(Reading time: 50 - 99 minutes)

 

டியே இங்க நின்னு என்ன வேடிக்கை பார்த்துட்டிருக்கவெரசா நடடி…”

இதுக்கு மேல விரசா நடக்கனும்னா ஓட தான் செய்யணும்எனக்கொன்னும் இல்லைஆனா நீ இந்த வயசான காலத்துல ஓடி வந்து கீழ விழுந்து கிடந்தா யாரு தூக்குறது?... பேசாம நீ முன்னாடி போம்மாநாங்க நாலுபேரும் பின்னாடி வாரோம்….” என்றாள் சாகரி

‘”வாய்வாய்…. உன்னைஎன்னவோ செஞ்சி தொலைடி…. நீ வா செல்விநாம போகலாம்மருமகளே பாத்து வா தாயிஓரத்துல மிதிக்காதமுள் எதும் கிடக்க போகுதுஇப்படி வா தாயி நீ…” என்று மருமகளைப் பக்கத்தில் அழைத்து கொண்டார் செந்தாமரை….

பார்த்தியாடி மயில்அம்மாக்கு கொழுப்பைமருமகளை மட்டும் பொத்தி பொத்தி பாதுகாக்கிறாங்களாம்.. இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல?....”

“……………..”

ஹேய்மயில்….”

“…………….”

மயில்என்னடிபகலிலேயே கனவா?...”

மயில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்…..” என்று சாகரி கத்தி அழைத்ததும் தன்னிலை அடைந்தவள்சொல்லுடி….” என்றாள் மயூரி

அது சரி.. மேடம் இவ்வளவு நேரம் எங்க இருந்தீங்க?...”

இது என்னடி கேள்விவீட்டில தான இருந்தோம்…”

‘’விளங்கிடும்…. நான் அதை கேட்கலைடி லூசு…. நான் கூப்பிட்டதுக்கு பதில் பேசாம எங்க போயிருந்தன்னு கேட்டேன்…”

ப்ச்….”

அடடா…. ஏனிந்த சலிப்பு?...”

ஒன்னுமில்லைடி….” என்றவளின் முகத்தை பார்த்தவள்,

உன்னவரை மிஸ் பண்ணுறியாடி?....” என்று கேட்டாள்

ஆமாடிரொம்ப….”

அட லூசுஇதுக்கு ஏன் கவலை?... போன் போட்டு பேச வேண்டியதுதானே?...”

இல்லடிநான் தான் அவர்கிட்ட ஊருக்கு போறேன்வர 4 நாள் ஆகும்சோ எஸ்.எம்.எஸ், போன் எதும் பண்ண வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்…”

அடிப்பாதவத்தி…. ஆல்ரெடி கண்டிஷன்ஸ் போட்டு அவரை ஒரு வழி பண்ணி வைச்சிருக்கஇப்போ இந்த கொடுமை வேறயா?... உன்னை எல்லாம் லவ் பண்ணுறார் பார்த்தியா?... அவரை சொல்லணும்டி….”

சொல்லிக்கோ சொல்லிக்கோ….” என்றாள் வருத்தத்துடன்….

சரி என் போன் உங்கிட்ட தான இருக்கு?... அதை கொடு….”

இந்தா….”

சித்துகுட்டி, இங்கே வாநந்து செல்லம் நீயும் வா இங்கே….”

சொல்லு சாகரிஎதுக்கு கூப்பிட்ட?...”

என்ன பண்ணுறீங்க ரெண்டு பேரும்?...”

சும்மா சுத்தி பார்த்துட்டே வரோம்உன் ஊர் ரொம்ப அழகா இருக்கு சாகரி.. உன்னை மாதிரியே….” என்றான் சித்து

ஆமாசாகரிஅண்ணா சொல்லுறது கரெக்ட் தான்எவ்வளவு பூ, செடி, மரம், பறவை எல்லாம் இருக்குசூப்பர் தெரியுமா?....” என்றாள் நந்து….

ஓஹோஉங்களுக்குப் பிடிச்சிருந்தா எனக்கும் ஹேப்பிதான்ஹேய்மயில்நீ சித்து நந்துவை கூட்டிட்டு போ…. நான் இப்போ வந்துடுறேன்….” என்றாள் சாகரி

ஹ்ம்ம்சரி…” என்றாள் மயூரி

அவள் சற்று முன்னே சென்றதும், இவள் முகிலனுக்கு போன் செய்தாள்

ஹலோமுகிலன் ஹியர்….”

ஹலோமுகிலன் சார்….”

யெஸ்நீங்க…?...”

அடடாஅதுக்குள்ள மறந்தாச்சா?.... ஹ்ம்ம்என் ஃப்ரெண்டையாவது நியாபகம் வைத்திருக்கீங்களா?... இல்லையா?...”

யாரு உங்க ப்ரெண்ட்….”

அதுசரிநீங்க எல்லாம் காதலிக்கலைன்னு உலகம் அழுதுச்சா?... கொடுமைடாஹ்ம்ம்நான் உங்க காதலி மயூ ஃப்ரெண்ட்….”

தங்கச்சி நீயா?...”

ஹ்ம்ம்நானே தான்….”

சாரி நீயாச்சும் சொல்லியிருக்கலாம்ல…. உன் பேரை சொல்லியிருந்தா நான் கண்டுபிடிச்சிருப்பேன்ல….”

ஹாஹாஹா…. யாரு நீங்க?... முதலில் உங்களுக்கு என் பேரே தெரியாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும் முகிலன் சார்சோஇந்த பித்தலாட்ட வேலை எல்லாம் எங்கிட்ட வேண்டாம்….”

சரி சரிம்மாதங்கச்சின்ற பேரை விடவா வேற பேரு நல்லயிருக்க போகுது?...”

பாருடாஹ்ம்ம்.. பொழைச்சிப்பீங்க நீங்க…”

ஹ்ம்ம் சரி தங்கச்சிநீ சொன்னா சரிதான்….”

ஷ்அப்பா…. முதலில் நான் கேட்குறதுக்கு பதில் சொல்லுங்க?...”

கேளும்மா…”

மயூரிகிட்ட பேசலையா நீங்க?...”

இல்லம்மாஅவ ஏதோ ஊருக்கு போறேன்னு சொன்னா, சரி பார்த்து போயிட்டுவாசீக்கிரம் வந்துடுன்னு சொன்னேன்…… எத்தனை நாள் லீவ் எடுத்துருக்கன்னு கேட்டேன்… 4 நாள் சொன்னா…  ஊருக்கு போய் சேர்ந்ததும் எனக்கு எஸ்.எம்.எஸ் பண்ண சொன்னேன்அதெல்லாம் கஷ்டம் முடியாது… 4 நாளும் என்னால எஸ்.எம்.எஸ் கூட பண்ண முடியாதுபோன் எல்லாம் பண்ணிடாதீங்கன்னு சட்டுன்னு சொல்லிட்டு போயிட்டா... நானும் இப்போ என்ன பண்ணுறதுன்னு தெரியாம முழிச்சிட்டிருக்கேன்….”

நல்லா முழிச்சீங்க போங்க நீங்கஅவ சொன்னாளாம்இவரும் பேசாம இருக்காராம்…… நீங்க எல்லாம் லவ் பண்ணிஎன்னத்த கிழிக்க போறீங்க?... சே…”

என்ன தங்கச்சி இப்படி சொல்லிட்ட?...”

வேற எப்படி சொல்லுறது?... சேசரிநான் சொல்லுறத கவனமா கேளுங்கஅவ ஃப்ரீயா இருக்குற டைம் பார்த்து நான் உங்களுக்கு எம்ப்டி எஸ்.எம்.எஸ் பண்ணுறேன்நீங்க அத புரிஞ்சிகிட்டு அவளுக்கு போன் பண்ணுங்கசரியா?...”

என் தெய்வமேஅண்ணன் காதலில் விளக்கேத்தி வச்சிட்ட தங்கச்சி நீரொம்ப நன்றிம்மா…”

போதும்.. போதும்சொன்னதெல்லாம் நினைவுல இருக்கட்டும்வச்சிடுறேன்…” என்றபடி துண்டித்தாள் அழைப்பை….

தென்னந்தோப்பில் அனைவரும் உண்டுவிட்டு சிறிது நேரம் அமர்ந்து கதை பேசி விட்டு நிறைவுடன் வீடு வந்து சேர்ந்தனர்மறுநாள் தீபாவளிக்கு தேவையான பலகாரங்களை பட்டியலிட்டு ஒவ்வொன்றாக செய்ய ஆரம்பித்தனர் செந்தாமரையும், செல்வியும்வடை மட்டும் நாளை காலையில் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்துவிட்டு உறங்கினர்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.