(Reading time: 15 - 29 minutes)

"னா, நீ தான். . . . அங்கே. . . . ?"

"அது நானும் என் அம்மாவும் வாழ்ந்த இடம் இப்போ அவங்க உயிரோட இல்லனா! அங்கே நான் போக கூடாதுன்னு யாராவது சட்டம் போட்டு இருக்காங்களா? அப்படியே போட்டாலும் அதை நான் செய்யணும்னு எனக்கு அவசியம் இல்லை! "-அவன் பேசுவதை ரகுவும், நிரஞ்சனும் கேட்டுக் கொண்டிருந்தனர்.

"சரிடா! நீ எதுக்கு அங்கே வர மாட்றன்னு எனக்கு தெரியலை. ஆனா, உன் கெஸ்ட் ஹவுஸ் அவர் வீட்டு பக்கத்து வீடுதான்னு நான் ஞாபக படுத்தி வைக்கிறேன்! "சரண் அதை கவனிக்காததைப் போல அமைதியாய் இருந்தான். நிரஞ்சன் காரை அவன் கெஸ்ட் ஹவுஸ்க்கே செலுத்தினான். ரகுவிற்கு எல்லாம் புரிந்தும் புரியாததைப் போல காட்டிக் கொண்டான். அவன் இதழில் மெல்லிய புன்னகைப் படர்ந்தது.

சரியாக 30 நிமிட பயணம், மூவரும் ஒரு பங்களாவிற்கு வந்தனர். நல்ல விசாலமான அதில் வேலையாட்கள் சிலரே தங்கி இருந்தனர்.

"எப்பா டேய்! போதுமா?"-சரண் பதில் பேசவில்லை.

"நீ எங்கே நிரஞ்சன் தங்கியிருக்க?"

"என் வீட்டில. . . . . "

"இங்கேயே வந்து தங்கிடேன்! "

"எது இவன் கூடவா?இவனுக்கு நீ தான்டா சரி  நான் வரலை. . . "

"நிரஞ்சன்??"

"சரி. . . . . வரமாட்டேன்னு சொன்னா விடவா போற சாயந்திரா வரேன். "

"வா ஆதி! உள்ளே போகலாம். "-சரண் சற்று தயங்கினான்.

"பிடிக்கலைன்னா சொல்லு மச்சான். காம்பவுண்ட் சுவர் ஏறி குதிச்சா நமக்கு தெரிஞ்ச வீடுதான்! "-சரண் நிரஞ்சனை முறைத்தான்.

"சரி. . . உனக்கு பிடிக்கலைன்னா வேணாம். "சரண் 12 வருட இடைவேளைக்கு பிறகு அவனது காலடி அந்த வீட்டில் படுகிறது. தன் அன்னையோடு அவன் ஆனந்தமான பல பொழுதுகளை கழித்த இடம் அல்லவா இது! இன்றும் அவ்வாறே கழித்திருக்கலாம் அன்றொரு நாள் மட்டும் வராமல் இருந்திருந்தால்! சரணின் மனநிலையை அறிந்தாற் போல் ரகு அவன் தோளில் ஆதரவாக கை வைத்தான். உண்மை தான் 12 வருடங்களாக அந்த ஒரு ஆதரவு மட்டும் இல்லை என்றால், சரணின் நிலை என்னவாகி இருக்கும்?

"போலாம். . . ஆதி. . . "அவன் மேற்கொண்டு வீட்டின் உள்ளே பிரவேசித்தான்.

"ஐயா. . . . நீங்களா?எப்படி  இருக்கீங்க. ?"என்றார் அந்த வீட்டில் பல வருடங்களாக பணி செய்யும் கமலாம்மாள். சரண் அவர் கேள்விக்கு பதில் கூறாமல் சென்று விட்டான்.

"நல்லா இருக்கோம். . . . நீங்க எப்படி இருக்கீங்கமா?"

"நல்லா இருக்கேன் தம்பி! 12 வருஷத்துக்கு அப்பறம் இப்ப தான் வர தோணுதா?"

"அதை ஏன் எங்கக்கிட்ட கேட்கிறீங்க?மேலே ஒருத்தன் கஞ்சி போட்டு அயன் பண்ணா மாதிரியே போனானே அவன் கிட்ட கேட்க வேண்டியது தானே! "என்றான் நிரஞ்சன்.

"சும்மா இருடா! "

"ம். . . . இவனுக்கு இன்னும் கொழுப்பு அடங்கலை. ரகு. . . பையன் வரலை?"

"இல்லம்மா. . . ! கேஸ் விஷயமா வந்திருக்கோம். அதான். . . அவனை கூட்டிட்டு வரலை"

"சரிப்பா. . . ! போய் குளிச்சிட்டு வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன். "

"நான் போயிட்டு சாயந்திரமா வரேன்"

"ஏன்டா?"

"ஒண்ணுமில்லை. என் பேக் அங்கே இருக்கு. "

"அதுக்கென்ன?போய் எடுத்துட்டு வா! "

"சரி. . . . நான் போயிட்டு வரேன் மச்சான். அவன் கிட்ட சொல்லிடு"

"சரிடா. . . ஏன் ஒரு மாதிரி இருக்க?"

"அதுவா?மகேந்திரன் அங்கிள் கிட்ட என்ன சொல்லப் போறேனோ?"

"அவர் ஒன்றும் சொல்ல மாட்டார், சரண் முடிவிற்கு அவர் சந்தோஷப்படுவார்"

"சொல்றது சுலபம். . . ! "

"புலம்பாம போடா! "-ஆம் அவன் கூறியதுப்போல அவர் இதனால் வருத்தமடைய போவதில்லை. ஆனால், சில விளையாட்டுகள் இனியே தொடங்க போகின்றன, என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. 

தொடரும்...

Go to EUU # 01

Go to EUU # 03

{kunena_discuss:722}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.