(Reading time: 50 - 99 minutes)

காதல் நதியில் – 11 - மீரா ராம்

ண்ணா… இந்த ஊர் ஏன் இவ்வளவு பச்சை கலரில் இருக்கு?...”

“அதுவா… நந்து… இது நம்ம சாகரி ஊர்… இங்கே நிறைய வயல்,செடி, மரம் எல்லாம் இருக்குல்ல… அதான்… அங்கே பாரு கொக்கு நிறைய இருக்கு…”

“ஹை… ஆமாண்ணா… நிறைய இருக்கு…. நாம அதுகூட விளையாடலாமா அண்ணா?...”

kathal nathiyil

“ஹ்ம்ம்… விளையாடலாம்டா.. நாளைக்கு…”

“சரிண்ணா…”

“அண்ணா… அங்கே பாரு மயில்…”

“ஹாஹாஹா ஆமா நந்து… இங்கே நம்ம பக்கத்திலேயும் ஒரு மயில் இருக்குறா… அங்கே வெளியேவும் மயில் இருக்குது… சூப்பர்ல.”

“ஆமாண்ணா… செம சூப்பர்…..” என்று தமையனிடம் சொன்னவள்,

“ஹேய்… மயில்… என்ன எங்களை கூப்பிடாம நீ மட்டும் அங்கே தனியா டான்ஸ் ஆடிட்டு இருக்குற?...ஹ்ம்ம்?...” என்று மயிலை முறைத்தாள் நந்து…

“என்ன நந்து சொல்லுற?... நான் ஆடுறேனா?...” என்று கேள்வி கேட்டவள், “இல்லையே நான் உட்கார்ந்து தானே இருக்கின்றேன்….” என்றாள் நந்துவிடம்…

“சரியான மக்கு மயில் தான் நீ….” என்றபடி சிரித்தான் சித்து…

“ஹைய்யோ… ஆமாண்ணா… அப்படியே தான்….” என்று நந்துவும் சிரித்தாள்…

இது எதுவும் புரியாமல் மயூரி முழிக்க, சாகரியாவது அவளுக்கு உதவி செய்வாள் என்று எண்ணி மயூரி, சாகரியைப் பார்க்க, அவளோ பரிதாபப்பட்டு அவளுக்கு விளக்க முனைந்தாள்…

“அட என் அருமை தோழியே… அவங்க உன்னை சொல்லலை.. கொஞ்சம் வெளியே எட்டிப்பாருடி… அப்போ புரியும்….” என்றாள்…

மயூரியும் பார்க்க,,, அவளுக்கு அப்போது புரிந்தது…

“ஹேய்… பத்மினி… நீ எதுக்கு இப்போ அவகிட்ட சொன்ன இதை?...”

“அதான… அப்படி கேளு அண்ணா… ஓய்… பத்து… நாங்க உங்கிட்ட சொல்ல சொன்னோமா என்ன?...” என்றாள் நந்து….

“சாரி சித்து நந்து… பாவம் இல்லையா அவ… அ….தா….ன்…… சொல்லிட்டேன்….” என்றாள் பாவமாக சாகரி…

“ஹேய்.. இப்போ எதுக்கு நீ டல் ஆகுற?... நீ டல் ஆனா என் மனசு தாங்காது… சாகரி… ப்ளீஸ் சிரி….” என்றான் சித்து…

“ஆமா… சாகரி… அண்ணா… பாவம்… நீ டல் ஆயிட்டா, அவன் ரொம்ப ஃபீல் பண்ணுவான்… நீ சிரிச்சிடு தாயே…. அப்ப தான் என் அண்ணன் நார்மலா இருப்பான்….”

“அய்யோ என் செல்ல சித்து…. இங்கே பாரு நான் சிரிக்கிறேன்….” என்று சிரித்தாள் சாகரி…

‘சூப்பர்… செம… இது இத இததான் நான் எதிர்பார்த்தேன்….” என்றான் சித்து….

“ஹ்ம்ம்… சித்துகுட்டி…” என்றபடி அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள் சாகரி…

பதிலுக்கு அவனும் முத்தமிட, அவள் மேலும் சிரித்தாள்…

“நீ சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்குற சாகரி….” என்றாள் நந்து…

“ஹ்ம்ம் உங்களை விடவா?...” என்று முத்துப்பல் வரிசை தெரிய சிரித்தாள் சாகரி…

அந்நேரம் ரேடியோவில் ஒலித்தது சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள்…” என்ற பாடல்…

சித்துவும்… அந்த ஒரு வரியையே பாடிக்கொண்டிருந்தான் சாகரியைப் பார்த்தபடி….

அதில் அவனுக்கு ஒரு சந்தேகமும் வர, தங்கையை மெல்ல அழைத்தான்…

“நந்து… எனக்கு ஒரு டவுட்….”

“என்ன அண்ணா?...” என்றாள் அவள் எப்போதும் போல சத்தமாக…

“ஹேய்… சத்தம் போடாத… மெதுவா….ஷ்…. “ என்றான் சித்து வாய் மேல் விரல் வைத்து…

“ஓகே… ஓகே… இப்போ சொல்லு…. என்ன அண்ணா?...” என்றாள் அவள் மெதுவாக…

“இந்த பாட்டுல வருதே ஒரு வார்த்தை… சிறையிலிட்டாள்னு… அப்படின்னா என்ன நந்து?...”

“அச்சச்சோ… தெரியலையே அண்ணா….”

“ஹ்ம்ம்… நான் உனக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன்…” என்றான் முகம் வாட,

“தன் அண்ணன் தன் முன் முகம் வாடுவதா?...” என்று எண்ணிய அந்த பாசமலர் நந்து சாகரியின் தந்தை ஜனகனை அழைத்தாள் மெதுவாக..

“தாத்தா…”

“என்னம்மா…”

“நான் உங்ககிட்ட ஒன்னு கேட்டா செய்வீங்களா?...”

“என்னம்மா வேணும்.. சொல்லு…. தாத்தாகிட்ட….”

“இல்ல தாத்தா… எனக்கு ஒரு டவுட்….”

“என்ன டவுட் என் செல்ல பேத்திக்கு?...”

“அது ஒன்னுமில்லை தாத்தா… இந்த பாட்டுல வருதே சிறை…..யி….லிட்……டாள்னு அப்படின்னா என்ன தாத்தா?...”

“சிறைன்னா ஜெயில்னு அர்த்தம் டா நந்து… இந்த பாட்டுல வருகிற ஹீரோயின் சிரிக்கிறது ஹீரோக்கு அப்படியே அசையவிடாம கட்டிப்போட்டு ஒரு ரூமுக்குள் அடைக்கிற மாதிரி இருக்காம்…. ஜெயில் ல கைதிகளை இப்படிதான் கையில் விலங்கு போட்டு, ஒரு ரூமுக்குள் அடைச்சு போடுவாங்க… அத தான் சிறைன்னு சொல்லுவாங்க… ஆனா இங்கே பாட்டுல, அத ஹீரோ ரசிச்சு பாடுறார்…. சந்தோஷமா….”

“ஓ… இப்போ புரியுது தாத்தா….”

“சரிடா… நந்தும்மா….”

“தேங்க்ஸ் தாத்தா….”

“பரவாயில்லைடா…” என்றார் பெரியவர்…

அதை அப்படியே கேட்டு தன் அண்ணனிடம் கூறியதும் அவன் முகம் பிரகாசித்தது…

“இப்படிதான் நீ சிரிச்சிட்டே இருக்கணும் அண்ணா நீ எப்பவும்… சரியா?...” என்றபடி அண்ணனின் தோள் மீது சாய்ந்து கொண்டாள் நந்து…

“நீ எங்கூட இருக்குற வரைக்கும் நான் ஹேப்பியா இருப்பேண்டா நந்து….” என்றான் சித்து….

“அடடா… இங்கே ஒரு பாசமலர் படமே ஓடுது… இதை பார்ப்பார் இல்லையா…” என்றாள் மயூரி…

“நீ வேற மயில்… நான் ஃபுல் ஷோவும் பார்த்தேன்… சே… என்ன எடிட்டிங், என்ன கதை, என்ன வசனம், என்ன இயக்கம்… சொல்ல வார்த்தையே இல்ல.. மயில்…” என்றாள் சாகரி…

“ஹேய்… என்ன மயில்… எங்களை கிண்டல் பண்ணுறியா?...” என்றான் முறைத்துக்கொண்டே சித்து…

“ஆமா… இப்போ அதுக்கு என்னாங்குற நீ?... இவ்வளவு நேரம் நீ என்னை கிண்டல் செய்யலையா?... அதான் பதிலுக்கு பதில்…” என்றாள் மயூரி…

“ஓஹோ… அந்த அளவுக்கு வளர்ந்துட்டியா நீ?... அண்ணா இனி இவ சரிபடமாட்டா… நீ களத்துல இறங்கு அண்ணா… அப்போதான் இவ வழிக்கு வருவா…” என்று எடுத்துக்கொடுத்தாள் நந்து…

“ஓய்… சாகரி.. நீயும் சேர்ந்து எங்களை கலாய்க்கிறியா?...” என்றான் சித்து…

“இல்லை சித்து… நான் எப்பவும் உங்க கட்சி தான்… என் ஃபுல் சப்போர்ட் எப்பவும் உங்களுக்குத்தான்…” என்றாள் சாகரி…

“ஹ்ம்ம்… இப்போ தான் நீ எங்க ப்ரெண்ட் சாகரி…” என்றனர் சித்துவும், நந்துவும்…

“ஹலோ…. என்ன நடக்குது இங்கே…. போதும் போதும் உங்க சினிமா எல்லாம்… இந்த கொடுமை எல்லாம் என்னால பார்க்க முடியாதுப்பா… சாமிகளா…” என்றாள் மயூரி…

“அப்போ வாயை மூடிட்டு வா பேசாம… எங்க கிட்ட வம்பிழுத்த, அப்புறம் நாங்க பெரிய சினிமா எல்லாம் காட்டுவோம்…. பார்த்துக்கோ… இது ஜஸ்ட் டிரையிலர் கூட இல்ல… இதுக்கே உன்னால முடியலையா?...  ஹாஹாஹா… “ என்று சிரித்தான் சித்து…

“ஹேய்… சரியான அறுந்த வாலுடா நீ… இருடா… உன்னை… ஊர் வந்ததும் பேசிக்கிறேன்…” என்றபடி திரும்பிக்கொண்டாள் மயூரி…

“ஊர் வந்ததும் உன்னை பேசவிட்டால் தானே?...” என்று நந்துவும் சித்துவும் தங்களுக்குள் சொல்லிக்கொண்டு மயூரியை ஒரு வழி செய்ய ப்ளான் போட்டனர்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.