(Reading time: 6 - 12 minutes)

04. உன்னிடம் மயங்குகிறேன்..! சொல்ல தான் தயங்குகிறேன்..! - ஸ்வேதா

உன்னிடம் மயங்குகிறேன்..!சொல்ல தான் தயங்குகிறேன்..!

ரு வாரம் சென்ற விதம் கவிக்கு ஆச்சரியமாக இருந்தது. அர்ஜுனின்ஆராயும் பார்வை, ஆகாஷின் தேவைகேற்ப உதவி, வேணிம்மாவின் துணை, அந்த வீடு, வெளிநாட்டிலிருந்து வரும் போன், அதற்க்கு அந்த குடும்பமே பரவசம் ஆவதும் என்று எல்லாமே பழகி விட்டது.

சின்ன சின்ன எரிச்சல்களுடன் தான்!! தினமும் அர்ஜுனின் நேர் பார்வை, ஆகாஷின் சமயத்தில் சொல்லும் வசனங்கள், வேணிம்மாவின் அர்ஜுன் புராணம், சமயத்தில் திணறடிக்கும் நிஜமான நிஷாவை பற்றிய கேள்விகள், இரவில் விசாலமான அறையில் தனிமை, எந்நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டிய சூழல் போராட்டம் சற்றே திசை திருப்பியது போல்.!!

வனம் முழுவதும் கணினியிலும் கையிலிருக்கும் கோப்பிலும் வைத்து வேலை பார்க்கும் பேரனை பெருமையாக பார்த்தப்படி அருகில் அமர்ந்தார் வேணிம்மா.

"என்ன ம்மா என்ன அப்படி பார்கறீங்க??" என்றான் அர்ஜுன் கணினி திரையிலிருந்து கண் எடுக்காமல்.

"அது ஒன்னுமில்லப்பா..." என்றார் இழுவையாய்.

அப்படியென்றால் எதோ இருக்கிறது என்று பேரன் கைவேலையெல்லாம் விட்டு பாட்டியை நோக்கி அமர்ந்துக்கொண்டு "இப்போ சொல்லுங்க நான் என்ன செய்யணும்"

"ஒண்ணுமில்ல கண்ணா, நிஷா வந்து ஒரு வாரம் ஆயிடுச்சி, வீட்டிலே போர் அடிக்கும் நாளையிலிருந்து ஆபீஸ் கூட்டிட்டு போகலாமில்ல"

கம்பீரமாக ஆணையிடும் வேணிம்மா கொஞ்சுவது எரிச்சல் கொடுத்தது. அதுவே காட்டியது அவராக கேட்கவில்லை. கேட்டு அனுப்பபட்டிருக்கிறார்.

அதுதான் வீட்டில் எந்நேரமும் சில்லறை சிதறி விட்டது போல் நாராசமாய் அவள் சிரிப்பு, இல்லையென்றால் அன்பாக அதட்டுகிறேன் என்று பாட்டியையே மிரட்டும் அவள் குரல் என்று கேட்டுக்கொண்டு தானே இருக்கிறான். 

பேசாமல் இருக்கும் பேரனை வாஞ்சையுடன் "என்னடா கண்ணா??" என்றார்.

 "ஒண்ணுமில்ல, வொர்க் எல்லாம் பிளான் பண்ணிட்டு அழச்சிட்டு போறேன்" என்றான்.

ஓரிரு நிமிடம் அர்ஜுனை பார்த்தவர், பின் எழுந்து சென்று விட்டார் அவர் அறைக்கு.நம்பிக்கை வந்துவிட்டது போலும் பேரனின் வார்த்தையில்.

அவனுக்கு தான் தூக்கம் வரவில்லை, அவள் முகம், சில நேரங்களில் கண்களில் தெரியும் பீதி, மனதின்  நெருடல், அவன் பாட்டியின் சரணாகதி இவையெல்லாம் அவனை வதைப்பதுப்போல்.

அடிமனம் "இப்படி யோசிக்க வைத்து விட்டாலே, முயல் போல் திரு திருவென முழித்தப்படியே கவிழ்த்து விட்டாலோ " என்று கேட்டது.

காஷின் மனம் "எங்கே போன நிஷா??" என்று சத்தமின்றி கூச்சலிட தொடங்கிவிட்டது. 

அவனும் அர்ஜுனும் படித்த அதே குன்னூர் ஆங்கிலோ இந்தியன் பள்ளயில் தான் அவளும் படித்தாள்.  அர்ஜுன் ஆகாஷை விட இரண்டு வருடம் பெரியவன் அவன் பள்ளியில் பார்த்த நிஷா முகம் மறந்திருக்கும் ஆனால் ஆகாஷிற்கு அவள் முகமும் அவள் கண்களில் அவனை கண்டால் தெரியும் மலர்ச்சியும் நினைவில் எப்போதும்.

அவன் வளர வளர அவன் நேசமும் வளர்ந்து நிற்கிறது. புரிந்தும் புரியாமல் கண்ணில் படாமல் எங்கோ பறந்து விட்டாள் அவள் என்பது அவனின் கணிப்பு.

சிக்கல்களின் எளிமையான தீர்வு அதை நாம் கையாள்வதில் தானே உள்ளது. அதை விட்டு வெகுதொலைவில் போனால் மட்டும் தீர்ந்து விடுமா என்ன? புரியாமல் சென்று விட்டாளே.

காலை வேளை மிகவும் பரபரப்பாக இருந்தது அந்த பத்திர பதிவாளர் அலுவலகம். வேல்முருகன் அவர் வேலையில் ஈடுபாடாக இருக்க 

"ஏய்யா முருகா, என்ன பொண்ணுக்கு வேலை கிடைத்ததை சொல்லவே இல்லையே" என்றபடி அவர் எதிர்க்கே அமர்ந்தார் நண்பர்.

மனதின் மகிழ்ச்சி, ஆச்சர்யம், நிம்மதி, எல்லாம் மறைத்துக்கொண்டு "அட, நீங்க எங்க பார்த்தீங்க?" என்று கேட்டார் இயல்பாய்.

"உன் பொண்ணு புத்திசாலிதனம் தான் எனக்கு பிடிச்சதே!" என்றார் சிரித்துக்கொண்டே.

"சரி எங்கே பார்த்தீங்க? எப்படி இருக்கா?" என்றார் ஆவலுடன் 

"அட என்னயா நீ வேற சும்மா ஜம்முனு அதே சுட்டிதனம் குறையாம இருக்கா போ " என்றார் பெரிய சிரிப்புடன்.

அவர் இன்னமும் எங்கே எப்படி பார்த்தார் என்று சொல்லவில்லை என்ற எரிச்சல் வந்தாலும் அதை  அடக்கியப்படி "நீங்க எப்படி பார்த்தீங்க என்று சொல்லவே இல்லையே" என்றார்.

"என் அக்கா  பையன் துபாய் போறான், சென்னையில்  ஏர்போர்ட் போனேன் வழி அனுப்ப அங்க தான் பார்த்தேன், நல்லா இருந்தாப்பா "என்றார். பெண்ணை பிரிந்திருக்கும் தந்தைக்கு ஆறுதல் சொல்வதுப்போல் சொல்லி சென்றார்.

அவர் மனம் அன்று தான் நிம்மதியை தழுவியதுப்போல் உணர்ந்தார்.

வீட்டிற்க்கு மனபாரம் குறைந்து வந்தவர் அவரின் சின்னபெண் கார்த்திகா "அப்பா, கவலை படாதீங்க, அக்கா எங்கிருந்தாலும் நல்லா இருப்பா, அம்மா என்ன சொன்னாலும் கண்டுக்காதீங்க சரியா!" பேசியது கேட்டு அன்று நிம்மதியாக உறங்கவும் செய்தார்.

காலை பரபரப்பில் இருந்த அர்ஜுனிற்கு போன் அடித்தது. எடுத்து பேசியவனுக்கு ஆரம்பத்தில் இருந்த எதிர்பார்ப்பு அந்தப்பக்கம் இருப்பவர் பேச பேச கோபமாக உருவெடுத்தது.ஏமாற்றத்தை உணர்ந்தான்.

அவன் எடுத்து நடத்தும் கார்மெண்ட்ஸ் பாக்டரியும் அவன் ஆசைப்படி நடத்தும் விளம்பர நிறுவனமும் மற்றதும் வேலைகளுடன் அவன் முன்னே நிற்க இரவு பேசிக்கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டான்.

வேலை மத்தியில் திரும்பவும் கைபேசி அழைப்பு அவனை கடுப்பேற்றியது. எடுத்து பேசினான் 

"அர்ஜுன் சார்.." கவிதா 

"ஏய் உனக்கு எப்படி என் போன் நம்பர் கிடைத்தது, வேலையை கெடுக்காமல் போனை வை!! இருஇரு..!! என் பாட்டி மாதிரி நானும் உன் கிட்ட மயங்கிடுவேன் என்று நினைப்பு இருந்தா உடனே அதை அழிச்சிடு" என்றான் அவன்.

"சார் பாட்டிக்கு.."

"என்ன பாட்டியை நீ ஏதும் மாய மந்திரம் செய்யல என்று சொல்லபோறியா?, அதை நான் நம்ப மாட்டேன் " என்று பேசிக்கொண்டே போனவனை இடைமறித்து 

"சார், பாட்டிக்கு நெஞ்சு வலி ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கேன் "என்றாள் கவிதா அவசரமாக.

அர்ஜுனிற்கு நிமிடத்தில் பூமி தட்டாமாலை சுற்றியதுபோல் ஆனது. சட்டென சுதாரித்தவன் எந்த மருத்துவமனை என்று கேட்டுக்கொண்டு மானேஜரிடம் வேலைகளை ஒப்படைத்து விட்டு ஆகாஷை அழைத்துகொண்டு மருத்துவமனையை அடைந்தான்.

தெரிந்த மருத்துவமனை, டாக்டரும் தெரிந்தவரே உடனே சென்று பேசினான் அர்ஜுன்.

"ஹலோ அர்ஜுன்.." - டாக்டர் 

"டாக்டர் பாட்டிக்கு ஒண்ணுமில்லை தானே !!"

"ஏன் இந்த பதற்றம் அர்ஜுன், அவங்களுக்கு ஒண்ணுமில்லை, மைல்ட் அட்டாக் தான் "

"என்ன டாக்டர்!!, எதனால இப்படி"

"வயசானவங்க இல்லையா!! அதனால தான். எதாவது மனசுல போட்டு குழப்பி கொள்வதும் உடம்பை வருத்திக்கொள்வதும் இருந்தா இப்படி தான் "

டாக்டரின் கூற்றுப்படி வேணியின் உடல் வலிமை குறைந்துள்ளது. நல்ல ஓய்வும் தூக்கமும் அவருக்கு அவசியம் தேவை. 

வேணிம்மாவை பார்த்த அர்ஜுனிர்க்கும் ஆகாஷிற்க்கும் அதிர்ச்சி தான். கம்பீரமாக இருந்தவர் சுவாசிக்கவே சிரமப்பட்டார். 

காதல் கணவன் மறைந்த பின்னும் மகன்களுக்கு தோள் கொடுத்தவர் அவர்களும் இளம் வயதிலேயே பிரிந்த பின்னர் பேரன்களுக்காக என்று வாழ்வில் கண்ணீர் சிந்த நேரம் இல்லாமல் உழைத்தவர். மாய உலகில் போராட கடுமையை துணை வைத்துக்கொண்டவர். நொடுங்கி போய் படுக்கையில் கிடந்தவரை பார்க்க அர்ஜுனிர்க்கு துக்கம் தொண்டையில் அடைத்தது. 

செயலற்ற, பேச்சற்ற நிலையில் இருந்த அர்ஜுனை  ஆகாஷின் ஆறுதல் தான் தெளிவடைய செய்தது. அடுத்த இரண்டு நாட்கள் அவனை பயமின்றி பதட்டமின்றி கொண்டு சென்றது.

சட்டென்ற தோன்றும் விபத்துகள் தான் நம்மை நாம் யாரென்றும் நாம் எங்கே நிற்கிறோம் உறவுகளில்  என்றும்  பலத்தை சோதனை செய்யும்.தன்னம்பிக்கையை வளர்க்கும்.தளராத மனம் நாணல் போலே வளைந்து நெளிந்தாலும் உடைந்து போகாது.

தொடரும்!

Go to episode # 03

Go to episode # 05


{kunena_discuss:700}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.