(Reading time: 16 - 32 minutes)

 

வில்லங்கத்து கிட்ட நாமா போய் சிக்கிட்டோமே’ என்று மனதுக்குள் நொந்து கொண்டான் அருண். பாவம் அவன், வேற என்ன செய்ய முடியும்.

திரும்ப திரும்ப கவின் அனுவிற்கு தேங்க்ஸ் சொல்ல, அனு “ஓகே நீ ரொம்ப கில்டியா பீல் பண்ற போல, பதிலுக்கு நீயும் எனக்கு ஏதாச்சும் பண்ணிடு. சரியா போயிடும்” என்றாள்.

“ஓகே” என்றான் கவினும் ஆழம் தெரியாமல்.

“என்ன வேணும் சொல்லு அனு. எதுவா இருந்தாலும் செய்யறேன்”

அனு யோசித்து விட்டு “ஓகே டூ மந்த்ஸ்க்கு என்னோட கான்டீன் பில் எல்லாம் நீயே பே பண்ணிடு. ஓகே வா” என்றாள்.

“டபுள் ஓகே” என்றான் கவின்.

“மச்சான் சிக்கிக்கிட்டியே” என்று அவன் காதில் ஓதினான் அருண்.

கவினோ அதை எல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை. அவனை பொறுத்த வரையில் இன்று ஜெனி அவளின் அப்பாவிடம் மாட்டாமல் தப்பித்தது பெரிய விஷயம். எனவே அவனுக்கு எதுவும் தோன்றவில்லை (கவின் கண்ணா, யானைக்கும் அடி சரக்கும்ன்னு நிரூபிச்சிட்டியே! ஐயோ! ஐயோ!)

அருண் கவின் காதில் ஓதியதை எல்லாம் அனு பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.

‘இரு உனக்கு இருக்கு’ என்று அவனை முறைத்தாள்.

‘ஐயய்யோ’ என்று மனதுக்குள்ளே அலறினான் அருண்.

ந்துருவிற்கு தான் அனுவை பார்த்து ஆச்சரியமாக இருந்தது. எல்லாவற்றிலும் விளையாட்டு தான். ஆனால் அதற்காக பொறுப்பில்லாத பெண்ணும் கிடையாது.

கதிர் ஹாஸ்பிடலில் இருக்கும் போது அவன் தான் கண்ணெதிரே பார்த்தானே, தானே கதிரின் நிலையை பார்த்து ஸ்தம்பித்து போன போது, அவளுக்கு எப்படி இருந்திருக்கும், ஆனால் அப்போதும் கதிரின் அம்மாவிற்கும் தைரியம் சொல்லி அவரை தேற்றினாளே, அதுவும் கதிருக்கு குணமாக வேண்டும் என்று மட்டுமே எண்ணிக் கொண்டு அங்கிருந்து நகராமல் அங்கேயே இருந்தாளே, அவளின் சிரிப்பு, அழுகை, சந்தோஷம் என எல்லாவற்றையும் எல்லோரும் பார்த்து விட்டிருந்தனர்.

ஏதோ தோன்ற அவளருகே சென்று அவள் தலையில் கை வைத்து “எப்பவும் இதே மாதிரி சந்தோசமா இருக்கணும்” என்றான்.

அனுவிற்கு ஒன்றும் புரியவில்லை. அது வரை இருந்த விளையாட்டு தனம் மறைந்து மனநிலையே மாறி விட்டது. சந்துரு என்ன யோசிக்கிறான் என்று புரியா விட்டாலும், அவன் உள்ளன்போடு அவளை வாழ்த்துவது அவளுக்கு புரிந்தது.

தன்னை மறந்து “தேங்க்ஸ் அண்ணா” என்றாள்.

அருண் “என்னது அண்ணாவா” என்றான்.

“ஆமாம் நந்து எனக்கு சிஸ்டர், அனு அவனுக்கு சிஸ்டர்” என்றான் கதிர்.

இப்போது நந்துவின் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது. ஒற்றை பெண்ணாக இருந்ததால், எப்போதுமே அவள் தனித்தே வளர்ந்திருந்தாள். முதலில் சந்துரு அவ்வப்போது ஊருக்கு வந்து கொண்டிருந்தான் என்றாலும், அவளுக்கு நன்றாக நினைவு தெரிந்த நாட்களில் அதுவும் நின்று விட்டிருந்தது. நண்பர்கள் என்று கூட அவளுக்கு அவ்வளவாக யாரும் கிடையாது. இங்கு வந்து தான் இப்படி கேங்காக அவளுக்கு ப்ரண்ட்ஸ் கிடைத்திருந்தார்கள். சந்துருவும் அவளுக்கு திரும்ப கிடைத்து விட்டிருந்தான். எல்லாவற்றிற்கும் மேலாக இப்போது ஒரு அண்ணனும் அவளுக்கு கிடைத்து விட்டான்.

“நந்து ப்ளீஸ் உன் டாமை திறந்து விடாதம்மா” என்றான் அருண்.

“டேய்” என்று கோரஸாக கதிரும், சந்துருவும் குரல் கொடுத்தார்கள்.

“ஒன்னு சேர்ந்துட்டாங்கய்யா ஒன்னு சேர்ந்துட்டாங்க”

கவினுக்கு இப்போது தான் சிரிப்பு வந்தது. ‘என்னடா எப்பவும் நம்ம தானே இப்படி சிக்குவோம், இன்னைக்கு என்ன இவன் இப்படி திரும்ப திரும்ப மாட்டறான்’ என்று எண்ணிக் கொண்டான். (அது ஒன்னும் இல்ல கவின். நீ ஆல்ரெடி ஒரு பெரிய ஆப்பு கிட்ட வரைக்கும் போயிட்டு வந்துட்டியா, அதான் உனக்கு இன்னைக்கு ரெஸ்ட், அதுவும் இல்லாம உனக்கு ஏதாச்சும் ஒண்ணுன்னா உன் பேன்ஸ் எல்லாம் ரொம்ப பீல் பண்றாங்க)

சந்துருவிடம் சென்ற அருண் “சார் அனு கிட்ட ஒன்னு சொன்னீங்களே, யோசிச்சி தான் சொன்னீங்களா” என்றான்.

“என்னது டா”

“எப்பவும் இதே மாதிரி சந்தோசமா இருக்கணும்ன்னு சொன்னீங்களே. இதே மாதிரின்னா யாரையாச்சும் அழ வச்சிட்டு தானே அவ சந்தோசமா இருப்பா” என்றான்.

கதிர் ஏதோ சொல்ல வர, சந்துரு “நீ இருடா” என்று சொல்லி விட்டு, அருணை தோளோடு பிடித்து அழுத்தினான்.

அவனும் வலிக்காத மாதிரி சமாளிக்க பார்க்க, சந்துருவோ ரௌத்திரம் படத்தில் வர ஜீவா மாதிரி பிடித்து அமுக்கினான்.

“போதும் பாஸ். எவ்வளவு நேரம் தான் நானும் வலிக்காத மாதிரியே ஆக்ட் பண்றது. விட்டுடுங்க” என்று அவன் கதறவும் தான் விட்டான் சந்துரு.

கவின் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான்.

அவனை பார்த்த அருண் “டேய் ரொம்ப சிரிக்காத டா. இனி நாம எல்லாம் மலர்களை போல் தங்கை உறங்குகிறாள் அப்படின்னு பாட்டு பாடிட்டு இருக்க வேண்டியது தான் போல” என்றான் சோகமாக.

அங்கே அலை அலையாய் சிரிப்பு சத்தம் கேட்டது.

டுத்த நாள் வகுப்பில் இருந்து அனு சீக்கிரம் வெளியில் வந்து விட, ஆரு. ப்ரொபசரிடம் டவுட் கேட்டு விட்டு நந்துவுடன் வெளியில் வந்தாள்.

இருவரும் வெளியில் வந்த போது அனு வின்சியிடம் நின்று பேசிக் கொண்டிருந்தாள்.

அவனை பார்த்த உடன் நின்று விட்டாள் ஆரு.

நந்து அப்போது தான் வின்சியை கவனித்தாள். ஆரு என்ன தான் செய்யப் போகிறாள் என்று அவளை கவனித்துக் கொண்டிருந்தாள்.

என்ன தான் யோசித்தும் ஆருவால் எந்த முடிவுக்கும் வர இயலவில்லை. திடீரென்று அவனை பார்த்ததால் இப்போதும் ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்தாள். அவனை பார்க்க பார்க்க ஏதோ பழைய நினைவுகள் வந்து அவளின் கோபத்தை அதிகப் படுத்தியது.

அவள் முகத்தைப் பார்த்த நந்து அவள் கையைப் பிடித்து “ஆரு. உன்னால யாரையும் கஷ்டப் படுத்த முடியாது. எல்லாரும் சொன்னதை யோசிச்சி பாரு. நல்லதா முடிவு பண்ணு” என்றாள்.

ஒரு நிமிடம் அமைதி காத்த ஆரு, அனு மற்றும் வின்சி இருந்த இடத்துக்கு சென்றாள்.

அவள் வருவதைக் கண்ட வின்சியால் நம்பவே முடியவில்லை. அவனாக அவள் இருக்குமிடத்திற்கு வந்தாலே அவள் அங்கிருந்து அகன்று விடுவாள். இன்று என்னவென்றால் அவளே வருகிறாளே என்று அவனுக்கு உற்சாகமாக இருந்தது.

நந்துவோ ஆரு என்ன செய்யப் போகிறாளோ என்று பயத்துடன் பார்க்க, அனுவோ ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.