(Reading time: 15 - 29 minutes)

 

வளை தன்னோடு அழைத்து போக தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அவன் செய்து கொண்டிருப்பதாகவும், அவன் அம்மா சம்மதித்தாலும் சம்மாதிக்காவிட்டாலும் உடனே வந்து அவளை கையோடு அழைத்து செல்ல விரும்புவதாகவும், இந்த ஏற்பாட்டுக்கு இவள் சம்மதம் தேவையென்றும் குறிப்பிட்டிருந்தான்.

அப்படி அவளுக்கு சம்மதமெனில் இதே போல் அவனுக்கு ஒரு விலை உயர்வான பரிசில் கடிதத்தை மறைத்து வைத்து அவன் தாயாரிடம் கொடுத்தனுப்ப சொல்லியிருந்தான்.

அவனுக்கு எதை கொடுக்க? ஆணுக்கு எந்த நகை கொடுக்க? தன் மாமியாரிடம் அனுமதி பெற்று தன் பிறந்த வீட்டிற்கான பாங்க் லாக்கரிலிருந்து நகை எடுத்துவர விரும்பினாள் தயனி. அப்பாவின் தங்க பேனா இந்த சூழலில் உதவும்.

உடனடியாக சம்மதித்த அத்தையும், “அனைத்து நகைகளையும் எடுத்து வந்து விடு, மீண்டும் மீண்டும் அலைய முடியாது” என்க, இவள் லாக்கர் காலியாகி மாமியார் வீட்டில் குடியேறின நகைகள்.

தந்தையின் தங்க பேனாக்குள் மறைத்துவைத்து கடிதம் கணவனுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் நான்காம் நாள் இவள் அத்தைகாரி இவளது அனைத்து சொத்துகளையும் மகன் பெயருக்கு பதிவு செய்து தரும்படி இவளிடம் வந்து நின்றாள்.

இந்த நாட்டில் எல்லாருக்கும் பெர்த் ஐ.டி எண்ணும்,  ஓ.சி என்கிற ஓபன் கோடும் உண்டு. ஓ.சி என்பது பாஸ்வஅர்ட். ரகசியமனது. அந்த நபருக்கு மட்டுமே அறிவிக்கபடுவது. குழந்தையின் பதினைந்து வயது வரை பெற்றோருக்கு அறிவிக்கபடும் ஓ.சி, அதன் பின் உரிய நபருக்கு மட்டுமே அறிவிக்க படும்.

அந்த ஓ.சி மூலம் பெர்த் ஐ டிக்குள் நுழைந்தால் போதும், அந்த நபர் தன் சொத்துகளை வாங்க விற்க,திருமணம் செய்ய விவாகரத்து அறிவிக்க, தொலைந்த பாஃஸ்போர்ட்டை நிறுத்த, புதிய பாஃஸ்போர்ட் பதிவிரக்கம் செய்ய என எல்லாம் செய்ய முடியும்.

இந்த முறையில் தான் தயனியின் திருமாணமே பதிவானது. அதன் மூலம் அவள் சொத்துகளை தன் மகன் பெயருக்கு மாற்ற சொன்னார் அந்த அத்தை.

அதற்கு வாங்குபவரும் தன் ஐ டி வழியாக சம்மதம் அனுப்ப வேண்டும். அவளது கணவனும் அனுப்பி இருந்தான்.

மனம் உடைந்து போனாள் இவள்.

மறுத்தாள் தயனி. பட்டினி போட்டாள் அத்தை. ஆறு நாளைக்கு மேல் பொறுமை இழந்தாள் அத்தைகாரி. சவுக்கால் இவள் முதுகை சிதைத்தாள். மசியவில்லை தயனி.

மொத்த வீட்டிலும் அத்தையையும் இவளையும் தவிர யாருமில்லை. இவளுக்கு உதவிக்கு ஒருவருமில்லை.

தொடர்ந்தது போராட்டம். இறுதியில் அரை மயக்கத்தில் இருந்தவளின் உடைகளையும் பறித்தாள் அந்த அத்தை.

உடுத்தும் உடை சொத்தை விட முக்கியமானதாயிற்றே! இவள் சொத்துக்கள் அவனுக்கு மாறின.

பதிலாக ஒரு பாலியெஸ்டர் புர்கா மாத்திரம் தரப்பட்டது. உணவு தண்ணீர் ம்கூம். அதிலிருந்து மூன்றாவது நாள் அவள் கணவன் அவளை விவாகரத்து செய்திருப்பது அறிவிக்கபட்டது. அங்கு அது சாத்தியம். அன்று இரவு தயனி பாலைவனத்தில் வீசப்பட்டாள்.

ஒரு ஆணிடம் சொல்ல முடிந்ததை கோர்வையாக தயனி அபிஷேக்கிடம் சொல்லி முடித்தாள்.

கேட்டிருந்தவன் அவள் முகத்தை கூர்ந்து பார்த்தவண்ணம் கேட்டான் “உனக்கு இன்னும் மேரேஜ் ஆகலைன்னு புரியுது தானே?”

அதிர்ந்து விழித்தாள் தயனி. “உங்களுக்கு இது எப்படி புரிஞ்சுது?”

“அப்படின்னா உனக்கும் தெரியும்!..”

“ம், நான் மயங்கிட்டேன்னு நினைச்சு அத்தையும் மஞ்சுளாவும் பேசிகிட்டத கேட்டேன்.”

“அவங்க மகன் ஐ டி மூலம் அவனுக்கே தெரியாம, இந்த மேரேஜ் டிராமா. அவன மாதிரி அப்பாட்ட பேசியதும் இவங்க ஏற்பாடு செஞ்ச ஆளா இருக்குமாயிருக்கும். அவங்க மகன் எனக்கு அனுப்பின லெட்டர் போலி, என் ஜுவல்ஸ்ஸை பறிக்க அந்த நாடகம், மகன் ஐ.டி மூலம் சொத்த பிடுங்கி, அதே ஐ டி வழியா அந்த சொத்தை தன் பேருக்கே மாத்திட்டாங்க. அப்புறம் அதே ஐ.டி மூலம் டிவோர்ஸ்”

தயனி விளக்க புலம்பினான் “அபிஷேக், இப்படியும் ஒரு அம்மாவா? மகனை வித்து காசாக்கி .....இப்ப என்ன செய்றதா இருக்க தயனி?”

“நான் இந்தியா போலாம்னு நினைக்கிறேன்”

“அந்த அத்தை மகனை தேடியா?” குரல் சோர்ந்தது அபிஷேக்கிற்கு.

“திருமணங்கிறது எப்பவும் ரெண்டு பேர் சம்பந்தபட்டது தயனி. யாராவது ஒருத்தர் இன்னொருத்தர கல்யாணம் செய்துட்டதா தனக்குதானே நினைச்சுகிட்டா, அது கல்யாணம் ஆயிடுமா? உன் கதை அப்படித்தான் இருக்குது.” உணர்ச்சி வசபட்டு பேசிய அபிஷேக் மெல்ல நிதானபட்டான்.

“அவனை விரும்புறியா தயனி?”

“அவன் எப்படி இருப்பான்னே எனக்கு தெரியாது. இதுல அவன எத வச்சு தேட, நடந்தத என்னென்னு விளக்க? அப்படி விளக்கி எதை சாதிக்க? இந்த அம்மாவோட பிள்ளை மட்டும் எப்படி இருப்பான்?.....எந்த காதலும் தேடலும் எனக்கு இல்ல..ஆனா என்ட்ட  இந்தியா விசா மட்டும்தான் இருக்குது.. கல்யாணத்தோட அப்பா விசாவும் ஏற்பாடு செஞ்சுட்டாங்க, அது தான்  இந்த நாட்டிலிருந்து நான் வெளியேற இருக்கும் ஒரே வழி...தனியாளா.... எதுவும் இல்லாம... என்னால இங்க வாழவே முடியாது. அதனால்தான்...”

நிம்மதி பரவியது கேட்டிருந்தவன் மனதில். அது அவளுக்குமே புரிந்தது. அவன் தன்னை விரும்புவதாக ஒரு எண்ணம் தோன்றி அதன் தொடர்சியாக முதுகு தண்டில் பயம் சில்லிட்டது அவளுள்.

அவளிடம் அன்பு பாராட்டும் யாரையும் அவள் நம்ப தயாராக இல்லை.

பிஷேக்கிற்கும் தன் மனம் புரியாமலில்லை.

அபிஷேக்கிற்கு விரைவில் திருமணம் செய்யவேண்டும் என ஒரு தவிப்பு இருந்தது. காரணங்கள் பல. சிறு வயதிலிருந்தே அவன் அரவணைப்பை அனுபவித்தது இல்லை. அவன் அம்மா மிகவும் வித்யாசமானவர்.

அவர் இவனை கொஞ்சியதாக இவனுக்கு ஞாபகமே இல்லை. ஆனால் இவனுக்கு தேவையானதெல்லாம் இவன் கேட்கும் முன்பே கிடைக்கும். 

அவன் தந்தை அவன் தாய்க்கு கணவராக பணிசெய்கிறார் என்று சொல்லபடுமளவிற்கு அவனது அம்மாதான் வீட்டின் நூறு சதவீத பொறுப்பையும் வகித்தார்.

அப்பா அம்மாவின் புர்கா. ஆம் இந்நாட்டில் எம்மதத்தினரும் புர்கா அணிய வேண்டும். பெண்கள் தனியாக வெளியே செல்வதே மகா குற்றம். ஆக அம்மாவிற்கு தேவைப்பட்ட மனித வடிவ புர்கா அப்பா.

எல்லா தொழிலும் அப்பா பெயரில். மூளை, செயல், இயக்கம் எல்லாம் அம்மாவினுடையது.

இவன் தந்தை இவனிடம் சில நிமிடங்களுக்கு மேல் பேசியதே கிடையாது. அதற்கும் அம்மா தடை விதித்திருந்திருப்பார் என இவனுக்கு தோன்றும்.

“அதிகமா பேசி அவன கெடுத்துறாதீங்க” என்ற அம்மாவின் குரல் பலமுறை இவர்களது உரையாடலுக்கு முற்றுபுள்ளி வைத்திருக்கிறது.

படித்த காலத்தில் இயந்திர வாழ்க்கை. மருத்துவம் படிக்க சென்னை விஜயம். மற்ற நாடுகளை விட ஒழுக்கமான நகரம் என அம்மா தேர்ந்தெடுத்தது தான் இதுவும்.

ஆனால் சென்னை சென்றதும் அபிஷேக் முதலில் உணர்ந்தது முழு விடுதலை என்பதைதான். மது, புகை என்பதை தாண்டி போதையை நோக்கி பயணம்.

ஏதோ ஒரு குற்ற குறு குறுப்பு, க்ரீவிங் உள்மனதில். மெல்ல தோன்றி, முழுவதுமாய் கொன்று தின்றது அவனை. மெல்ல எனினும் அழுத்தமாய் கடவுளை நோக்கி அவன் நகர தொடங்கிய காரணம் அதுதான்.

இவன் வீட்டில் கடவுளை கிறிஸ்துமஸ் பார்டிக்கு காரணமாய் இருப்பதற்காக தவிர எதற்காகவும் கண்டு கொண்டது கிடையாது. ஆனால் இப்பொழுது அவனுக்கு அவர் அஸ்திவாரம். வழிகாட்டி,

அனைத்து அழிவுக்கேதுவான பழக்கங்களையும் விட்டுவிட்டு ஆனந்தமான, அற்புதமான, காண்போர் ஏங்கும் வாழ்க்கை இவனுக்கு இப்போது சொந்தம்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.