(Reading time: 31 - 61 minutes)

 

வ்வளவு நேரம் தங்கை பாடிய மீரா புராணத்தை கேட்கும்போதே கிருஷ்ணாவிற்கு காலையில் பார்த்த மீராவும் இந்த மீராவும் ஒரே மீராவாக இருக்க வேண்டும்  என்று இருந்தது. ( கூல் டவுன் கிருஷ்ணா சார்..நீங்க ஒரு விஷயத்துக்கு ஆசைபட்டு அதை பூவி நிறைவேற்றலன்னா நாளைக்கு வரலாறு என்னை தப்பாக பேசாதா ? )

" அட இதோ மீராவே வந்துட்டா" என்று நித்யா துள்ளி குதிக்கும்போது, தோரணையுடன் தலைசாய்த்து புன்னகையுடன் அங்கே வந்தாள் மீரா.

" குட் மோர்னிங் நித்து "

" மோர்னிங் டி .... காலையிலே உன் சேவையை ஆரம்பிச்சுட்டியா? ஹேய் நான் சொன்னேன் ல என் கிருஷ்ணா அண்ணா " என்று அவள் கை காட்டவும் அதிர்ச்சியுடன் கிருஷ்ணன் புறம் திரும்பினாள் மீரா.

" ஹெலோ " என்றபடி அவன் கை நீட்ட

" வாங்க " என்று கை குவித்தாள் மீரா. அவள் அப்படி செய்தது நித்யாவிற்கே அதிர்ச்சியாக இருக்க கிருஷ்ணனோ அவளுக்கு ஒரு வணக்கம் வைத்து விட்டு அங்கிருந்து அகன்றான்.

" ஹே என்னடி இது ? "

" என்ன ? "

" ஒரு ஹெண்ட் ஷேக் பண்ணத்தான் என்ன? பாவம் கிருஷ்ணா அண்ணாவுக்கு கஷ்டமா இருந்திருக்கும் "

" எனக்கு தோணல சோ பண்ணல" என்று அவள் தோள் குலுக்கி சொல்ல

" நிஜம்மாவே நீ நீலாம்பரிதான்" என்றவள் கோபத்துடன் தன் செல்ல அண்ணனை சமாதனபடுத்த போனாள். மீராவிற்குமே அந்த தனிமை தேவைபட அவசராமாக தன் அறைக்குள் சென்று அந்த டைரியை எடுத்தாள்.

ந்த டைரியை எடுத்த மீரா, புதிய பக்கத்தில் எழுத ஆரம்பித்தாள்.

நான் அவனை பார்த்தேன் இன்னைக்கு. எங்கிருந்து வந்தது இந்த படபடப்பு? எந்த ஆணிடமே நான் அறியாத உணர்வு ? எனக்கு ஏன் கிருஷ்ணாவை பிடிச்சிருக்கு ? நித்யா ஓயாமல் அவனை பற்றி பேசியதாலா? இல்ல அவன் போட்டோவை பார்த்ததினாலா ? இல்ல என் கனவு ???? ஆமா யாருன்னே தெரியதபோதே நான் கிருஷ்ணனின் முகத்தை கனவு கண்டதினாலா ?

ஒரு புறம் சந்தோஷப்படும் மனது இன்னொரு பக்கம் எச்சரிக்குதே.

எனக்கிது தேவைதானா ? ஒரு ஆணின் நிழலில் நான் வாழ்ந்தே ஆகணுமா ? ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்  வாழ்க்கை எப்படி இருந்துச்சு ? இப்போ இந்த உணர்வு அவசியாமா?

மீண்டும் அவளின் முதல் மனம் குறுக்கிட்டது .  உனக்கு இது தேவை இல்லன்னா, உனக்கு அப்படி எந்த உணர்வும் கிருஷ்ணா மேல இல்லன்னா நீ தெளிவாக நேரடியாகவே பழகலாமே ... இப்படி முதல் சந்திப்புலேயே படபடக்க வேண்டிய அவசியம் என்ன?

அதற்கு பதிலும் அவளே சொன்னாள். ஒரு பிரச்னையை உருவாக்கிகரதை விட விலகி இருக்குறது மேல். கிருஷ்ணா  கெளம்புற வரை அவன் கண்ணுலேயே நான் பட மாட்டேன் .

இப்படி அவள் மனபோராட்டங்களை வழக்கம்போல தன் டைரியில் பதிவு செய்தவள் யோசனையாய் அப்படியே அமர்ந்திருந்தாள். ( என்ன மீரா நீங்க, ஹீரோவே இப்போதான் வந்துருக்கார் அதுக்குள்ள போறதை  பத்தி பேசுறிங்க ? அவர் உங்க கூட ஜோடியாகத்தான் சென்னைக்கு போவாராம் . என் கிட்ட ஆல்ரெடி சொல்லிடாரு )

கிருஷ்ணனை சமாதனப்படுத்த போன நித்யா, அங்கே அவன் பூனை போல பதுங்கியபடி நடப்பதை பார்த்து திகைத்து போனாள்..அவனை போலவே நடந்தவள் ரகசிய குரலில்,

" அண்ணா என்ன பண்ணுரிங்க ? "

" வந்துட்டியா ? ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் ..... இந்த கும்பகர்ணன் விட்டா விடிய விடிய தூங்குவான் ...வா நான் அங்கே 1...2...3... சொன்னதும் அவன் காதுலே ஆஆஆஆஆ நு கத்தி எழுப்பி விடலாம் "

" அண்ணா மீரா பத்தி ? "

" அந்த மீரா டோரா பத்தி அப்பறம் பேசலாம் ... இப்போ நம்ம மிஸ்ஷனை ஸ்டார்ட் பண்ணலாம் " என்றவனை பார்த்து புன்னகைத்தாள் நித்யா . ( எவ்ளோ பொறுமை இந்த கிருஷ்ணன் அண்ணாக்கு .. அவங்க இடத்துல நான் இருந்தா லெப்ட் அண்ட் ரைட் வாங்கிருப்பேன் ... இருந்தாலும் மீரா உனக்கு இருக்குடி ) என்று நினைத்துக்கொண்டே அவனை பின் தொடர்ந்தாள் நித்யா.

" 1....2.....3......ஆஆஆஆஆஆஆஆஆஅ "

" ஐயோ பிசாசு " என்று தங்கையை முறைத்தபடி அலறிக்கொண்டு எழுந்தான் ஆகாஷ்.

" ஹே பிசாசு நிம்மதியா தூங்க விட மாட்டியா டி ?  "

" அதை என்கிட்டே கேளு டா "

" டேய் கிருஷ்ணா ? எப்போடா வந்த ? "

" நீ சுப்ரியா பேரை கனவுல சொல்லும்போதே அண்ணா வந்துட்டாங்க டா " என்று தன் தமயனின் காதலை பற்றி போட்டு கொடுத்தாள் நித்யா.

" நித்து ? இது எப்போ இருந்து ? டேய் தடியா ? யாருடா சுப்ரியா? "

" அது அது ....அப்பறம் சொல்றேண்டா..அம்மா வந்துட போறாங்க ... ஆமா நீ எப்போ வந்த? "

" இப்போதான் டா ..உன்னை பார்க்க ஏழு கடல் தாண்டி மலை தாண்டி இப்போ ரிசன்ட்டா ஒரு  தேவதையை தாண்டி வந்தேன் "

" தேவதையா ? " என்று இருவரும் வாயை பிளக்க

" போதும் போதும் ஷட்டரை க்ளோஸ் பண்ணுங்க ரெண்டு பேரும் " என்றான் .

" அண்ணா நீங்க மீராவையா சொல்றிங்க ? "

" எஸ் "

" சுத்தம் ..."

" ஆகாஷ் யு டூ ?"

" ஆமாடா என்ன கண்டதும் காதலா ? "

" இல்ல மோதல் .. மெய் பீ நாளைக்கு காதல் "

ஆகாஷ்  குழப்பத்தோடு பார்க்க நித்யா நடந்ததை சொல்லி

" நான் அவ கிட்ட பேச மாட்டேன் " என்றாள். நித்யாவின்  கோபம் நீண்ட நேரம்  நிலைக்காது என்று அறிந்த மற்ற இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து கொண்டனர்.  அதன் பிறகு ஆகாஷின் தாயாரும் எழுந்து வந்துவிட அன்றைய  தினமும் மகிழ்ச்சியாக கழிந்தது.

" மச்சான் "

" சொல்லுடா "

" நீ நிஜம்மாவே மீராவை லவ் பண்ண போறியா? "

" என்னடா என்னமோ கொலை பண்ண போறியா மாதிரி கேக்குற ...? "

" இல்லடா எதுவா இருந்தாலும் உனக்கு மீராவை பத்தி தெரியனும் "

" ம்ம்ம்ம்ம்ம் சொல்லு "

"  Industrialist  சதாசிவம்  தெரியுமா உனக்கு ? "

" ம்ம்ம் தெரியும்டா. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சூசைட் பண்ணிகிட்டாரே? ஏன் ? "

" அவரோட பொண்ணுதான் மீரா ! "

" வாட் ? "

" ம்ம்ம் யெஸ். "

" அதான் மீரா தனியா இருக்காளா? அவ அம்மா, கூட பிறந்தவங்க ? அவ்ளோ பெரிய பணக்காரர் பொண்ணு ஏன் இப்போ இந்த வீட்டுல இருக்கா? ........................ டேய் பதில் சொல்லுடா  சைலண்டா இருக்கியே ? "

" உன் கேள்வி எவ்ளோ சின்னதோ பதில் அவ்ளோ பெருசு டா "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.