(Reading time: 31 - 61 minutes)

 

பொய் சொல்ல கூடாது காதலி பொய் சொன்னாலும் நீயே என் காதலி (2)

கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்

கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய்

என்று பாடல் ஒலிக்க , " பார்த்தியா உன்னை பத்திதான் பாடுறாங்க " என்றவன் போன் எடுக்க ,

" ம்ம்ம் சுபா ,.... ஹே சாரி டா ... உன்னை எப்படி மறப்பேன் செல்லம் ?  ஐ மிஸ் யு டூ டா ..... சரி நான் அப்பறம் கூப்டுறேன் ...ப்ராமிஸ்"  என்றான்.

" எப்பா பொண்ணுங்க உங்களை சமாளிக்கிறது எவ்ளோ கஷ்டமா இருக்கு " என்றவன் அவளின் முகத்தை பார்க்க இப்போ உண்மையிலே கோபத்தில் முகம் சிவந்தாள் மீரா.

" ஹே என்னாச்சு "

" யாரை இப்படி கொஞ்சிட்டு இருந்திங்க ? "

அவள் நேரடியாக கேள்வி கேட்கவும் ஆகாஷ் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது . ( ஹ்ம்ம் இவ உண்மையிலே முகத்துக்கு நேர பேசுற கேரக்டர் தான் )

" சுபா "

" முழுப்பேரு என்ன? "

" ஏன் அவளுக்கு லைசன்ஸ் எடுக்க போறியா? "

" விளையாட்டு வேணாம் ...பதில் சொல்லுங்க "

" சுபத்ரா "

"ஓ .. உங்க தங்கச்சி தானே? " என்றவள் தலையில் தட்டிகொண்டாள்.

" அப்படிதான் என் அம்மா அப்பா என் கிட்ட சொன்னங்க "

" சாரி கிருஷ்ணா "

''எதுக்கு ?"

" உங்களுக்கு தெரியாதா? "

" தெரிஞ்சா நீ சொல்ல கூடாதா ?"

" ம்ம்ம்ம் கூடாது "

" அப்போ எனக்கும் தெரியாது"

" ஓகே தூக்கம் வருது குட் நைட் "

" சரி போ   பட் அதுக்கு முன்னாடி நீ ஏன் கோபப்பட்டேனு சொல்லிட்டு போ "

" எனக்கு தெரில "

" உனக்கு தெரியும் .. உனக்கு பொய் சொல்ல வராது ... என் கண்ணை பார்த்து சொல்லு "

" வேணாம் கிருஷ்ணா "

" எது வேணாம் ...நான் வேணாமா? "

அடிபட்ட பறவை போல் ஒரு பார்வை பார்த்தாள்.

" மீரா "

" ம்ம்ம்ம் "

" ஒரு பாட்டு பாடவா? "

"ம்ம்ம் "

" உன்னை கொடு என்னை தருவேன் இதுதான் காதலடி

கண்ணீர் கொடு புன்னகை தருவேன் இதுவும் காதலடி

தாலாட்டே கேட்காத ஒரு ஜீவன் நானம்மா

தாயாகி நான் பாட சேயாகி கேளம்மா

தாழம்பூவே என் தோள் சாயம்மா "

" ஐ மீன் இட் கண்ணம்மா"

அதற்கு மேல் அமைதி காக்க முடியாமல் அவன் தோளில் சாய்ந்து அழுதாள் மீரா.

" மீரா... மீரா ...ஏண்டா அழறே? "

" கிருஷ்ணா ...தெரில .... ஆனா இந்த நிமிஷம் இந்த உலகம் இப்படியே நின்னுட கூடாதான்னு இருக்கு ? "

" ஏண்டா இப்படி பேசற? எனக்கு இந்த உலகம் சுத்திகிட்டே இருக்கணும் கண்ணம்மா ...காலம் உள்ள காலம் வரை நான் உன்னோடு இருக்கணும்? "

" முடியுமா கிருஷ்ணா?  அம்மா , அப்பா இப்படி எல்லாரும் என்னை விட்டு போய்ட்டாங்க. அடுத்து நீங்களும் போய்ட்டா என்னாலே தாங்கவே முடியாது. "

" நான் போவேன்னு நீ நெனைக்கிறியா ? "

இல்லை என்று தலை அசைத்தவள் " ஆனா என் தலைவிதி ? "

" முட்டாள்மாதிரி பேசாத மீரா. நான் ப்ராமிஸ் பண்றேன் . என்னோடு நீ இருக்குறவரை ஏன்  வாழுரோம்னு இனி உனக்கு அந்த பீல் வாராது. அப்படி வந்துட்டா நீ என்ன  முடிவு எடுத்தாலும் அதை நான் ஏத்துக்குறேன். என்னை நம்பு " என்று வாக்களித்தான் . (இப்படி ஒரு சத்தியம் நீங்க பண்ணாம இருந்திருக்கலாம் கிருஷ்ணா)

" அழாதேடா... உன்னை நான் எதுக்கும் வற்புறுத்த மாட்டேன் .. நீயே யோசிச்சு உன் முடிவை சொல்லு . இப்போ போய் தூங்கு . குட் நைட் " என்றவன் அவளை நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டான்.

" என்னடா "

" நான் இன்னும் கொஞ்ச நேரம் உங்க தோள்ள சாஞ்சுக்கவா? "

" இதை நீ கேக்கணுமாடி...ஹே மீரா  ஒரு பாட்டு பாடேன் "

" முன்பே வா என் அன்பே வா

ஊனே வா உயிரே வா

முன்பே வா என் அன்பே வா

பூ பூவாய் பூப்போம் வா

நான் நானா? கேட்டேன் என்னை நானே

நான் நீயாய் நெஞ்சம் சொன்னதே  " வரிகளை மீரா உணர்ந்து பாட

" அதான்  வந்துட்டேன்ல ... அப்பறம் வா வா நு சொன்னா என்ன அர்த்தம் " என்றான் கிருஷ்ணன்.

" ம்ஹ்ஹ்ஹ்ம்ம்  உங்க பார்வையே சரி இல்ல நான் வரேன் . குட் நைட் " என்று சிட்டாய் பறந்தாள் மீரா.

றுநாள், தன் மனம் கவர்ந்தவனிடம் சம்மதம் சொல்லுமுன்னே , இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கோவில்லுக்கு கிளம்பினாள் மீரா.

" ஹே  நித்து தனியா எங்க மேடம் கிளம்பிட்டிங்க? அதுவும் பட்டு புடவை மல்லிகை பூ ...எனக்கே தெரியாமல் வீட்டுல கல்யாண வேலை நடக்குதா ? "

" சி போடி.. உன் அண்ணியை நீயே இப்படி பேசலாமா ? சரி உங்க  கிருஷ்ணா  அண்ணாவை கோவிலுக்கு வர சொல்லு"

" அண்ணியா? ஹே என்னடி சொல்லுறே? "

" அதெல்லாம் அங்கே கேட்டுக்கோ ...நான் வரேன் "

அதிக சந்தோஷத்தை கொடுப்பதும் கடவுள்தான் பறிப்பதும் கடவுள்தான். கோவிலுக்கு செல்லும்வழியில்  சிறுவர்கள் சாலை ஓரம் விளையாடுவதை  பார்த்தாள் மீரா. ஒரு புன்னகையுடன் கை அசைத்துவிட்டு அவள் செல்லும்போது கூட்டத்தில் இருந்த சிறுமி சாலை நடுவில் ஓடி வர, அந்த சிறுமியை  காப்பாற்ற எண்ணி மீரா ஸ்கூட்டியை விட்டு இறங்கி வர மயிரிழையில் அந்த சிறுமி உயிர் தப்ப, எதிர் வந்த காரால் தூக்கி எறியபட்டாள் மீரா. கண் சிமிட்டும் நொடியில் அந்த விபத்து நடந்துவிட, கூட்டம் சேர்ந்தது . மீராவை பார்க்க அதே பாதையில் வந்த கிருஷ்ணன், கூட்டத்தை பார்த்ததும் காரை நிறுத்தினான்.

" மீரா ????? "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.