(Reading time: 15 - 29 minutes)

ங்கே-

"போதும் கண்ணம்மா! எனக்கு நேரம் ஆயிடுச்சு! "

"அட! என்ன நீ சாப்பிடுற நல்லா முருங்கைக்காய் மாதிரி இருக்க?"

"அப்படியா?எந்த ஊர்ல முருங்கைக்காய் 49 கிலோ இருந்திருக்கு?"

"அடடா இங்கே என்ன பிரச்சனை ?"

"பாருப்பா! எனக்கு நேரமாயிடுச்சி, இங்கே சாப்பிட்டா தான் விடுவாங்கலாம்! "

"நீ பேசுற நேரத்துக்கு இரண்டு இட்லி முழுங்கி இருக்கலாமே?"

"சரியா சொன்னீங்கய்யா! "

"சரி. . . . இவ்வளவு நேரம் கண்ணம்மா ஊட்டினாங்கல இப்போ ஒரு வாய் அப்பா தரேன். சாப்பிடு! "

"அப்பா! "

"சாப்பிட்டா தான் விடுவேன். இல்லனா, பவி, ஹாஸ்பிட்டலுக்கு போன் பண்ணி இன்னிக்கு அவங்க டீன் வர மாட்டாங்கன்னு சொல்லிடு! "

"சரிங்கப்பா! "

"இல்லல்ல. . . ! நான் சாப்பிடுறேன்"

"ம். . . . . இது நல்ல புள்ளைக்கு அழகு. . . . ! "-என்று கூறி அவளுக்கு ஊட்டி விட்டார். அவளும் அதை வாங்கி கொண்டாள்.

"ஹே. . . . அக்கா ஊட்டி விட்டா சாப்பிட மாட்டியா?"

"நீயுமா? சரி சீக்கிரம். . . . "-பவித்ராவும் ஊட்டி விட, அதையும் வாங்கிக் கொண்டு வெளியே வந்தாள். திடீரென்று, "அக்கா! என் லேப்டாப் எடுத்துட்டு வாயேன். "என்றாள். பவித்ரா அவளது மடிக்கணினியை அவளிடம் எடுத்து வந்து தந்தாள். "அக்கா! நம்ம வீட்டுக்கு யாராவது வராங்ககளா?"அவள் கேட்ட கேள்வி பவித்ராவிற்கு சற்று திகைப்பை தந்தது.

"ஏன்? மது கேட்கிற?"

"நீயேன் இப்படி பதற்றப்படுற?"

"இ. . . . இல்லையே! "

"ம். . . . . . என்னமோ சரியில்லை! அப்பா கண்ணம்மாக்கிட்ட ரூம் ரெடி பண்ண சொன்னாரு அதான்! "

"தெரியலையே. . . . . ! "

"ம். . . நான் கிளம்புறேன். . . ! "-என்று தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள். பவித்ராவிடமிருந்து பெரு மூச்சு வெளி வந்தது.

மீனம்பாக்கம் விமான நிலையம். . . . . .
காலை வேளையின் அதீத அவசரத்தோடு இயங்கி கொண்டிருந்தனர் அனைவரும். ரகுவும், சரணும் விமான நிலையத்தின் வாயிலில் வந்து இறங்கினர்.
"வாடா! போகலாம்"-ரகு

"லாட்ஜ்க்கு தானே! இரு. . . . டேக்ஸி கூப்பிடுறேன்! "அப்போது, "டேய்! மச்சான்! "-என்று அவர்களை திசை திருப்பியது. இருவரும் திரும்பினர். "டேய்! நிரஞ்சன்! "-ரகு. "நீ எப்படா?இங்கே வந்தே?"-சரண்.

"அந்தக் கொடுமையை ஏன்டா கேட்கிற?நேற்று ராத்திரி ஆபிஸ்க்கு போயிருந்தேன். போன, உடனே நம்ம டெரரிஸ்ட் வந்து. . . . . "

"டெரரிஸ்ட்டா?"

"அதான். . . . . . என் அப்பா நம்ம ச்சீப் மிஸ்டர். வசீகரன். கையில டிக்கெட்டை தந்து உடனே சென்னைக்கு கிளம்புன்னு சொன்னாரு"

"அப்பறம்?"

"விடுவேனா?அப்பான்னு ஆபிஸே அதிர்ச்சி ஆகுற மாதிரி கத்துனேன். அப்பாவா இல்லை உன் கமாண்டரா சொல்றேன் கிளம்புன்னு துரத்தி விட்டுட்டாரு, காலையில தான் நீங்க வரப் போறீங்கன்னு போன் வந்தது, பத்து நிமிஷத்துல எழுந்து தயாராகி வந்துட்டேன்ல"-சரண் தன் கைக்கடிகாரத்தை பார்த்தான். "ம். . . . மணி 12:10 ஆகுது, அப்போ 12 மணிக்கு தான் எழுந்திருக்க. "

"மச்சான். . . இப்படிலாம் அசிங்கப்படுத்தக் கூடாது"

"சரி. . . . நேற்று ராத்திரி எதுக்கு ஆபிஸ் போன?"-சரண்

"ம். . . . என் கேர்ள் ஃப்ரண்ட் கூப்பிட்டா அதான்! இவன் என்னய்யா கேள்விக்கு பிறந்தவனா இருக்கான். நானும் சி. பி. ஐ. தான்! கூப்பிட்டது உன் ச்சீப் தான்! "

"அவர் எதுக்கு உன்னை அந்த நேரத்துல கூப்பிடணும்?"

"அய்யய்யய. . . . . . அதைப் போய் உன் ச்சீப் கிட்டையே கேளுயா! "

"இல்லை. . . ! "

"அட! நீ இப்போ சும்மா இருக்கப் போறீயா?இல்லையாடா?"

"டேய் ஆதி! அவனுக்கு தான் சின்ன வயசில இருந்தே அவனை யார் கேள்விக் கேட்டாலும் பிடிக்காதுன்னு தெரியும்ல விடுடா! "
"நன்றி நண்பா! சரி. . . வாங்க போகலாம். "

"லாட்ஜ் பேரு?"

"இப்ப தான் கேள்வி கேட்காதேன்னு ரகு சொன்னான். "

"சரி. . . எங்கே போறோம்?"

"கொஞ்ச நாளாவது சி. பி. ஐ. யா இல்லாம இருடா! என் அப்பா என் ஃப்ரண்டையும் கெடுத்து வச்சிருக்கிறாரே! மகேந்திரன் அங்கிள் போன் பண்ணி லாட்ஜ்க்கு போய் தங்குனீங்கன்னா கொன்னுடுவேன், மரியாதையா வீட்டுக்கு வந்து சேருங்க அப்படின்னு சொல்லிட்டாரு"-அதைக்கேட்டு சரண் தயங்கினான்.

"ரொம்ப யோசிக்காதே பாலகுமாரா உனக்கு வேற வழியே இல்லை. "

"ஆதி. . . ! வாடா! "அவன் வேண்டா வெறுப்போடு தலையசைத்தான்.
அவன் எவ்வளவு தான் தடுத்து நிறுத்தினாலும் அவன் மனம் பழைய எண்ண அலைகளில் மூழ்க தான் செய்தது. இனி அவன் வாழ்வினில் நடக்கப் போவது தான் என்ன?அனைத்தையும் விட்டு அவன் விலகி சென்றாலும், ஏன் எல்லாம் தன்னை துரத்துகிறது என்று பலவாறு அவன் சிந்தித்தான். ஒரு பக்கம் இப்படி இருக்க மறுபக்கமோ முடிந்துப்போன ஒன்றுக்காக ஏன் கலங்க வேண்டும். எல்லாத்தையும் மன்னித்துவிடும் அளவிற்கு நடந்தது அனைத்தும் சாதாரணமானவை இல்லையே! இப்பொழுது இங்கு வந்தது வேலைநிமித்தமாகவே சலனப்படாதே மனமே! நீ யாருக்காகவும் அல்ல! என ஓர் உயிரில் பல போராட்டங்களை நடத்திக் கொண்டே பயணித்தது. பாவம்! அவனது பக்குவப்படாத மனம் அறிந்திருக்க வில்லை. இறைவனே அன்புக்காக வாழ்கிறான். அன்புக்காக இருக்கிறான். அன்புக்காக எதையும் செய்ய துணிகிறான். அப்படியிருக்க, அற்ப மானிட மனம் என்ன செய்யும்?அசைந்தாடும் ஆழிக்கு கண்ணீர்த்துளி ஈடாகுமா?
பல்வேறு நினைவலைகளோடு காரில் பயணம் செய்துக்  கொண்டிருந்தான் சரண். திடீரென்று ஏதோ நினைவு வந்தவனாய்,

"நிரஞ்சன் என் கெஸ்ட் ஹவுஸ்க்கு போகலாம்! "என்றான். அவன் கூறியதில் அதிர்ச்சி அடைந்த அவன், சட்டென்று பிரேக் பிடித்து காரை நிறுத்தினான்.

"மச்சான்?"அவன் குழப்பமாய் விழித்தான்.

"கேட்கலையா?"

"ஆனா! மகேந்திரன் அங்கிள் நமக்காக. . . . . . . "

"இதோப் பாரு! எனக்கு யாரைப் பற்றியும் கவலை இல்லை. அங்கே  வந்து தான் நான் வேலையை முடிக்கணும்னா! நான் கேஸ்ஸ வித் டிரா பண்ணவும் தயங்க மாட்டேன். "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.