(Reading time: 36 - 71 minutes)

 

ண்ணா கொஞ்சம் சீக்கிரம் போங்கண்ணா…. ப்ளீஸ்….” என்ற கெஞ்சுதலோடு முன்னே சென்ற காரில் இருந்தவனைப் பார்த்து சொன்னான் ஆதர்ஷ்…

அந்த ஆள் பதிலுக்கு முறைத்துவிட்டு, “முன்னாடி இருக்குற வண்டிங்க போனா தானப்பா நானும் போக முடியும்… நீயும் போக முடியும்…” என்றான்…

“கடவுளே ஏன் இப்படி நடக்கிறது இன்றைக்கு… காலையில் விமானம் லேட்… இப்போ இந்த டிராஃபிக்… நான் என்ன தான் செய்ய???…. என்னவள் தவித்துக்கொண்டிருப்பாளே… அன்று கிளம்பணுமா என்று கேட்டதற்கே அவளது கண்களில் நீர்… இன்று மணி 12 ஆகப் போகிறது… என்னவள் என்னைக் காணாமல் துடித்திருப்பாளே… ஸ்ரீராமா… அய்யோ… விரைவில் அவளிடம் நான் செல்ல வேண்டும்… எனக்கு உதவி செய் ஸ்ரீராமா… ப்ளீஸ்…” என்று மனமுருக வேண்டிக்கொண்டான் ஆதர்ஷ்…

என்ன ஆச்சரியம், டிராபிக் நொடிப்பொழுதில் சரியாகிவிட, ஸ்ரீராமனுக்கு நன்றி சொல்லிவிட்டு கோவிலை அடைந்தான் ஆதர்ஷ் வேகமாக….

உள்ளே சென்றவன் விழிகளை நாலாபுறமும் சுழற்ற விட்டான்… கடவுளை தரிசித்துவிட்டு விரைவாக கோவிலை சுற்றி நடந்தான்… அவனும் வந்து பத்து நிமிடம் ஆகி விட்டது… ஆனால் அவள் அவன் கண்களுக்கு தென்படவில்லை…

மனதினுள் அவனின் தேடுதல் பாரம் அழுத்த, என்ன செய்வது என்று புரியாமல் தவித்தான்…. இருதயம் அவளைத் தேடி ஊமையாய் ராகம் பாடியது…

“என் சீதை… நீ எங்கே இருக்கிறாய்… உன்னை இவ்வளவு நேரம் தனித்திருக்க விட்டுவிட்டேன் குட்டிம்மா… மன்னித்துவிடு, உன்னைத் தேடி அலையும் என் விழிகளுக்கு தரிசனம் கொடு என் தேவதையே…. என் காதல் குயில் உன்னை நினைத்து பாடும் என் மனதுக்கு ஆறுதல் அளிக்க வா என் கண்ணே… என் வாழ்க்கை அன்றும் இன்றும் என்றும் உன் ஒருத்தியோடு மட்டுமே தான் என் சீதை… இந்த வேட்கை என்னுள் என்றும் தணியாது என் உயிரே… என் காதலும் தீர்ந்து போக கூடியதும் இல்லடா… இத்தனை நாழிகை பரிதவித்த உன் கண்களில் இனி சோகம் ஏற்படாது என் ஜீவனே… என் முன்னே தோன்று என் மனைவியே….”

கண்ணே உனைத் தேடுகிறேன் வா

காதல் குயில் பாடுகிறேன் வா

உன்னோடு தான் வாழ்க்கை

உள்ளே ஒரு வேட்கை

காதல் என்றும் தீர்வதில்லை

கண்ணில் இனி சோகமில்லை

கண்ணே உனைத் தேடுகிறேன் வா

காதல் குயில் பாடுகிறேன் வா….”

“எத்தனை நேரம் அவளுக்காக உருகினானோ தெரியாது… கணீரென்று கோவில் மணியோசை கேட்க, கை கடிகாரத்தை பார்த்தான்… நேரம் 1.30….

முதல் சந்திப்பில் அவர்கள் நால்வரும் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்றவன், அங்கே கண்ட காட்சி அவனுக்கு பாலைவனத்தில் நீர் போல உவகை அளித்தது…

“ராம்…” என்ற எழுதப்பட்டு அதன் மேலே சில மல்லிகைப்பூக்கள் இருந்தது… சிதறி சிதறி காற்றுக்கு அங்கேயும் இங்கேயும் கிடந்தது…

நடுங்கிய விரல்களுடன் அதை வருடி காற்றுக்கும் நோகாதபடி எடுத்தவன், மெல்ல முகர்ந்தான்…. ஆம்… அது அவளுடையது தான்… அவளின் வாசனை தான்… என் சீதை…. என்னைத் தேடினாயா என் கண்மணி, நான் உன்னைத் தேடி வருவேன் என்ற நம்பிக்கையில்…. நான் உன்னை காணாது தவிக்க கூடாது என்ற காரணத்திற்காக எனக்காக இந்த பூக்களை விட்டு சென்றாயா என்னவளே…

இந்த காதல் கணவனுக்காக, உருகி, ஏங்கிய போதும், நான் துயரப்படக்கூடாது என்று நினைத்த உன்னை நான் தவிக்க விட்டு விட்டேனே…. சீதை… என்னை மன்னிப்பாயா?...  என்றவன் கருவறையில் இருந்த ஸ்ரீராமனிடம் சென்று மண்டியிட்டு,

“என்னவளுக்கு நான் இங்கே வந்த செய்தியை தெரிவித்துவிடு….  எப்படியும் என்னைத் தேடி கால தாமதமாக அவளின் வீட்டிற்கு சென்றிருப்பாள், அவளை யாரும் நோக பேசாதபடி அவளைக் காத்தருள்… அவளுடன் நிழல் போல என்றும் இரு… எப்பவும்…” என்று விழிகளில் நீரோடு இறைஞ்சினான்…

கோவிலை விட்டு வெளியே வந்தவன், உயிரைப் பறிகொடுத்தவன் போல் காரில் ஏறி அடுத்த விமானத்தில் லண்டன் சென்றுவிட்டான் முகிலனிடம் கூட தெரிவிக்காமல்…

“ஏண்டா… என்னடா நினைச்சிட்டு இருக்குற நீ?...”

“…………..”

“டேய்…. பேசித்தொலைடா… “

“……….”

“ஆதி… மச்சான்….. டேய்…. ஏண்டா வரலை இன்னைக்கு…”

“ஹாஹாஹா… நான் வந்திருந்தா இப்படி நீ கெஞ்சியிருக்க மாட்டியே… அதான்…. ஹாஹாஹா…”

“அடிங்க… டேய்… லூசாடா நீ?....”

“ஹ்ம்ம்… உங்கூட சேர்ந்தா வேற எப்படி இருக்க முடியும்?....”

“ஹ்ம்ம்… சரி…  வருகிற சண்டே எப்படியாவது வந்துடு மச்சான்… ஐ மிஸ் யூ….” என்றவன் குரல் கலங்கியிருந்தது…

“அடடா…. என்னடா மயூரிகிட்ட எதும் பிரச்சினையா?... தங்கச்சி என்ன சொன்னா?...”

“டேய்… அவ எங்கிட்ட பேசினது உனக்கெப்படி தெரியும்?...”

“அதெல்லாம் அப்படிதான்… முகிலா…”

“ஹ்ம்ம்….”

“சரி… நீ ஹ்ம்ம் கொட்டாமல் என்ன நடந்துசுன்னு இப்போ எங்கிட்ட மிஸ் யூ சொல்லுற?... மயூரி என்ன சொன்னா மச்சான்?... எதும் பர்சனல் ப்ராஃப்ளமாடா?...”

“சே…சே… அதெல்லாம் எதும் இல்லடா…” என்றவன், அவள் சொன்ன கண்டிஷன்ஸ் பற்றி சொன்னதும் ஸ்கைப்பில் பேசிக்கொண்டிருந்த ஆதி, வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க… முகிலன் கடுப்பானான்…

“டேய்… பாவி… நான் என்ன ஜோக் சொல்லிட்டேன்னு இப்போ நீ இப்படி சிரிக்குற?...”

“மச்சான்… அப்போ நீ இவ்வளவு நேரம் சொன்னது ஜோக் இல்லையாடா… சே… நான் ஜோக்னு தான நினைச்சேன்…” என்றவன் மறுபடியும் சிரிக்க ஆரம்பிக்க,

முகிலன் தன் பக்கத்திலிருந்த தலையணையை எடுத்து லேப்டாப் ஸ்க்ரீனில் வைத்து அமுக்கி,

“டேய்… நீ நேர்ல வருவல்ல, அப்போ இருக்குடா… உனக்கு…” என்றான் கோபத்துடன்…

“சரி சரிடா… ரிலாக்ஸ்…. என் தங்கச்சி… டூ ஸ்மார்ட்… இப்படி தான் இருக்கணும்… இப்போதான் அவ என் தங்கை… பெருமையா இருக்குடா நிஜமா…” என்றவன் தன் டீசர்ட்டில் இல்லாத காலரை இருப்பது போல் தூக்கிவிட்டுக்கொள்ள,

“டேய்… ஆதி… நீயும் இப்படி அனுபவிப்படா… நிச்சயம்… நானாவது சில கண்டிஷன்ஸ்-ல் தான் மாட்டிக்கிட்டேன்… பட்… நீ குறைஞ்சது பல மாசமாவது நீ காதலிக்கிற பொண்ணுக்கிட்ட பேசாம இருப்படா… அவ எங்க இருக்குறா?.. என்ன பண்ணுறா?... என்று தெரியாமலே முழிப்படா… அப்போ பேசிக்கிறேன் உன்னை… போடா… இவனே… உனக்கு இன்னைக்கு தூக்கமே வர கூடாது… ஹேவ் அ பேட் நைட்….” என்றபடி சைன் அவுட் செய்தான் முகிலன்…

முகிலன் சொன்னது விளையாட்டுக்காக எனும்போதும்… ஆதியின் மனம் அவன் சொன்ன வார்த்தைகளிலே உழன்று கொண்டிருந்தது… உண்மையில் அவன் சொன்னது போல் தான் ஆகிவிட்டது… இன்று… அவளைப் பார்க்க முடியவில்லையே… பேசமுடியவில்லையே… அதும் இல்லாமல் செல்வத்திடம் தான் பொறுப்பை கொடுத்திருந்தான்… அவனின் மனைவி உடல் நலம் காரணமாக ஆதி டீடைல்ஸ் கேட்ட அன்றே லீவ் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான் செல்வம்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.