(Reading time: 16 - 32 minutes)

 

ரு வின்சியை முறைத்து விட்டு, அனுவிடம் திரும்பி “அறிவில்லை உனக்கு. என்னவோ நான் ரொம்ப படிப்புல கெட்டி அப்படி இப்படின்னு சீன் போடுவ, இப்ப என்னாச்சாம் அதெல்லாம், ஏற்கனவே அரியர் இருக்கு, இந்த முறையும் கிளியர் பண்ணாம ஜூனியர்ஸ் கூட சேர்ந்து படிக்கலாம்ன்னு எண்ணமா. ஏன் கிளாஸ்மேட்ஸ் யாரையும் பிடிக்கலையா. தனக்காக இல்லைன்னாலும் அப்பா அம்மாக்காக படிக்கலாம் இல்லை” என்று சொல்லி விட்டு திரும்பி நடக்க தொடங்கியவள், நின்று திரும்பி வந்து,

“அப்பா அம்மாவை எல்லாம் பார்க்க ஊருக்கு எல்லாம் போகறதா ஐடியா இல்லையா, அவங்க வந்து பார்த்துட்டு போகணுமோ, அவ்வளவு பெரிய ஆளாயாச்சா” என்று திரும்ப அவனை முறைத்து விட்டு,

“அங்கிள் ஆன்டி பாவம். ரொம்ப நல்லவங்க. அவங்களை கஷ்டப் படுத்த வேண்டாம்.” என்று சொல்லி விட்டு விறுவிறுவென்று நடந்து சென்று விட்டாள்.

வின்சிக்கு அவள் தன் மேல் அக்கறை கொண்டு வந்து பேசினாள் என்று சந்தோசப் படுவதா, இல்லை அதையும் நேராக சொல்லாமல் இப்படி சொல்லி விட்டு போகிறாளே என்று வருந்துவதா என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தான்.

அனு தான் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தாள்.

“ஹேய் வின்சி. நான் சொன்னா நம்பனியா. பார்த்தியா அவளே வந்து பேசிட்டா”

“எங்க அனு. அவ திட்டரதுன்னு இல்லை, என்னை நாலு அடி அடிச்சி இருந்தா கூட நான் சந்தோசப் பட்டிருப்பேனே. ஆனா அவ என் முகத்தை பார்க்காம இல்லை பேசிட்டு போறா” என்றான்.

“ஹேய் வின்சி. இப்ப அவ உன்னை பார்த்து உன் கிட்ட நேரா பேசலை ஓகே. பட் அந்த விஷயம் உனக்காக சொன்னது தானே. அவ திட்டனது எல்லாம் உன்னை தான் சரியா. அவ இவ்வளவு இறங்கி வந்திருக்கறதே பெரிய விஷயம். சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்”

அதற்குள் அங்கு நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டே வந்தனர் அருணும், கவினும்.

“என்ன அனு. கார்த்திக் ஒரு படத்துல, காளிங் இப்ப தேங்க்ஸ் சொல்லிட்டு போறாளே அது உங்களை பார்த்து தான், இப்ப சிரிச்சிட்டு போறாளே அதுவும் உங்களை பார்த்து தான் அப்படின்னு சொல்லுவாரே, அதே மாதிரி சொல்லிட்டு இருக்க” என்றான் கவின்.

அனு கவினை முறைத்து விட்டு வின்சியிடம் ஆறுதலாக பேசி அனுப்பி விட்டு வந்தாள்.

கவின் என்னடா இது, நாம இவளை நோஸ் கட் பண்ற மாதிரி பேசறோம், இவ எதுவுமே சொல்லலையே என்று எண்ணிக் கொண்டான்.

அதற்குள் திரும்ப வந்த அனு அதை எல்லாம் மறந்து விட்டது போல, “சரி நாம கான்டீன் போய் சாப்பிடலாமா” என்றாள்.

“ஓகே” என்றவாறு கவின், அருண், அனு எல்லோரும் நடந்தனர்.

நந்து மட்டும் தான் போய் ஹாஸ்டலில் சாப்பிடுவதாக சொல்ல, அவளை தடுத்து தங்களுடன் அழைத்து சென்றனர்.

னு முதலில் சாப்பிட்டு முடித்து, “ஐயய்யோ என்னை நாசர் சார் வர சொல்லி இருந்தார். நான் மறந்தே போயிட்டேன். நான் போயிட்டு நேரா கிளாஸ் வந்திடறேன்” என்று சொல்லி விட்டு,

“கவின் பில் பே பண்ணிடு” என்றாள்.

“ஓகே” என்றான் அவனும்.

“அண்ணா எல்லா பில்லும் இவன் பே பண்ணிடுவான்” என்று கவினை காட்டி விட்டு சென்றாள்.

“பார்த்தியா டா. முதல் நாளே ஆரம்பிச்சிட்டா. ஹாஸ்டல்ல போய் சாப்பிட வேண்டியது தானே. இப்பவே இப்படி. இன்னும் ரெண்டு மாசத்துக்கு நீ என்ன தான் பண்ண போறியோ” என்றான்.

“சரி விடுடா பார்த்துக்கலாம்”

மூவரும் சாப்பிட்டு முடித்த உடன், “எவ்வளவு அண்ணா ஆச்சு.” என்று கவின் கேட்க

“ரெண்டாயிரத்து அறுநூத்தி எண்பது தம்பி” என்றார் அவர்.

கவினுக்கோ தலை சுற்றியது.

“என்னண்ணே சொல்றீங்க” என்று சமாளித்துக் கொண்டு கேட்டால்,

“பாப்பாவோட பழைய பாக்கி, அப்புறம் ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி பிரேக்ல நிறைய ப்ரண்ட்ஸ் கூட்டிட்டு வந்து ஏதோ ட்ரீட்ன்னு எல்லாருக்கும் பாப்பா தான் வாங்கி குடுத்துச்சி, மதியம் லஞ்ச் டைம்ல வந்து பைசல் பண்றேன்னு சொல்லுச்சி, இப்போ உங்க எதிர்க்க தானே எல்லா பில்லும் நீங்க தருவீங்கன்னு சொல்லுச்சி” என்றார்.

அவனுக்கு இப்போது எல்லாம் விளங்கியது.

அருணை திரும்பி பார்த்தால் ‘நான் நேத்தே சொன்னேன் கேட்டியா’ என்று நக்கல் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.

மானசீகமாக உள்ளுக்குள்ளே அழுது முடித்து விட்டு தனது பர்ஸை எடுத்து பணத்தை கொடுத்தான்.

“டேய் பணம் போச்சி. அது கூட ஓகே. அந்த கான்டீன் அண்ணன், இவளை போய் பாப்பா பாப்பான்னாரே பார்த்தியா, என்னால அதை தான் ஏத்துக்க முடியலை, குட்டி சாத்தானை போய் எப்படி டா அவர் பாப்பான்னு சொல்லுறாரு”

“அவருக்கு என்ன டா மச்சான். இவ போய் அங்க எப்பவும் நல்லா வாங்கி தின்னுவா, பத்தாததுக்கு உன் பாக்கட்டை காலி பண்ண இப்ப ஒரு கூட்டத்தையே வேற கூட்டிட்டு போயிருக்கா, பின்ன அவர் வேற எப்படி பேசுவாரு”

காலையில் தான் டா வீட்டில் பணம் போட்டுட்டேன்னு சொன்னாங்க. காலையில தான் டா ஏடிஎம்-ல எடுத்தேன்.

“ஐயோ போச்சே போச்சே” என்று கதறிக் கொண்டு வந்தான்.

கிளாஸ்ஸிற்குள் நுழைந்த அவனை கேலி சிரிப்போடு வரவேற்றாள் அனு.

அவளை ஏதாவது சொல்லலாம் என்று பார்த்தால் அப்போது தான் வந்து சேர்ந்தான் சந்துரு.

அவனை பார்த்த உடன் கப் சிப்பென்று அமைதியாகி விட்டான் கவின்.

சந்துரு வந்தவுடன் அனு வேண்டுமென்றே அவனிடம் “அண்ணா இந்த பையன் என்னை முறைச்சி முறைச்சி பார்க்கறான்” என்று முறையிட,

“என்னடா உனக்கு உன் கண் வேண்டாமா” என்றான்.

அப்புறம் ஏன் நம்ம கவின் வாயை திறக்க போறான். நோ பாஸ் என்று தலையை மட்டும் ஆட்டி சைகை காண்பித்தான்.

“நந்து என் கூட வா” அவளை அழைத்து சந்துரு அனுவிடம் திரும்பி “யார்னா உன்னை ஏதாவது சொன்னா எனக்கு ஒரு போன் பண்ணுமா” என்று சொல்லி விட்டு சென்றான்.

‘இவளை யார் என்ன சொல்ல போறா, இவ யாரைன்னா ஏதாச்சும் சொல்லாம இருந்தா போதாதா’ என்று முணுமுணுத்தான் அருண்.

“என்ன” என்று கேட்டாள் அனு.

“ஒன்னும் இல்லை. உன்னை யாராச்சும் ஏதும் சொன்னா என் கிட்ட முதல்ல சொல்லு, எதுக்கு பர்ஸ்ட்டே அவரை போய் டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டுன்னு சொன்னேன்” என்றான்.

“அது”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.