(Reading time: 50 - 99 minutes)

 

லே…. லேலேலேஏலேலேலே….லே….

லே…. லேலேலேஏலேலேலே….லே….

உளுந்து விதைக்கையிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கையிலே

நான் அப்பனுக்கு கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டி போனேன்

கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்து போனேன்….”

சூப்பர் சாகரிசூப்பரா பாடுற.. அப்படியே ஆடு…” என்றான் சித்து

ஹ்ம்ம்…” என்றவள் பாடிக்கொண்டே கையில் ஒரு செடியின் நீண்ட இலையின் கிளையை வைத்து ஆட துவங்கினாள்

ஹேய்மயில்நீ ஏன் சும்மா நிக்குற?... நீயும் ரெண்டு ஸ்டெப் போடு….” என்றாள் நந்து

ஹ்ம்ம்சரிசரி…” என்று அவளும் சிரித்துவிட்டு நந்துவையும் கைப்பிடித்து ஆடவைத்துக்கொண்டிருந்தாள்

உளுந்து விதைக்கையிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கையிலே

நான் அப்பனுக்கு கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டி போனேன்

கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்து போனேன்….

வெக்கப்படப்பில் கவுளி கத்த, வலதுபக்கம் கருடன் கத்த

தெருவோரம் நிறைகுடம் பார்க்கவம், மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே

ஒரு பூக்காரி எதுக்க வர, பசும் பால் மாடு கடக்கிறதே

இனி என்னாகுமோஏதாகுமோ….

இந்த சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ?....”

என்றவள் கையில் வைத்திருந்த அந்த கிளையை நெஞ்சோடு சேர்த்து வைத்துக்கொண்டு கண் மூடி அவளின் ராமனை நினைத்தாள்

எவ்வளவு நேரம் அப்படி நினைத்திருந்தாளோ, சட்டென்று மயூரியின் சத்தம் கேட்க நனவுக்கு வந்தாள்

என்னடிபாட்டுல மூழ்கிட்டியா?... வா வா.. திரும்பி வரும் போது மீதி பாட்டை பாடிக்கலாம்வயல் வந்துட்டுவாபாடி ஆடிகிட்டே வந்ததுல நேரம் போனதும் தெரியலைவயல் வந்ததும் தெரியலைவாடி….”

ஹ்ம்ம்வரேன்…” என்றாள் சாகரியும்

பிறகு ஜனாவுக்கும் ராசுவுக்கும் கஞ்சியை கொடுத்துவிட்டு அவர்களும் சேர்ந்து கொஞ்சம் அருந்திவிட்டு சிறிது நேரம் அங்கிருந்து கதை பேசி சிரித்துவிட்டு கிளம்பினர் வீட்டுக்கு பத்து மணி அளவில்….

அண்ணா…. உங்களுக்கே இது அநியாயமா இல்லையாமணி என்ன இப்போஇப்போ போய்என்னை இப்படி நதிக்கரைக்கு கூட்டிட்டு போன்னு அடம்பிடிச்சு கூட்டிட்டு வந்து இப்படி நதியை வேடிக்கைப் பார்த்துட்டு இருக்கீங்களேஉங்களை என்ன தான் செய்ய?...” என்ற அவ்னீஷ் உண்மையில் கோபமாக இருந்தான்….

பின்னே மணி இன்னும் 5.30 கூட தாண்டவில்லைஇந்த நேரத்தில் ஆதர்ஷும் இப்படி செய்திருக்க வேண்டாம் தான்அவனும் என்ன செய்வான்அவள் கண் மூடி வேண்டியது இவனுக்கு தெரிந்ததோ என்னவோ, அந்த நொடி முதல் இவன் தூங்கவில்லைஎப்போதடா 5 மணி ஆகும் என்று காத்திருந்தவன், 5 அடித்ததும் அவ்னீஷை எழுப்பி இந்த நதிக்கரைக்கு வந்துவிட்டான்

டேய்எனக்கு தெரியாதுன்னு தான் உன்னை நான் கூட்டிட்டு வர சொன்னேன்அதான் கொண்டு வந்து விட்டுட்டுல்லகிளம்பு நீ நான் வந்துடுவேன்போ….”

போக சொன்னா எப்படி போறதாம்?...”

எப்படி நடந்து வந்தோமோ அப்படி நடந்து போ….”

ஏன்னாஇப்படி பண்ணுறீங்க?... டெய்லி காலையில வழக்கமா சூரிய உதயத்தை தானே பார்ப்பீங்கஇன்னைக்கு என்ன இந்த நதிக்கரைநல்ல வேளை நாம வீட்டுக்கு பின்னாடியே இது இருந்ததால நான் தப்பிச்சேன்இல்லைன்னா, இப்படி இந்த விடிகாலையில உங்களையும் கூட்டிட்டு நான் அலைஞ்சிருக்கணும் நதியை தேடி…” என்றவன், ஆதர்ஷின் முறைப்பில் அடங்கினான்….

சரிசரிநான் ஓரமா இந்த பெஞ்சில் உட்கார்ந்திருக்கேன்நீங்க பொறுமையா ரசிச்சிட்டு வாங்க…” என்றவன் சற்று தொலைவிலிருந்த அந்த பெஞ்சில் அமர்ந்த சிறிது நேரத்தில் உறங்கி போனான்

ஹேய்சாகரிஎன்னடிஇந்த ஆறு பக்கத்துல நின்னுட்டமணி பத்து ஆகுதுவா போகலாம்…”

இல்லடிகொஞ்ச நேரம் இதுல காலை நனைச்சிட்டு வரேனேப்ளீஸ்…”

ஹேய்என்னடி சின்னப்பிள்ளை மாதிரி…” என்ற மயிலை சித்து தடுத்தான்

மயில்நீதானே சொன்ன, வரும்போது மீதி பாட்டை பாடிக்கலாம்ன்னுசாகரிக்கும் கொஞ்ச நேரம் இங்கே இருக்கணும்னு தோணுதுல்ல, அதனால, கொஞ்ச நேரம் ஆத்தில விளையாடிட்டு போகலாம்…” என்றான் சித்து

ஆமா மயில்உன் ட்ரெஸ் காய வைக்குறதுக்கு அவ பாடி ஆடின்னால்ல, இப்போ அவ இங்கே கொஞ்ச நேரம் இருக்கலாம்ன்னு தானே சொல்லுறாசோஇருக்கலாம்….” என்றாள் நந்துவும்

சரிஓகே.. வாங்கநாம அங்கே உட்காரலாம்எனக்கும் ஆசையாதான் இருக்குவாங்கசாகரி நீ மீதி பாட்டையும் முடிச்சிடு….” என்றபடி நந்து சித்துவுடன் சாகரிக்கு சற்று தள்ளி அமர்ந்தாள் மயூரி

சாகரி ஆற்றின் மேட்டின் மீது அமர்ந்து கொண்டு கால்களை நீரில் துழாவ விட்டாள்

அதே நேரம் ஆதர்ஷும் அவள் போன்றே செய்து கொண்டிருந்தான்

சூரிய உதயம் அப்போதுதான் ஆரம்பித்திருந்தது அவன் இருந்த நாட்டில்அவன் வழக்கம் போல் அதை கண்கொட்டாமல் ரசித்தான்என்ன ஒன்று எப்போதும் அவன் மேலே பார்த்து ரசிப்பான்.. இன்றோ கீழே நீரில் பார்த்து ரசிக்கின்றான்தண்ணீரில் சூரிய உதயத்தின் காட்சியை கண்டு இன்பம் கொண்டவனின் நெஞ்சில் அன்று கோவிலில் அவளை முதன் முதலில் சந்தித்த காட்சியும் அவளை விட்டுப் பிரிந்த காட்சியும் தோன்றியது

புத்தம் புது மலராக, அவள் இருந்ததும், அவள் பேசிய அனைத்தும் அவனுக்கு உவகையாய் இருந்ததும், அவனின் கண்ணுக்குள் அவள் நிறைந்து நிற்பதும், அவளின் குரல் அவனுள் என்றும் குயிலாய் ஒலிப்பதும், அவள் அவனை திரும்பி திரும்பி பார்த்து வலியோடு சென்ற நொடி அவன் உயிர் விட்டு விட்டு போனதையும், நினைத்து பார்த்தவன், அவனையும் அறியாமல் வாய் விட்டே பாடினான்….

அனிச்ச மலரழகே…. அச்சு அச்சு வெல்லப் பேச்சழகே….

என் கண்ணுக்குள்ள கூடுகட்டி காதுக்குள்ள கூவும் குயிலே

நீ எட்டி எட்டிப் போகையிலே விட்டு விட்டு போகும் உயிரே….”

கண் மூடி நீரில் கால்களை விட்டு ஆட்டிக்கொண்டிருந்தவள் பாட்டு சத்தம் கேட்க திரும்பி திரும்பி பார்த்தாள்யாரும் இல்லைஆனால் பாட்டு சத்தம் மட்டும் கேட்டது அவளுக்குதூரத்தில் பார்த்தாள், மயூரி நந்து சித்துவுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்…. அவளுக்கு பாட்டு சத்தம் கேட்ட மாதிரி தெரியவில்லை…. எனில் தனக்கு கேட்கும் பாட்டு எப்படி?... எங்கே இருந்து?.... என்று யோசித்தவள், ஆற்றில் முகம் பார்த்தாள்…. அதில் அவளது முகம் தெரியாமல் அவளது ராமனின் முகம் தெரிந்தது….

கோவிலில் அவள் அவனை விட்டு செல்லும்போது அவன் இருந்த அதே தோற்றத்தில் அவன் தெரிந்தான் நீரில்….

அனிச்ச மலரழகே…. அச்சு அச்சு வெல்லப் பேச்சழகே….

என் கண்ணுக்குள்ள கூடுகட்டி காதுக்குள்ள கூவும் குயிலே

நீ எட்டி எட்டிப் போகையிலே விட்டு விட்டு போகும் உயிரே….”

எதிரே தெரியும் அவனின் பிம்பத்தை இமைக்காமல் பார்த்தவள் ஆனந்தத்தின் எல்லையில் இருந்தாள்பிம்பமாய் இருக்கும் அவனின் உருவமே அவளுக்கு இத்தனை பேரின்பமாய் இருக்குமென்றால் அவனை நேரில் தரிசித்தால்?????... ஹ்ம்ம்….

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.