(Reading time: 16 - 32 minutes)

 

ன்று கிளாஸ்ஸின் இடையிலேயே கவினை ஆபிஸ் ரூமில் கூப்பிடுவதாய் அழைப்பு வந்தது. அவனும் எழுந்து சென்று விட்டான்.

கிளாஸ் முடிந்தும் அவன் வராததால் அனு நந்துவை அவன் எங்கே என்று பார்த்துக் கொண்டு வர சொன்னாள்.

நந்து தயங்கவே “நந்து நாம இப்ப பர்ஸ்ட் இயர் இல்ல. சோ நீ இன்னும் இப்படி எல்லாம் தயங்க கூடாது. சரியா. போ” என்று ஆரு சொல்லி அவளை அனுப்பி வைத்தாள்.

கவின் முதலில் வர, நந்து பின்னே வந்தாள்.

“எங்கடா போன” என்று அனு கேட்க,

ஒரு நிமிடம் யோசித்தவான் “ஆபிஸ் ரூம்க்கு தான்” என்றான்.

அவன் சொன்னதை கேட்டுக் கொண்டே வந்த நந்து அமைதியாக நின்றாள்.

பின்பு எல்லோரும் ஹாஸ்டலிற்கு சென்று விட்டனர்.

சிறிது நேரத்திலேயே அனு, ஆருவின் அறைக்கு வந்த நந்துவின் முகம் சரியாகவே இல்லை.

சிறிது நேரம் யோசனையிலேயே இருந்தாள்.

அனு தான் அவளிடம் என்ன என்று கேட்க,

நந்து மெதுவாக “அனு, கவின் நம்ம கிட்ட ஏதோ மறைக்கிறான்” என்றாள்.

“என்ன சொல்ற நந்து”

“ஆமா. இன்னைக்கு என்ன போய் அவன் எங்கேன்னு பார்த்துட்டு வர சொன்னீங்க இல்ல, அப்ப கவின் சிரிச்சிட்டே தீப்தி கையை பிடிச்சி குலுக்கிட்டு இருந்தான். ஆனா நீங்க கேட்டப்ப அதை சொல்லவே இல்லை பார்த்தியா” என்றாள்.

ஆரு “அதுக்கு ஏதாச்சும் ரீசன் இருக்கும்” என்று கூற,

அனு “கொஞ்சம் கன்ப்யூஸா தான் இருக்கு. ஆமா அவன் கிட்ட நான் கேட்டப்ப ஏதோ யோசிச்சிட்டு அப்புறம் பதில் சொன்ன மாதிரி தான் இருந்துச்சி. பட் நான் அதை அப்ப பெரிய விஷயமா எடுத்துக்கலை. ஆனா இப்ப ஏதோ இருக்குன்னு தோணுது” என்றாள்.

“ம்ம்ம். இன்னைக்கு ஜெனி வரலை. அவ மட்டும் வந்திருந்து இதை பார்த்திருந்தா என்ன ஆகி இருக்கும்” என்றாள் நந்து.

“சரி விடுங்க. நாமளே இதை ரொம்ப காமப்லிகேட் பண்ண வேண்டாம். பார்த்துக்கலாம். அவன் நம்ம கிட்ட சொல்லலை. சோ நாமளும் ஏதும் கேட்க வேண்டாம். நாமே கண்டு பிடிக்கலாம்.” என்று அப்போதைக்கு அந்த விஷயத்தை ஒத்தி வைத்தனர்.

இரவு சாப்பிட போகலாம் என்று அனு சொல்ல, நந்து அவளுடைய ப்ளேட்டை எடுக்க அவளறைக்கு சென்றாள்.

உள்ளே நுழைந்த நந்து வெளியில் எட்டி பார்த்து, அனு, ஆரு இருவரையும் சைகையால் வரும் படி அழைத்தாள்.

அவர்களும் என்னவென்று எட்டிப் பார்க்க, தீப்தி தனியாக சிரித்துக் கொண்டிருந்தாள்.

திடீரென்று “கவின் யூ ஆர் மைன்” என்று சொல்லி விட்டு சிரித்துக் கொண்டிருந்தாள்.

அனு, ஆரு, நந்து மூவரும் சிறு பீதியுடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தனர். 

 

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 14

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 16

நினைவுகள் தொடரும்...

{kunena_discuss:677}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.