(Reading time: 7 - 13 minutes)

 

களும் மருமகனும் இறந்த பின்னர் ஒற்றை ஆளாய் பேரனையும் பேத்தியையும் வளர்த்து.. அதுவும் எவ்வளவு கஷ்டங்களுக்கு இடையில்.. பணம் இல்லையெனில் மட்டும் தான் கஷ்டமா என்ன? அதையும் தாண்டி நிறைய உள்ளனவே.....

"ம்ம்ம்ஹ்ம்ம் இன்று இந்த நினைவுகள் கூடாது" என்று முனுமுனுத்து விட்டு,

"டேய் நந்து சீக்கிரம் கிளம்பு டா ஐயர் கூப்பிடுகிறார் பார்" என சொல்லி விட்டு மத்த வேலைகளை கவனிக்க சென்றார்.

கொஞ்சமாக கொஞ்சமாக கூடம் வர தொடங்கி மண்டபம் நிறைந்து வழிந்தது. பின்னே? பெரிய வீடு கல்யாணம் ஆயிற்றே..

ந்தா வந்து மனையில் அமர்ந்து ஓமம் வளர்த்து ஐயர் சொன்னவற்றை செய்தவாறு அவர் சொன்னவன் அவ்வபோது அவள் வருகிறாளா என மணமகள் அறை பக்கமே பார்த்து கொண்டிருந்தான்.

பேரனை பார்க்க வெடிக்காய் தான் இருந்தது..

"பார்த்தாயா கணக்கு இந்த பையனை" என தன் வீடு கணக்கு பிள்ளையிடம் சொல்லி சிரித்தார்.

அவன் பொறுமையை வெகுவாக சோதித்த ஐயர் இறுதியில் பெண்ணை அழைத்து வர சொல்ல, தங்கையும்  அவள் தோழிகளும் புடை சூழ

அடர்ந்த சிவப்பு நிறத்தில் தங்க சரிகைகளால் மேனி எங்கும் செய்திருந்த கொடியும் பூவும் போன்ற நேர்த்தியான வேலைப்பாடுடன் கூடிய புடவையில்...

அவனின் அம்மாவின் நகைகள் அனைத்தும் அவள் அழகுக்கும் அழகு சேர்க்க கழுத்தில் அதே சிவப்பு நிற ரோஜா மாலையுடன் சற்றே தலை குனிந்தவாறு நடந்து வந்த பூலோக தேவதையை பார்த்தவன் மெய் மறந்து போனான்.

அப்போதே ஓடி சென்று அவளை இறுக அணைத்து கொள்ள வேண்டும் போல எழுந்த ஆவலை மிகவும் முயன்று அடக்கினான்.

அருகில் வந்து அமர்ந்தவளை தன் விரல்களால் யாரும் அறிய வண்ணம் சீண்டியவன் அவள் சற்று நகர்ந்து அமரவும் குறும்பாய் புன்னகைத்தான்.

"அண்ணா வழியுது"

"டேய் போதும் டா இது விடியோவிலயும் வரும், கொஞ்சம் அடக்கி வாசி"

என்ற கேலிகளை புறம் தள்ளி அவளையே பார்த்திருந்தான்.

ஐயர் சம்பிரதாயங்களை முடித்து ருத்ராவிடம் தாலியை கொடுத்து அனைவரிடமும் ஆசி பெற்று வர சொல்ல மனம் நிரந்த மகிழ்ச்சியுடன் சென்றாள்.

திரும்பவும் அவள் மேடைக்கு வர, வெளியே வேகமாய் வந்து நின்ற காரில் இருந்து இறங்கியவனை கண்டு ருத்ராவிற்கும் பாட்டிக்கும் வியப்பும் சந்தோசமும் தோன்றியது.

ஐயர் கையில் தாலி இருந்த தட்டை கொடுத்து விட்டு அர்ச்சதையை தானும் எடுத்து கொண்டு வந்தவனுக்கும் கொடுக்க எடுத்து சென்றாள்.

அப்போது தான் அவனை பார்த்த நந்து முகம் சுருங்க உடனே மலர்ந்து சிரித்தான்.

ஐயர் "கெட்டிமேளம் கெட்டிமேளம்" என சொல்ல

அனைத்தையும் சட்டை செய்யாமல் வந்தவன் நாதகுமரன் தாளை கைகளில் எடுக்கும் முன் அவன் எடுத்தான் 

"மாங்கல்யம் தந்துனா.... "  என தொடங்கிய ஐயர் நிறுத்தி அவனை பார்க்க அவரிடம் திரும்பி ஒரு பார்வையை செலுத்தியவன் அவளை நோக்கி குனிந்தான்...

ஐயர் மந்திரத்தை தொடர...

அனைவரும் சுதரிக்கும் முன் அவள் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு விட்டிருந்தான்..

அதிர்ச்சியுடன் விழி நிமிர்த்தி பார்த்தல் ஸ்ரவந்தி....

தொடரும்…

Episode # 02


{kunena_discuss:804}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.