(Reading time: 16 - 31 minutes)

06. சிறகுகள் - பாலா

ன்று மாலை கிருஷ்ணாவிடம் பேச வேண்டும் என்று எண்ணி அவனை தேடினாள் தேன்மொழி.

“ஜமுனா அக்கா கிருஷ்ணா சார் பாத்தீங்களா”

“ஏன் கேட்கற”

“இல்ல அவர் கிட்ட கொஞ்சம் பேசணும்”

Siragugal

அவளை ஊன்றி பார்த்தவள் “என்ன பேச போற” என்றாள்.

“என்ன பேச போறேன்னு எனக்கே தெரியலை. பட் பேசணும்”

“அவனுக்கு அட்வைஸ் பண்ண போறியோ”

“அப்படின்னு இல்லைக்கா. கிருஷ்ணா என்ன படிச்சிருக்காரு. பட் இந்த வொர்க் பண்ணிட்டிருக்காருன்னு எல்லாம் இன்னைக்கு தான் எனக்கு ராம் சார் சொன்னார். கெளதம்க்கு நல்ல ப்ரண்ட்டா இருக்கறது ஓகே தான். பட் அவரோட லைப் பார்க்கணும் இல்ல”

“நீ சொல்றது கரெக்ட் தான். பட் இப்ப அதை பத்தி நீ கிருஷ்ணா கிட்ட பேச வேண்டாம்.”

“ஏன் இப்படி சொல்றீங்க.”

ஜமுனாவும் ஏதேதோ சொல்லி சமாளித்தாலும், திரும்ப திரும்ப தேன்மொழி அதிலேயே வந்து நின்றாள். எனவே ஜமுனாவும் அவளிடம் வெளிப்படையாக கூறினாள்.

“தேன்மொழி ஐ தின்க் யூ ஆர் மெடூர்ட். இதை நீ புரிஞ்சிப்பன்னு தான் நான் இதை உன் கிட்ட சொல்றேன்”

“ “

“ராம் உன் கிட்ட அவங்க ரெண்டு பேரையும் பத்தி சொன்னான்னு சொன்ன இல்ல. சோ அவங்க ரெண்டு பேரும் எத்தனை வருஷமா ஒன்னா இருக்காங்கன்னு உனக்கு தெரிஞ்சிருக்கும். கிருஷ்ணாக்கு யாரும் கிடையாது. எப்படியோ இவங்க வீட்டுக்கு வந்திருக்கான். வந்த அன்னிலேர்ந்து இன்னைக்கு வரைக்கும் கௌதம்க்கு கிருஷ்ணா தான் எல்லாமே பார்த்து பார்த்து செய்வான். கௌதமோட அப்பா கூட இவங்க ரெண்டு பேருக்கு இடையில வர முடியாது. ரெண்டு பேரும் அவ்வளவு க்ளோஸ். இன்னும் சொல்ல போனா கிருஷ்ணா கௌதம்க்காக அவன் உயிரையே கூட கொடுப்பான். இதெல்லாம் தெரிஞ்சி தான் கௌதமோட அப்பா கௌதமை கிருஷ்ணாவை நம்பியே விட்டுட்டு அவரோட பிசினஸ் பார்த்துட்டு இருக்கார்.”

“ரெண்டு பேரும் இத்தனை வருஷமா ஒன்னா தான் இருக்காங்க. எங்க போனாலும் ஒன்னா தான் போவாங்க. கௌதம்க்கு கூட சில ப்ரண்ட்ஸ் இருக்காங்க. பட் கிருஷ்ணாக்கு கௌதமை தவிர ஒருத்தர் கூட ப்ரண்ட் கிடையாது. அவனுக்கு கௌதம் மட்டும் போதும். இங்க வந்து தான் எங்க எல்லார் கிட்டவும் பேசறான். பட் இங்கயும், நாங்க எல்லாரும் ஒன்னா சேர்ந்துட்டு நாங்க முக்கியமா, கௌதம் முக்கியமான்னு கேட்டா, கௌதமை தான் அவன் சொல்லுவான்.”

“டிகிரி கம்ப்ளீட் செஞ்சிட்டா எங்கே கௌதம் கூட இருக்க முடியாதோன்னு தான் அந்த ரெண்டு பேப்பர் எழுதறதே இல்லை. ஒவ்வொரு முறையும் அதுக்கு நியாபகமா கௌதம் பீஸ் பே பண்ணிடுவான். பட் ஒவ்வொரு முறையும் கிருஷ்ணாவுக்கு ஏதாச்சும் ரீசன் கிடைக்கும் எக்ஸாம்க்கு போகாத மாதிரி. இதெல்லாம் கிருஷ்ணாக்கு கௌதம் எவ்வளவு இம்பார்டன்ட் அப்படிங்கறதுக்காக சொல்றேன்.  “

“பட் இதெல்லாத்தையும் விட முக்கியமான விஷயம். கிருஷ்ணா கௌதம் மேல அவ்வளவு பொசசிவ். நாங்க யாராச்சும் அவன் கூட கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தா கூட கரெக்ட்டா கிருஷ்ணா அங்க வந்துடுவான். கௌதம் கிட்ட கொஞ்ச அதிகமா யார் பேசினாலும் கிருஷ்ணாக்கு பிடிக்காது” என்றவாறு நிறுத்தி விட்டு அவள் முகத்தை பார்த்தாள் ஜமுனா.

தேன்மொழி விழித்து பார்த்து “அப்ப என்னையும் கூட, இதை தான் சொல்ல வறீங்களா”

ஆம் என்றவாறு தலை அசைத்தாள் ஜமுனா.

பொண்ணுங்க பொசசிவாக இருந்து அவள் பார்த்திருக்கிறாள். இப்போது தான் முதல் முறையாக ஆண் ஒருவன் நண்பன் மேல் பொசசிவாக இருப்பதை காண்கிறாள். கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது அவளுக்கு.

“அதனால தான் முதல்ல என் கிட்ட நல்லா பேசின மாதிரி இப்ப என் கிட்ட பேசரதில்லையா”

“ம்ம்ம்”

சிறிது நேரம் யோசித்தவள் “என் மேல தப்பா அக்கா” என்றாள்.

“இல்ல டா. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை. கிருஷ்ணா இப்ப கொஞ்ச நாளாவே அப்செட்டா தான் இருக்கான். அவன் உன் மேல கொஞ்சம் கோவமா இருக்க கூட வாய்ப்பிருக்கு. சோ இப்ப போய் நீ அவன் கிட்ட பேசறது சரியா இருக்காது. அதான் உன் கிட்ட எல்லாத்தையும் சொன்னேன்”

வீட்டிற்கு சென்ற தேன்மொழிக்கு இதே நினைப்பாக இருந்தது.

‘கௌதம் என்னடான்னா தேவை இல்லாம என் கிட்ட சண்டை போடறான். இதுல இந்த கிருஷ்ணா வேற’

எப்படி எல்லாவற்றையும் சரி செய்வது என்று எண்ணிக் கொண்டாள்.

அவள் கால்கள் தானாக மாடிக்கு சென்றது. பக்கத்து வீட்டை நோட்டம் விட்டாள். யாருடைய பேச்சு சத்தமும் கேட்கவில்லை.

இன்னமும் கிருஷ்ணா வரவில்லை போலும் என்று எண்ணியவள், முதலில் இந்த கௌதமையாவது சரி செய்யலாம் என்று எண்ணியவாறே, எல்லா புறமும் திரும்பி பார்த்தவாறே, அந்த கைப் பிடி சுவர் ஏறி குதித்து கௌதமை பார்க்க சென்றாள்.

கதவு லேசாக சாத்தி இருந்தது. கதவை தட்டினாள் தேன்மொழி.

“யாரு” என்று கௌதமின் குரல் கேட்டது.

“நான் தான்” என்றவாறே உள்ளே சென்றாள்.

இவள் குரலை கேட்டவன் ஏதும் பேசாமல் இருந்தான்.

“என்ன சார். வீட்டுக்கு வந்தவங்களை வாங்கன்னு சொல்ல மாட்டீங்களா”

அதற்கும் மௌனமே பதிலாக இருந்தது.

எழுந்தவன் சரியாக நடந்து போய் பிரிட்ஜை திறந்து அவளுக்கு தண்ணீர் கொண்டு வந்து தந்தான்.

அவன் எல்லாவற்றையும் சிஸ்டமேட்டிக்காக தெரிந்து வைத்திருப்பது புரிந்தது.

“கௌதம் என் கிட்ட பேசமாட்டியா”

அவளின் குரலில் எப்போதும் இருக்கும் கம்பீரம் போய் ஏதோ சிறு பெண் பேசுவதை போல் தோன்றியது அவனுக்கு.

அவள் இன்ஸ்டிடியூட்டில் எல்லோரிடமும் பேசுவதற்கும், தன்னிடம் பேசுவதற்கும் இருக்கும் வித்தியாசம் அறிந்து தான் இருந்தான் அவன். அதை அவனிடம் இருக்கும் நட்பினால் வரும் அக்கறை என்று எடுத்துக் கொள்வதா இல்லை அவன் மேல் அவள் காட்டும் அனுதாபமா என்ற கேள்வி எழுந்து அவனை வருத்துகிறது.

ஏன் அவளிடம் கோபப்பட்டு, சண்டையிட்டோம் என்று அவனே வருந்திக் கொண்டு தான் இருந்தான். அவனே போய் பேசலாம் என்றும் எண்ணியிருந்தான். ஆனால் இப்போது அவளே வந்து பேசும் போது, தவறே செய்யாமல் அவளே வந்து பேசுகிறாளே என்று வருத்தமாக உள்ளது அவனுக்கு.

“ஐ’ம் சாரி கௌதம். நான் அப்ப வேற ஏதோ யோசனைல இருந்தேன். சாரி”

“இல்லை நான் தான் சாரி சொல்லணும். என் மேல தான் தப்பு” என்றான் சின்னக் குரலில்.

அவன் இன்னும் நார்மலாகவில்லை என்பது அவன் குரலில் இருந்தே தெரிந்தது அவளுக்கு.

“இட்’ஸ் ஓகே லீவ் இட். வேற ஏதாவது பேசுவோம்”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.