(Reading time: 31 - 61 minutes)

 

வன் மீண்டும் அழுவதை உணர்ந்தவள் மெல்ல அமைதியடைந்தாள்.

அவள் கைகளைப்பற்றி பேச ஆரம்பித்தான் கிருஷ்ணன்.

" மீரா எனக்கு நீ . உனக்கு நான். போதாதா? நீ பெற்றெடுத்தாள் தான் எனக்கு மனைவு ஆகுற தகுதி இருக்கா? நான் உன்னை தான் விரும்பினேன். வேற எதையும் எதிர்பார்த்து விரும்பல. உன் அன்பு எனக்கு மட்டும் கிடைக்கனும்னு விதி. அதான் இப்படிலாம். நீ அழாத ப்ளீஸ். நாம சென்னை போகலாம் . நான் வீட்டுல பேசுறேன் . கல்யாணம் பண்ணிக்கலாம். இனி நாம தனியா இருக்க வேணாம்"

  அவன் சொல்வதை அமைதியாய் கேட்டவள் .அதற்கு பதிலாய் அவன் செவிகளில் இடியை இறக்கினாள்.

" நீங்க ஏன்  என்னை கல்யாணம் பண்ணிக்கணும் ? "

" மீரா புரிஞ்சுதான் பேசுறியா? "

" புரிஞ்சதுனாலத்தான்  பேசறேன் . நான் கல்யாண வாழ்கைக்கு தகுதி இல்லாதவள். யோசிச்சுதான் பேசுறிங்களா? நீங்க வீடுக்கு முதல் பையன் . உங்களுக்கு கல்யாணம் ஆகி வாரிசு வரும்னு வீட்டுல எவ்வளோ ஆசை பட்டுருபாங்க "

" அப்படிலாம் இல்ல நான் சொன்ன புரிஞ்சுபாங்க "

" ஆமா புரிஞ்சுப்பாங்க ..வேற வழி இல்லாமதான் புரிஞ்சுப்பாங்க "

" இது விதண்டாவாதம் மீரா . எனக்கு நீ வேணும் "

" உங்க மீரா போய்ட்டா கிருஷ்ணா .. அந்த விபத்துல அவளும் பொய் சேர்ந்துட்டானு நெனசுகொங்க "

அவள் வார்த்தையை கேட்டு ரௌதிரமானான் கிருஷ்ணன்.

" அப்போ எதுக்குடி என் கூட வந்த? "

" நான் இதை சொல்லத்தான் வந்தேன் கிருஷ்ணா ...நான் நிரந்தரமா போறேன் .."

" போ  ஆனா என் பொணத்தை பார்த்துட்டு போ "

இப்படியே இருவரிடையே வாதம் அதிகமாக முடிவில்,

" சரி நீ சொன்ன மாதிரி, நீ சொல்ற பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா அது நடக்குற வரை நீ என் கண்பார்வையில் தான் இருக்கணும் . சம்மதமா ? " என்றான் இறுகிய குரலில்.

( உன்னாலே எனக்கு வேற ஒரு பொண்ணை பார்த்து கட்டி வைக்க முடியுமா மீரா ? என் அன்பும் ஸ்பரிசமும் உனக்கு மட்டும்தான் சொந்தம்னு உனக்கே தெரியும் . உன் வாயாலேயே என்னை கல்யாணம் பண்ணிக்கோ கிருஷ்ணா நு சொல்ல வைக்கிறேன் )

( எனக்கு இது வரம் இல்லையா கிருஷ்ணா? நீ இன்னொரு பெண்ணுக்கு ....................... உன் கல்யாணம் நடக்குற வரை தினமும் உன்னை பார்த்தாலே போதும் . கடைசியா நானும் அந்த மீரா மாதிரி உன்னை நெனசுகிட்டே வாழ்ந்திடுவேன் )

 இருவரும் இரு துருவத்தில் நின்று இப்படி ஒரு முடிவெடுக்க, அந்த துருவங்களை இணைப்பத்தற்கு காலத்தோடு காதலும் பயணித்து கொண்டிருக்கிறது. 

( இதுதான் மீரா- கிருஷ்ணா வின் கதை . நண்பர்களே நீங்க கஷ்டப்படணும்னு இப்படி ஒரு பிளாஷ் பெக் தரவில்லை. மீராவின் நிலைமையை எடுத்துகொள்ளுங்க. இப்போ இருக்குற வாழ்கை முறையில் இந்த மாதிரி சூழ்நிலை பல பெண்களுக்கு உண்டு . அப்படி இருக்கிற பெண்கள்  வாழ்கையே முடிஞ்சிருச்சுன்னு நினைக்க கூடாது. அதே மாதிரி காமுகன்களின் நடுவில் காதலுக்காக உண்மையுடன் வாழ கிருஷ்ணா மாதிரியும் பல பேரு இருக்காங்க என்பதை சொல்லத்தான் இந்த கதை . நடந்து முடிஞ்சதை நெனச்சு பீல் பண்ணி என்னை திட்டாமல் அடுத்து இந்த ரெண்டு துருவத்தையும் எப்படி சேர்த்து வைக்கிறேன்னு காத்திருங்கள். )

ண்ணீருடன் மீரா, நடந்ததை சொல்லி முடிக்க சந்திரப்ரகாஷ்

" மீரா "

" அப்பா உங்களை எங்கெல்லாம் தேடுறது அம்மா கூப்பிடுறாங்க வாங்க " என்றபடி உள்ள வந்தாள் சுபத்ரா .

" குட் நைட்  வசு அக்கா " என அவள் சொல்லவும்

" வசு  அண்ணின்னு கூப்பிடும்மா " என்றார் சந்திரப்ரகாஷ் . மீரா கண்ணீருடன் அவரை ஏறிட, சுபத்ரா என்ன நினைத்தாளோ சட்டென அவளை அணைத்து கொண்டு

" குட் நைட் அண்ணி "

என்றாள். மீரா பதிலுக்கு ஒரு செயற்கை புன்னகை சிந்திவிட்டு  தன் அறைக்கு சென்றாள்.

அங்கே,

" நீங்களா ? "

" ஆமா ..ஏன் வரக்கூடாதா?

" இல்ல சுபாவும் சித்தப்பாவும் இப்போதான் கெளம்புறாங்க ...நீங்க எப்படி வந்திங்க ? "

" நான் பின்வழியா வந்தேன் "

" இதென்ன கள்ள காதலா? "

" இதை நல்ல காதலா ஆக்குற நெனப்புதான் உனக்கு இல்லையே "

" கிருஷ்ணா "

" எதுவும் சொல்ல வேணாம் மீரா ... நான் கிருஷ்ணன் ..நீ மீரா ... இந்த வீடு  இதெல்லாம் மறந்துட்டு ஒரு 10 நிமிஷம் என்னை உன் அம்மாவ நெனச்சுக்கோ ..இங்க வா " என்றபடி மடியில் தலையணை வைத்து அவளை அழைத்தான். ஏதேதோ சொல்ல வந்தவள் வழக்கம்போல அவன் வார்த்தைக்கு கட்டுபட்டு அவன் மடியில் சாய்ந்தாள். அவனின் கண்களையே அவள் பார்க்க

"கண்ணை மூடு கண்ணம்மா " என்றபடி அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

 மாலைகாற்று மெல்ல வீச, அவள் மனதிற்கு இதமாக மெல்லிய குரலில் பாடி  அவளை தாலாட்டினான் கிருஷ்ணன்.

ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே

கண்ணீல் என்ன சோகம் போதும் ஏங்காதே

என் அன்பே ஏங்காதே

என்னைப் பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்திவிட்டுப் போகும்

உன் வாசலில் எனைக் கோலம் இடு இல்லை என்றால் ஒரு சாபம் இடு

பொன்னாரமே...

தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து என்னோடு நீ பாடிவா சிந்து

ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே

கண்ணீல் என்ன சோகம் போதும் ஏங்காதே

என் அன்பே ஏங்காதே

றுநாள், கதிரவனின் வெளிச்சம் கண்கூச மெல்ல கண்விழித்தால் மீரா. கடிகார நேரம் 10 என காட்ட இவ்வளவு நேரமா தூங்கினோம் என்று திட்டிக்கொண்டே எழுந்தாள். டீபாயில் காபியுடன் ஒரு ரோஜாவும் ஒரு கடிதமும் இருந்தது.

" குட் மோர்னிங் . லேட்டா எழுந்துட்டோமேனு உன்னை நீயே திட்டிகாதே . சஞ்சய் கிட்ட உனக்கு halfday permission சொல்லிடேன் . சோ பொறுமையா கிளம்பு.  Breakfast, லஞ்ச் ரெடி பண்ணி வெச்சிட்டேன். இதை செய்ய நான் உன் காதலனா இருக்கணும்னு இல்ல. சேவகனா இருந்தா போதும் " என்று எழுதியிருந்தான் கிருஷ்ணன்.

" திருடா" என அவனை மனதிற்குள் திட்டியவள் அன்றைய நாளை புன்னகையுடன் தொடங்கினாள்.

( இப்போ ஜானு ரகு கதைக்கு வருவோம்  )

" என்ன ஜானு குறுக்கும் நெடுக்குமா  நடந்துட்டு இருக்கே ? "

" என்ன பண்ணுறதுன்னு யோசிக்கிறேன் அத்தை"

" என்ன விஷயம் டா? "

" .......................... (அடுத்த எபிசொட் பாருங்க )

கு ஆபீசில்

" இதை நான் உன்கிட்ட இருந்து  எதிர்பார்க்கல ரகு ? உன்னால எப்படி இதை என்கிட்ட சொல்ல முடியுது  ? "

" அப்பா அதுவந்து ...."

" பேசாதடா "

அப்படி நம்ம சூர்யா பிரகாஷ் சார் கோபபடுற அளவுக்கு என்ன நடந்திருக்கும் நு பார்ப்போம்.. (அடுத்த எபிசொட் )

( இப்போ சுபத்ரா - அர்ஜுனன் )

" சுபி லாஸ்ட் அவர் ப்ரீ டி ... படம் பார்க்க போலாமா ? வேலை இல்ல பட்டதாரி பார்க்கலாம்" என்றாள்அவளின் தோழி கீதா.

" சரி ஓகே டி வா " என்று தன் பட்டாளத்தோடு தேட்டர் சென்றாள் சுபத்ரா.

தேட்டரில் அவளுக்கு எதிர் சீட்டில் அர்ஜுனன் அமர்ந்திருக்க , அவன் பக்கத்தில் ( யாருன்னு அடுத்த எபிசொட் பாருங்க )

(இந்த  எபிசொட் ரொம்ப எக்டிவ்   இருந்ததுனால, நாம கிருஷ்ணா - மீராவுக்கு எந்த ட்விஸ்ட் உம் தராமல் லீவ் கொடுக்குறோம். சரியா ... அடுத்து ஒரு பரபரப்பான எபிசொட் எழுதிட்டு வரேன் ...பாய் )

தொடரும்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:734}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.