(Reading time: 15 - 29 minutes)

"ண்ணம்மா! "

என்னம்மா?"

"மது எங்கே?"

"ரூம்ல தான் இருப்பா! "

"காணுமே! இவ இருக்காளே கொஞ்சம் கூட அடங்கறதே இல்லை. "-என்று புலம்பிக் கொண்டே தோட்டத்துப் பக்கம் சென்றாள் அவள். அங்கே முழுவதும் அமைதியாக இருந்தது.

"என்ன இவளை எங்கேயும் காணவில்லை. "-என்று கையில் காபிக் கோப்பையுடன் அவளை தன் தங்கையை தேடினாள், பவித்ரா. திடீரென்று, அவள் பின்னால் இருந்து யாரோ பயங்கரமாக, "பூச்சி"என்று கத்தினர். அவர் பயந்து போய் கையில் இருந்த கோப்பையை கீழே விட்டுவிட்டாள்.

"ஹே ! மறுபடியும் பயந்துட்டா! அப்பா நாம ஜெயிச்சிடோம். "-என்று குதூகலித்தது இனிமையான குரல். பவித்ரா கோபத்தோடு திரும்பினாள்.

"ஏ. . . . ! என்னது இது அடங்கவே மாட்டியா?"அந்நங்கை இல்லை என்பதை போல தலையசைத்தாள்.

"என்ன ?"-அப்போது தான், அவள் தன் தந்தை அருகில் இருப்பதை கவனித்தாள்.

"நீங்க எப்பப்பா ஊர்ல இருந்து வந்தீங்க?"

"பார்த்தியாப்பா! நீ வந்ததை கூட கவனிக்கலை, என்னை திட்டி தீர்த்துவிட்டு தான் மறுவேலை பார்க்கிறா! "

"சரிதான் மது! "

"அதெல்லாம் இல்லைப்பா! "

"சரி விடு! "-திடீரென்று மதுபாலா, "அக்கா! கைக்கொடு"என்றாள்.

"எதுக்கு?"

"கொடு சொல்றேன்! "-அவளும் கைக்கொடுத்தாள்.

"இது நீ போட்டு உடைச்ச ஐம்பதாவது கப் இதை மாதிரி நீ  நூறாவது, அதற்கு மேற்ப்பட்ட கப்களை உடைக்க என் வாழ்த்துக்கள்."

"அடி! உதை வாங்க போற! ஆமா! எதோ ஜெயிச்சிட்டேன்னு சொல்லி கத்துனல என்னது அது?"

"ஆமாம்ல, நல்ல வேலை ஞாபகப்படுத்தின, ஷக்தி இங்கே வா! "-என்று தன் வீட்டில் வசிக்கும் கிட்டத்தட்ட 19 வயது மதிக்கத்தக்க இளைஞனை அழைத்தாள். அவனும் தயங்கியவாறு அவள் அருகில் வநாதான்.

"சொன்ன மாதிரியே 'பெட்'ல ஜெயிச்சிட்டேனா?"-அவன் ஆமாம் என்பதுப்போல தலை அசைத்தான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த பவித்ரா,

"என்னடி ?"

"அது ஒண்ணுமில்லைக்கா! இன்னிக்கு நீ கப்பை உடைக்க மாட்டன்னு ஷக்தி பெட் கட்டுனான். நீ உடைப்பனு நான் கட்டினேன். அதான்"

"உன்னை. . . . . . . "

"அக்கா! நான் மட்டும் இல்லை. அப்பாவும் தான். "-அவள் ஒரு வித அதிர்ச்சியோடு தன் தந்தை மகேந்திரனை பார்த்தாள்.

"என்னப்பா இது?"

"அது. . . . . . . . வந்தும்மா. . . . . அது. . . . . . . "

"ஷக்தி சொன்னா மாதிரியே செய்! "

"என்னடி சொன்னான்?"

"அது 'பெட்'ல நான் ஜெயிச்சேன்னா இவன் பத்து தோப்புக்கரணம் போடணும், இவன் ஜெயிச்சானா நான் போடுவேன்னு சொன்னேன். இப்போ நான் ஜெயிச்சேன் அதனால, தோப்புக்கரணம் போடு ஷக்தி"

"தோப்புக்கரணமா?கடவுளே. . . . . ! என்ன நீ இன்னும் சின்ன குழந்தையா?"

"ஆமாம். என் அப்பாவுக்கு நான் இன்னும் சின்ன குழந்தை இல்லப்பா?"என்று அவளை கட்டி அணைத்துக்கொண்டாள்.

"ஆமாம்டா குட்டிமா"

"நீங்க குடுக்கிற செல்லம் தான் இவளை கெடுக்கிறதே"

"விடு பவி! இந்த வயசில விளையாடாம எந்த வயசில விளையாடாம எந்த வயசில விளையாட போறா?"

"விளையாடுற வயசாப்பா இது?அம்மா! சொன்னது சரிதான். இவ அப்படியே உங்களை மாதிரி தான். "

"நீ கூட தான் உன் அம்மா மாதிரியே பயந்தாங்குளியா இருக்க அதைப் பற்றி நாங்க எதாவது சொன்னோமா?இல்லையே. . . . ! சரி. . . . ஷக்தி உன் படிப்பு எப்படி போகுது?"

"நல்லாப்போகுதுப்பா! அடுத்த வாரம் செமஸ்டர் வருது! "

"சரி நல்லா எழுது, வாழ்த்துக்கள்"

"தேங்க்ஸ் பா! நான் போய் படிக்கிறேன்ப்பா"

"சரி போப்பா! "

"ஷக்தி அந்த தோப்புக்கரண கணக்கை முடிச்சிட்டு போ. "

"அக்கா! போக்கா நான் போய் படிக்கணும். உனக்கு ஹாஸ்பிட்டலுக்கு நேரம் ஆயிடுச்சுல போய் கிளம்புக்கா. "

"ஆமால்ல! சரி நான் போய் கிளம்புறேன்ப்பா! "

"சரிடா! "-அவள் அவசர அவசரமாக உள்ளே சென்றாள்.

"இன்னும் இவ மாறலை! "

"ஆமாம்பா! அக்கா மட்டும் இல்லைன்னா என் நிலைமை என்ன ஆகி இருக்கும்னே தெரியலை! இந்த வீட்டில வேலை செஞ்சவங்க பையனா, இருந்தேன். அம்மா இறந்தப்பிறகு என்ன ஆவேனோன்னு யோசிச்சேன். அக்கா என்ன படிக்க வைத்து இன்னிக்கு என்ஜினேயர் அளவுக்கு கூட்டிட்டு வந்து இருக்காங்க. . . . . . "-அவனால் அதற்கு மேல் பேச முடியவில்லை. மகேந்திரன் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டு,

"என்னடா நீ? இப்படியா இருக்கறது?வெளியே மட்டும் தைரியமா இருந்தா போதாது! மனசுக்குள்ளேயும் தைரியம் இருக்கணும்! "

"சரிப்பா! "

"சரி போய் படி. "-என்று அவனை தட்டிக் கொடுத்து அனுப்பினார்.

"என்னப்பா! திடீர் விஜயம்?" "அது ஒண்ணுமில்லைம்மா! மஹாதேவன் சொன்னான். இன்னிக்கு சரணும், ரகுவும் சென்னைக்கு வராங்களாம்! அதான், சரண் எப்படியும் அவன் வீட்டில தங்க மாட்டான். அவங்க கெஸ்ட் ஹவுஸ்லையும் தங்க மாட்டான். ரகு வீட்டில தங்கினா, இரண்டு பேர் மட்டும் தான் இருக்கணும்! அதான், நம்ம கெஸ்ட் ஹவுஸ்ல தங்க ஏற்பாடு பண்ண சொன்னான். "

"ரகு அண்ணாவும், சரணும் நம்ம வீட்டிலே தங்கட்டும். ஏன் கெஸ்ட் ஹவுஸ்லாம்?"

"தங்கலாம் தான்! ஆனா, மதுவுக்கும், சரணுக்கும் இருக்கிற பிரச்சனை உனக்கு தெரியாமல் இல்லை. அதான்! பயமே! இப்போ அவன் யார் கூடவும் சரியா பேசுறதுக்கூட இல்லை. "

"புரியுதுப்பா. . . . ! மது என் பேச்சை மீற மாட்டா! நான் பார்த்துக்கிறேன். நீங்க கவலைப்படாதீங்க! "

"சரிம்மா! மஹாதேவன் பற்றி சரண் முன்னாடி பேச வேணாம். அப்பறம், என்கிட்டயும் சண்டைப் போட்டாலும் போடுவான். "

"சரிங்கப்பா! "

"சரி. . . . ! வா! உள்ளே அவ என்ன பண்றாணு பார்ப்போம்! "

"வாங்கப்பா! "-இருவரும் உள்ளே சென்றனர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.