(Reading time: 36 - 71 minutes)

 

தர்ஷைப் பார்த்து இன்றோடு 130 நாட்கள் மேலாகிவிட்டது… எனினும் அவளின் காதல் மாறவில்லை… தேடல் குறையவில்லை… நாளுக்கு நாள் அது அதிகரித்துக்கொண்டே போனது… வாரம் இருமுறை கோவிலுக்கு சென்று கொண்டிருந்தவள் தினமும் செல்ல ஆரம்பித்தாள் கனவு கண்ட நாள் முதல்… அங்கே அவனுக்காக காத்திருப்பாள்… ஆனால் அவன் வரவில்லை…. அந்த ஏமாற்றத்தை அவள் பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை… என்றாவது ஒரு நாள் அவளின் ராம் அவளைத் தேடி வருவான் என்ற நம்பிக்கை அவளுக்குள் பெருகி கொண்டே இருந்தது…

இரவின் அமைதியில், அவனின் நியாபகளில் உழன்று கொண்டிருந்தவள், யாருக்கும் தெரியாமல் அவள் வரைந்து வைத்திருந்த அவனின் ஓவியத்தை கையிலெடுத்தாள்… நடுங்கும் விரல்களுடன் அவனின் முகம் வருடியவள், மெல்ல ஹாலுக்கு வந்தாள்…. மயூரியின் தூக்கம் கலையாமல்…

அங்கிருந்த சோபாவில் அவனின் ஓவியத்தை வைத்தவள், அதன் அருகில் தலை வைத்து விழி மூடாமல் பார்த்து மெல்ல பாடினாள் மனதினுள்…

பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாய் என….

பூத்து பூத்து புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாய் என….

தென்றலாக நீ வருவாயாஜன்னலாகிறேன்

தீர்த்தமாக நீ வருவாயா…. மேகமாகிறேன்….

வண்ணமாக நீ வருவாயா…. பூக்களாகிறேன்….

வார்த்தையாக நீ வருவாயா…. கவிதையாகிறேன்….”

தினமும் அந்த அலை உரசும் கரையில் சேரும் கிளிஞ்சல்களை அவள் எடுத்து சேகரித்து வைத்தாள்… முதலில் அவள் கடற்கரை செல்ல தடை விதித்த தினேஷ்… பிறகு அவள் கண்களில் எதைக்கண்டானோ அவனும் பதில் பேசாது சம்மதித்தான்… ஒரு வார புத்தகம் விடாது வாசித்தாள் அதில் வரும் கவிதைகளைப் படிக்க அல்ல, அவனும் அதை எல்லாம் படிப்பானோ என்று, ஏனோ அந்த விஷயத்திலாவது அவனுடன் அவள் ஒன்றிப்போவாள் அல்லவா…. வண்ணக்கோலங்கள் வரைந்து அதன் அடியில் இரண்டு வரி கவிதை எழுதி பொக்கிஷமாய் சேமிக்கின்றாள் அவனுக்காக…. தினமும் கனவில் அவனோடு என்ன பேச, ஏது பேச என்று நாள் முழுவதும் யோசித்துப்பார்க்கின்றாள்… காகம் கரையும் ஓசை கேட்டால் அவன் வந்துவிடுவான் என்று வாசல் பார்க்கின்றாள் கோவிலில்…

கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் உனக்கென தினம் தினம் சேகரித்தேன்

குமுதமும், விகடனும், நீ படிப்பாய் என வாசகி ஆகி விட்டேன்

கவிதை நூலோடு கோலப்புத்தகம் உனக்காய் சேமிக்கிறேன்

கனவில் உன்னோடு என்ன பேசலாம்தினமும் யோசிக்கிறேன்

ஒரு காகம் கா என கரைந்தாலும் என் வாசல் பார்க்கின்றேன்….”

அவனைப்பார்க்க முடியாத வேதனையுடன் தவிப்பவள் இரவில் அந்த நிலாவிடம் தூது விடுவாள்… ஏனோ அதுவும் இவளைப் போல களை இழந்து தேய்ந்து தெரியும் இவளின் வேதனை தெரிந்து… அவனுக்காக டைரியில் அணுதினமும் கவிதைகள் எழுதி வைக்கின்றாள்… என்ன செய்ய அவைகளுக்கு கால்கள் இல்லையே அவனிடம் செல்வதற்கு…. அவளின் இமைகள் சண்டை போடுகிறது அவளுடன், அவன் நேரில் வரவில்லை என்று… நிதமும் அவளது பூஜையறையில் உள்ள ராமனுக்கு விளக்கேற்றி வைக்கின்றாள்… கண்களின் நீரில்… சிறிது வெளிச்சத்தை அவள் வாழ்வில் வேண்டி… கோவிலில் தினமும், நேரம் பார்த்து, அவன் வரும் திசை பார்த்து விழிகள் தேய்கிறாள் இந்த பேதையும்…

எனக்குள்ள வேதனை நிலவுக்கு தெரிந்திடும் நிலவுக்கும் ஜோதி இல்லை

எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட கவிதைக்கும் கால்கள் இல்லை

இமைகள் என்னோடு சண்டை போடுதே எதிரில் வந்தாலென்ன….

தினமும் கண்ணோரம் தீபம் வைக்கின்றேன்வெளிச்சம் தந்தாலென்ன

மணி சரி பார்த்து, வழி பார்த்து இரு விழிகள் தேய்கிறேன்…..”

ராம்………. காத்திருப்பேன் ராம்…. உங்களுக்காக (நீ வருவாய் என)…..

தே நேரம், தன் மனதினுள் வரைந்து வைத்திருந்த அவள் உருவத்தை கண் முன் கொண்டு வந்தான் ஆதர்ஷ் ராம்…

“பூவாக நீ தவிக்கும் தவிப்பு வீசும் காற்று எனக்கு தெரியாதா?... உன் கண்கள் பேசும் வார்த்தைகளுக்கு என்னை புரிந்து கொள்வதா பெரிது?... சீதை என்ற உன் பெயரை தானே நானும் விரும்பி கேட்டு சொல்கிறேன்… நான் செல்லும் பாதை எல்லாம் நீ எனது நிழலாக வருவதை உணர்ந்து திரும்பி பார்க்கிறேன்….”

வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா?...

பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா?...

அன்பே உந்தன் பேரை தானே விரும்பி கேட்கிறேன்….

போகும் பாதை எங்கும் உன்னை திரும்பி பார்க்கிறேன்….”

“எனக்காக பிறந்தவள் நீ… என்னுள்ளே பிறந்தவளும் நீயே…. தூணிலும் துரும்பிலும் இறைவன் இருக்கின்றான் என்பதை அறிவேன்… ஆனால் என் காதல் துரும்பில் நுழைந்தவளும் நீயே… தூணின் பின்னிருந்து வந்து என் வழியை மறித்து உன் மனதை கொடுத்தவள் நீயே… என் வார்த்தையை பறித்து பேச மொழியில்லாது மௌனம் கொடுத்தவளும் நீயே…. என் மேகமும் நீயே… அருகில் வா சீதை… உன்னுள் மூழ்கி மறைந்து போகணும் இனியும் நான்…. வா சீதை…”

என்னிலே பிறந்தவள் யார் அவளோ

துரும்பிலே நுழைந்தவள் யார் அவளோ

வழியை மறித்தாள்மனதை கொடுத்தாள்

மொழியை பறித்தாள்மௌனம் கொடுத்தாள்

மேகமேமேகமேஅருகினில் வா….

உன்னிலே மூழ்கிறேன்மறைந்திடவா…”

“நான் சிரிக்கும் தருவாயில் என் இதழ்களில் நீயே மலருகிறாய்… நான் அழும் நேரங்களில் நீர் துளிகளாய் நழுவி கன்னத்தில் நீயே வழிகிறாய்…. எனது விழிகள் முழுவதும் நிறைந்திருப்பது உன் காதல் இதழா?... இல்லை உன் பிரிவு இருளா?... உன்னுடன் சந்தித்த எனது இந்த வாழ்க்கை பயணம் முதலானதா? இல்லை முடிவானதா?... நீ வசிக்கும் எனது இருதய மரத்தடியில் தனிமையை எண்ணி சருகென உதிர்கிறேன்… உந்தன் காதலில் மௌனமாய் எரியவும் செய்கிறேன்…”

சிரிக்கிறேன் இதழ்களில் மலருகிறாய்….

அழுகிறேன் துளிகளாய் நழுவுகிறாய்

விழிகள் முழுதும் இதழா?... இருளா?...

வாழ்க்கை பயணம் முதலா?... முடிவா

சருகென உதிர்கிறேன்தனிமையிலே

மௌனமாய் எரிகிறேன்காதலிலே…”

“சில நேர மேகம் போல என் காதல் வானில் வந்தவளே… என் நெஞ்சில் நுழைபவள் யாரோ  என்றெண்ணிய எனக்கு நீதான் அவள் என்று புரிய வைத்தவளே… மேக கூட்டங்கள் ஒன்றாக என் நெஞ்சில் சேர்ந்து உந்தன் பெயரை சொல்லி சொல்லி மின்னலாக ஓடுகிறது என்னவளே….”

மேகம் போலே என் வானில் வந்தவளே

யாரோ அவளுக்கு நீதான் என்னவளே….

மேக மேக மேக கூட்டம் நெஞ்சில் கூடுதே….

உந்தன் பேரை சொல்லி சொல்லி மின்னல் ஓடுதே…”

காத்திருத்தல் சுகம் தான்… ஏனெனில் காத்திருக்கும் போது தான் காதல் இன்னும் கூடும் அதிகமாக… ஹ்ம்ம்… விரைவில் இவர்கள் ஒருவரை ஒருவரைப் பார்க்கும் நாள் வருமா?...

வரும் நாள் தூரமில்லை என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்…. நாமும் அவர்களைப் போல்… காதல் நதியில்…

முதலில் பெரிய மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்… சீதை-ராம் ஜோடியை இன்னும் சந்திக்க வைக்காமல் இருப்பதற்கு… மன்னித்து விடுங்கள் என்னை பெரிய மனது வைத்து… இந்த வாரம் பக்கங்களும் குறைவு தான்… நிச்சயம் வரும் வாரம் நிறைய பக்கங்கள் தருகிறேன்… ஹ்ம்ம்… மீண்டும் அடுத்த வார சீதா-ராம் காதல் நதியில் சந்திக்கலாம்…

தொடரும்

Go to episode # 09

Go to episode # 11

{kunena_discuss:739}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.