(Reading time: 50 - 99 minutes)

 

ன்னவர் தான் பாடுகின்றாரா?... என் எதிரிலே இங்கே…?... எனக்கு மட்டும் கேட்கும்படி… “என் ராம்…..” என்று உருகினாள் அந்த பேதை….

இவளின் உருகல் அவனுக்கு அங்கே உறைக்க, தன் வசம் இழந்தவன்,

ஒரு தடவை இழுத்து அணைச்சப்படி உயிர் மூச்சு நிறுத்து கண்மணியே….”

என்று உருக்கத்துடன் காதலின் பிரிவில் பாடினான் தன்னவளை எண்ணி….

தன் கையில் வைத்திருந்த பூவை இறுக்கிப்பிடித்து அணைத்தவள்,

உன் முதுகை துளைச்சு வெளியேறஇன்னும் கொஞ்சம் இறுக்கு…. என்னவனே….”

என்று அவனிடம் மன்றாடினாள்…..

அவளின் வார்த்தை அவனுக்கும் புரிய, அவளது இனிய காதல் மழையில் நனைந்தவன்,

மழையடிக்கும் சிறு பேச்சு, வெயிலடிக்கும் ஒரு பார்வை

உடம்பு மண்ணில் புதையுற வரையில் உடன்வரக்கூடுமோ???...”

என்று கேள்வியுடன் வினவினான் அவளிடத்தில்….

கை நிறைய நீர் அள்ளி, நீரில் தெரிந்த அவனது உருவத்தில் தெளித்தவள்,

உசிர் என்னோடு இருக்கையிலே….

நீ மண்ணோடு போவதெங்கே!!!!!!!!!!!!!!....

அட உன் ஜீவனே நானில்லையா….

கொல்ல வந்த மரணம் கூட குழம்புமய்யா….”

என்று கையில் வைத்திருந்த மலரை அணைத்துக்கொண்டு அந்த புல்வெளியில் படுத்துக்கொண்டாள் புன்னகை கலந்த வெட்கத்துடன்….

அவளின் பதில் அவனுக்கு நிறைவு தர, அவளின் முகச்சிவப்பில் கரைந்தவன்….

குருக்கு சிருத்தவளே, என்ன குங்குமத்தில் கரைச்சவளே….

நெஞ்சில் மஞ்சள் தேய்ச்சு குளிக்கையில் என்ன கொஞ்சம் பூசு தாயே….

உன் கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம் மாத்து தாயே….”

என்று வேண்டுகோளுடன் முடித்தான் அவன்….

சட்டென்று எழுந்தவள் அவனது உருவம் மெல்ல மறைவதைக் கண்டு கண்களில் நீருடன், உதடு துடிக்க, பிறந்து பிறந்து இறக்கும் வலியுடன்,

ஒரு கண்ணில் நீர் கசிய, உதட்டு வழி உசிர் கசிய….

உன்னால சில முறை பிறக்கவும், சில முறை இறக்கவும் ஆனதே….”

என்று அவளின் நிலையை உணர்ந்தவளின் விழிகளில் அவள் கையில் வைத்திருந்த பூவை தாங்கிக்கொண்டிருந்த ஒரு இலை ஆற்றில் விழுந்து நீரின் சுழற்றிக்கு ஏற்ப அதனோடு அதன் பின்னாடியே செல்வது பட்டதும்…. அவளும் அவனது நினைவில் உழன்று கொண்டிருப்பதும், அவன் பின்னாடியே அவளது இதயமும் செல்வதும், காலம் நேரம் மறந்து அவன் குடிகொண்டிருக்கும் அவள் மனக்காடும் அதில் இருக்கும் அவள் காதல் விருச்சமும் பூத்து குலுங்குவது புரிய,

அட ஆத்தோட விழுந்த இலை

அந்த ஆத்தோட போவது போல்….

நெஞ்சு உன்னோடு தான் பின்னோடுதே….

அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே….”

என்று உண்மையை அப்பட்டமாக ஒத்துக்கொண்டு அவனிடத்தில் கூறினாள்….

அவனுக்கு அவள் சொல்வது புரியாமல் இல்லை…. இருந்தாலும் அவனால் இப்போது எதுவும் செய்ய முடியாதே…. அவளருகில் இருக்கும் இன்பம் அவனுக்கு இப்போது கிட்டவில்லையேஇப்போதைக்கு அவனுக்கு இருக்கும் ஒரே ஒரு இன்பம் அவளின் வெட்கம் தோய்ந்த அவளின் குங்கும முகம் தான்…. ஆம் அன்று பார்த்த அவளின் அந்த தோற்றம் மட்டுமே….

குருக்கு சிருத்தவளே…. என்ன குங்குமத்தில் கரைச்சவளே

நெஞ்சில் மஞ்சள் தேய்ச்சு குளிக்கையில்…………………”

என்று அவன் முடிக்கும் முன்னே

உன்னக் கொஞ்சம் பூசுவேன்யா….” என்றாள்

உன் கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம்…..”

என்று அவன் கேட்கும் முன்னே,

மாத்துவேன்யா….” என்று அவன் உருவம் மறைவதைப் பார்த்துக்கொண்டே வலியுடன் சொன்னாள்….

ஓஹோ….” என்றவன் ஒரு பக்கம் சந்தோஷம், ஒரு பக்கம் வலியுடன் நதிக்கரையிலிருந்து எழுந்தான்.....

இங்கே சாகரியும் எழுந்து மயூரியை அழைத்தாள்அவளும் நந்து சித்துவுடன் வீட்டை நோக்கி நடந்தாள்….

அவ்னீஷ் போகலாம் வாவீட்டுக்குள்ளே போயி தூங்கலாம் வா…” என்றவன் தூக்க கலக்கத்தில் இருந்த தம்பியை எழுப்பி கை தாங்கலாக அழைத்து சென்றான்

ப்பா நாங்க கிளம்புறோம் பா….”

நானும் வரேன்ப்பா….”

இல்லப்பாஉங்களுக்கு வீண் அலைச்சல் வரும்…. நாங்க போயிட்டு வரோம்…” என்றான்….

சரிப்பாபார்த்து போயிட்டு வா….” என்றார் ஜனகன்….

ராசுவிடமும், செல்வியிடமும் விடைப்பெற்றவன், செந்தாமரையிடம் வரும்போது கண்கலங்கி விட்டான்

……….…ம்…..மா…. நாங்க….. கிள………….ம்….. பு……றோம்………………..”

பத்திரமா போயிட்டு வாப்பா…” என்றவரும் கண்கலங்கி விட,

அத்தை என்ன நீங்கஅவர் தான் இப்படின்னா…. நீங்களுமா?... இந்தா தான அத்தை இருக்கு சென்னைநினைச்சா வந்துடுவோம் அத்தை….” என்றாள் நம்பிக்கை அளித்து….

மருமகளின் வார்த்தையில் சற்று மனம் லேசானவர், “சரி தாயி…. தினேஷை பார்த்துக்கோநீயும் நல்லா சாப்பிடு நேரா நேரத்துக்கு…. அப்புறம் நான் சொன்ன மருந்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடு…. உடம்புக்கு ஒன்னும் வராது தாயி….” என்றவர், ஒரு சின்ன பாத்திரத்தை அவளிடம் கொடுத்து இத தினமும் வெரும் வயித்தில சாப்பிடு தாயி…” என்று அந்த மருந்தை கொடுத்தார்….

அத்தை……………….”

போயிட்டு வா தாயி…. நீ நல்லாயிருப்ப…. என் மகன் கூட சேர்ந்து நூறு வருஷம் வாழுவ….” என்று ஆசீர்வதித்தார்…..

அவரின் பாதம் தொட்டு பணிந்தவளின் கையில் தினேஷை ஒப்படைத்தார் செந்தாமரை….

பாட்டி…. தாத்தா…. நீங்களும் எங்ககூட ஊருக்கு வாங்க…. நாம எல்லாரும் ஒன்னா இருக்கலாம்…” என்றனர் நந்துவும் சித்துவும் பெரியவர்கள் நால்வரிடமும்

இப்போ நீங்க ஊருக்கு போயிட்டு வாங்க…. நாங்க அப்புறமா வரோம்….” என்றனர் ராசுவும், செல்வியும்….

ஹ்ம்ம்சரி….. கண்டிப்பா வரணும்…” என்று சொல்லிவிட்டு செந்தாமரையிடம் சென்றனர்

பாட்டி…. நாங்க போயிட்டு வரட்டுமா?....”

ஹ்ம்ம்ம்போயிட்டு வாங்க கண்ணுகளாபாட்டியை மறந்துட மாட்டீங்க தானே?....”

மறக்க மாட்டோம் பாட்டி….” என்று விசும்பிக்கொண்டே அவரை கட்டிப்பிடித்துக்கொண்டனர் இருவரும்

இருவரின் கண்ணீரையும் முந்தானையால் துடைத்துவிட்டு, இருவரையும் முத்தமிட்டார்….

அண்ணாபோதும்உங்க அன்னை ஓர் ஆலயம் சீனெல்லாம்மிச்சத்த இன்னொரு நாள் வச்சிக்கலாம்வாங்க…” என்று அவனை இலகுவாக்க கேலி செய்தாள் சாகரி

ஹேய்உனக்கு கொழுப்புடி ரொம்ப…. அவனாடீ சீன் போட்டான்?....” என்று காளி அவதாரமெடுத்தார் செந்தாமரை….

ஹாஹாஹாபார்த்துக்கோங்க அண்ணி…. உங்க அத்தையின் சுயரூபத்தை….” என்று காவ்யாவிடம் எடுத்துக்கொடுத்த சாகரியை அடிக்க கை ஓங்கிய மயூரியிடமிருந்து தப்பித்து ஓடினாள் சாகரி….

ஹேய்மயில்அவளை விடு….” என்றபடி அவள் பின்னே ஓடினர் குட்டீஸ்….

காவ்யாவும் தினேஷும் அதைக்கண்டு சிரித்துக்கொண்டே விடைபெற்றனர்…. பெரியவர்களும் புன்னகையுடன் வழியனுப்பி வைத்தனர்….

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.