(Reading time: 20 - 39 minutes)

 

'ரு. இரு. ஒவ்வொரு கேள்வியா கேளு. ஒண்ணுமில்லை எப்பவும் வர ஆஸ்துமா அட்டாக். நீ இப்போ வர வேண்டாம். உன் கிட்டே நான் நிறைய பேசணும். நாளைக்கு மீட் பண்ணலாம்.

தன் மனதில் இருப்பதை அவனிடம் சொல்லும் சூழ்நிலை இப்போது இல்லை என்று புரிந்தது அவளுக்கு.

'நாளைக்கு காலையிலே நான் திருச்சி போகலாம்னு இருக்கேன் விஷ்வா. மண்டே காலேஜ் லீவ். அப்பாவை பார்க்கணும் போலே இருக்கு. செவ்வாய்கிழமை திரும்ப வந்திடுவேன்.' என்றாள் அவள்.

அப்பாவிடம் இதுவரை எதையும் மறைத்து பழக்கம் இல்லை. பரத்தை பற்றி அப்பாவிடம் சொல்ல வேண்டும் என்று மனம் தவித்துக்கொண்டே இருக்கிறது,

'சரி நீ போயிட்டு வா நாம அப்புறம் பேசுவோம்'. என்றவன் 'ஹேய்! நீ திருச்சிதானே போறே? எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா.?

சொல்லு விஷ்வா.

என் தங்கை திருச்சியிலே இருக்கா உனக்கு தெரியுமில்ல. அவளுக்கு யூ.எஸ்.லேர்ந்து சில gifts வாங்கிட்டு வந்தேன். என் வீட்டிலே பேக் பண்ணி டேபிள் மேலே வெச்சிருக்கேன், எடுத்திட்டு போய் அவகிட்டே கொடுத்திடுறியா? நேர்லே போலாம் போலாம்னு பார்க்கிறேன் ஏதாவது வேலை வந்திடுது. நான் நெக்ஸ்ட் வீக் வரேன்னு சொல்லு.

'ஓகே' என்றாள் அபர்ணா. நாளைக்கு காலையிலே போகும் போது எடுத்துக்கறேன். நானும் உன் சிஸ்டரை பார்த்ததே இல்லை. போய் பார்த்திடுவோம். அவ போன் நம்பர் மட்டும் கொடு.

அந்த எண்ணை குறித்துக்கொண்டு அழைப்பை துண்டித்தாள் அபர்ணா.

லுவலகத்திலிருந்து நேரே இங்கே வந்து விட்டிருந்தான் விஷ்வா. கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த அலுவலக அக்சஸ் கார்டை கூட கழற்ற வில்லை அவன். அதை கழற்றி அங்கே இருந்த ஒரு மேஜையின் மீது போட்டான்..

அபர்ணாவின் குரல் கேட்டதிலிருந்தே மனம் கொஞ்சம் லேசானது போல் இருந்தது 'புத்தகத்தில் ஆழந்திருந்த இந்துவை நோக்கி திரும்பியவன் நீ வேணும்னா தூங்குடா. நான் அம்மாவை பார்த்துக்கறேன். இப்போதான் காய்ச்சல் வந்து சரி ஆகி இருக்கு. உனக்கும் டயர்டா இருக்கும்.'

அவன் அக்கறை ரொம்பவே பிடித்திருந்தது இந்துவிற்கு.' அத்தையின் கட்டிலுக்கு எதிர்ப்புறம் இருந்த இன்னொரு படுக்கையில் படுத்தவள்.....

'விஷ்வா......' என்றாள்

ம்?

நான் உன் கையை பிடிச்சுக்கவா?

பச். பேசாம தூங்கு..

இன்னைக்கு ஒரு நாள் விஷ்வா. உன் கையை பிடிச்சிட்டு தூங்கினா மனசுக்கு நிம்மதியா இருக்கும். ப்ளீஸ் விஷ்வா....

அவள் கெஞ்சலை மறுக்க முடியவில்லை அவனால். இரண்டு கட்டிலுக்கும் நடுவில் நாற்காலியை போட்டுக்கொண்டு அமர்ந்தான்.

அவன் கையை தனது இரண்டு கைகளுக்கும் நடுவில் வைத்துக்கொண்டு அப்படியே கண்களை மூடிக்கொண்டாள்.

ஒரு கை இந்துவின் கைகளுக்குள், மற்றொரு கை தனது தாயின் கை மீது. கண்களை மூடிக்கொண்டு நாற்காலியில் சாய்ந்தான். அந்த நொடி அப்படியே நீடித்துக்கொண்டே போக வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு.

ரவு மணி ஒன்று இருக்கும்.

தனது அன்னையின்  சின்ன அசைவில் சட்டென விழித்துக்கொண்டான் விஷ்வா.

சுவாசத்துக்கு தவித்துக்கொண்டே தடுமாறிய குரலில் அவர் உதடுகள் மெல்ல முனகின க...ண்...ணா.... மு...டிய....லைடா... எ...ன்னாலே....

குரல் எழுப்பவில்லை விஷ்வா. மங்கலான இரவு விளக்கின் ஒளியில் அவர் மெல்ல திறந்த அவர் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை .

மெல்ல நகர்ந்த அவர் கை விஷ்வாவின் கையை பற்றிக்கொண்டது. ஒரு ஆணின் கை என அவர் உணர்ந்துக்கொண்டிருக்க வேண்டும். 'க... க..ண்..ணா.... வந்.....துட்டி.....யா? என்றார்.

இந்து மெல்ல எழ அவளை கையமர்த்திவிட்டு குரலை கொஞ்சம் மாற்றிக்கொண்டு சொன்னான் விஷ்வா...'ம்...... இங்கேதான் இருக்கேன் அத்தை.... நீ... தூங்கு...'

த...ண்...ணி... வேணும்டா....

ம். இதோ... எழுந்தவன், ஒரு டம்பளரில் நீரை நிரப்பிகொண்டு வந்தான். அவர் எழுந்துக்கொள்ளவே சிரமப்பட அவர் தலையை தனது மடியில் வைத்துக்கொண்டு அவருக்கு நீரை புகட்டினான் விஷ்வா.

அந்த அரைகுறை வெளிச்சத்தில். மருந்தின் தாக்கத்திலும், அரை உறக்கத்திலும் இருந்தவரால் அது விஷ்வா என்று நினைக்ககூட முடியவில்லை.

தண்ணீரை குடித்து முடித்தவர், 'த...லை ரொ....ம்ப வலி.....க்குதுடா க...க..ண்...ணா...' என்றார்.

'நீ படுத்துக்கோ அத்தை நான் தலையை அழுத்தி விடறேன்'.

கட்டிலில் படுத்துக்கொண்டு, அவர் கண்களை மூடிக்கொள்ள, தனது கண்களில் நீர் சேர அவர்  தலையை மெல்ல அழுத்த துவங்கினான் விஷ்வா.

அந்த இதமான ஸ்பரிசத்தில், அதில் கலந்திருந்த பாசத்தில் சில நிமிடங்களில் அப்படியே உறங்கிப்போனார் மைதிலி. மன நிறைவின் எல்லையில் இருந்தான் விஷ்வா.

காலை ஐந்து மணி. மைதிலி எழுவதற்குள் கிளம்பி விட்டிருந்தான் விஷ்வா.

'அம்மாக்கிட்டே பேசிட்டு போ விஷ்வா' சொன்னாள் இந்து.

'வேண்டாம் இந்துமா. இவ்வளவு நேரம் அம்மாக்கூட இருந்ததே மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. போதும் உடம்பு முடியாத நேரத்திலே அவங்களுக்கு எந்த டென்ஷனும் வேண்டாம். அப்புறமா பேசிக்கலாம்.வரேன்' நகர்ந்தான் விஷ்வா.

நகர்ந்தவன் நின்று இந்துவிடம் திரும்பி வந்தவன் அவள் கண்களை பார்த்து மெல்ல சொன்னான் 'ரொம்ப தேங்க்ஸ்டா நிலாப்பொண்ணு'

காலை எழுந்ததும் மைதிலி கொஞ்சம் தெளிந்திருந்தார். அவர்  கேட்ட முதல் கேள்வி ' கண்ணன் எங்கே?'

'அண்ணன் பெங்களூர் போயிருக்கரே அத்தை' என்றாள் இந்து.

பெங்களூரா? நேத்து ராத்திரி இருந்தானேமா.

இல்லை அத்தை நேத்து ராத்திரி நான் தான் இருந்தேன். நீங்க கனவு ஏதாவது கண்டிருப்பீங்க. நம்பவே முடியவில்லை அவரால். என் தலையை அழுத்தி விட்டானே என் கண்ணன்.

மதியம் ஒரு மணி. மறுபடியும் கேட்டார் அத்தை 'கண்ணன் நிஜமாவே நேத்து வரலியா?'

'இதோ வந்திட்டேனே கண்ணன்' என்றபடியே அறைக்குள் நுழைந்தான் பரத். திடுக்கிட்டு எழுந்தாள் இந்து.

அத்தையின் அருகில் அமர்ந்தவன் இந்துவை பார்த்து சொன்னான் 'அண்ணன் கிட்டே சொல்லாமல் எல்லா விஷயமும் செய்யற அளவுக்கு பெரிய மனுஷி ஆயிட்டியா நீ. இரு உன்னை அப்புறம் பேசிக்கறேன்.'

அப்படி எல்லாம் இல்லைண்ணா. உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு.... என்னண்ணா திடீர்ன்னு வந்திட்டே....

'அங்கே ஒரு proffessor திடீர்னு இறந்துட்டார். அதனாலே செமினார் கான்செல் ஆகிடுச்சு.' என்றவன் அத்தையின் பக்கம் திரும்பி 'இப்போ எப்படி அத்தை இருக்கே?' என்றான்.

இப்போ பரவாயில்லைடா. நேத்து ராத்திரி உன்னை பார்த்த மாதிரியே இருந்தது கண்ணா' என்றார் அவர்.

அப்படியா...? என்றபடி அவன் நிமிர்ந்த நொடியில் இந்து சட்டென பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொள்ள, அவனுக்குள்ளே ஏதோ ஒன்று சுருக்கென்றது.

மைதிலி சற்று தேறிவிட மாலை வீட்டுக்கு செல்லலாம் என்று சொன்னார் அப்போது அங்கே வந்த ஒரு டாக்டர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.