இது உண்மையான தாம்பத்தியத்தின் காதல் இத உணரணும் சொன்னாலெல்லாம் புரியாது. ஆனா உன்னோட நண்பன் சீக்கிரமே உணருவான்.” என்று மதனையும் தனக்கு துணையாக இழுத்தான்.
“ஹ...ஹ..ஹஹ்ஹா பின்ன நான் யாரு? என் மாமா எவ்வளியோ யானும் அவ்வளி” என்று தானும் பொண்டாட்டி தாஷன் ஆகப் போவதை இப்போதே தெரிவித்து விட்டான்.
மூவரும் கலகலவென சிரித்தனர். அஸ்வின் திவாவிடம் இன்னுமொரு கேள்விக்கு விளக்கம் கேட்க வேண்டி இருந்தது.
இன்னொரு விஷயம் மாமா அது என்ன யாழினி அக்காவ யானி என்று கூப்பிடுறீங்க இதுவும் காதலால் கசிந்துருகி செல்லமா வைச்ச பெயரா?”
மதனும் திவாவும் சிரித்தே விட்டனர். அஸ்வின் புரியாது அவர்களைப் பார்த்தான்.
“காதலால் கசிந்துருகி நெய் கேப்பை எல்லாம் வழிந்து வைச்ச பெயர் தான்.” என்றார் சிறு கடுப்புடன்.
“என்ன மாமா சொல்லுறீங்க எனக்கு ஒன்னும் விளங்கல?”
“வா இதுக்கு பதில நான் சொல்றன் மாமா கடுப்பாகிடுவாரு” என்று கூறி அஸ்வினை அழைத்துக் கொண்டு இருவரும் மாடிப் படி நோக்கி நடந்தனர். அப்போது ஹாலின் மறுபுர சுவரில் அட்டை போல ஒட்டிக் கொண்டு யது கண்மூடி நின்றிருந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பின்னர் அஸ்வின் மெதுவாக அவளை அழைத்தான்.
“யது.... ய... யதுக்ஷிகா... இங்க என்ன செய்றாய்? உடம்பு ஏதும் சரியில்லையா? உன்னோட அண்ணா சொன்னத நினைத்து கொண்டிருக்கியா?”என ஆறுதலாக அஸ்வின் அவளிம் விசாரிதான் .
அந்த ஆறுதல் வார்த்தியில் அவளுக்கு கண்ணை கரித்தது.
‘இல்ல பரவாயில்ல நீங்க யது என்றே கூப்பிடுங்க. நான் ஏதோ காலேஜ் டென்ஷனில அப்பிடி கோபப் பட்டு பேசிட்டன்.” என்று மறை முகமாக அஸ்வினுக்கு தனது காதலை சொன்னதோடு அவனுக்கு மட்டும் தனது பெயர் அனுமதியும் வளகினாள்.
‘ஏன் யது காலேஜில் ஏதாவது பிரச்சனையா? யாராவது உங்கிட வம்பு பண்றாங்களா? எதுவாயிருந்தாலும் சொல்லு நானும் உனக்கு அண்ணா தான்” என்றான் மதன்.
“அப்பிடியா அப்போ முதலில என்னை யது என்று கூப்பிடாதீங்க. அது மட்டும் இல்ல காலேஜில் எவனாவது என்கிட்ட வம்பு பண்ணா அவன் அவ்வளவு தான்.” என்றாள் கோபத்துடன். கைகளை முஸ்டி பிடித்தவாறு. அஸ்வினும் மதனும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்தனர்.
“சாரி மதனத்தான் இவர் வெளியால் அது தான் அப்பிடி கூப்பிட்டால் பரவாயில்ல என்று விட்டிட்டன் ஆனா நீங்க தான் என்னோட இன்னுமொரு அண்ணாவாச்சே அது தான் உரிமையா கோவித்தேன் தப்பா அத்தான்.” என இதற்கு முன் கோவப் பட்டது இவள் தானா என சந்தேகிக்கும் வண்ணம் உருகினாள்.
அவள் சொன்ன சமாதானம் உண்மை இல்லை என இருவருக்கும் தெரிந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாது சிரித்தே சமளித்தனர்.
“அது போகட்டும் அப்போ உனக்கு காலேஜில் வேற என்ன பிரச்சனை என வினவினான் மதன்
அது ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லை. என் க்ளோஸ் ப்ரண்டோட கொஞ்ச நாளா மிஸ்ஸண்டஸ்ராண்டிங் அவளவு தான் அத நானே இன்னும் இரண்டொரு நாளில் சரி பண்ணிடுவன்” என்று சொல்லி அங்கிருந்து அகன்றாள்.
மதனுக்கும் அஸ்வினுக்கும் ஏதோ ஒன்று புரிந்தாற் போல் இருந்தது. (அது உங்களுக்கே தெரிந்திருக்கும். ம்ம்ம்ம் அது யது அஸ்வின் மேல் கொண்ட காதல்.)
மதன் அஸ்வினிடம் திரும்பி “மச்சான் உனக்கு மாமா சொன்ன ஒருவருட கணக்கு என்னவென்று தெரியுதா?”
“எந்த ஒரு வருட கணக்கு”
“அது தாண்டா யதுக்ஷிக்கா ஒரு வருடமா ஏதோ ஒரு மாதிரி இருக்கிறா என்றாரே அத கேக்கிறன்.”
“ம்ம்... இல்ல எனக்கு தெரியல ஆனால் அதில ஏதொ ஒரு விதத்தில் நான் சம்மந்தப் பட்டிருக்கன் என்று மட்டும் தெரியுது.
“எப்பிடிடா கரக்ட். ஒரு விதத்தில இல்ல அந்த சம்பவத்தில் நீ மட்டும் தான் சம்மந்த்தப் பட்டிருக்காய். உனக்கு நியாபகம் இருக்கா? போன வருடம் கல்பனாக் குட்டிட பர்த்தடேக்கு வரமுடியல என்று அடுத்த மாதம் வந்து எல்லாரையும் ஒரு வாரம் ரூர் கூட்டிப் போனியே. அப்பவில இருந்து அவ ஒரு மாதிரித் தான் நடந்துக்கிறா உன் பேச்சு எடுத்தால் முகமெல்லாம் பல்லாகிடும் இல்லாட்டில் எல்லார் மீதும் எரிந்து விழுவா அப்பெல்லாம் அது எனக்கு உருத்தல ஆனால் இப்ப உன்னை மட்டும் யதுஎன்று கூப்பிட சொல்றா மற்றயாரையும் கூப்பிட அலௌ பண்ணல. நான் அத கன்வோம் பண்ணிக்க தான் அப்பிடி கூப்பிட்டன். அது சரியாக்ப் போச்சு பாப்பம் இந்த கலியாணம் முடிய முதல் அவ உன்னை நியமா விரும்புறா என்றால் தன்னோட லவ்வ உன்கிட்ட சொல்லிடுவ என்று நினைக்கிறன்.”
அஸ்வின் யோசனையாக இருந்தான்.
“ஹேய் என்னடா யோசனை நீயும் அவளை... அவ நல்லவ தான். என்ன கொஞ்சம் இடிவாதம். ஆனா நீ அவ புருஷனா வந்தால் எங்க நட்பும் இன்னும் பல மடங்காகும். அத விட அக்காவும் மாமாவும் ரொம்ப சந்தோஷப் படுவாங்க. நீ எனனடா சொல்றாய்"
“:சாச்சா அதெல்லாம் இல்லடா நான் அவளை அந்த மாதிரி கற்பனை கூட பண்ணிப் பாக்க இல்ல. ஏன்னா நான் மூன்று வருஷமா ஒரு பொண்ணை லவ் பண்றன். ஆனால் நான் லவ் பண்ற விஷயம் அவளுக்கு தெரியாது.” என்று தனது காதல் கதையை தன் நண்பனிடம் கூறினான்.
“ஏய் மாப்பிளை வாழ்த்துக்கள். என்கிட்டயே சொல்லல நீ... சரி போகட்டும் நீ சொல்றதைப் பார்த்தால் அவங்களும் உன்னை லவ் பண்ராங்க என்று தான் நினைக்கிறன். ஆனாலும் நீ உன்னோட லவ்வை அவங்க கிட்ட சொல்லிடுறது நல்லது. " என்று. Yஅக்காவின் நாத்தனாருக்காக பேசாது தன் நண்பனின் சந்தோஷத்தை முன்னிறுத்தி பேசலானான்.
“ம்.. சென்னைக்கு போனதும் அவளை மீற் மண்ணனும்.” என்று மதனிடம் கூரிவிட்டு குளியலறைக்குள் நுழைந்தான்.
“சீக்கிரம் வாடா பாவம்டா மாமா அக்கா கண்ணில படாமல் ஒழிந்து திரியுறார்.”
“ஓகே நான் ரெடி வா போகலாம். என்று குளியல் அறையில் இருந்து வெளி வந்தான் அஸ்வின்.
"ஏய் இப்ப எங்க திரும்ப ரூமுக்கு போறாய்" என மதன் அஸ்வினிடம் கேட்டான்.
"என்னோட பர்ஸ் பெட்டில இருக்கு அத எடுக்க போறன். " என்று கூறி உள்ளே செல்ல திரும்பிய நண்பனை தடுத்து நிறுத்தி தான் உள்ளே சென்று பர்சை தூக்கினான். அது எதிர் பாராத விதமாய் கீழே விழுந்து அதிலிருந்து அஸ்வின் பொத்தி வைத்த புவிக்காவின் ஓவியம் கீழே பறந்தது. அதை பார்த்த மதன் அதிர்ச்சி அடைந்தான்.
தொடரும்!
{kunena_discuss:702}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.