Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 
chillzee/write-chillzee
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
(Reading time: 9 - 17 minutes)
1 1 1 1 1 Rating 4.85 (13 Votes)
உன்னை பார்த்திருந்தேன்... – 04 (updated) - 4.8 out of 5 based on 13 votes

உன்னை பார்த்திருந்தேன்... – 04 - வினோதா

வர்கள் வானூரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அதே நேரம், ஒரு வெள்ளை நிற ஹோண்டா கார் அந்த அரசு கட்டிடத்தின் முன் வந்து நின்றது. காரில் இருந்து இறங்கிய கண்ணபிரான் தன் வழக்கமான வேக நடையுடன் உள்ளே சென்றான்.

ஒரு அறையின் அருகே சென்று கதவை தட்டியவன்,

“கம் இன்...” என்று உள்ளிருந்து குரல் கேட்கவும், கதவை திறந்து உள்ளே சென்றான்.

Unnai parthirunthen

“வணக்கம் வேல்முருகன் சார்... வணக்கம் வெங்கடேஷ் சார்...”

“வணக்கம்... என்ன முடிவு செய்திருக்கீங்க கண்ணபிரான்?”

“நல்ல முடிவா தான் எடுத்திருக்கேன்... நீங்க சொன்னது போலவே ஒரு பார்ட்டி இன்டிரெஸ்ட் காட்டுறாங்க... நான் பார்ட்டி கிட்ட இந்த தங்க புதையல் ஐட்டம் எல்லாம் சீக்கிரம் கைக்கு வந்திரும்னு சொல்லிடவா?”

“ரொம்ப சந்தோஷம்... சொல்லிடுங்க... ஆனால் ரேட் பேசும் போது மட்டும் நாங்களும் இருக்க பிரிய படுறோம்...”

“கட்டாயமா! ஆனால் எல்லாம் நல்ல படியா நடக்கனும்... நாம கையில் இருந்து போடும் காசு அதிகம் அதனால் டைம் கடத்தாமல் சீக்கிரம் செய்யனும்...”

“புரியுது... ஆனால் அதற்காக தான் உங்களுக்கு எக்ஸ்ட்ரா ஷேர் கொடுக்குறோம்...”

அதுவரை வேல்முருகனை பேச விட்டு அமைதியாக இருந்த வெங்கடேஷ்,

“இந்தாங்க இந்த போட்டோவில் இருப்பது போலவே கோல்ட் பார், ருத்திராக்ஷை மாலை எல்லாம் செஞ்சிடுங்க...” என்றான்.

“யாருக்கும் சந்தேகம் வராதா?”

“இதை எல்லாம் யார் கண்டுக்குறது சொல்லுங்க? வெளி நாட்டுக்காரனுக்கு தான் இது போல் antiques மேல பிரியம் அதிகம்... இந்த ஐட்டம்ஸ் போலவே தங்கத்தில் நாம செஞ்சு மாத்தி வச்சுட்டா யாருக்கும் தெரியாது... ஆராய்ச்சி செய்து இது பழைய பொருள் இல்லை புதுசுன்னு சொல்லி முடிச்சிடலாம்... அதுக்கு அப்புறம் இது மத்தவங்க தலைவலி”

“உங்க டிபார்ட்மென்ட் சைடில் இருந்து எந்த பிரச்சனையும் வராமல் பார்துக்க வேண்டியது உங்க பொறுப்பு... இந்த டுப்ளிகேட்ஸ் ஐட்டம் செய்ய நான் போடும் காசுக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் அப்புறம் உங்க இரண்டு பேர் தலையை தான் நான் உருட்டனும்...”

“அதெல்லாம் எதுவும் வராது... நீங்க இந்த டுப்ளிகேட் ஐட்டம்ஸ் ரெடி செய்துட்டு சொல்லுங்க, நாம எக்ஸ்சேஞ் செய்திடலாம்...”

“ஓகே!”

வானூரை நோக்கி சென்றுக் கொண்டிருந்த காரில் இருந்த கீர்த்தனாவின் மனதில் பலவிதமான கேள்விகள் இருந்தன. நேரில் பார்ப்பது போல் தோன்றும் இந்த கனவிற்கு ஏதேனும் காரணம் உண்டா? யார் இந்த பார்த்திபனும், பூங்கோதையும்? அவளுடைய கையில் இருப்பதை போலவே அந்த பூங்கோதையின் கையிலும் தழும்பு இருந்ததே!

இதெல்லாம் அவளின் மனதில் தோன்றும் கற்பனையா? இல்லை வேறு ஏதாவதா?

கல்லணை கட்டிய கரிகாலனை பற்றி அவள் பெரிதாக தெரிந்துக் கொண்டதில்லை. அந்த கரிகாலனுடைய ஒற்றனை பற்றி அவள் கற்பனை செய்ய என்ன இருக்கிறது?

இதெல்லாம் எதோ காரணத்தோடு தான் தோன்றுகிறதா?

தூக்கத்தில் தான் காட்சிகள் தெரியுமா?

யோசனையோடு கண்களை இருக்க மூடிக் கொண்டாள்! சென்ற முறை பார்த்திபனையும் கோதையையும் எந்த இடத்தில் விட்டு வந்தாள் என்று நினைவுக்கு கொண்டு வர முயன்றாள்.

ஏதோ அதிசயம் நடப்பது போல் கண்ணின் முன் வண்ணங்கள் தோன்றின! மெல்ல அந்த காட்சி கண் முன் தெரிந்தது...

பூங்கோதையை தொடர்ந்து சென்ற பார்த்திபன் முற்காப்புணர்வுடன் இருபக்கமும் கவனத்துடன் பார்த்த படி சென்றான்...

போகுல் குன்றம் பெயருக்கு ஏற்ப ஒரு மலை உச்சியில் இருந்தது. மலையை குடைந்து மக்கள் சென்று வர பாதைகள் அமைக்கப் பட்டிருந்தன. அப்படி பிரயாணம் செய்யும் மக்கள் களைப்படையாமல் இருக்க சாலையின் ஓரம் எங்கும் நிழலை கொடுக்கும் வானுயர்ந்த மரங்கள் இருந்தன. ஆங்காங்கே நீர்த் தொட்டிகளும் அமைக்க பட்டு இருந்தன.

சாலைகள் நன்கு பராமரிக்கப் பட்டு வருவதை நன்கு உணர முடிந்தது. ஒரு சிறு ஊருக்கு இத்தனை தனி சிறப்பா என்று மனதினுள் வியந்தப் படி புரவியில் சென்றான் பார்த்திபன்.

மேலே செல்ல செல்ல ஆங்காங்கே தியானத்தில் ஆழ்ந்திருக்கும் துறவிகளும், சாலையின் இரு புறம் இருந்த மலையில் பல சிற்பங்களும் தென்பட்டன.

ஆவலுடன் அதை கவனித்து வந்த பார்த்திபனால் ஆர்வத்தை அடக்க இயலவில்லை...

“கோதை, இந்த சிற்பங்கள் எதை விவரிக்கன்றன? துறவிகள் போல் தெரிகிறதே...”

“ஆம், அவை சமண மத சிற்பங்கள்... ஆங்காங்கே உங்களின் கண்களில் தென்படுபவர்களும் சமண மத துறவிகள் தாம்...”

“சேர நாட்டில் சமண மதம் இத்தனை பரவி இருக்கிறதா?”

“ஆம், எங்கள் மன்னர் சமண மதத்தையும் போற்றுபவர்... பல இடங்களில் சமணர்களின் தியான குகைகளையும், கல் படுக்கைகளையும் நீங்கள் பார்க்கலாம்...”

“ம்ம்ம்... சமணர்களுக்கு இத்தனை தனி சிறப்புகளா?”

“இதென்ன இப்படி கேட்டு விட்டீர்கள்? சமண மதம் வாய்மையையும், பிற உயிர்களை கொல்லாமையையும் உயர்வுடன் போற்றும் சமயம்... அதை பற்றி தமிழ் பாடல் கூட இருக்கிறதே...”

“என்ன பாடல்?”

உண்ணாமையின் உயங்கிய மருங்குல் ஆடாப படிவத்து ஆன்றோர்... நீங்கள் கேள்வி பட்டதில்லையா?”

“இல்லை. மறத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை நான் அறிவுக்கு தரவில்லை...”

“இது என்ன புதிதாக சொல்கிறீர்கள்? உங்கள் கூற்றுப்படி பார்த்தால் வீராதி வீரர் என புகழப்படும் மன்னர்கள் அனைவரும் அறிவீலிகளாக அல்லவா இருந்திருக்க வேண்டும்?”

“எனக்கு தான் கல்வியில் ஆர்வம் இருக்கவில்லை ஏற்றுக் கொள்கிறேன்... ஆனால் என்னுடைய வாள் வீச்சிற்கும், வேல் வீச்சிற்கும் முன் ஒருவரும் நிற்க இயலாது”

அவளின் அழகிய விழிகளை சுழற்றியப் படி பார்த்திபனை நேராக பார்த்த பூங்கோதை,

“அப்படியா என்ன? என்னை உங்களின் வாளினால் வெல்ல இயலுமா?”

வளின் மான் விழிகளில் இருந்து பார்வையை விலக்கினால் அல்லவா அவன் வாளை கையில் எடுக்க?

பார்த்து சில மணி நேரங்களே ஆன அந்த பெண்ணின் சிறு புன்னகையும், மயக்கும் விழிகளும், கடைக்கண் பார்வையும், தேனினும் இனிய பேச்சும் அவனை இந்திரலோகத்திற்கே கொண்டு சென்றிருந்தன...

அன்பு என்றும் நேரம் சொல்லி மலருவதில்லை, பார்த்திபனின் இள இதயத்தில் பூங்கோதை எங்கே எப்போது பீடம் ஏற்றி வீற்றிருக்க துவங்கினாள் என்று அவனால் குறிப்பாக புரிந்துக் கொள்ள இயலவில்லை.

ஊரில் அவனுக்கு பல மாமன், அத்தை பெண்கள் இருந்தனர். ஆனால் இன்று வரை அவனுக்கு அவர்கள் யார் மீதும் அன்பு ஏற்பட்டதில்லை.

பார்த்திபனின் அமைதியை கவனித்த பூங்கோதை,

“என்ன அமைதியாக இருக்கிறீர்கள்? ஒரு பெண்ணுடன் என் வாள் மோதுவதா என்ற எண்ணமா? இவளுக்கெங்கே வாட்போரை பற்றி தெரிய போகிறது என்ற எண்ணமா? எதுவாக இருந்தாலும் அந்த ஐயம் உங்களுக்கு வேண்டாம். நானும் வாள் வீச்சை அறிந்தவள் தான்.”

“ஏன்?”

அவனிடம் பரிகாச பேச்சை எதிர்பார்த்திருந்தவள், அவனின் கேள்வியினால் ஆச்சர்யமடைந்தாள்.

“தற்காப்புக்கென பயின்றது... எனக்கு கல்வி பயிற்று வித்த குருவே இதையும் பயிற்றுவித்தார்... நாம் வந்து சேர வேண்டிய இடம் வந்து விட்டது... அதோ அந்த மண்டபம் தான் நாம் போக இருக்கும் இடம்.”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Meena andrews 2014-08-13 09:28
vino mam....."indru" part plz seikirama update pannunga.....v r waiting............
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Bindu Vinod 2014-08-14 17:42
நன்றி மீனா, சீக்கிரம் எழுத முயற்சிக்கிறேன்.
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Sujatha Raviraj 2014-08-12 09:36
Bindu mam .. Indru part ???? Please romba naala waiting..... Koncham periya manasu panni update pannunga madam ......
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Bindu Vinod 2014-08-14 17:41
முடிந்த அளவு சீக்கிரம் எழுதுகிறேன் சுஜாதா!
Reply | Reply with quote | Quote
+1 # Unnai PartiruntenMAGI SITHRAI 2014-08-10 20:22
Hi Bindu mam,

Yenta disturbance um illama kathai ya padikanumn than Sunday varaikum wait pannen :lol:

Partiban valakam pola super...nampa Gothai awesome lady..but avanga purvigam n kanneer romba kavalai a iruku...Naada Kathal a.Parthiban Gothai ya tavika viduruvara... :-?

Unga tamil romba romba azhagu mam :dance:
Reply | Reply with quote | Quote
# RE: Unnai PartiruntenBindu Vinod 2014-08-14 17:38
லேட்டா படிச்சி கமென்ட் போடா இப்படி எல்லாம் ஒரு வழி இருக்கா ;-)

உங்கள் கருத்தை பகிர்ந்துக் கொண்டதற்கு மிக்க நன்றி Magi :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04shaha 2014-08-10 11:57
Kothhai yal parthiban eduthu konda paniku ethum idaiuru erpadumo kathiyilirunthu parthi epadi thappipan kothai in edathu kail thalumbu keerthana virkuma engayo idikuthe :Q:
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Bindu Vinod 2014-08-14 17:36
இடிக்கலைப்பா அது தான் நம்ம அன்று & இன்று கதையை இணைக்கும் link :)
இன்னும் கொஞ்சம் அத்தியாயம் தானே போக போக உங்களுக்கே புரியும்....
Reply | Reply with quote | Quote
+1 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04shaha 2014-08-09 23:58
Ungal thamizh nadai super mam vaazhthukkal endru koorinaalum ungal padaipukku athu miha miha siru sole i lvu it mam thanks for giving to the lovly story n thanks a lottttttt enaiyum add panathuku :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Bindu Vinod 2014-08-14 17:35
மிக்க நன்றி shaha :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Valarmathi 2014-08-08 08:00
Super Bindu mam (y)
Romba alaga kathaiya yeduthuthu poringa...
Hope nothing happen to partiban...
waiting to read indru part...
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Bindu Vinod 2014-08-14 18:14
நன்றி வளர்... இந்த கமெண்ட்டை மிஸ் செய்துட்டேன்... சாரி!
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Bindu Vinod 2014-08-08 07:56
Hey friends, UP group'l irunthutu kathaiyum padichitu comment podathavanga ellam bench mela 2 hrs nillunga parpom ;-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Valarmathi 2014-08-08 08:01
Bindu mam ippo than kathaiyai padichi mudichen ... athunale bench mela ellam nikka mudiyathu :P
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Bindu Vinod 2014-08-14 17:34
லேட்டா படிச்சா / கமென்ட் செய்தால் தண்டனை இல்லைன்னு யார் சொன்னது :roll:

சும்மா சொன்னேன் வளர்! நன்றி :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04vathsala r 2014-08-04 12:03
chanceless. no words to say. ungal thamizhum, ungal vaarthaigalum, ungal varananaigalum really really superb. neengal thodarnthu ithe pol nirayaa ezhutha vendum manamaarntha vaazthukkal.
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Bindu Vinod 2014-08-08 07:55
Thank you very much Vathsala :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Anusha Chillzee 2014-08-03 20:11
this one's fabulous. doing research and writing are 2 different things. Ur writing keeps us attached to the story and leaves us wanting for more. Thats your success. Cant wait to read the next epi. This is more like reading 2 stories at the same time. Eagerly waiting to see how they both converge together and make us understand the link.I know how much busy you are with your professional commitments and other stories but still request you to update UP fast. A real treat to story lovers friend. Keep it rolling (y)
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Bindu Vinod 2014-08-08 07:55
Hey Anu, next time episode pathi ezhuthanum, ok ;-)
BTW thanks for your comment :P
Reply | Reply with quote | Quote
+1 # unnai parthirunthen part 4 ANDRUraghavansriramya 2014-08-03 11:02
Hi vino,

Excellent update ma. Touching update too
Reply | Reply with quote | Quote
# RE: unnai parthirunthen part 4 ANDRUBindu Vinod 2014-08-08 07:54
Thank you very much raghavanSriramya :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Aayu 2014-08-02 22:31
Superb mam kalakiteenga (y) Storyla vara characters'oda Unarvukal, Antha kaala Soolnilaikal ithayellaam Unga "Ezhuththukal" moolamaa engalaiyum Unara vekkireenga mam :yes: (y)
& Parthiban pola Kodhaiyum 1 spy'nnu nenaichchan mam but ippo illannu thonuthu :Q:
eagerly waiting 4 "Indru" part :yes:
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Bindu Vinod 2014-08-08 07:53
Yes Aayu kothai spy illai :)
Thanks a lot for your comment :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Nithya Nathan 2014-08-02 21:32
Super episode.
Romba Azhaga , interesting'a story'a kondu poringa. waiting for "indru" part.
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Bindu Vinod 2014-08-08 07:51
Thank you Nithya. Seekkirame indru part update seiyya try seiren :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04karthikeyan 2014-08-02 21:10
Good story & Mixing with present and past nice
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Bindu Vinod 2014-08-08 07:51
Thank you very much Karthikeyan :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04hills7 2014-08-02 18:24
nice update
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Bindu Vinod 2014-08-08 07:50
Thanks :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Madhu_honey 2014-08-02 17:33
அருமையாக எழுதி இருக்கீங்க வினோ... அதுவும் முழு பகுதியும் சரித்திர காலத்தில் அமைந்திருப்பது ஒரு இனிய அனுபவம்.. சம்பவங்கள் கோர்வையாக தொடுத்து இருக்கிறீர்கள். நிறைய ஆராய்ச்சி செய்து இருக்கிறீர்கள்... என் பாராட்டுக்கள்!!! ஊர், கோட்டை பற்றிய வர்ணனைகள் இன்னும் கொஞ்சம் கற்பனை கலந்து பிரமிப்பு நிறைந்ததாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து... தொடர்ந்து சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Bindu Vinod 2014-08-08 07:50
Thank you Madhu!
Parthiban kottaikul vantha udane avanudaiya padai thalaivar sonna pathaiyai amnathil vaithu ponathal thaan specific'a varnanani seiya mudiyalai. Will try to add more desc in future episodes.
Reply | Reply with quote | Quote
+1 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04afroz 2014-08-02 14:54
superb ji..!!! Pinnitteenga. The way u describe d path tht Kodhai nd Parthiban travel was simply superb. Andha suranga paadhai scenes lam chuma pichu odharitteenga. Bt Kodhai yaarunradhu is still a mystery.Last la suspence oda mudichuteenga. Andha rendu vizhigal Kodhai aaga dhan irukumnu nenaikuren.End la orey 'dhik dhik' scens ah vachuteenga ;-) Enjoyed it a lot. Waiting 2 c how Parthiban escapes nd also 2 know who pointed tht spear at him.. :-) 'indru ' part seeeeeekiramave UD panunga plz.. :yes: .
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Bindu Vinod 2014-08-08 07:41
Thank you afroz :)
ungalukku suranga pathai scene pidichirunthutha :D thanks...
Illai antha eyes Kothai'thu illai... yaarudaiyathunu next andri epila therinjidum...
seekirame update seiya try seiren.
Reply | Reply with quote | Quote
+1 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Sujatha Raviraj 2014-08-02 11:04
Woaw.. binds madam.. Excellent work again... Each and every scene i felt am there with parthiban. :thnkx: .. Surangapaathai scenes reminded me ponniyin selvan ..... Awesome work madam.... Presently keerthana went near the same temple which kodhai mentioned aah??? eagerly waiting madam...... nice work..... please update "indru" part soon ....
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Bindu Vinod 2014-08-08 07:39
Thanks Sujatha :) indru part weekend'l post seiya try seirenpa.
Yes Keerthana partha athe kovil thaan Kothai solvathum... :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Keerthana Selvadurai 2014-08-02 10:25
wow wow wow binds kalakkal episode... (y) (y) (y)
Parthibanoda nangalum ovoru idathilum payanapattu kondirukirom..
Kothai-parthi scenes are too good..
Parthi-oda nenjil iruntha vaal en nenjil nirkira mari irukirathu..
How parthi will escape?? Parthi-ya matama thapika vaichathu yaru???
Eagerly waiting for next episode..
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Bindu Vinod 2014-08-08 07:38
Yes KS next andru epila unga q'skku answer kidaichidum :)
Seekkirame Parthiban + Kothaiyoda Madurai poga ready aagunga :)
Reply | Reply with quote | Quote
+2 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Admin 2014-08-02 09:14
luv this episode. second half is very good. Parthiban kottaikul puguntha pin kathai inum interesta poguthu. kozhiyur, sithana vasal, jainism patriya padal ithelam very nice. kathai endrilamal antha 276 bc ke poi parpathu pol nala varnanai. lengthy episode 'm oru plus.

other side nu parthal, poongothai-parthiban chemistry konjam kamiya iruka mathiri oru feel varuthu (enaku than). rombave kalki style theriyuthu :) i know this is ur first history novel. ithai -venum sola mudiyathu. but since you asked me to share + and -, i am sharing this neutral observation also :)

anal this episode is too good (y)
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Bindu Vinod 2014-08-08 07:36
Thanks Shans!
Sithana vassal tidbit kavanicheengala 8) Thanks... Athuvum and samana tamil padalumezhuthum pothu strike aana vishyangal. china sentence endralum search seithu thaan ezhuthanum ;-) neenga athai mention seiyum pothu santhoshama iruku thank you.
andru hero - heroine chemistry improve seiya try seiren.
suranga vazhi enbathal PS touch theriyuthula, inimel similarities varamal parthukuren. Thank you very much for your comment.
Reply | Reply with quote | Quote
+3 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Meena andrews 2014-08-02 08:09
mam,kadaisila vara uraiyur(koliyur) defn adhuvum super (y)
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Bindu Vinod 2014-08-08 07:33
Thank you Meena :)
Reply | Reply with quote | Quote
+3 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Meena andrews 2014-08-02 08:06
super (y) parthiban pora edam ellam romba alaga describe panringa....padikum pothu parthiban kudave pora madri feeling iruku......
anda 2 vizhigal yarodathu????
parthiban kothai aasaiya niraivethuvara.....
mam "indru" part seikirama update pannunga mam plz......
eagerly waiting 4 "indru"part........
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Bindu Vinod 2014-08-08 07:33
Thank you very much Meena.
Antha eyes vishyam note seithirukinga, super sharp thaan neenga :) next andru epila athu yarunu therinjidum... athu varai porumai...
Reply | Reply with quote | Quote
+3 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Jansi 2014-08-02 07:19
Very nice update. Vivarika vaartaigalillai. Sarithira kaalathirku ennai payanam seyya vaithadarku nanri Vinodha. (y)
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Bindu Vinod 2014-08-08 07:32
Thank you very much Jansi :D
Reply | Reply with quote | Quote
+1 # RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Thenmozhi 2014-08-02 03:50
Binds, no words! Awesome!
parthiban kudave antha suranga valiyil pona mathiri irunthathu. kadaisiyil thidirnu vantha velum kuda apadiye thaan. He will escape I know, but still very very curious to know how he is going to manage it.
Kothai-Parthiban sollatha kathal nalla veyil kalathil kotum malai pol chilunu iruku.
Kathai not just picking up pace but is also very interesting. Pls update not just 4th part indru but also 5th part andru soon ;-)
Reply | Reply with quote | Quote
# RE: உன்னை பார்த்திருந்தேன்... – 04Bindu Vinod 2014-08-08 07:31
inimel than ezhuthanum Thens. Having some problem with my right hand :sad:
Too much typing'nalenu thonuthu. Sikirame ezhuthuren :)
Reply | Reply with quote | Quote
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

Contests

From the Past

Contests

From the Past

Contests

From the Past

From our Forums

அதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை!

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
09
KVJK

MuMu

NIVV
10
UNES

-

MMV
11
SPK

EMPM

-
12
ISAK

KaNe

NOTUNV
13
-

Ame

-
14
AA

NKU

-
15
KI

-

-


Mor

AN

Eve
16
KVJK

PVOVN

NIVV
17
MINN

-

MMV
18
-

PMNa

-
19
EEU01

KaNe

NOTUNV
20
TAEP

UVME

Enn
21
AA

NKU

-
22
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top