(Reading time: 33 - 65 minutes)

ரவு. அலங்கரிக்கப்பட்ட அந்த அறையில் இருந்தான் வசந்த். அந்த அறையை ஒட்டிய பால்கனியில் நின்றிருந்தான்.

அவன் கண்ணில் பட்டது அந்த நிலவு. அதை ரசித்தே நீண்ட நாட்கள் ஆகியிருந்தது. ஏனோ அதையே பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்த நேரத்தில் மெல்ல உள்ளே வந்தாள் அர்ச்சனா. ஏனோ சுவாசம் தடுமாறுவது போலே இருந்தது.

அவள் வளையல் ஒலி அவனை கலைக்க பால்கனியில் நின்றிருந்தவன் மெல்ல திரும்பினான் அப்படியே நின்றுவிட்டான் வசந்த். அந்த நிலா சட்டென தரையில் வந்து நின்றது  போலே தோன்றியது. சின்ன புன்னகையுடன் அவளை கண்களால் அழைத்தான்.

சின்ன படபடப்புடன் மெல்ல நடந்து அவன் அருகில் வந்து நின்றாள் அர்ச்சனா.

அழகான கிரீம் நிற சேலையில், எளிமையான அலங்காரத்துடன், அவன் எதிரில் நின்றவளை பார்த்த போது நிலவை மறந்து விட்டிருந்தான் வசந்த்.

அவன் பார்வையில் சிலிர்த்து போனவளாய் கேட்டாள் 'என்ன வசந்த் அப்படி பாக்கறே?

தன் கைகளை அவளுக்கு மாலையாக்கி சொன்னான் ம்?.....  என் பொண்டாட்டி எவ்வளவு அழகுன்னு பார்க்கிறேன்.

சட்டென 'போச்சு போச்சு நிலா பார்த்திட்டிருக்கு' என்று அவனை தள்ளி விட்டு உள்ளே ஓடியே விட்டிருந்தாள் அரச்சனா.

புன்னகையுடன் மெல்ல நடந்து உள்ளே வந்தவன் அங்கே நின்றிருந்தவளின் அருகே வந்து அவள் முகத்தை கையில் ஏந்திக்கொண்டு அதை மெல்ல நிமிர்த்தினான் . 'அவன் அவள் கண்களுக்குள் பார்த்துக்கொண்டிருக்க சின்ன தவிப்புடன் அவனை பார்த்தவள் மெல்ல கண்களை மூடிக்கொண்டாள்.

அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் வசந்த். மெல்ல கண்திறந்து அவன் முகத்தை  அவள் கேள்வியுடன் பார்த்த நேரம் சிரித்தபடி மெல்ல பாடினான் 'ரோ.....ஜா.........ஒன்று ....முத்தம்.... கேட்.....கும் நே....ரம்....

அய்யோ ...போ வசந்த்... என்று அவள் விலகி ஓட அவளை இழுத்து தன்னோடு வசந்த் தன்னோடு இறுக்கிக்கொள்ள அவன் அன்பில் மெல்ல மெல்ல கரைய துவங்கினாள் அர்ச்சனா.

ரண்டு நாட்கள் கடந்திருந்தது. அன்று மதியம் ஊருக்கு கிளம்பிக்கொண்டிருந்தார் அப்பா.

வசந்தை அழைத்தான் மனோ. 'டேய் அவ அப்பா ஊருக்கு கிளம்பிட்டிருக்கார்டா. அர்ச்சனா இதுவரைக்கும் அவர்கிட்டே ஒரு வார்த்தை கூட பேசலை. நான் நினைக்கறது ரைட்டா தப்பான்னு தெரியலை. நாம எல்லாரும் சந்தோஷமா இருக்கோம் அவர் மட்டும் வருத்தத்தோட கிளம்பறது கஷ்டமா இருக்குடா. அவளை வந்து பேச சொல்றியா.?

கைப்பேசியை துண்டித்து விட்டு, டி.வியை திருப்பிக்கொண்டிருந்தவளின் அருகில் வந்து அமர்ந்தான் வசந்த்.

உங்கப்பா ஊருக்கு கிளம்பிட்டிருக்கார் தெரியுமா?

ம்

போய் பேசுடா அவர்கிட்டே.

ம்ஹூம்

என்ன ம்ஹூம்? அவள் தோளை அணைத்து அவள் முகத்துக்கு அருகில் வந்து அவள் கன்னத்தில் இதழ் பதித்த படியே  சொன்னான் 'நோ. 'என் பொண்டாட்டி இப்படி இருக்க கூடாது. நான் சொன்னா என் அர்ச்சனா கேட்குமா. கேட்காதா?'

அடுத்த சில நிமிடங்களில் அவள் அப்பா முன்னால் நின்றிருந்தனர் இருவரும்.

எதுவுமே பேச வில்லை அர்ச்சனா.

வசந்த் தான் துவங்கினான் 'எங்கே கிளம்பறீங்க?

சென்னைக்குத்தான். என்றபடியே தனது பெட்டியில் துணிகளை அடுக்கிக்கொண்டிருந்தார் அவர்

எதுவுமே பேசாமல் அவரையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் அர்ச்சனா .மனதிற்குள் அந்த வலி இன்னமும் மிச்சம் இருப்பதாகவே தோன்றியது அவளுக்கு.

அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடியே நின்றிருந்தான் வசந்த்.

அர்ச்சனா நான் கிளம்பறேன்மா. அப்பாவை நியாபகம் வெச்சுக்கோ.

பதில் பேசவில்லை அவள்.

அவளையே பார்த்துக்கொண்டு பெட்டியை எடுத்துக்கொண்டு அவர் நகர்ந்த போது கால் கட்டிலில் இடித்து, இடறி சற்று .தடுமாற 'அப்பா பார்த்து பா' அவளேயறியாமல் பதறி அவர் தோள்களை பற்றிக்கொண்டாள் அர்ச்சனா.

அப்பா மெல்ல நிமிர்ந்து அவளை பார்க்க, அடுத்த நொடி சுதாரித்துக்கொண்டாள். கண்களில் நீர் சேர சட்டென அந்த அறையை விட்டு வெளியேறி விட்டிருந்தாள் அவள்.

மெல்ல புன்னகைத்தபடியே அப்பாவை பார்த்து சொன்னான் வசந்த் 'பார்த்தீங்களா. இதுதான் உங்க பொண்ணு. நாலு நாளிலே அவ கோபம் எல்லாம் சரியாயிடும். நீங்க பேசாம இங்கேயே வந்து இருங்க. அங்கே தனியா இருந்து என்ன பண்ண போறீங்க.

ஒரு பெருமூச்சுடன் அவனை பார்த்தார் அப்பா ' என்ன மனசுப்பா உனக்கு. உன்னை போய் நான் தப்ப நினைச்சேனே. வரேன் பா. நான் வரேன். நீங்க எல்லாரும் என்னை மன்னிசிருக்கலாம். ஆனால் நான் என்னை இன்னும் மன்னிக்கலையே.  அதுக்கு கொஞ்சம் டைம் வேணும். நான் என்னை மன்னிச்சதும் திரும்பி வரேன்.

கொஞ்ச நாளிலே உங்கப்பாவே உனக்கு பையனா வந்து பிறப்பார். அப்படி வந்திட்டா அர்ச்சனா மனசும் ஆறிடும். அப்போ அர்ச்சனாவை  எனக்கு போன் பண்ண சொல்லு. நான் சந்தோஷமா கிளம்பி வரேன்.  என்று சொல்லிவிட்டு எல்லாரிடமிருந்தும் விடை பெற்று நடந்தார். அப்பா.

ஒரூ வருடம் கழித்து ஒலித்தது அப்பாவின் கைப்பேசி. திரை 'அர்ச்சனா'...... என ஒளிர்ந்தது.

         

நிறைந்தது!

Manathile oru paattu episode # 21

{kunena_discuss:683}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.