குறேன் நிரஞ்ஜன் சோ இதை அவன் பிறந்தநாள் அன்னைக்கு சொல்லலாம்னு இருக்கேன்” என்று அவள் கூறவும், கவனித்துக்கொண்டிருந்த நிரஞ்ஜனுக்கு அவளது உணர்வு புரிந்தது. ஏனென்றால் அவனும் இப்படி தானே ஏதாவது ஸ்பெஷல் தருணத்திற்காக காத்திருந்து ஏமாந்து முன்பே சொல்லிவிட்டான்.     

“அதுவர இன்னும் நிறைய மாதம் ஆகுமே இப்போதானே முடிஞ்சுது” என்று அவன் ஆர்வமாக கேட்டான்

“ஆமாம் அவ்வளவு காலம் கூட காத்திருக்க மாட்டானா?? இந்த பிறந்தநாளுக்கு அப்போதான் நாங்க பேசவே ஆரம்பிச்சோம் அதுக்குள்ள எப்படி சொல்லுறது காத்திருக்கட்டும்” என்று மிடுக்காக கூறினாள் அனு.

“அது சரி அவன் புலம்புவதை பார்த்தாள் வாரங்கள் கடந்துறதே கஷ்டம் இதுல மாதங்களா? ரொம்ப சூப்பர் அப்பறம் உன் பாடு பாத்திருந்திக்கோ” என்று கூறி விடியல் நன்கு வரவும் கிழே இறங்க நகர்ந்தான் நிரஞ்ஜன்..

“நிரஞ்ஜன்...” என்று அவள் அழைக்கவும் அவனே பதில் தந்தான் “கவலை படாதே நான் அவன் கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன்” என்று கூறி ஒரு புன்னகையோடு நகர்ந்தான்.         

Go to Kadhal payanam # 12

Go to Kadhal payanam # 14

பயணம் தொடரும்...

{kunena_discuss:676}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.