(Reading time: 16 - 31 minutes)

 

ப்படியா சேதி” என்றவள் அங்கிருந்த பேப்பர் வெயிட்டை எடுத்து “இதை உன் மண்டைலயே போடுவேன்” என்று அவனை மிரட்டினாள்.

“அம்மா தாயே. வீட்டுக்கு ஒரே பையன்ம்மா”

“டேய். அப்ப சுபாக்கா யாரு டா”

“ஹேய் நான் என்ன சொன்னேன். பையன்ல நான் மட்டும் தானே. அது தான் வீட்டுக்கு ஒரே பையன்”

“நீ எல்லாம் திருந்தவே மாட்ட”

“சரி விடு ஜமுனா. நீ கேட்கறதுக்கு நிஜமாவே என் கிட்ட பதில் இல்லை. என்னவோ பிடிச்சிருக்க மாதிரி தான் தோணுது. உள்ளே பாட்டு எல்லாம் கூட பாடுது சில நேரம். பட் இது லவ் தானான்னு எனக்கே கொஞ்சம் குழப்பமா தான் இருக்கு. அதுலையும் சில நேரம் தேன்மொழியை நினைச்சாலே பயமா இருக்கு”

சிறிது நேரம் வாய் விட்டு சிரித்தவள் “இதுக்கு தான் காலா காலத்துல லவ் பண்ணி இருக்கணும்” என்றாள்.

“உனக்கு காமெடியா இருக்கு. நீ சிரி”

“இல்ல டா. ஏற்கனவே அம்மா உனக்கு பொண்ணு பாத்துட்டு இருக்காங்க. இதுல சுபாக்கா வேற ரொம்ப தீவிரமா பாத்துட்டு இருக்காங்களாம். நீ என்னடான்னா லவ்வான்றதுக்கே டவுட்டா சொல்ற. சோ அதான்”

“அவங்க கிடக்கறாங்க. அவங்க பார்க்கரவங்களை எல்லாம் என்னால மேரேஜ் பண்ணிக்க முடியாது.”

“நீயும் உன் லவ் கன்பார்ம் பண்ண மாட்ட. இதுல அவங்களையும் இப்படி சொல்ற”

“இல்ல ஜமுனா. எனக்கு உள்ளே சொல்லணும். இவ தான். இவ மட்டும் தான்னு. அதுவும் இல்லாம, இது நான் ஒருத்தன் மட்டும் சம்மந்தப் பட்ட விஷயம் இல்லல்ல.”

“ம்ம்ம். ராம். இன்கேஸ் உனக்கு தேன்மொழியை பிடிச்சிட்டா, வீட்டுல ஒத்துப்பாங்களா. ஏன்னா அவங்க வீட்ல உங்க அளவுக்கு எல்லாம் வசதி கிடையாது. மிடில் கிளாஸ் பாமிலி தான்.”

“எனக்கு பிடிச்சா அம்மா ஓகே தான் சொல்லுவாங்க”

“ம்ம். ஏன்னா நீ சொன்ன மாதிரி இது நீ ஒருத்தன் மட்டும் சம்மந்தப்பட்ட விஷயம் கிடையாது. உனக்கு பிடிச்சிருக்கற மாதிரி உன் வீட்டுக்கே பிடிச்சிருக்கனும். அப்ப தான் லைப் சந்தோசமா இருக்கும்”

“என் வீட்ல ஒத்துக்க மாட்டாங்கன்னு நீ நினைக்கறியா ஜமுனா”

“இல்ல. ஒரு முறை சுபாக்கா என் கிட்ட சில போட்டோஸ் காமிச்சி உனக்கு வந்த வரன்னு சொன்னாங்க. பாரு. எந்த பொண்ணு நல்லாருக்குன்னு என் கிட்ட கேட்டாங்க. நான் அதுல ஒரு பொண்ணை காமிச்சி இந்த பொண்ணு நல்லாருக்கான்னு சொன்னேன். அவங்க அந்த போட்டோவை வாங்கி பார்த்துட்டு, இல்ல ஜமுனா, இந்த பொண்ணு வேண்டாம். இவ கொஞ்சம் கலர் கம்மியா இருக்கான்னு சொல்லிட்டாங்க. அந்த பொண்ணு ஒன்னும் அந்த அளவுக்கு கலர் கம்மி இல்ல”

“இப்ப என்ன சொல்ற ஜமுனா. தேன்மொழி கலர் கம்மின்னு சொல்றியா” என்றவனின் குரலில் உஷ்ணம் தெரிந்தது.

‘இன்னும் எனக்கு கன்பார்மா தெரியலைன்னு சொல்லிட்டு ஐயாவுக்கு கோவத்தை பார்த்தியா’

“ராம் நான் அப்படி சொல்ல வரலை. பட் உன் வீட்டுல என்ன சொல்லுவாங்கன்னு தான் சொல்லிட்டிருக்கேன். நீ சொல்ற மாதிரி இப்பவே எல்லாத்தையும் யோசிச்சிட்டா நல்லது. அதுக்கு தான் சொல்றேன். பின்னாடி கஷ்டம் வரக் கூடாது இல்லையா”

சிறிது அவனையே சாந்தப் படுத்திக் கொண்டவன் “பர்ஸ்ட் ஒன்னு புரிஞ்சிக்கோ ஜமுனா. காதல் நிறத்தை பார்த்து வராது. அண்ட் தேன்மொழி ஒன்னும் கருப்பு எல்லாம் இல்லை. சாக்லேட் கலர்ல இருக்கா. இன்கேஸ் ஏதாச்சும் அது ப்ராப்ளம்ன்னா அது எனக்கு தான் வரணும்.”

“எவ்வளவோ அழகழகான பொண்ணுங்களை எல்லாம் பார்த்திருக்கேன். இப்ப நான் சொல்ற அந்த இண்டரெஸ்ட் கூட யார் மேலயும் வரலை. தேன்மொழி கிட்ட இருக்க ஏதோ ஒன்னு என்னை இழுக்குது. எனக்கு அது நல்லாவே தெரியுது. இன்னும் அதை கம்ப்ளீட்டா பீல் பண்ணணும்ன்னு நினைக்கறேன்”

“சரி ராம். எந்த டெசிஷனா இருந்தாலும் அதை சீக்கிரம் எடு. ஓகே வா”

“ம்ம்ம்”

ன்று மதிய இடைவெளியில் ஸ்ரீ ராமின் அம்மா விசாலாட்சி அங்கு வந்தார்.

அவர் திடீரென்று வரவும், எல்லோரும் ஆச்சரியத்துடன் வரவேற்றனர்.

ஜமுனா தான் போய் அவரை கட்டிக் கொண்டு “என்னம்மா. சர்ப்ரைஸா இருக்கு. எதுவும் சொல்லாம திடீர்ன்னு வந்திருக்கீங்க” என்றாள்.

“அது ஒன்னும் இல்லை. வீட்ல கொலு வச்சிருக்கோம். அதான் உங்க எல்லாரையும் கூப்பிடலாம்ன்னு வந்தேன்”

“ஓ. மறந்தே போயிட்டேன் பாருங்க. ஐ ஜாலி.”

பின்பு அவர் எல்லோரையும் வீட்டிற்கு அழைத்தார்.

தேன்மொழியையும் அழைத்தார்.

தேன்மொழி சிறிது தயங்கியவாறே சரி என்றவாறு தலை அசைத்தாள்.

“என்னம்மா தயங்கற, இங்க எல்லாரும் வருவாங்க. நீயும் கண்டிப்பா வரணும். சரியா.”

தேன்மொழியும் சிறித்து வருவதாக கூறினாள்.

“என்ன தௌலத். உன் பொண்ணை கூட்டிக்கிட்டு கண்டிப்பா வந்திடனும் சரியா. அவளுக்கு இது ரொம்ப பிடிக்கும்”

“ம்ம்ம். அவ இந்த மாசம் ஆரம்பிச்சதுல இருந்தே கேட்டுக்கிட்டே இருக்கா. கண்டிப்பா வருவோம்”

அவர் எல்லோருக்கும் சேர்த்து உணவு கொண்டு வந்திருந்தார். எல்லோரும் அதை உண்ண, எல்லோருடைய உணவையும் அவரை டேஸ்ட் செய்யும் படி அவருக்கு கொடுத்தனர்.

ஜமுனா தான் ஸ்ரீ ராம் இப்படி செய்கிறான்ம்மா, அப்படி செய்கிறான்ம்மா என்று சிறு பிள்ளை போல கம்ப்ளைன்ட் செய்து கொண்டிருந்தாள்.

அவரும் அவள் பேச்சைக் கேட்டு அவன் காதை திருகி கொண்டிருந்தார்.

“அம்மா. அவ தான் சொல்றான்னா நீங்களும் இப்படியாம்மா செய்வீங்க” என்றவாறு எல்லோரையும் பார்த்தான் அவன்.

“என்னடா இப்படி அப்படி பார்க்கற, எல்லாரும் நம்ம வீட்டு புள்ளைங்க. அது சரி. உன்னை நான் அதட்ட கூடாதா”

“சரண்டர்” என்றவாறு ஸ்ரீ ராம் உணவில் மட்டும் கவனம் செலுத்தினான்.

தேன்மொழியின் உணவை சாப்பிட்டு விட்டு, “ரொம்ப பிரமாதம். உங்க அம்மாக்கு கைப்பக்குவம் ரொம்ப நல்லா இருக்கு” என்றார்.

“அம்மா. அது அவங்க அம்மா செஞ்சது இல்ல, நம்ம தேன்மொழி தான் செஞ்சது” என்றாள் ஜமுனா.

“ஓ அப்படியா. ரொம்ப நல்லா செஞ்சிருக்க.” என்று பாராட்டினார்.

“இதே மாதிரி சமைக்கற மாதிரி நம்ம ராம்க்கு ஒரு பொண்ணு பாத்திடுவோமா” என்றாள் ஜமுனா.

சாப்பிட்டுக் கொண்டிருந்த ஸ்ரீ ராமிற்கு புரை ஏறி விட்டது.

ஏதேதோ சொல்லி புரை ஏற வைத்தது பத்தாது என்று அவன் தலையில் வேறு வேகமாக தட்டினாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.