(Reading time: 19 - 37 minutes)

 

து அவன் வேலையா? அந்த எண்ணை அழைத்து பார்த்தாள் அபர்ணா.. அணைக்கப்படிருந்தது இது நிச்சியமாக அவன் வேலைதான் என்று தோன்றியது.

சின்ன புன்னகை கலந்த பெருமூச்சுடன் வேலைக்கு கிளம்ப துவங்கினாள் அபர்ணா.

இரண்டு நாட்கள் கடந்து விட்டிருந்தன. தாத்தா இன்னும் இரண்டு நாட்களில் வருவதாக சொல்லி இருந்தார்.

எதுவுமே நடவாதது போல் பரத், அபர்ணா இருவருமே வெகு இயல்பாக கல்லூரிக்கு சென்று வந்துக்கொண்டிருந்தனர்..

திருமணம் முடிந்து நான்கைந்து நாட்கள் கடந்திருந்த நிலையிலும் குழப்பத்தின் உச்சியிலேயே  இருந்தது ஜனனியின் மனம்.

சென்னையில் இருக்கும் சுதாகரனின் வீட்டில் மதிய உணவுக்காக எல்லாரும் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்திருந்தனர். அவள் அருகில் அமர்ந்திருந்தான் சுதாகரன்

எப்போதுமே உற்சாகத்தின் மறுவுருவம் சுதாகரன். அவன் வீட்டில் அப்பா அம்மா சுதாகர் மட்டுமே.

ஒரு தட்டில் தங்ககட்டிகளையும் மற்றொரு தட்டில் இரண்டு மொறு மொறு தோசைகளையும் வைத்தால் தோசைகளை எடுத்துக்கொண்டு போய் விடுவான் சுதாகரன் .அப்படியொரு சாப்பாட்டு பிரியன். .அவன் மட்டுமில்லை அவன் அப்பாவும் அப்படியே.

எப்போதுமே சாப்பாட்டுடன் இனிப்பு இருக்க வேண்டும் சுதாகருக்கு.

‘ஏம்மா.... இந்த ஜாமூனை ஏம்மா எண்ணையிலே பொரிச்சு எடுக்கறே? ஒரு தடவை எண்ணைக்கு பதிலா நெய் யூஸ் பண்ணி பாரேன். எப்படி இருக்கும் தெரியுமா?

நீயெல்லாம் ஒரு டாக்டராடா? என்றார் அவன் அம்மா. அவனவன் சுகர், கொலஸ்ட்ரால் அப்படி இப்படின்னு பார்த்து பார்த்து சாப்பிடறான். .நீ நெய்யிலேயே மூழ்கறே. உனக்கு துணைக்கு உங்கப்பா வேறே.

அம்மா இதுவரைக்கும் நம்ம யாருக்காவது ஏதாவது வந்திருக்கா? அதெல்லாம் எதுவும் வராதும்மா நல்ல சாப்பிட்டு ஜாலியா சிரிச்சிட்டே இருங்க. எதுவும் வராது.

கரெக்ட்டுடா என்றார் அவன் அப்பா நீ கவலை படாதே நாளைக்கு நாம ரெண்டு பேரும் சேர்ந்து நெய்-ஜாமுன் ட்ரை பண்ணிடுவோம்

என்னதான் கல கலவென பேசிக்கொண்டிருந்தாலும் அவன் பார்வை ஜனனியை கவனிக்க தவறவில்லை.

சாப்பிட்டு ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்காக பெயருக்கு சாப்பிட்டு கொண்டிருந்தாள் அவள்.

சாப்பிட்டு முடித்து படுக்கையறை கட்டிலில் சென்று அமர்ந்தாள் ஜனனி.

மருத்துவமனைக்கு கிளம்பிக்கொண்டிருந்தான் சுதாகர். அவள் கண்கள் அவனையே தொடர்ந்துக்கொண்டிருந்தன.

கைகடிகாரத்தை அணிந்த படியே அவள் அருகே வந்தவன் மெல்ல கேட்டான் 'என்னடா ஜில்லு?  சரியா சாப்பிடவேயில்லையே நீ. நம்ம வீட்டு சாப்பாடு பிடிக்கலையா உனக்கு?

இ..இல்லை அதெல்லாம் இல்லை ..

அப்புறம் வேறென்ன பிடிக்கலை...? என்றபடியே அவள் கண்களுக்குள் மாறி மாறி பார்த்தான் சுதாகரன்.

சட்டென தாழ்ந்தது அவள் பார்வை. மனம் முழுவதும் அப்படி ஒரு அழுத்தம் அவளுக்கு.

திருமணம் முடிந்தும் அவனை நெருங்க முடியாத அழுத்தம். .திருமண மேடையில் விஷ்வாவை சந்தித்த பிறகு மனதில் கூடிப்போன அழுத்தம்.

விஷ்வாவை பற்றி சுதாகரனிடம் சொல்லிவிட தவித்தது அவள் மனம்.

சொல்லி விடலாம்தான் .ஆனால் எந்த ஆணுக்கும் தன் மனைவியின் பழைய காதல்  மிகப்பெரிய வலியை கொடுக்காதா? எப்படி ஏற்றுக்கொள்வான் இதை?.

மனதிற்குள் எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு அவனுடன் இயல்பாய் இருக்கவும்  முடியவில்லை அவளால்.

‘சரி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுடா. .நான் ஹாஸ்பிடல் போயிட்டு வந்திடறேன் ‘. அவள் கன்னத்தை தட்டிவிட்டு புன்னகையுடன் கிளம்பினான் அவன் .

அந்த புன்னகை அவளை இன்னமும் புரட்டிப்போட சிலையாய் அமர்ந்திருந்தாள் அவள்.

காரை செலுத்திக்கொண்டிருந்தான் சுதாகரன். அப்படி ஒன்றும் எதுவுமே புரியாதவன் இல்லை அவன்.

அவள் மனம், அதனுள் இருந்த அழுத்தம் மட்டுமில்லாமல் அதற்கான காரணமும் ஓரளவு புரிந்துதான் இருந்தது அவனுக்கு.

அவர்களை வாழ்த்த விஷ்வா மேடை ஏரிய போது அவளுக்குள் நிகழ்ந்த தடுமாற்றம் விஷ்வாவின் பார்வை, அவன் வாழ்த்திய விதம்.......  .எல்லாமே அவனுக்குள்ளே சில கேள்விகளை விதைக்க தான் செய்திருந்தது.

நீங்க ரெண்டு பேரும் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கணும். அந்த வார்த்தைகள் அவன் காதுக்குள் இன்னமும் ஒலித்துக்கொண்டே தான் இருந்தன....

இரவு எல்லாரும் உறங்கி விட்டிருந்தனர். கட்டிலில் படுத்தபடியே ஏதோ ஒரு புத்தகத்தில் தன்னை புதைத்துக்கொள்ள முயன்று தோற்றுக்கொண்டிருந்தான் சுதாகரன்.

அந்த அறையை ஒட்டி இருந்த பால்கனியில் இருந்த தொட்டியில் மலர்ந்திருந்த செம்பருத்தி பூக்களை வருடியபடி நின்றிருந்தாள் ஜனனி.

சில நிமிடங்கள் கழித்து ஒரு முடிவுக்கு வந்தவனாய் புத்தகத்தை மூடிவிட்டு பால்கனியில் வந்து நின்ற சுதாகரனின் கையில் இருந்தது அவர்கள் திருமண ஆல்பம்.

ஏதேதோ குழப்பத்தில் தன்னை தொலைத்துவிட்டு நின்றிருந்தவளின் அருகில் வந்து சில நிமிடங்கள் பேசாமல் நின்றவன்  ‘இந்த பூ எப்படி இருக்கு ஜில்லு ? என்றான் மெலிதான குரலில்.

சட்டென கலைந்து திரும்பினாள் ஜனனி.

அப்படி என்ன ரகசியம் பேசிட்டிருக்க இந்த பூவோட? என்றான் கண்களில் தேங்கி நின்ற கேள்விகளுடன்.

ர.. ரகசியமெல்லாம் ஒண்ணுமில்லையே....

அப்படியா? நிஜமாவா? உன் மனசிலே எந்த ரகசியமும் இல்லையா? கொக்கி போட்டு இழுத்த அவன் கண்களை சந்திக்க முடியவில்லை அவளால்.

‘சரி வா.’ கொஞ்ச நேரம் நம்ம கல்யாண ஆல்பம் பார்க்கலாம். இன்னைக்கு மார்னிங் தான் வந்தது  என்றபடியே அங்கிருந்த சின்ன சோபாவில் அமர்ந்தவனின் அருகே மெல்ல அமர்ந்தாள் ஜனனி.

புகைப்படங்களை பார்த்தபடி, அதில் இருந்த அவனது உறவுக்காரர்களை பற்றி சொல்லிக்கொண்டே ஒவ்வொரு பக்கமாய் நிதானமாக திருப்பினான். அவன் கண்கள் ஒரு புகைப்படத்தை எதிர்பார்த்துக்கொண்டே இருக்க விரல்கள் இயங்கிக்கொண்டிருந்தன,

சில நிமிடங்கள் கழித்து வந்தது அந்த பக்கம். அதில் இருந்தது அந்த புகைப்படம் விஷ்வா புன்னகையுடன் அவர்களை வாழ்த்திக்கொண்டிருக்கும் புகைப்படம்.

இருவரின் கண்களும் அந்த புகைப்படத்தின் மீது பதிந்தன. சட்டென ஒரு இறுக்கமான மௌனம் நிலவியது அங்கே. அவர்கள் இருவரும் சுவாசிக்கும் சப்தம் மட்டுமே கேட்டது.

அவன் விரல்கள் அந்த புகைப்படத்தின் மீது மெல்ல தாளமிட்டன.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.