(Reading time: 8 - 15 minutes)

 

" ம்ம்ம்ம்ம்ம் ஆமா சுபத்ரா நான் பாக்கத்துல ஒரு கடைக்கு போய்ட்டு வரேன் . நீங்க பில் கட்டிடுங்க. அதோ அந்த நீல கார் என்னோடது அங்கே வந்துடுங்க ..நான் அஞ்சு நிமிஷத்தில் வரேன்" என்றவன் அவள் பதிலுக்கு எதிர்பார்க்காமல் விரைவாக நடந்தான்.

" என்ன இவன் ? பணத்தை கொடுத்துட்டு போய்டான்  ? என் மேல அவ்வளோ நம்பிக்கையா இல்ல என் முகத்தை பார்த்தா சந்தேகபடுற மாதிரி இல்லையா ? " என்று தனக்குள்ளே வினவியவள் அவன் சொன்னது போல் கார் அருகே காத்திருந்தாள்...

" காத்திருந்தாய் அன்பே

எந்தன் காதல் நீதானே " என்று பாடலை முணுமுணுத்தபடி அவன் அங்கே வந்தான்.

" சரி சார் நான் வரேன் "

" சுபத்ரா "

" ம்ம்ம் "

" இது என்னோடு சின்ன பரிசு ............ நன்றி "

" என்ன இது "

" நீங்களே பாருங்க "

" வாவ் ...வைட் ரோஸ் பூச்செடி ...ரொம்ப அழகா இருக்கு "

" எனக்கு வைட் ரோஸ் பிடிக்கும்னு எப்படி தெரியும் "

" ஓ உங்களுக்கு வைட் ரோஸ் பிடிக்குமா ? " என அவன் கண்களில் குறும்புடன் வினவ, அவள் சந்தேகத்துடன் அவனை பார்த்தாள்...

" சார் .........  பொய் சொல்லாம சொல்லுங்க எப்படி தெரியும் உங்களுக்கு ? "

" ஹா ஹா கூல் .... உங்க வைட் ரோஸ் டிசைன் ல இருக்குற தோடு, வைட் ரோஸ்  டிசைன் ல பேக், அண்ட்  வைட் ரோஸ் ஸ்க்ரீன் சேவர் உங்க போன்ல ...அத வெச்சு கேஸ் பண்ணேன் "

" சுப்பர் அசத்துறிங்க சார்...... ஒரே லுக் ல இவ்வளோ கண்டுபுடிக்கிரிங்க... அப்போ இனி சீரகம் எது சோம்பு எதுன்னு கன்பியுஸ் ஆகி உங்க வைப் கிட்ட திட்டு  வாங்க மாட்டிங்கனு  நம்புறேன் "

வைப் என்றவுடன் அவன் கண்களும் சிரிப்பதை அவள் கவனித்தாள்... (ஒரு வேளை ஜானு  மேல அவ்வளோ காதலோ ) என்று எண்ணியவள் ஏனோ மீண்டும்  ஏமாற்றமாக உணர்ந்தாள் ....

" ஆமா சார் அதுக்கு பூ மட்டும் வாங்கிருக்கலாமே ..? பூச்செடி எதற்கு ? "

" பூவாக கொடுத்தா ஒரு நாளில் வாடிடும்...அதுவே செடியாக இருந்தா எப்பவும் உங்க கண்பார்வையில இருக்கும் ...நம்ம சந்திப்பும் உங்களுக்கு ஞாபகம் இருக்கும் .... அதுவும் எனக்கு பூக்களை பறிப்பதை விட அதை செடியோடு பார்க்கத்தான் பிடிக்கும் " என்றான் .

(எவ்வளோ மென்மையான மனம் கொண்டவன் இவன்..... ஜானகி அதான் நம்ம ஜானு ரொம்ப அதிர்ஷ்டசாலி .... சந்திப்பு ஞாபகத்துல இருக்குமா ? அப்போ நம்ம சந்திப்பு ஞாபகத்துல இருக்கணும் நு இவனும் நினைக்கிறானோ  )

" நன்றி சார் ... ரொம்ப அருமையான பரிசு ...வரேன் "

" பாய் சுபத்ரா ........"

" ஆமா சார் உங்க பேரு நீங்க சொல்லவே இல்லையே ? "

" மறுபடி பார்க்கும்போது சொல்றேன் "

" மறுபடி பார்கலன்னா ? "

" அதெப்படி பார்க்காம இருப்பேன் சுபத்ரா ? "

( என்ன இப்படி கேட்டு வைக்கிறான் ? )

" ரொம்ப குழம்பாதிங்க சுபத்ரா ..... குழந்தைத்தனமான முகம்தான் உங்க அழகே .....சரி நான் வரேன் " என கண் சிமிட்டி சென்றான் அவன் .

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக

சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக

என்னாச்சு எனக்கே தெரியவில்லை

என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை

அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்

இது பிடிக்கிறதா பிடிக்கல்லையா யாரிடம் கேட்டு சொல்வேன்

என்று மனத்துக்குள் பாடி கொண்டாள்...

( இன்னைக்கு என்ன ஆச்சு எனக்கு ? முதல் தடவை பார்த்த ஒரு பையனுக்காக பாட்டெலாம் பாடிகிட்டு ....அதுவும் கல்யாணம் ஆனவன் ........ ஆனா அவன்  கண்களை பார்த்தா என்னமோ காலம் காலமாக பழகிய  உணர்வு ...................... ச்ச ச்ச சுபத்ரா இது தப்பு .... நீ ரொம்ப ஸ்ட்ரோங்கான  பொண்ணுன்னு உலகமே நம்புது ...அதுவும் இந்த விஷயம் வீட்டுல தெரிஞ்சாலே போதும் .... டின்னு கட்டிடுவாங்க ...அதுவும் இந்த ராம்  இருக்கானே .......... அய்யயோ உன்னை கலாய்ச்சே கொன்னுடுவான்……….வேண்டாம் வேண்டவே வேணாம் ...... நாமெலாம் சிங்கம் ...சிங்களா தான் இருக்கணும் ) தனக்குள்ளே பேசிக்கொண்டவள்,

மறுபடி பார்ப்போம்னு சொன்னானே ? நிஜம்மா பார்ப்போம்மா ? ?

 விழிகளில் கேள்வியுடன் நின்றாள்.

Episode # 02

தொடரும்

{kunena_discuss:734}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.