(Reading time: 50 - 99 minutes)

 

வாங்கப்பா…. நீங்க வருவீங்கன்னு சொல்லியிருந்தா ஸ்டேஷனுக்கு நானே வந்திருப்பேனா அப்பா?...”

“பரவாயில்லைப்பா… உங்களுக்கெல்லாம் இன்ப அதிர்ச்சியா இருக்கட்டுமேன்னு தான் நான் சொல்லிக்காம வந்தேன்…”

“ஹ்ம்ம்… சொல்லுங்கப்பா… சாகரியை அழைச்சுட்டு போக வந்தீங்களா ஊருக்கு?...”

“ஹ்ம்ம்… ஊருக்கு அழைச்சிட்டுப் போக வந்ததென்னவோ உண்மைதான்… ஆனால் அவளை மட்டும் கூட்டி செல்வதற்கு அல்ல…”

“என்னப்பா சொல்லுறீங்க… ஓ… அப்போ… மயூரியையும் அழைச்சிட்டு போக போறீங்களா உங்களுடன்?...”

“அவளை மட்டும் இல்லை… உங்களையும் அழைச்சிட்டு போக தான் நான் வந்தேன் இன்று….”

“அப்பா……………..”

“ஹ்ம்ம்… அந்த வார்த்தை நீ சொல்லுறது நிஜம் தானேப்பா… அதனால் தான் தீபாவளி விருந்துக்கு என் மகனையும் மருமகளையும் என் பேரன், பேத்தியையும் அழைச்சிட்டு போக வந்தேன்… உனக்கு சம்மதமாப்பா தினேஷ்?...”

“……………”

“என்னப்பா எதும் சொல்லமாட்டிக்குற?... என் கூட ஊருக்கு வருவதில் உனக்கு விருப்பமில்லையாப்பா?...”

“அச்சோ… அப்பா… அப்படியெல்லாம் எதுவுமில்லை… நீங்க கூப்பிட்டதில் அவருக்கு உச்சகட்ட ஆனந்த அதிர்ச்சி… அதான் பதில் பேசாமல் இருக்கிறார்…. நீங்க முதலில் இந்த காபியை குடிங்க…” என்றபடி அவருக்கு காபி கொடுத்தாள் காவ்யா…

“காவ்யா… நீ சொல்லும்மா… நான் தான் உரிமை ரொம்ப எடுத்துக்குறேனா உங்ககிட்ட?...” என்றதும் தினேஷ் காவ்யாவுடன் அவரது காலில் விழுந்தே விட்டான்…

“ஆசிர்வாதம் பண்ணுங்கப்பா… உங்க பையனையும் உங்க மருமகளையும்…” என்றபடி….

கண் கலங்க, மனம் குளிர, “பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழணும் நீங்க இரண்டு பேரும்...” என்றார் மகிழ்ச்சி பொங்க…

“அடடா… என்ன ஒரே வாழ்த்தா இருக்கு இங்கே… என்ன நடக்குது எனக்கு தெரியாம…” என்றபடி அங்கு வந்தாள் சாகரி….

“சாகரி எப்படி இருக்கடா?......” என்றபடி மகளைப் பார்த்தார் தந்தை….

“அடடா… ரொம்ப பாசம் தான்… அதான் வந்ததும் வராமல் மகளைப் பார்க்க வராமல் மகனைப் பார்த்து குசலம் விசாரிக்கின்றீர்களா தந்தையே?...” என்றாள் அரச நாடக பாணியில் ஏற்ற இறக்கத்துடன்….

“ஹேய்… வாலு… இன்னும் நீ மாறவே இல்லை… அப்படியே அந்த விளையாட்டுத்தனம் மாறாம இருக்கிற இப்பவும்…”

“இதோடா… நான் ஏன் மாறணும்?... அதெல்லாம் எங்கூடவே பிறந்தது… என்னைவிட்டு போகாதே…. ஹாஹாஹா…” என்று சிரித்தாள் சாகரி…

“தினேஷ்…. இவ வாலுத்தனம் உங்கிட்ட காட்டினா நல்லா நாலு அடி போடு… அப்பவாச்சும் வாய் ஓயாம பேசுற இவ கொஞ்சம் பேசாமல் இருக்குறாளா பார்ப்போம்…” என்றார் ஜனகன்….

“அதுக்கென்னப்பா… சொல்லிட்டீங்கல்ல…. இனி செஞ்சுட்டா போச்சு… இல்ல காவ்யா?...” என்றபடி அவன் மனைவியைப் பார்க்க…

“ஆமாங்க… நீங்க சொன்னா சரிதான்…” என்றாள் அவள் நமட்டு சிரிப்புடன்…

“அட ராமா… எல்லாரும் இப்படி ஒன்னுகூடிட்டாங்களே…. உன் பக்தையை காப்பாற்றுப்பா….” என்றாள் சாகரி…

“இதோ வந்துவிட்டேன் சாகரி……………” என்றபடி ஓடிவந்தான் சித்து…

“என் சித்துகுட்டி வந்துட்டானே…. இப்போ என்ன செய்வீங்க எல்லாரும்…. அவன் எனக்கு தான் சப்போர்ட் பண்ணுவான், அப்படித்தானே சித்து செல்லம்?...” என்றபடி அவள் கொஞ்சி கேட்க,

அந்த சித்து குஷியாகி… “பின்னே உனக்கு நான் சப்போர்ட் பண்ணாம வேற யாரு பண்ணுவா?....” என்று கண்ணடித்தான்….

“அய்யோ… அண்ணா… செம ரியாக்ஷன்….” என்றபடி வந்தாள் நந்து…

“ஆமா சித்து குட்டிக்கரணம் அடிச்சாலும் அதை நீ சூப்பர்னு தான் சொல்லுவ…” என்றபடி அங்கே வந்தாள் மயூரி…

“ஏய்…. மயில்… என்ன கொழுப்பா உனக்கு?...” என்று அவளோடு சண்டைக்கு சென்றாள் நந்து…

“விடு நந்து… அறியாப் புள்ளை தெரியாம பேசிட்டா… மன்னிச்சு விட்டுடலாம்…” என்றான் சித்து பெருந்தன்மையுடன்…

“ஹ்ம்ம்… நீ சொல்லுறதுக்காக விடுறேன் அண்ணா… இல்ல அவ்வளவுதான்…” என்றாள் வீராப்பாக நந்து…

“இதோடா… இந்த சீனுக்கெல்லாம் குறைச்சல் இல்லை…. அடியே சாகரி…. இதுக்கெல்லாம் நீ தாண்டி காரணம்… உன்னை என்ன பண்ணுறேன்னு பாரு…” என்றபடி மயூரி, சாகரியை துரத்த, சித்துவும் நந்துவும் மயூரியை துரத்தினர்…

அதைப் பார்த்துக்கொண்டிருந்த மூவரும் தன்னை மறந்து சிரித்தனர்…

“அப்பா… அம்மா எப்படியிருக்காங்கப்பா?...”

“அவளுக்கென்னப்பா, உங்களை தான் பார்க்க ஆவலாயிருக்கா…”

“கண்டிப்பா நாங்களும் ஆவலா தான் இருக்கோம்ப்பா… இல்ல காவ்யா?...”

“ஆமாப்பா… அவர் சொல்லுறதும் சரிதான்… நிஜமா நாங்க தான் ரொம்ப ஆவலாயிருக்கோம்… அதிலும் நான் என் மாமியாரைப் பார்க்க ரொம்ப ஆவலாயிருக்கேன்…” என்றபடி யோசித்தாள் காவ்யா…

அந்த நேரம் அங்கே ஓடி வந்த சாகரி… “என்ன அண்ணி என்ன யோசனை?...” என்றாள் மூச்சு வாங்க…

“இல்ல… நாத்தனாரே இந்த பாடு படுத்துறப்போ மாமியார் எப்படி இருப்பாங்கன்னு தான் யோசிக்கிறேன்…..” என்றாள்…

“ஓ… மாமியார் எப்படி இருப்பாங்கன்னு பார்க்க ஆசையா இருக்கா?.... நான் இப்பவே ஒரு டெமோ காட்டுறேன் பாருங்க…” என்றவள்

“அடியே காவ்யா…. என்னடி பண்ணிட்டு இருக்கே நடு ஹாலில்…. அதுக தான் சின்னஞ்சிறுசுகன்னா நீ ஏண்டி நந்தி மாதிரி நடுவுல நின்னுகிட்டு என்னமோ அதிசயத்தை பாக்குற மாதிரி இப்படி வாயைத்திறந்து பார்க்குறவ?... வாயை மூடுடி… ஈ, கீ உள்ளே போயிட போகுது…. ஹ்ம்ம்… இப்படி வாய் பார்த்துட்டு நிக்கிறா இவளைப் புடுச்சிப்போச்சுன்னு காதலிச்சு கல்யாணம் பண்ணியிருக்கானே நான் பெத்த மகன், இந்த கொடுமையை எங்கே போயி நான் சொல்ல… ஏண்டா தினேஷு உனக்கு ஊர் உலகத்துல பொண்ணே இல்லைன்னு இவளை போயி கல்யாணம் பண்ணி ரெண்டு பிள்ளையும் பெத்து வச்சிருக்கியேடா உன்னை எல்லாம் எந்த கோவிலுக்கு கூட்டிட்டு போயி வேப்பிலை அடிக்க….” என்றாள் கிராமத்து வில்லி மாமியாராக…

“அடிங்க… வாலு… வாலு… வேப்பிலை அடிக்கணுமா?... இரு உனக்கு நான் இப்போ கம்பை வச்சு அடிக்கிறேன்…. அப்புறமா வேப்பிலை அடிக்கிறேன்….” என்றபடி அவளை துரத்தினான் தினேஷ்…

“பாருடா…. என் மகனுக்கு கோவமெல்லாம் வருது… டேய்… தினேஷ் நீ இவ கூட சேர்ந்து ரொம்ப கெட்டு போயிட்டடா… எல்லாம் இவளை சொல்லணும்… அடியே இருடி… அம்மாவை அடிக்க புள்ளையையே தூண்டி விடுறியா… இருடி… மாமியார் கொடுமைன்னா என்னன்னு உனக்கு காட்டுறேன்… ஊருக்கு வருவல்ல… அப்போ இருக்குடி உனக்கு கச்சேரி….” என்றபடி ஓடினாள் சாகரி…

“ஹாஹாஹா… ஏங்க… பாவம்ங்க… விடுங்க…” என்று அவன் பின்னே ஓடினாள் காவ்யா….

“அண்ணா… விடாதீங்க… அவளுக்கு நாலு அடி நல்லா கொடுங்க… அப்பதான் அவ அடங்குவா…” என்றாள் மயூரி காவ்யாவின் பின் ஓடியபடி…

“ஏய்… மயில்… எங்க சாகரியை நீ அடிக்க சொல்லுறியா?... இப்போ உன்னை நாங்க அடிக்கிறோம் பாரு…” என்றபடி மயூரியை ஒரு குச்சியை வைத்து துரத்தினர் குட்டீஸ்கள் இருவரும்….

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.