(Reading time: 19 - 37 minutes)

 

ம். அவனேதான் சாட்சாத் ஜனனியின் கணவன் சுதாகரனேதான்.

இருவரும் அவன் எதிரே சென்று அமர சட்டென மாறியது விஷ்வாவின் முகம்.

ஒரு நொடி சுதாகரனின் புருவங்கள் உயர்ந்து இறங்க, 'ஹலோ விஷ்வா' எழுந்து நின்று புன்னகையுடன் கை குலுக்கினான் சுதாகரன்.

இவன் டாக்டரா? விஷ்வா யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில் டாக்டர் உன் friendஆ விஷ்வா இந்து கேட்க, ம். ஆ....ம் ஆமாம். என்று கொஞ்சம் தடுமாறி பதில் சொன்னான் விஷ்வா.

இவன்தான்  ஜனனியின் கணவன் என்று தெரியவில்லை அவளுக்கு.

விஷ்வாவை பற்றி ஜனனி சொன்னதில் இருந்து, அபர்ணா, விஷ்வா நட்பின் மீது சின்னதாய் ஒரு மரியாதை ஏற்பட்டிருந்தது சுதாகருக்கு.

இருவரையும் மாறி மாறி பார்த்த சுதாகர் 'ஸோ. நீங்க தான் அபர்ணா தி கிரேட். இல்லையா?' என்று இந்துவை  பார்த்து புன்னகையுடன் கேட்டான் சுதாகர்.

இல்லையே. நான் இந்துஜா.

ஓ! ஐ யம் ஸாரி. விஷ்வாவோட பார்த்ததும் நான் அபர்ணான்னு நினைச்சிட்டேன்.

'விஷ்வாவோட பார்த்ததும் நான் அபர்ணான்னு நினைச்சிட்டேன்' அந்த வார்த்தையில் ஒரு நொடி திகைத்துப்போனவளாய் அந்த ஜுர வேகத்திலும் சட்டென கேட்டாள் இந்து 'யாரது அபர்ணா?'

அவள் கேட்ட வேகத்தில் சிரித்தே விட்டிருந்தான் சுதாகரன். அவள் மனம் சட்டென புரிந்தது அவனுக்கு.

கூல். கூல். அவங்க விஷ்வாவோட வெரி பெஸ்ட் friend அவ்வளவுதான் என்றான் சுதாகர்.

அவ்வளவுதானா?

அவ்வளவேதான். மலர்ந்து சிரித்தான் சுதாகர்.

மெல்ல நிமிர்ந்தான் விஷ்வா. இவனுக்கு அபர்ணாவை பற்றி தெரிந்திருக்கிறது என்றால் ஜனனி இவனிடம் எல்லாம் சொல்லி இருக்கிறாள் என்று தானே அர்த்தம்.

அதற்கு மேல் அவனால் அங்கே அமர்ந்திருக்க முடியவில்லை. நீ பார்த்திட்டு வா இந்து நான் வெளியே இருக்கேன் என்று எழுந்தவன். எக்ஸ்க்யூஸ் மீ டாக்டர் என்றபடி அறையை விட்டு வெளியேறினான்.

அவன் வெளியே சென்றதும் 'நீங்க விஷ்வாவுக்கு சொந்தமா? ஸ்டெதஸ்கோப்பை காதில் மாட்டியபடியே கேட்டான் சுதாகர்.

ம். மாமா பொண்ணு.

வெரி நைஸ். வெரி நைஸ். என்றபடி அவளை பரிசோதிக்க துவங்கினான்.

ஒரு ஊசியை அவள் கையில் செலுத்திவிட்டு, மருந்தை எழுதியபடியே சொன்னான். சீம்ஸ் டு பீ எ viral infection. நீங்க மாத்திரை சாப்பிட்டாலும், சாப்பிடலேன்னாலும் சரியாக ஒரு வாரம் ஆகும். ஸோ ஒரு வாரம் ஆபீஸ் லீவ் போட்டுட்டு, நினைச்சதை சாப்பிட்டு ஜாலியா ரெஸ்ட் எடுங்க. எல்லாம் சரியாயிடும்'

புன்னகையுடன் அவள் எழ எத்தனித்த போது மெல்ல கேட்டான் சுதாகர் 'தங்கச்சி. நீ விஷ்வாவை லவ் பண்றியாமா?

புருவங்கள் உயர புன்னகையுடன் அவனை பார்த்தவள் எதை வெச்சு அப்படி கேட்கறீங்க? என்றாள்.

'அதுதான் உன் இதயம் விஷ்வா விஷ்வானு துடிச்ச..தே..... இந்த அண்ணன் ஸ்டெதஸ்கோப்பை வெச்சு கேட்டேனே......மா கேட்டே.....னே' என்றான் சிவாஜி குரலில்.

'சொல்றேன்ண்ணா....... சொல்றேன். என் மனசிலே.... அடி ஆழத்திலே..... புதைஞ்சு கிடக்கிற ரகசியத்தை உங்ககிட்டே மட்டும் சொல்றேன். நானும் பல வருஷமா விஷ்வாவை லவ் பண்றேன். ஆனா இது கை கூடி வரும்கிற நம்பிக்கை எனக்கு கடுகளவும் இல்லைண்ணா கடுகளவும் இல்லை.' என்றாள் அவன் பாணியிலேயே.

அழகாய் மலர்ந்து சிரித்தவன் ' ஏன் உங்க காதலுக்கு நிறைய எதிரிகளோ? என்றான்.

அது இருக்காங்க ரெண்டு மூணு பேர். அதிலே முதல் எதிரி நம்ம விஷ்வாதான். அவனுக்கு பயங்கராமான காதல் தோல்வி. என் பக்கம் திரும்பிக்கூட பார்க்க மாட்டான்.

அப்படியா? அதையும் பார்க்கலாம் என்றவன் தனது கார்டை அவளிடம் நீட்டினான். 'எனி டைம் எனி ஹெல்ப்' திஸ் சுதாகர் வில் பீ தேர் for யூ. விஷ்வாவுக்கு உங்களாலே ஒரு நல்ல வாழ்கை அமைஞ்சா நான் ரொம்ப சந்தோஷ படுவேன்.

அவனை வியப்புடன் பார்த்தவள் கார்டை வாங்கிக்கொண்டு புன்னகையுடன் நன்றி சொல்லிவிட்டு  வெளியேறிய பிறகும் சில நிமிடங்கள் எதையோ யோசித்தபடியே அமர்ந்திருந்தான் சுதாகர்.

ன்னை வீட்டிலே விட்டுட்டு போறியா விஷ்வா' என்றாள் இந்து.

பதில் எதுவும் பேசாமல் அவளை வீட்டு வாசலில் இறக்கி விட்டான் விஷ்வா.

எத்தனை நாட்கள் ஆயிற்று இந்த வீட்டுக்கு வந்து.! வீட்டை விட்டு அகலவில்லை அவன் விழிகள்.

வீட்டிலே யாருமில்லை உள்ளே வாயேன் விஷ்வா. இது உன் வீடு. மனம் உள்ளே செல்ல விழைந்தது. அவன் ஓடி விளையாடி வளர்ந்த வீடு அது.

வேண்டாம் நான் கிளம்பறேன். என்று நகர போனவனின் கையை அவள் பற்றிக்கொள்ள அவள் கையை விலக்கினான். வேண்டாம் இந்து. போதும். எந்த பிரச்சனையும் வேண்டாம்மா.  எனக்கு போன் பண்றதை கூட விட்டுடு. அதுதான் எல்லாருக்கும்  நல்லது.

'நோ. நான் விட மாட்டேன்.'

அவள் பதிலை காதில் வாங்கிக்கொள்ளாமல் வண்டியை விரட்டினான் விஷ்வா.

மாலை அவளிடமிருந்து வந்த அழைப்புகளை ஏற்கவில்லை விஷ்வா. அவள் அவனை நெருங்குவது தெரிந்தால் வீட்டில் பூகம்பம் வெடிக்குமென்று தெரியும் அவனுக்கு. அவள் திரும்ப திரும்ப அழைக்க ஒரு கட்டத்தில் தன் கைப்பேசியை அணைத்து விட்டிருந்தான் அவன்.

இரவு பத்து மணிக்கு தனது கைப்பேசியை மறுபடியும் உயிர்பித்தபோது பல குறுஞ்செய்திகள் வந்துக்கொண்டே இருந்தன. மாலையிலிருந்து அவள் அனுப்பிய குறுஞ்செய்திகள் எல்லாம் அவன் கைப்பேசியை உயிர்ப்பித்தவுடன் வந்துக்கொண்டே இருந்தன. கிட்டத்தட்ட முப்பது குறுஞ்செய்திகள்.

எனக்கு உன்கிட்டே பேசணும் விஷ்வா.

என்னை அழ வைக்காதே விஷ்வா.

போன் ஆன் பண்ணு விஷ்வா.

நான் அழுதிட்டிருக்கேன் விஷ்வா.

இப்படியே பல....

உடல் நலமில்லாத நேரத்தில் என்ன செய்துக்கொண்டிருக்கிறாள் இந்த பைத்தியக்கார பெண். மாலையிலிருந்து இதையே செய்துக்கொண்டு இருக்கிறாளா? என்ன வேண்டுமாம் அவளுக்கு.?

எதை பற்றியுமே யோசிக்காமல் கைப்பேசியை எடுத்து சட்டென அவள் எண்ணை அழுத்தினான் விஷ்வா.

அங்கே பரத் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தாள் இந்து. அவள் அருகில் அமர்ந்து ஒரு புத்தகத்தில் ஆழ்ந்திருந்தான் பரத்.

அப்போது ஒலித்தது அவள் கைப்பேசி, விஷ்வா என்று ஒளிர்ந்துகொண்டிருந்தது அதன் திரை.

கண்களை நிமிர்த்திய பரத், ஒரு முறை இந்துவின் நெற்றியில் கைவைத்து பார்த்துவிட்டு நகர்ந்து கட்டிலுக்கு அந்த பக்கம் இருந்த சின்ன மேஜையில் இருந்த அவள் கைப்பேசியை தன் கையில் எடுத்தான். 

தொடரும்...

Go to episode # 05

Go to episode # 07

{kunena_discuss:726}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.