(Reading time: 16 - 31 minutes)

 

னால் அவனால் நார்மலாக இயலவில்லை. அவன் முகத்தில் வழக்கமாக இருக்கும் புன்னகை இல்லை மாறாக வருத்தம் தான் தெரிந்தது.

“கௌதம். இதெல்லாம் ஒரு பிரச்சனையா. இதுக்கு போய் ஏன் வருத்திக்கற”

திரும்ப சாரி என்றான்.

“கௌதம்”

“இல்ல, அங்க அத்தனை பேர் எதிர்ல நான் உன்னை அப்படி பேசி இருக்க கூடாது. யோசிச்சி பார்த்த என் தப்பு எனக்கு புரியுது. ரொம்ப ஷார்ட் டைம்ல நாம ரொம்ப க்ளோஸ் ஆகிட்டோம்ல. உன் மேல நான் ரொம்ப உரிமை எடுத்துக்கறேன்னு நினைக்கறேன்”

“உனக்கு உரிமை இருக்கு. அதனால தான் எடுத்துக்கற. சிம்பிள்” என்றாள் தேன்மொழி.

“என்னை நீ உன்னோட ப்ரண்ட்ஸ்ல ஒருத்தனா நினைச்சி சொல்றியா, இல்லை எனக்கு பார்வை இல்லைன்னு ஏதோ அனுதாபத்துல சொல்றியா”

“ஷட் அப் கௌதம். என்ன பேசற நீ”

“அன்னைக்கு நான் ஏதேதோ பேசிட்டு இருக்கேன். நீ ரெண்டு மூணு தடவை எனக்கு ரெஸ்பான்சே தரலை. எனக்கு பார்வை இருந்துச்சின்னு வச்சிக்கோ, உன்னோட முகத்தை பார்த்து நீ எந்த மனநிலைல இருக்கன்னு என்னால புரிஞ்சிக்க முடியும். எனக்கு பார்வையும் இல்லை. நீ என்ன மனநிலைல இருக்க அப்படின்னும் எனக்கு தெரியலை. என்னவோ திடீர்ன்னு ஒரு கோவம். ஏதேதோ பேசிட்டேன். என்னை மன்னிச்சிடுவியா தேன்மொழி”

“கௌதம் ஏன் மன்னிச்சிடுன்னு எல்லாம் பேசிட்டு இருக்க. பிரண்ட்ஷிப்குள்ள இதெல்லாம் ஒரு சண்டையா. என்னவோ அனுதாபம் அது இதுன்னு உளறின இல்லை. ஏன் லூஸ் மாதிரி பேசற. அனுதாபம் எல்லாம் எவ்வளவு நாளுக்கு தாங்கும் சொல்லு. யூ ஆர் மை பிரண்ட் ஓகே. இனி என் பிரண்ட்ஷிப் மேல டவுட் பட்டினா எனக்கு கெட்ட கோபம் வரும் சொல்லிட்டேன்”

“கோபத்துல நல்ல கோபம் கூட இருக்குதா என்ன”

“பாரு டா. காமெடி யா”

“ஹேய் இல்லை. ரொம்ப நாளா இது டவுட். கெட்ட கோபம் வரும்ன்னா நல்ல கோபம்ன்னு ஒன்னு இருக்கா” என்றான் சிரிக்காமல் சீரியசாக.

“உன்னை எல்லாம் என்ன பண்றது.”

“அது சரி. நீ என்ன இந்த டோர் பக்கம் வந்த, எகிறி குதிச்சா வந்த”

“ஹாஹஹா. ஆமா”

“அடிப்பாவி. உன்னை எல்லாரும் எவ்வளவு நல்ல பொண்ணுன்னு நினைச்சிட்டு இருக்காங்க. நீ என்னடான்னா சுவர் ஏறி குதிக்கற”

சிரித்தாள் தேன்மொழி.

பின்பு இருவரும் கிருஷ்ணாவை பற்றி பேசி என்ன செய்ய வேண்டும் என்று பிளான் செய்து கொண்டார்கள்.

ல்லோருக்கும் கிளாஸ் இருக்க, ஜமுனா மட்டும் ப்ரீயாக இருந்தாள். சரியாக அப்போது ஸ்ரீ ராம் வந்தான்.

ஜமுனாவிடம் ஒரு ஹாய் சொல்லி விட்டு அவன் காபின் நோக்கி சென்றான்.

ஜமுனாவிற்கு அவள் சில நாட்களாக கேட்க நினைத்ததை எல்லாம் கேட்க இது தான் சரியான சந்தர்ப்பம் என்று தோன்றியது.

அவன் காபின் நோக்கி சென்றாள்.

“என்ன ஜமுனா”

“உன் கிட்ட கொஞ்சம் பேசணும்”

“என்ன சொல்லு. என்ன சுதர்சன் வராரா, லீவ் வேணுமா”

“அதெல்லாம் இல்லை”

“வேற என்ன”

“நான் என்ன கேட்க போறேன்னு உனக்கு நிஜமாவே தெரியலையா”

சில நாட்களாக அவனும் இந்த கேள்வியை எதிர்பார்த்து தான் இருந்தான்.

“ஹேய் என்ன சொல்ற. எனக்கு ஒன்னும் புரியலை” என்று நடிகர் திலகமாகவே மாறி நடித்தான் ஸ்ரீ ராம்.

“வேண்டாம். அப்புறம் கோபத்துல நான் வில்லங்கமா ஏதாச்சும் செஞ்சிடுவேன். அன்னைக்கு என்ன மௌன விரதம் இருக்க சொல்லிட்டு நீ அவருக்கு போன் போட்டதுல இருந்தே நான் உன் மேல ரிவன்ஜ் வச்சிருக்கேன். நியாபகம் வச்சிக்கோ”

“அம்மா தாயே. உனக்கு இப்ப என்ன வேணும் சொல்லு”

“சரி. நான் ஸ்ட்ரைட்டாவே கேட்கறேன். உனக்கு தேன்மொழி மேல இண்டரெஸ்ட் இருக்கோ”

“ஆமா” என்று டக்கென்று சொல்லி விட்டான்.

“என்னடா சொல்ற. அந்த பொண்ணை லவ் பண்றியா”

இதற்கு பதில் ஏதும் கூறவில்லை.

“என்ன ராம். பதிலே காணோம்”

“நீ இண்டரெஸ்ட் இருக்கான்னு கேட்ட, எனக்கு ஏதோ ஒரு இண்டரெஸ்ட் இருக்கு. அதான் ஆமான்னு சொல்லிட்டேன். பட் அது லவ் தானான்னு தெரியலை”

“ம்ம்ம். யோசிக்க வேண்டிய விஷயம் தான்”

“ “

“இதுக்கு முன்னாடி உனக்கு யார் மேலயாச்சும் இண்டரெஸ்ட் வந்திருக்கா ராம்”

“இது வரைக்கும் யார் கிட்டவும் சொல்லாத ஒரு உண்மையை உன் கிட்ட சொல்ல போறேன். கிட்ட வா” என்று அவளை அழைத்து,

“ப்ளஸ் டூ படிக்கும் போது ஒரு பொண்ணை லவ் பண்ணேன். பட் அந்த லவ் பெய்லியர் ஆகிடுச்சி” என்றான் சோகமாக.

“அப்படியா” என்றவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“ஏன் டா. ஏன் லவ் பெய்லியர்.”

“ரொம்ப வயசு வித்தியாசம்ன்னு சொல்லி எனக்கு கட்டி வைக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க”

“நீயே அப்ப ப்ளஸ் டூ தான். அப்படி என்ன வயசு வித்தியாசம். அந்த பொண்ணுக்கு என்ன வயசு”

“ஹிஹிஹி. ஐஞ்சி வயசு”

“டேய். யார் டா அது”

“நம்ம கீர்த்தி தான். அப்ப அவளுக்கு ஐஞ்சி வயசு.”

“இது லவ் பெய்லியரா.”

“இல்லையா பின்ன. கீர்த்தி பொறந்தப்பவே எனக்கு அவளை தான் கட்டி வைப்பேன்னு சொன்னாங்க. ஐஞ்சி வருஷம் கழித்து ரொம்ப வயசு வித்தியாசம் வருது. உனக்கு கட்டி தர மாட்டேன்னு சொன்னா. எப்படி இருக்கும். அதுவும் பிளஸ் டூ படிக்கும் போது என் மனசு என்ன பாடு பட்டிருக்கும். இது பெரிய லவ் பெய்லியர் இல்லையா”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.