(Reading time: 31 - 61 minutes)

 

ருத்துவமனை,

" டாக்டர் ?? "

"நீங்க அவங்களுக்கு என்ன உறவு ? "

" ஹஸ்பன்"

" கொஞ்சம் உள்ள வாங்க "

" சொல்லுங்க டாக்டர் "

" மிஸ்டர் கிருஷ்ணா. இத நீங்க எப்படி  எடுத்துபிங்கனு தெரில "

" அவ உயிருக்கு "

" கண்டிப்பா ஆபத்து இல்ல ... கடவுள் புண்ணியத்துல அவங்க ஸ்கல் லே அடி படல . பட் "

" பட் "

" அவங்க தூக்கி எறியபட்ட வேகத்துல அவங்க அடி வயித்துல இன்ஜர்ட் ஆகி இருக்கு. சோ அவங்க கர்ப்பப்பை ஆபரேஷன் பண்ணி ரெமுவ் பண்ணனும் . அப்படி இலேன்னா........ பீயிங் பிரன்க் வேற வழி இல்ல மிஸ்டர் கிருஷ்ணன் "

" உடனே ஆபரேஷன் பண்ணுங்க  டாக்டர் .. நான் சைன் பண்றேன் . எவ்வளோ செலவானாலும் பரவலே . எனக்கு என் மீரா வேணும் ."

அறுவை சிகிச்சை முடிந்து சில நாட்களில் மீரா மெல்ல குணமானாள்.

" கிருஷ்ணா "

" ம்ம்ம் "

" ஏன் இப்படி இருக்கீங்க ? நான் தான் குணம் ஆகிட்டேன்ல "

" அப்படிலாம் ஒன்னும் இல்ல கண்ணம்மா .. உன்னை ஹாஸ்பிடல் பெட்ல பார்க்க கஷ்டமா இருக்கு அவ்ளோதான் "

" நிஜம்மா அதான் காரணமா? "

" அடடடா ஹாஸ்பிடல்ல கூட ரோமென்ஸ் பண்ணாம இருக்க மாட்டிங்களா ? " என்றபடி உள்ளே நுழைந்தாள் நித்யா.

" நீயே பாருடி உன் அழுமூஞ்சி  அண்ணாவை ...என்னை நீலாம்பரின்னு சொன்னியே .. இபோ உன் அண்ணா முகத்துக்கு என்ன பெயர் வைக்க போற?"

 இப்படியே தோழிகள் இருவரும் கிருஷ்ணனை சிரிக்க வைக்க முயற்ச்சித்தனர்.

சில நாட்களுக்குபிறகு

" அண்ணா மீராவை இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்றாங்க. நீங்க டாக்டரை பார்த்துட்டு வாங்க .. ஆகாஷ் காருல இருக்கான் நான் அண்ணியை கூட்டிடு போறேன் "

டாக்டரின் அறையில் ,

" இம்பாசிபல் கிருஷ்ணன் ..அதெப்டி மீராவுக்கு தெரியாம வெச்சுருப்பிங்க ? உங்களுக்கு உடம்பு சரி இல்லன்னா கூட மறைக்கலாம். அவங்களுக்கு நடந்த ஆபரேஷன் அவங்களுக்கே தெரியாம எப்படி மறைப்பிங்க ? "

" தெரியாது டாக்டர் பட் இது மீராவுக்கு தெரிஞ்சா அவ தாங்க மாட்டா "

" அவங்க தாங்கனும்னா முதல்ல நீங்க தாங்கனும் கிருஷ்ணன். நானும் இத்தனை நாளுல பார்த்தேன் . நீங்க யாருகிடேயும் எதுவும் சொல்லி மனசு விட்டு அழல ... நீங்களே இதுல இருந்து மீளல கிருஷ்ணன் ..முதல்ல நீங்க இதைஎதுக்கணும் ...அதுக்கப்பறம் மீராகிட்ட பேசுங்க "

" தேங்க்ஸ் டாக்டர். வரேன் " கண்களில் ஜீவனே இல்லாமல் இருந்தவனை பரிதாபத்துடன் பார்த்தார் டாக்டர்.

இரண்டு மாதங்களில் சென்னை வருவதாக சொன்ன கிருஷ்ணன் ஆறு மாதங்களாகியும் அங்கேயே இருந்தான்.  ஆகாஷ், ஆகாஷின் தாயார், நித்யாவின் கவனிப்பிலும் கிருஷ்ணனின் அரவணைப்பிலும் குணமாகிய மீரா ஒரு நாள் ,

" கிருஷ்ணா ...நாம எப்போ சென்னைக்கு போறோம் ?"

" நாமளா? என்னடா? இன்னும் 3 மாசம் நான் இங்கயே இருக்கேன் "

" எனக்கு என்ன பிரசவமா நடந்துருக்கு ? ஐ எம் பைன் கிருஷ்ணா . என்னையும் கூட்டிடு போங்க . இங்க இருந்து ? "

" இப்போ எதுக்கு கண்ணம்மா? "

" எனக்கு இங்க மூச்சு முட்டுது . உங்க கிட்ட மனசு விட்டு பேசணும் . சென்னைல வேலை பார்த்துக்குறேன் . என் ஸ்கூல் ல கூட பேசிக்கலாம் ..என்னால இங்க இருக்க முடில ப்ளீஸ்"

" சரிடா "

மீரா புறப்பட்டாள் . அவள் விரும்பியவனுடன் , தன் தோழியை பிரிந்து கண்ணீருடன் புறப்பட்டாள். நித்யாவிற்கு மீராவை பிரிவதற்கே மனமில்லை. எனினும் அவளுக்கு ஒரு மாறுதல் தேவை என்பதை அறிந்து அவளை தடுக்காமல் இருந்தாள்.

காரில்,

" கிருஷ்ணா வண்டியை நிறுத்துங்க ...."

" ????"

" நிறுத்துங்க கிருஷ்ணா ?"

" என்னாச்சுடா ? "

" எனக்கு என்ன ஆபரேஷன் நடந்துச்சுன்னு எனக்கே தெரியும் இப்பவாச்சும் வாந்தியை நிறுத்துங்க " அவள் சொன்னதும் பதறி காரை நிறுத்தியவன் அவள் புறம் திரும்பினான்.

கலைந்த சுருள் கேசம், திருத்தபடாத தாடி, ஜீவனே இல்லாத கண்கள், புன்னகை மறந்த இதழ்கள், முற்றிலுமாய் மாறி போன கிருஷ்ணனை பார்த்தவள் காதலா, தாய்மையா, துயரமா?  சொல்ல முடியாத உணர்வில் அவனை இறுக அனைத்து கொண்டாள்.

" எனக்கு ஹாஸ்பிடல்ல யே தெரிஞ்சுபோச்சு கிருஷ்ணா. இப்பவாச்சும் அழுதுருங்க கிருஷ்ணா . என்னால உங்களை இப்படி பார்க்க முடில. அழுதுருங்க "

அணை திறந்த வெள்ளமாய் அவன் கண்ணீர் பெருக்கெடுக்க அவளை மேலும் இறுக அணைத்து கண்ணீர் விட்டான்  கிருஷ்ணன். அவன் கண்ணீர் அனைத்தையும் தாங்கிக்கொண்டு மௌனமாய் அழுதாள் மீரா.

" நாந்தான் சொன்னேனேடா ...என் தலைவிதி  இப்படிதான் இருக்கும்னு ? உனக்கு மனைவி ஆகுறதுக்கு முன்னாடியே நான் மலடி ஆகிட்டேனே " என்று கதறினாள் .

"  ஹே மீரா ... மீரா உன்னை கெஞ்சி கேக்குறேண்டா..எனக்கு உன்னை எப்படி சமாதனம் பண்றதுன்னு கூட தெரிலம்மா ... ப்ளீஸ் மீரா அழாதேடா " என்று அவனும் அழுதான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.