(Reading time: 36 - 71 minutes)

 

ண்ணி… இவ்வளவு நடந்துட்டா?....”

“ஹ்ம்ம்ம்… ஆனாலும் சாகரிக்கு வாலுத்தனம் ஜாஸ்தி தான் மயூரி…”

“அவ அப்படித்தான் அண்ணி…..”

“ஹ்ம்ம்.. நல்ல வேளை நீ சீக்கிரம் வந்த… இல்ல… உங்க அண்ணனுக்கு இன்னும் கோபம் அதிகம் ஆயிருக்கும்….”

“ஹ்ம்ம்……” என்றவள் வீட்டுக்கு தெரியாமல் முகிலனை சந்தித்த குற்ற உணர்வில் பேசாமல் இருந்தாள்…

“மயூரி…..”

“………….”

“மயூரி…… ஹேய்……”

“ஆ……. சொல்லுங்க அண்ணி…..”

“அது சரி…. பத்தாவது தடவையா சொல்லுறேன்…. நான் கிளம்புறேன்னு…. நீ என்னன்னு நிதானமா கேட்குற?....”

“சாரி… அண்ணி…. சாகரியின் வாலுத்தனத்தைப் பற்றி யோசிச்சிட்டிருந்தேன்…. அதான்…….”

“சரி…. சரி…. நான் சமைச்சிட்டு கூப்பிடுறேன்…. நீங்க வாங்க சாப்பிடலாம்…. சரியா?...” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள் காவ்யா…

“மயில்…. நாங்க டீவி பார்க்கட்டுமா?....”

“என்ன கேள்வி சித்து இது…. தாராளமா பாருங்க….”

“ஹ்ம்ம்ம்… சரி மயில்….” என்றவன் தங்கையிடம், “நந்து உனக்கு சோட்டா பீம் பார்க்கணுமா?... பென் டென் பார்க்கணுமா?....” என்று கேட்டான்….

“உன் இஷ்டம் அண்ணா….” என்றாள் அந்த பாசமிக்க தங்கை….

சாகரியைத் தேடி அவளின் அறைக்குள் சென்றவள், ஜன்னல் கம்பிகளில் முகத்தை புதைத்து ஓவியப் பதுமையாய் நின்றவளைப் பார்த்தாள்….

“சாகரி….”

“சொல்லு மயில்….. அண்ணிகிட்ட எல்லா டீடைல்ஸ்-ம் கேட்டு தெரிஞ்சுகிட்ட போல?....”

“ஹ்ம்ம்…. ஆமா….”

‘ஹ்ம்ம்… அத ஏன் நீ டல்லா சொல்லுற?.... “

“அண்ணா ரொம்ப கோபப்பட்டுட்டாங்களா சாகரி?...”

“ஹேய்… லூசு…. நீ அண்ணிகிட்ட கேட்ட தான என்ன நடந்துச்சுன்னு, அப்புறம் ஏன் நீ இப்படி கேட்குற எங்கிட்ட?....”

“ஹ்ம்ம்… இல்ல உன் வாயால இன்னொரு தடவை நல்லா கேட்கலாம்னு தான்…”

“ஓ… அப்படியா மேடம், சரி நீங்க சொல்லுங்க முதலில், உங்க ஹீரோ பார்த்துட்டு எப்போ வந்தீங்க?... சார் என்ன சொன்னார்?...” என்றபடி கண்ணடித்தாள்…

“அது… வந்து….”

“ஹ்ம்ம்… சொல்லு… வந்து…”

அவளும்… சொன்னாள்… மயூ-முகிலனின் உரையாடலை…

“மயூ…. எதுக்கு இப்போ இந்த கோவிலில் சந்திக்கணும்னு சொன்ன?...”

“….”

“ஹேய்… கேட்குறேன்லடி…. சொல்லு….”

“……”

“வர சொல்லிட்டு பேசாம இருந்தா என்னடி அர்த்தம்….”

“…….”

“மயூ…. என்னடி… பேசுடி…..”

“பேசிடவா?....”

“அத தானடி… அப்போதிலிருந்து சொல்லுறேன்….”

“சரி… பேசிடுறேன்…” என்றவள் அவனின் கண்களை நேரடியாக ஒருநிமிடம் பார்த்தாள்… அவள் பேச வந்தது எல்லாம் மறந்திடும் போல இருந்தது… ஹ்ம்ம்… ஹூம்… இவன் கண்களைப் பார்க்க கூடாது… மீறி பார்த்து பேசினால் நான் தடுமாறிடுவேன்… என்று தனக்குள் சொல்லிக்கொண்டவள்…

“நான் சொல்லுறதை கேட்டு நீங்க என்னை தப்பா நினைக்க கூடாது, கோபப்படக்கூடாது… இந்த முடிவு நம்ம இரண்டு பேரோட நல்லதுக்கு தான்… சரியா?...” என்றவள் அவனை பார்த்தாள்… அவன் மேலே சொல்லும்படி தலை அசைக்க… மனதிற்குள் ஆயிரம் தடவை ஒத்திகைப் பார்த்தவற்றை மெல்ல அவனிடத்தில் கூறினாள்…

“பைக்கில் உங்களுடன் வரமாட்டேன், காராக இருந்தால் பின்சீட்டில் தான் அமர்வேன், கோவிலில் மட்டும் நாம் பார்த்து பேசி கொள்ளலாம்… அப்புறம் அடிக்கடி டீ சொல்லாதீங்க, …அதிகம் கொஞ்சி பேச வேண்டாம், ஒரே ஆபீசில் வேலை செய்தாலும் அங்கே காதலர் என்ற முறையில் பேசிக்கொள்ள வேண்டாம்..  டெய்லி எஸ்.எம்.எஸ். மட்டும் பண்ணி பேசிக்கலாம்… ஃபோன் வாரத்துக்கு இரண்டு தடவை போதும்… அப்போ பேசிக்கலாம்…” என்று கோர்வையாக படபடப்புடன் சொல்லிவிட்டு கைகளைப் பிசைந்தபடி நின்றாள் அவள்…

அவனிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவே, மெல்ல அவனை தலை நிமிர்த்தி பார்த்தாள்….

அதில் அவன் இன்னும் அவளின் மேல் காதலானான்…

“என்னாச்சுங்க?... பேசுங்க….”

“……”

“நான் சொன்னது உங்களுக்கு பிடிக்கலையா?....” என்று பயத்துடன் கேட்டவளின் விரல்களை பற்றியவன்…

“இப்போதான் உன்னை எனக்கு இன்னும் ரொம்பவே பிடிச்சிருக்கு…. அதிகமா உன்னை இன்னும் லவ் பண்ணனும்னு கூட தோணுது… பட் நீ தான் கண்டிஷன் போட்டு நெருங்க விடாம பண்ணிட்ட…. பட் இட்ஸ் ஓகே… எனக்கு புரியுது உன் நிலைமை…. அன்னைக்கு நான் உங்கிட்ட அப்படி நடந்திருக்க கூடாது தான்…. அது…. நீ… லவ்… சொல்லிட்ட சந்தோசத்துல என்ன செய்யுறதுன்னு தெரியாம, செஞ்சுட்டேன்… பட் அப்போ கூட உங்கிட்ட பர்மிஷன் கேட்டதா நியாபகம் இருக்கு…. ஹ்ம்ம்… நான் வெயிட் பண்ணுறேன் மயூ… அதுக்காக ரொம்ப காக்க வச்சிடாதடி… ஹ்ம்ம் உன் கண்டிஷன்ஸ் எனக்கு ஓகே டா….: என்றான் காதலோடு…

அவளைப் புரிந்து கொண்டு அவன் பேசியதில் அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி… எனினும் காதலனை காதலனாக இருக்க விடாது செய்துவிட்ட அவளின் கண்டிஷன்ஸ் அவளை வருத்தியது உண்மையாய்…

அதைக் கண்டு கொண்டவன் உள்ளம் அவளுக்காக வருந்தியது…. பின்னர் அவளிடம்,. “சரி… மயூ… மெஸ்ஸேஜ் பண்ணுறேன்…. அப்பப் பாரு மாமாவோட வில்லத்தனத்தை….” என்று கொஞ்சம் சிரித்துக்கொண்டே சொன்னான்….

அவன் அப்படி சொன்னதில் அவளுக்கு வெட்கம் வந்துவிட்டது… இருந்தும் ரோஷத்துடன், “ஓஹோ… அப்படியா.. அதையும் பார்த்திடலாம்….” என்றவள் அவனிடமிருந்து விடைபெற்று வீட்டிற்கு வந்துவிட்டாள்…

மயூரி சொன்னதை கேட்ட, சாகரி அவளை என்ன செய்வதென்று பார்த்தாள் மேலும் கீழும்…

“என்னடி… இப்படி பார்க்குற?...”

“இல்ல… நீ விசித்திரப் பிறவிதான்….”

“ஏண்டி அப்படி சொல்லுற?....”

“பின்னே… பாவம்டி அவர்… இப்படி ஒரு கண்டிஷன் போட்டு வச்சிருக்கியே…. பாவம் முகிலன்…”

“என்னடி பாவம்… அவருக்கு இது தேவைதான்… இப்படி எல்லாம் கண்டிஷன் போட்டு வச்சா தான் அவர் இடத்துல அவர் இருப்பார்….”

“இப்போ மட்டும் என்ன உன் பக்கத்துலயா வந்து நிக்கிறார்?...”

“இதோடா… உன் அண்ணனுக்கு சப்போர்ட்டா?...”

“ஆமா… அப்படிதான் என் அண்ணனுக்கு நான் சப்போர்ட் பண்ணாம வேற யார் பண்ணுவாங்களாம்….?... இருடி… நாளைக்கே என் அண்ணனைப் பார்த்து பேச வேண்டியதை பேசுறேன்….”

“ஹ்ம்ம்… ஹ்ம்ம்… பேசு பேசு… பார்க்கலாம்… என் இடத்துல நீ இருந்தாலும் இப்படி தான் கண்டிஷன் போட்டிருப்படி என் செல்லம்…” என்றபடி அறையை விட்டு வெளியே சென்றாள் மயூரி….

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.