(Reading time: 50 - 99 minutes)

 

யூ…. என் செல்லம்….”

என்னங்க?....”

மயூ……….. எப்படிடீ இப்படி?...”

என்னது எப்படி இப்படி?....”

ஹேய்…. நிஜமா உனக்கு தெரியலையாடி?....”

ஹ்ம்ம்தெரியலை…..”

மயூ…… அப்போ நான் சொல்லவா?....” என்றவன் அவனிடத்திலிருந்து எழுந்து அவளை நெருங்கி வர எத்தனித்த நேரம், சாகரியின் வார்த்தை நினைவுக்கு வந்தது….

(வேண்டாம்ப்பாசாமி…. அன்னைக்கு மாதிரி நான் உணர்ச்சிவசப்பட்டு எதாவது செய்ய, இவ கண்டிஷன் போட்டு என்னை கட்டிப்போட, அப்புறம் என் தங்கச்சி பத்மினி தயவால இவ கொஞ்சம் நல்லா இந்த நாலு நாளா பேசுறதையும் கெடுத்துக்க நான் விரும்பலைப்பா…. என்று தனக்குள் சொல்லி கொண்டான் முகிலன்….)

என்னங்க…. ஏதோ சொல்ல வந்தீங்க…. அங்கேயே நின்னுட்டீங்க,,,,,”

(ஒன்னும் தெரியாத மாதிரியே கேட்குறா பாரு…. என்னை இப்படி படுத்தி பார்க்க உனக்கு இவ்வளவு ஆசையாடி…. ஏண்டிமயூ…..இப்படி….)

என்னங்க…. நான் கேட்டுகிட்டே இருக்கேன்…. நீங்க எதும் சொல்லாம இருக்கறீங்க…. என்ன யோசனை அப்படி…?...”

(வேற என்ன யோசனைஎனக்கு?... உன்னைப் பற்றி தான்இப்போ உன் பக்கத்துல நான் வரவா வேண்டாமான்ற குழப்பம் தாண்டி…. ஒரு வேளை கிட்ட வந்து நீ மறுபடியும் புது கண்டிஷன்ஸ் எதும் போட்டுட்டன்னா என்ன செய்யுறதுன்னு தான்அப்புறம் பத்மினி கிட்டேயும் ஹெல்ப் கேட்க முடியாதே…. அதான்மயூயோசிக்கிறேன்….)

சரி…. நீங்க…. யோசிச்சிட்டே இருங்கநான் போறேன்…..” என்றாள் கோபத்துடன்….

ஹேய்…. மயூ…. என்னடாகோபமா?....” என்றவன், அவளருகே வந்து அவள் கண்களை நேராக பார்த்தான்

இல்லைரொம்ப சந்தோஷமா இருக்கேன்…. போதுமா?....” என்றவள் முகத்தை திருப்பிக்கொண்டாள்….

மயூ….. என்னைப் பாருடா…..”

“………….”

மயூ……. என்னைப்பாரு……” என்று அழுத்தி சொன்னவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்

முகில்…. ஐ லவ் யூ…..” என்று அவனின் கையைப் பிடித்துக்கொண்டாள்….

அவளின் வார்த்தையில் மகிழ்ந்தவன், “ஐ லவ் யூ டூ டா மயூ…” என்று சிரித்தான்….

சிரித்தவனை கோபத்தோடு பார்த்தவள், “ஒன்னும் தேவையில்லை…” என்றாள்….

ஏண்டாஎன்னாச்சு…..”

ஒன்னும் ஆகலை…. ப்ச்…..”

ஹேய்…. என்னடாஎதுக்கு இப்போ இப்படி பேசுற?....”

இனி பேசலை விடுங்க…..”

மயூஎன்னம்மாஎன்னாச்சு….?.... எங்கிட்ட சொல்ல மாட்டியா?....”

உங்ககிட்ட நான் ஏன் சொல்லணும்?....”

எங்கிட்ட சொல்லாம நீ வேற யார் கிட்ட சொல்லுவியாம்…?....”

‘”அதான் சொல்லிட்டேன்லஇனி உங்ககிட்டேயும் சொல்லலை….”

ஹேய்மயூஎன்னம்மா….” என்றவள் அவள் முகத்தை கையிலேந்தினான்….

அவனையே விடாது பார்த்தவள், அவனின் கண்ணில் தெரிந்த காதலில் தொலைத்தாள் கோபத்தை….

அவனின் மார்பில் கை வைத்து குத்தியவள், “போங்கஒன்னும் பேச வேண்டாம்…. போங்க….” என்றாள் குத்திக்கொண்டே….

அவளின் கையைப் பிடித்தவன், “என்னன்னு சொல்லுடா….” என்றான் கனிவுடன்….

நாலு நாள் கழிச்சு உங்களை நான் பார்க்குறேன்…. என்னைக்கும் இல்லாத திருநாளா இன்னைக்கு ஐ லவ் யூ கூட சொன்னேன்ல…. எல்லாம் கேட்டுட்டு நானும் தான்னு மட்டும் சொல்லுறீங்க…. அவ்வளவுதான்ல…. போங்கபேசாதீங்கஇதுக்கு தான் கண்டிஷன்ஸ் போட்டு வைச்சிருந்தேன்…. ஊருக்கு போனதுல அதையும் மறந்து உங்ககிட்ட ரொம்பநேரம் பேசிட்டேன்…. என்னை சொல்லணும்…. சேநான் போறேன்….” என்றாள் மனதில் இருப்பதை அவனிடம் சொல்லிவிட்டோம் என்ற எண்ணம் இல்லாமல்

அவனுக்கு அவள் பேச்சில் இப்போது எல்லாம் புரிந்ததுஇயல்பான தொடுகையையும் எதாவது நினைத்து வேண்டாம் என்று சொல்லிவிடுவாளோ என்று பயந்தவனுக்கு அவள் பேசிய அர்த்தம் புரிந்ததுஅவள் அவனின் காதலை யாசிக்கின்றாள் என்பதும் விளங்கியது

மனம் முழுவதும் இன்ப ஊற்று பெருக்கெடுக்க, “என்னை விட்டு எங்கே போற?....” என்று கேட்டவன்போகமுடியுமா?....” என்று அவளின் கண்களைப் பார்த்து கேட்க, அதற்கு மேல் முடியாமல் அழுதுவிட்டாள்

மயூ…..” என்றவன், அதற்கு மேல் எதுவும் பேசவில்லைஅவளை இறுக கட்டியணைத்துக்கொண்டான்…. அவளும் அவன் மார்பில் நிம்மதியுடன் சாய்ந்து விழி மூடிக்கொண்டாள்….

ன்னங்கஇன்னைக்கு ஆபீஸ் போகலையா?....”

இல்ல கவி…”

ஏன்?....”

போக பிடிக்கலை…..”

என்னாச்சுங்க?.....” என்றவள் அவனது தலைமாட்டில் உட்கார்ந்தாள்

கவி…. எனக்கு அம்மா நியாபகம் வருது கவி….” என்று சிறு பிள்ளையாய் சொல்லிய கணவனை கனிவோடு பார்த்தவள், “அத்தைக்கு போன் பண்ணி தரவாங்க….” என்று கேட்டாள்

இல்லடாவேண்டாம்…. அவங்களும் வருத்தப்படுவாங்க….” என்று அவன் சொல்லிய நேரத்தில் அவனது செல்போன் சிணுங்கியது….

ஹலோ….”

தினேஷ்…. எப்படி இருக்கேப்பாசாப்பிட்டியா?... வேலையில் இருக்கியாப்பா…. நான் தொந்தரவு பண்ணிட்டேனாப்பா?....” என்ற தாயின் குரலில் என்ன சொல்வதென்றே அவனுக்கு தெரியவில்லை….

யாருங்க…. போனில்…. என்று சைகையில் கேட்ட காவ்யாவிற்கு அவன் அடுத்து போனில் பேசிய வார்த்தை பதில் சொன்னது,,,,

அம்……………மா………………..”

நான் தான்ப்பாஒன்னுமில்லைஉன் நியாபகம் வந்துச்சு…. அதான்…. போன் போட்டேன்….” என்றவரிடம் என்ன சொல்லுவான் இந்த மகன்…. நானும் உங்களிடத்தில் பேச தான் நினைத்தேன்…. ஆனால் பேசாமல் விட்டு விட்டேன்…. என்றா?.....

தாயிடம் பேசிமுடித்து வைத்தவன், “நான் சந்தோஷமா இருக்கேன் கவி….” என்று அவளை தூக்கி சுற்றினான்….

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.