(Reading time: 36 - 71 minutes)

 

டும் இருட்டு, நிலாவின் வெளிச்சமும் துளியும் இல்லை… அந்த ஆள் அரவமில்லாத காடு போன்ற பகுதிக்குள் வாளின் ஒளி மட்டும் பளீரென்று தெரிகிறது… அது ஏற்படுத்தும் சத்தமும் பயங்கரமாக அந்த இரவு வேளைக்கு கூடுதல் சக்தியை கொடுத்தது… பல வாள்கள் ஒன்றோடொன்று மோதி “ணங்” என்ற ஒலியை வரவழைத்தது… அதை உணர்ந்த அவளது உடல் விறைத்தது… சுற்றிலும் வளைத்து ஒரு வாளை மட்டும் முழுமுயற்சியுடன் மற்ற வாள்களைப் பிடித்திருந்த கரங்கள் தாக்கியது… அதைக்கண்ட அவள் கண்கள் பயத்தில் நிலைகுத்தியது… அவ்விடம் போர்க்களமாக காட்சியளித்தது அந்த வாள்களின் செயல்களால்… சட்டென்று ஒருவன் தனது கையில் உள்ள ஆயுதத்தைக்கொண்டு எதிரே நின்று தங்களுடன் மோதும் அந்த வீரனின் நெஞ்சில் தாக்க முயற்சிக்கின்றான்…. அதை அவன் எதிர்கொண்டு தடுத்து விலகும்போது வாள் அவனது கையை பதம் பார்க்கிறது…. குருதி வழியும் கையுடன் அந்த வீரன் மற்றவர்களை மண்ணில் சாய்க்கின்றான்…. வாளின் ஒளியில் அவள் அவன் முகம் பார்க்க எத்தனிக்கின்றாள்…. மெல்ல மெல்ல அவன் முகத்திலிருந்து ரத்தம் தோய்ந்த வாள், குருதி பெருக்கெடுக்கும் அவனது கை… கீழிறங்க….. அவன் திருமுகம் கண்டவள் படுக்கையிலிருந்து “என்……………….ரா…………………………ம்……………………….” என்ற கூவலுடன் எழுந்தாள்…

அவளின் சத்தம் கேட்டு விழித்த மயூரி, அறையின் விளக்குகளைப் போட்டாள்…

“என்னாச்சு… சாகரி?... “

“…………………..” உச்சக்கட்ட பயத்தில் இருந்தாள் அவள்… வேர்த்து விறுவிறுத்து உடல் தூக்கிப்போட அழுது கொண்டே இருந்தாள்…. நா வறண்டு தொண்டை அடைத்தது….

சாகரியின் நிலை புரிந்து அவள் அருந்த தண்ணீர் ஊற்றிக்கொடுத்தாள் மயூரி…

அதை வாங்காது கடிகாரத்தைப் பார்த்தாள்…. அதிகாலை 4.30…

“ஸ்ரீராமா….” என்று கண்மூடியவள் சட்டென்று எழுந்து பூஜையறை நோக்கி ஓடினாள்… அவளைப் பின் தொடர்ந்து மயூரியும் சென்றாள்…

தெய்வத்தின் முன் நீயே எனக்கு எல்லாம் என்று சரணாகதி அடைந்தவள், “நான் கண்ட காட்சி கனவு போல தெரியவில்லையே…. எனக்கு பயமாக உள்ளதே…. நான் என் செய்வேன்… என்னவர் தற்போது எங்கே இருக்கிறார்?... என்ன செய்கிறார்?... அவருடன் என்றும் இரு…. விலகி விடாதே…” என்று உள்ளம் உருக வேண்டிக்கொண்டவள் அங்கிருந்து அசையவேயில்லை…. 6 மணி வரை…. கதிரவன் ஒளி அறையினுள் பட்டதும், எழுந்து குளித்தவள், “நான் கோவிலுக்கு சென்று வருகிறேன்…” என்று மயூரியிடம் தெரியப்படுத்திவிட்டு கோவிலை அடைந்தாள்…. அவளது ராமனின் பெயரில் அர்ச்சனை செய்தவள், சிறிது நேர நிறைவுடன் வீட்டை அடைந்தாள்…. எனினும் மனதில் அவனைப் பற்றிய பயம் இருந்தது அவளுள் நீங்காமல்….

வள் கனவு கண்டுவிழித்த அதே நேரம், அதே போன்ற நிலையில் தான் இருந்தான் ஆதர்ஷ்…. தனது வேலையை முடித்துவிட்டு, வீட்டிற்கு வரும் வழியில் தான் இத்தனையும் நடந்துவிட்டது… எப்போதும் காரில் செல்பவன், சரி சிறிது நேரம் நடந்து போவோம் என்றெண்ணியபடி நடந்தவனை வாள் கொண்டு சூழ்ந்து கொண்டனர் பலர்… வெளிநாட்டில் வாள் சண்டையா?... என்று வியந்தவன், அவர்களின் முகங்களைப் பார்க்க எண்ணினான்… எனினும் அவர்கள் முகத்தை மறைத்திருந்த திரை அவனுக்கு அவர்களை யாரென்று காட்ட மறுத்தது… கையில் ஏதும் இல்லாமல் இருந்தவன், அவனை சூழ்ந்து கொண்டவனின் இடையில் ஒரு வாள் இருப்பதை அறிந்து அதை அவனே எதிர்பாராத விதமாக உருவினான்…. அந்நேரம் அவனது சீதையின் முகம் அவன் மனதில் வந்து சென்றது… அவளை எண்ணிக்கொண்டே பலங்கொண்ட மட்டும் முயற்சி செய்து அவர்களை வீழ்த்தினான்… அவனிடமிருந்து அவர்கள் தப்பி சென்று விட, இவன் தோளைக்குலுக்கி கொண்டு ரத்தம் தோய்ந்த அந்த கத்தியை யாரும் அறியா வண்ணம் தனது வீட்டிற்கு எடுத்து வந்தான்…. அவனது காயத்திற்கும் மருந்து போட்டு கொண்டான்…  அவனது இந்த செயலை அவன் அருகில் இருந்து பார்த்துகொண்டிருந்த அவ்னீஷிற்கு ஏதும் புரியவில்லை…

“அண்ணா…. என்ன இது?...இவ்வளவு பெரிய காயம்?... எப்படி?... என்ன நடந்துச்சு அண்ணா?... வாள்!!! அதும்… இந்த ஊரிலா?....”

“ஏண்டா… இப்படி கேள்வியா கேட்குற?...”

“அண்ணா வாங்க நாம உடனே இந்தியா போகலாம்….”

“டேய்…. இதெல்லாம் நான் எதிர்பார்த்தது தான்…. சோ… நீ சும்மாயிரு….”

“என்ன!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!”

“நிஜம் தாண்டா… நீ போ… போய் தூங்கு… போ…. காலையில் ஒழுங்கா அந்த மீட்டிங்கை முடி…” என்று அவனை துரத்திவிட்டான் ஆதர்ஷ்….

அவனை அனுப்பிவிட்டு படுக்கையில் சாய்ந்து கண் மூடினான்… தூக்கம் தான் வரவில்லை அவனுக்கு…

அதிகாலை 5.55 மணி…. ஆதர்ஷ் மெல்ல எழுந்து வானத்தைப் பார்த்தான்… அதில் ஒரு காதல் காவியம் அரங்கேறுவதை தினமும் ஆவலோடு எதிர்பார்த்து வியக்கின்றான் இந்த நான்கு மாதங்களாக…. ஏனோ அது அவனுக்கு திகட்டுவதில்லை… அவனது சீதையின் வெட்கத்தை அணுஅணுவாய் ரசித்து சேமிக்கின்றான் தனக்குள் நிதமும் இந்த அதிகாலை வேளையில்… அவனும் இங்கே வந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டது… அன்றிலிருந்து இன்று வரை இந்த காலை தரும் சுகத்தை காண அவன் ஏங்குகிறான்…. ஏனோ அவனுக்கு அவளைப் பார்த்த உணர்வு கிடைக்கும் இதில்… அவ்னீஷ் இங்கே தான் ஒரு வருடமாய் இருக்கின்றான்…. தொழிலைக்கற்றுக்கொண்டு….

யூரிக்கும் முகிலனுக்கும் இடையில் இருக்கும் அந்த கண்டிஷண்ஸ் சிறிது மாறியிருந்தது…. சாகரியின் தயவால்…. வாரத்தில் இரண்டு தடவை போன் செய்து பேசிக்கலாம் என்பது இப்போது மூன்று தடவையாக மாறி போனது… கோவில் சந்திப்பு வாரம் தவறாமல் தொடர்ந்தது… இப்படியே காலம் சென்று கொண்டிருந்தது…. மயூரிக்கும் முகிலனுக்கும் காதல், மிக இனிமையாக போய் கொண்டிருந்தது….

“ஹாய்… மச்சான்…. என்னடா… இப்படி அங்கேயே தங்கிட்ட?...”

“வேலை இருக்குடா… அதான்… முகிலா…”

“ஹ்ம்ம்… ஆள் வேற இளைச்சிட்டியேடா… ரொம்ப…”

“யாரு?... நானா?...”

“ஆமாடா…”

“ஹ்ம்ம்… போய் கண்ணை செக் பண்ணு….” என்றான் ஆதி…

“அதான் உன் தங்கச்சி டெய்லி செக் பண்ணுறாளே…”

“ஹாஹாஹா…. இன்னும் அவ அந்த கண்டிஷண்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ணுறாளா?... ஹேப்பிடா…. ஆமா உங்கிட்ட அலுச்சாட்டியம் செய்யுறான்னு சொல்லுவியே ஒரு பொண்ணு… பேர் கூட தெரியாத உன் தங்கச்சி…. அவ எதும் ஹெல்ப் பண்ணலையா உனக்கு?...”

“அவ ஹெல்ப் பண்ணுறாடா… இருந்தாலும் உன் தங்கச்சி அலம்பல் தான் தாங்க முடியலை எனக்கு….”

“இதோடா… காதலிக்க பொண்ணு இல்லாம அவன் அவன் நாட்டுல அலையுறான்… நீ என்னடான்னா, நல்ல பொண்ணு கிடைச்சும் குறை சொல்லுற?.. டேய்… இருடா… என் தங்கையிடம் இப்போவே சொல்லுறேன்… பாரு….”

“மச்சான்… மச்சான்… என்னடா நீ…. இதுக்கு போய் கோபப்படுற?.... எல்லாம் சும்மா உல்லுலாய்க்குடா….” என்றான் கெஞ்சலுடன்….

“ஹ்ம்ம்… உடனே பல்டி அடிச்சிடுவியே…. ஹ்ம்ம்… போய் தொலை….” என்றான் ஆதி சிரித்துக்கொண்டே….

“ஹ்ம்ம்… எப்போடா இங்கே வருவ?...”

“தெரியலைடா… பட் சீக்கிரம் நான் வருவேன்… என் உடல் இங்கு இருந்தாலும் மனம் அங்கே தாண்டா இருக்கும்… உங்க எல்லாரையும் சுற்றி….” என்றான் அழுத்தத்துடன்….

“ஹ்ம்ம்… அவ்னீஷ் என்னமோ சொன்னான்… கொஞ்சம் பார்த்து இருடா….” என்றவனின் குரலில் கவலை அப்பட்டமாக தெரிந்தது…

“மச்சான்… எனக்கெதும் ஆகாதுடா… நீ பத்திரமா இரு… சரியா… பாட்டியை கேட்டதா சொல்லுடா….” என்று அழைப்பை துண்டித்துவிட்டான் ஆதர்ஷ்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.