(Reading time: 50 - 99 minutes)

 

ஹேய்மயில்இந்த கலரை கொடுஅண்ணி பூவுக்கு அந்த கலர் கொடுங்கசித்துகுட்டி நந்துகுட்டி நீங்க அந்த இடத்துல பூ வரைங்க போங்க போங்க…” என்று ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்றை சொல்லியபடி அழகாக கோலமிட்டு வண்ணம் தீட்டி கொண்டிருந்தாள் சாகரி

வாவ்………….. சூப்பர் சாகரி…. செம அழகா இருக்கு நீ போட்ட கோலம்….”

ஹேய்போதும்டி மயில்நான் மட்டுமா போட்டேன்…. நீங்களும் தான போட்டீங்கஅப்புறம் என்ன எனக்கு மட்டும் பாரட்டு விழா?... போடி போய்குளி சீக்கிரம்அண்ணி உங்களுக்கு வேற தனியா சொல்லணுமா?... போங்க அண்ணிகுட்டீஸ்களை குளிக்க வைங்க…”

சரி…” என்று காவ்யாதனது குட்டி செல்வங்களை கூட்டி செல்ல

மயூரியுடன் நடந்த சாகரி… “என்ன மேடம் மருதாணி நல்லா சிவந்திருக்கு போல?... ஹ்ம்ம்உன் மாமனை நினைச்சிகிட்டே வச்சுகிட்ட போல….” என்று கேலி செய்தாள்

அவளின் கேலியில் முகம் சிவக்க. “சீ போடி…” என்றாள் மயில்

பாருடா.. வெட்கத்தைநேற்று என்னடான்னாமூஞ்சியை தூக்கி வச்சிட்டு ப்ச் சொல்லிட்டு இருந்தஇன்னைக்கு என்ன வெட்கம் எல்லாம் படற?... என்னடி எனக்கு தெரியாம என்ன வேலை செஞ்ச?....”

ஆமா ஆமா.. உனக்கு ஒன்னும் தெரியாதுல்லபோடிலூசுஅவர் எங்கிட்ட எல்லாம் சொல்லிட்டார்…”

எவர்????” என்றாள் எதுவும் தெரியாதது போல்

டிநடிக்காதடிபோதும்ஆமா.. நீ என்னை சொன்னஉன் கையை பாருரொம்ப அழகா பிடிச்சிருக்குமருதாணி….” என்றாள் மயில் ரசித்துக்கொண்டே

போடிபோய் குளி…  முதலில்போ…”

ஹ்ம்ம்போறேன்போறேன்…” என்று சொல்லி நாலு எட்டு வைத்தவள், திடீரென்று நின்றாள்

என்னடி?...”

பதில் பேசாது சாகரியை அணைத்துக்கொண்டாள் மயூரி

ஹ்ம்ம்எனக்கு எதுக்கு இப்போ இது?...”

ஹ்ம்ம்தெரியலைசும்மாதான்…”

சும்மாவா?... நான் நம்பமாட்டேன் பா…”

நம்பாட்டி போடி பத்மினி…”

அடிங்க…. இந்த பேர் சொல்லி கூப்பிடாதேன்னு சொல்லியிருக்கேனா இல்லையாடி உனக்கு?...”

ஹாஹாஹா….”

எதுக்குடி எருமை சிரிக்கிற?”

அதுவா?... நான் ஒருத்தி கூப்பிட்டதுக்கே நீ இப்படி கோபப்படுறியே, உன் அண்ணனும் சேர்ந்து கூப்பிட்டா எப்படியிருக்கும்னு நினைச்சு பார்த்தேன் அதான் சிரிச்சேன்ஹையோ ஹ்ம்ம்…”

என்னடி சொல்லுற?...”

உன் அண்ணன் எங்கிட்ட நேற்று நைட் போன் பேசினார்ரொம்ப நேரம் பேசினேன்நான் போட்ட அத்தனை கண்டிஷன்ஸ்-ம் நேற்று அவர் குரல் கேட்டதும் அந்த நொடி போயே போச்சு…. ரொம்ப நேரம் பேசினோம்…. கொஞ்சம் உன்னைப் பற்றியும் தான்நீ தான் நேற்று நாங்க பேச காரணகர்த்தான்னு சொன்னார்…  உன்னால தான் நேற்று நானே என் மனச புரிஞ்சிகிட்டேன்டிஹ்ம்ம்…. அப்புறம்….உன் பேரு கேட்டார்நான் பத்மினி சொல்லிட்டேன்இங்கே இருக்குற நாள் முழுக்க இனி நான் அவர்கிட்ட பேசுவேன்திகட்ட திகட்ட அவரை காதலிப்பேன்என் முகில் மாமா போன் பண்ணுவாங்க நான் போறேன்ஹேப்பி தீபாவளி பத்மினி… “ என்றபடி அவளை மீண்டும் அணைத்துவிட்டு சாகரி திட்ட வாயெடுக்கும் முன் அவளது கன்னத்தில் முத்தமிட்டு விட்டு ஓடிவிட்டாள் மயூரி

அவள் செய்துவிட்ட காரியத்தில் ஒன்றுமே புரியாமல் நின்று கொண்டிருந்தவள் சிறிது நேரத்தில் தன்னையும் அறியாமல் சிரித்துவிட்டு உள்ளே போய்விட்டாள்….

தினேஷ் இப்படி வந்து நில்லுப்பாமருமகளே இந்தா தாயி…. விளக்கேற்று…”

சரிங்க அத்தை…”

குளித்து முடித்து அனைவரும் சாமி கும்பிட்டு புத்தாடை அணிந்து காலை உணவாக இட்லியும் கறிக்குழம்பும், வடையும், இனிப்புக்கு பணியாரமும், சாப்பிட்டுவிட்டு தீபாவளி நாளை தொடங்கினர்

மருமகளே இந்தாம்மா….” என்றபடி இரண்டு ஜோடி வளைவியை கொடுத்தனர் செந்தாமரையும் செல்வியும்

அத்தை…. இது….”

வாங்கிக்கோம்மா….”

“……………….”

எங்க மாமியார் எனக்கு கொடுத்தாங்க…. நாங்க உனக்கு கொடுக்கிறோம்….”

பரம்பரை பரம்பரையா இருக்குற நகைநான்…. எப்படி?...”

எங்களுக்கு அடுத்த பரம்பரை நீ தானேம்மாஇந்த குடும்பத்துக்கு…. புடி….”

இல்ல அத்தை…. வந்து….”

என்ன இல்லைவந்துன்னு இழுத்துட்டிருக்கிற?....” என்றபடி அவளது கையில் அதை அணிவித்தனர் செந்தாமரையும் செல்வியும்

காவ்யா-தினேஷ்இருவரும் நான்கு பெரியவர்களிடமும் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டனர்

அதைப் பார்த்துக்கொண்டிருந்த சித்து நந்து கூடபாட்டி தாத்தா, எங்களையும் ஆசீர்வாதம் பண்ணுங்க…” என்று விழுந்து கும்பிட்டனர்

காவ்யாவிற்கும், தினேஷிற்கும் நிறைவாக இருந்தது

செந்தாமரைக்கும் செல்விக்கும் கை கால் ஓடவில்லைபேரப் பிள்ளைகள் இவ்வளவு பொறுப்பா இருக்கிறார்கள் என்று…”

அவர்கள் இருவருக்கும் ஆளுக்கொரு செயின் அணிவித்து தங்களது ஆசீர்வாதத்தையும் வழங்கினர் முத்தமிட்டு கொஞ்சி….

விடாது வாய் பேசும் சாகரி கூட எதுவும் காலையில் இருந்து சொல்லவில்லை அவர்களின் செயலைக் கண்டுஅவர்களுடனே ஒட்டிக்கொண்டிருந்தாள்சித்துவும் நந்துவும் அவளை விட்டு அசையவே இல்லை சிறிதும்….

மதியம் நாட்டுக்கோழி குழம்பு வைத்து கோழி வருவல் செய்து அசத்தியிருந்தனர் பெண்கள் மூவரும்சாப்பிட்ட ஆண்களுக்கோ மனது நிறைந்தது போல் வயிரும் நிறைந்தது….

செந்தாமரை சித்துவிற்கு ஊட்டிவிட, செல்வி நந்துவிற்கு ஊட்டிவிட்டார் இங்கே வந்ததிலிருந்து

ரவில் அந்த ஊரே ஜொலிக்கும் வண்ணம், தினேஷ் கலர் கலர் வானவேடிக்கை வைத்து கொண்டினான் மனைவி, மக்கள் மற்றும் அவன் அன்பான குடும்பத்துடன்

தினேஷ் மனைவியின் கைப்பிடித்து அவளையும் பட்டாசு வெடிக்க சொல்லி அவளைக் கெஞ்சி கொஞ்சி, வெட்க பட வைத்து காதலில் திளைத்துக்கொண்டிருந்தான்

சித்து நந்து இருவரும், புஷ்வானம் வைப்பதும், தரைச்சக்கரம் வைப்பதுமாக இருந்து அவர்களது இந்த தீபாவளியை கொண்டாடினர்

சாகரி மயில் இரண்டு பேரும் குட்டீஸ்கள் செய்ததையே செய்து பாவாடை- தாவணியில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தனர், பட்டுவேஷ்டி கட்டிய சித்துவையும் பட்டுப்பாவாடை அணிந்த நந்துவையும் துரத்தி விளையாடிக்கொண்டு….

பெரியவர்கள் நால்வரும் கண் கலங்க, மனம் மகிழ்வுற அந்த நிகழ்வை பார்த்து பார்த்து ரசித்துக்கொண்டிருந்தனர்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.