(Reading time: 8 - 15 minutes)

 

"ண்ணா!"-இவளும் பதிலுக்கு கத்தினாள்.

"எப்படிம்மா இருக்க?"

"இரண்டு கண்ணு,காது,ஒரு மூக்கு,வாய் எல்லாத்தோட நல்லா இருக்கேன் அர்ஜீன்."

"ஐ...காமெடி நான் அப்படி போய் சிரிச்சிட்டு வரட்டா?"

"தாராளமா!"-ஷைரந்தரி வந்தவுடன் தான் அந்த வீடே கோலாகலமாகியது அனைவருக்கும்.

"ஷைரு!"

"ஹாய்...எப்படி இருக்க ரேணு?"

"நீ சொன்ன அதே பதில் தான்!"

"ப்பா...செம காமெடி நான் நாளைக்கு சிரிக்கிறேன்."

"சிவா அண்ணா எங்கே?"

"கார்ல இருக்கான்."

"இவ்வளவு நேரம் என்ன பண்றான்?"

"தெரியலையே!"-ரேணுகா வெளியே எட்டிப் பார்த்தாள்.சிவா,தயங்கியவாறு இன்னும் காரில் அமர்ந்திருந்தான். ரேணுகா அவனருகில் வந்தாள்.

"அண்ணா!"

"ஹாய்...ரேணு எப்படி இருக்க?"-என்றப்படி இறங்கினான் சிவா.

"நல்லா இருக்கேன்ணா!என்ன காரிலே தங்கிட்டீங்களா?இல்லை...அப்படியே அமெரிக்கா ஓடிவிடலாம் என்று முயற்சியா?அந்த எண்ணம் இருந்தால் மாத்திக்கோங்க!"

"ஐயோ...யுவராணி பேச்சை மீறி நான் எதாவது செய்ய முடியுமா?அந்த எண்ணம் எல்லாம் இல்லை..."

"ம்..அந்த பயம் இருக்கட்டும்.வாங்க!"

"காரை பார்க் பண்ணிட்டு வரேன்."

"சரிண்ணா!"-அவள் உள்ளே சென்ற 2 வது நிமிடம் சிவாவும் வந்தான்.

"சிவா?"-அனைவரும் அவனை விசித்திரமாய் பார்த்தனர்.

"என்னாச்சு?அப்படி பார்க்கிறீங்க?"(பின்ன சும்மாவா?நம்ம சிவா செம ஹான்ட்ஸம் ஆச்சே!எல்லாரும் அப்படி தான் பார்ப்பாங்க!"

"பாட்டி!தூங்கிட்டீங்களா?"

"அப்படியே ஆண்களுக்கான சர்வ லட்ஷணமும் உன்னைப் பார்த்து எழுதின மாதிரி வந்து நிற்கிறியே சிவா!"

"அப்படியா?இருக்கட்டும்...அம்மூ எங்கே?இப்போ தானே உள்ளே வந்தா!"

"அவ அருள்மொழியை பார்க்க போயிருக்கா சிவா!"-என்றார் தயங்கியவாறு.

சிவாவிற்கு எந்த பாவனையை காட்டுவது என்றே விளங்கவில்லை.

"நீ போய் குளிச்சிட்டு வா சிவா!அவ கொஞ்ச நேரத்துல வந்திடுவா!"-சமாளித்து அனுப்பினார் மஹாலட்சுமி.

அருள்மொழியா அது யார்?என்ற கேள்வி வந்திருக்கும்...

பாருங்கள்....

ர் அறையில் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தார் ஒருவர்.

அவரின் தோற்றத்தையும்,அறையின் சூழலையும் வைத்துப் பார்க்கும் போது,அவர் ஒரு சிவபக்தர் என்பது தெரியும்!!!

அவரை காணவே ஷைரந்தரியும்,விஜயராகவனும்,அனுராதாவும் சென்றனர்.

அவர்கள் கதவருகே வரும் போதே!

"அங்கேயே நில்லுங்க!"-என்றார் அருள்மொழி.

"என்ன விஷயம்?"

"சிவாவும்,ஷைரந்தரியும் வந்திருக்காங்கண்ணா!"-பதிலுரைத்தார் அனுராதா.

"ம்...."

"மாமா!"-தன் இனிய குரலில் அவரை அழைத்தாள் ஷைரந்தரி.

அதுவரையில் மூடியிருந்த அவர் கண்கள் திறந்தன.தலை திரும்பி பார்த்தார்.

பிரகாசிக்கும் அதே முகம்,கம்பீர தோற்றம்,தைரியத்தின் முழு உருவமாய் அவர் கண்களுக்கு தெரிந்தாள் ஷைரந்தரி.

அவருக்கோ சாந்தமான,அமைதியான சகலத்தையும் தன் அகத்தே அடக்கி வெற்றி கண்டதை போன்ற முகம்,அதிமுதிர்ச்சியான தோற்றம்.கழுத்தில் ருத்திரம் ஏந்தி இருந்தார்.பல வருடங்களுக்கு பின்,அவர் முகத்தில் குறும் சிரிப்பு.

"உள்ளே வரலாமா?இல்லை...இங்கேயே நிற்க விடுவீங்களா மாமா?"-என்றாள் இளம் நகையோடு.

"வாம்மா!"-நடந்தவற்றை பிரம்பிப்போடு பார்த்துக் கொண்டிருந்தனர் அனுராதாவும்,விஜயராகவனும்.இதுவரையில்,பேசாதவர் பேசி இருக்கிறாரே!!!ஷைரந்தரி உள்ளே சென்று,அவர் அருகில் அமர்ந்தாள்.

"எப்படி இருக்கீங்க?"

"நல்லா இருக்கேன்மா!!!!"

"ஏன் நீங்க இங்கேயே இருக்கீங்க?கீழே வரலாமே!"-அவர் ஆத்மார்த்தமான சிரிப்பை விடுத்தார்.

"நீ வந்துட்டல்ல....அப்போ அதுக்கான நேரமும் வந்துவிடும்!இந்த ஊருக்கு வந்திருக்க,கொஞ்சம் பத்திரமா இரு!"-அவளுக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும்,தலை அசைத்தாள்.

"என் ஆசீர்வாதம் உன் கூடவே பயணிக்கும்!"-வந்தவர்களுக்கு தலையே சுற்றிற்று.ஒரு நொடி பழைய சம்பவங்களை எண்ணினர்.

இன்று அனைத்திற்கு நேர் மாறாக எல்லாம் நடக்கிறது.

"சித்தி!"-ஷைரந்தரியின் அழுத்தமான குரலில் கலைந்தனர்.

"என்னம்மா?"

"என்னாச்சு உங்களுக்கு?எத்தனை முறை மாமா,சித்தின்னு கத்துறது?என்ன யோசிட்டு இருக்கீங்க?"

"அது...ஒண்ணுமில்லைம்மா,வா போகலாம்!"

"ம்..."-ஷைரந்தரி கீழே இறங்கும் போது,அவளை அங்கிருந்த ஒரு அறை வெகுவாக ஈர்த்தது.

"சித்தி."

"என்னடா?"

"அது யார் ரூம் சித்தி?"

"அந்த ரூம்...அது...நீ வா ரொம்ப களைப்பா இருப்ப முதல்ல குளிச்சிட்டு வா!அப்பறம் பேசிக்கலாம்!"-ஷைரந்தரிக்கு பாஞ்சாலபுரமே கேள்விக்குறியாய் தெரிந்தது. ஆம்....அவள் நினைத்தது உண்மையே!!!பாஞ்சாலபுரம் பல்வேறு கேள்விக்கணைகளை தன் அகத்தே சுமந்துள்ளது.அதை சமாளிக்க போவது யார்?என்பதே முதல் சிக்கலான கேள்வி!!!!!

தொடரும்

Go to Episode # 02

Go to Episode # 04

{kunena_discuss:751}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.