(Reading time: 50 - 99 minutes)

 

றக்கம் வருவேனா என அடம் பிடித்தது சாகரிக்கு…. அவனின் ஓவியத்தை கையிலேந்தியவள், “என்னாச்சுங்கஎனக்கு ஏன் தூக்கம் வர மாட்டிக்குது?... முழுசா ஆறு மாசம் ஆகப்போகுது…. உங்களைப் பார்த்து…. நாளையோட…. ஹ்ம்ம்எப்ப வருவீங்க ராம்?....” என்ற கேள்வியுடன் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தவள் மெல்ல உறங்கிப்போனாள்….

வனம் போன்றும் இல்லாமல், பூக்கள் நிரம்பியிருக்கும் சோலையாகவும் இல்லாமல், மணல் திட்டுகள் முழுதும் பரவியிருந்த இடத்தில் நான்கைந்து தூண்கள் இருந்ததுஅதனைச் சுற்றிலும் காட்டுச்செடி கொடி போல் படர்ந்திருந்தது அழகாக….

அங்கே நிழல் ஓவியமாக மணலில் முழங்கால்களை மடித்து பிடித்து அமர்ந்திருந்தாள் சாகரி….

சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்….

பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால்….”

என்று அந்த சுடும் மணலில் இன்பமுடன் படுத்துக்கொண்டவளின் கண் முன் பாலைவன நீருற்று போல் தோன்றியவன்,

மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்….

வாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால்….”

என்று அவளிடத்தில் கூறினான் அவன்….

கோடி சுகம் வாராதோ, நீ எனை தீண்டினால்…..”

என்றவள் காற்றோடாவது அவன் கலந்திருக்கின்றானா என்று காற்றில் கைகளை விட்டு அளைந்தாள்….

காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்…..”  என்றவன் தனது கை காயத்தை சுட்டிக்காட்டி அவளைப் பார்த்துக்கொண்டே பாடினான்

மங்கலாய் தெரிந்த அவன் உருவத்தில் அவனது காயமும் தெரிய பதறினாள் அவள்…. உயிர் அவளுக்குள் ஊசலாடியது….

உடனே வந்தால் உயிர் வாழும்….” என்றாள் அவன் தூரத்தில் புள்ளியாய் காணாமல் போவதை பார்த்து கண்ணீர் வடித்துக்கொண்டே….

வருவேன் அந்நாள் வரக்கூடும்….” என்ற அசரீரி மட்டும் அவளுக்கு கேட்க, சட்டென்று எழுந்து அமர்ந்தாள் சாகரி மெத்தையிலிருந்து….

நான் கண்டது கனவா?...” என்று மணி பார்த்தாள்….

திகாலை 4.30 என்றது செல்போன்….

ராம்ம்ம்ம்ம் சொன்ன மாதிரி வந்துடுவீங்க தானே நிஜமா?.... கனவில் அன்றைக்கு நான் உங்களின் கையில் காயம் படக்கண்டேனேஇன்று கூட அந்த காயம் ஆறாமல் உள்ளதென்றால், அன்று நான் கண்ட காட்சி உங்களின் வாழ்வில் நடந்தேவிட்டதா?...”

ரத்தம் சிந்திய என்னவரின் கைகள்….. அய்யோ…. கடவுளே…. அவருக்கு வலித்திருக்குமே….”

சீக்கிரம் வந்துடுங்க ராம்என் உயிர் எனக்கு பாரமா இருக்கு ராம்வந்துடுங்க ராம் ஒரே ஒரு தடவை உங்களை நான் பார்க்கணும் ராம்ப்ளீஸ் ராம்வந்துடுங்க…. அன்னைக்கு நான் ஊரில் கண்ட சகுனங்கள் எல்லாம் உங்களை நான் விரைவில் பார்க்க போகும் சேதியை சொல்வதற்கு தானா?... விரைவில் வருவேன் என்று இன்று நீங்கள் சொன்னதும் எனக்கு கேட்டுக்கொண்டே இருக்கிறதுஉங்களுக்காக நான் காத்திருப்பேன் ராம்…. என்று விழி மூடி சொல்லிக்கொண்டாள் தனக்குள் இருக்கும் தன்னவனிடம்….

சாகரிநாங்க இன்னைக்கு கோவிலுக்கு வரல…. சண்டே வரோம்….”

ஏன் சித்து?...”

சும்மாதான் சாகரி…. இன்னைக்கு வெள்ளிக்கிழமை தானே…. அதான்….”

ஹ்ம்ம்…. சரிநான் போயிட்டு வரேன்…”

ஹ்ம்ம்…. நாங்க கேட்டதா சொல்லு உன் ராமனை…”

ராமன் என்றதும் அவளுக்கு அவளின் ஆதர்ஷ் ராமே நினைவுக்கு வந்தான்….

மனதில் அவனின் பெயர் கேட்ட திருப்தி இருந்தாலும், அவரைப் பார்த்தால் தானே கேட்டதாய் சொல்வதற்கு என்றெண்ணியவளின் இதழ்களில் விரக்தி புன்னகை ஒன்று உருவானது….

வாம்மாசாகரி…. இப்போ எல்லாம் நிதமும் பகவானை தரிசிக்கிறஅவர் உனக்கு நல்லதை நிச்சயம் காட்டுவார்நீ நினைச்சதெல்லாம் நடக்கும்ஷேமமா இருப்பம்மா நீ…” என்றபடி அர்ச்சனைத் தட்டை அவளிடம் கொடுத்துவிட்டு ஆசீர்வாதம் செய்தார் அந்த குருக்கள்….

வரேன் குருக்கள் ஐயா…” என்றபடி பிரகாரத்தை சுற்றி நடந்தாள்….

அவனின் நினைவு அவள் மனம் எங்கிலும் நிறைந்து ததும்பக் கண்டாள்அவன் அன்று நின்றிருந்த இடம், நடந்த இடம், அவளிடம் காதலை சொல்லிய இடம், அவளைப் பிரிய முடியாது தவித்து செய்வதறியாது அவன் இருந்த இடம் என வரிசையாக நினைவுகள் எழ, தடுமாறினாள் அவள்…. தன்னிலை மறந்து தலை சுற்றி கீழே விழப் போனவளின் பார்வை எதிரே அங்கே வந்த பாதத்தில் பட்டதுஇது இந்த பாதம்…. இது…. என்றவளின் பார்வை மேலே உயர்ந்த நொடி….

அவளின் ஆதர்ஷ் ராம் நின்றிருந்தான் கண்களில் அவள் மீதான காதலை தேக்கி…. அதை அவளுக்கு உணர்த்தியபடி….

எப்படியிருக்கிறது இந்த வார சீதை-ராம் காதல் நதி பயணம்????... உங்களுக்கு கடுகளவேனும் பிடித்திருக்கிறதா?... செயற்கையாக உள்ளதா ஆதர்ஷ்-சாகரியின் உணர்வுகள், பாடல், மற்றும் எனது இந்த வார பதிப்பு?... தங்களது கருத்துக்கள் எதுவாக இருப்பினும் தெரிவியுங்கள்மீண்டும் அடுத்த வார ராம்-சீதா காதல் நதியில் சந்திக்கலாம்….

தொடரும்

Go to episode # 10

Go to episode # 12

{kunena_discuss:739}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.