(Reading time: 13 - 25 minutes)

 

ல்லப்பா, போன மாசம் நாங்க முடிச்சுக் கொடுத்த ப்ராஜெக்ட் maintenanceக்கு அந்த கம்பெனிலேர்ந்து என்னைக் கேட்டிருக்கா.  மணி சார் இந்தக் கம்பெனி வழியா சிங்கப்பூர் வேலைக்குப் போகணும்ன்னா அந்த டீம்ல இருந்துதான் ஆகணும்ன்னு சொல்றார்.  டிசம்பர் பதினஞ்சுக்கு மேலதான் ரிலீவ் பண்ண முடியும்ன்னு சொல்லிட்டார்.  நடுல கல்யாணத்தும்போது வேணா ஒரு 2 வாரம் லீவ் எடுத்துக்கோன்னு சொல்றார்.  என் முடிவு என்னவோ அதை திங்கக்கிழமைக்குள்ள சொல்ல சொல்லி இருக்கார்ப்பா.”

“ஏண்டி கல்யாணம் ஆன உடனேயே நீ ஒரு இடம், அவர் ஒரு இடம்ன்னு இருந்தா நன்னாவா இருக்கும்.  அதுவும் இல்லாம, ரெண்டு வாரம்தான் லீவுன்னா அவாத்துக்குப் போன உடனேயே வேலைக்குப் போறா மாதிரி இருக்குமே.”

“அது கரெக்டுதான்ம்மா.  நான் வேணா கௌஷிக் கிட்ட என்ன பண்ணலாம்ன்னு கேக்கட்டாப்பா.”,  கௌரி மறுபடியும் தன் அம்மாவைப் பேச விட்டால் எங்கே வேலையை விட சொல்வார்களோ என்று தன் அப்பாவை பேச்சுக்குள் இழுத்தாள்.

“நீ நேரடியா கௌஷிக் கிட்ட இதைப் பேசினா நன்னா இருக்குமா தெரியலையே  கௌரி.  நம்ம மொதல்ல பத்மநாபன்கிட்ட விஷயத்தை சொல்லலாம்.  அவர் என்ன சொல்றாரோ அந்த மாதிரி செய்யலாம்.  அவரே கௌஷிக் கிட்டதான் பேச சொல்வார்.  இருந்தாலும், அவரண்ட மொதல்ல கேட்டுண்டு அப்பறம் பண்றது நல்லது.  அப்பறம் கௌரி நீ உன்னோட மைன்டை  ஓப்பனா வச்சுக்கோ.  ஒருவேளை அவா வேலையை விட்டுட்டு அங்கப் போய் தேடிக்கலாம்ன்னு சொன்னா அதையும் ஏத்துக்கத் தயாரா இருந்துக்கோ.”

“என்னப்பா இப்படி சொல்றேள்.  முழுக்க முழுக்க நான் பண்ணின ப்ராஜெக்ட்ப்பா அது.  இப்போ திடும்ன்னு விடணும்ன்னா அவாளுக்கும் கஷ்டம்ப்பா.  ஒரு மாசம் கூட இருந்தேன்னா அவாளுக்கு ஈஸியா இருக்கும்.”

“நான் அப்படிதான் நடக்கும்ன்னு சொல்லலை கௌரி.  அப்படியும் நடந்தா அதையும் ஏத்துக்கோன்னுதான்  சொல்றேன்.  கரியரா, வாழ்க்கையான்னு வர்றச்ச எங்கள மாதிரி பெத்தவாளோட சாய்ஸ் வாழ்க்கைதான்.”

“என்னப்பா பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசறேள்.  நானும் வேலைதான் முக்கியம், கல்யாண வாழ்க்கை ரெண்டாம் பட்சம்ன்னு சொல்லலை.  நாளைக்கே ஏதோ ஒரு சூழ்நிலை.  வேலையை விட்டுதான் ஆகணும்ன்னா கண்டிப்பா செய்வேன்ப்பா.  அதெல்லாம் முடியாது.  எனக்கு இதுதான் முக்கியம் அப்படினெல்லாம் சொல்ல மாட்டேன்.”

“அது போறும்மா.  இப்போ இருக்கற நிறைய பேர் வேலையைப் பார்த்துண்டு வாழ்க்கையை விட்டுடறா.  அந்த மாதிரி நீ பண்ணாத.  சரி நான் இப்போவே சம்மந்தி ஆத்துல கேட்டுடறேன்.”

“சரிப்பா, நீங்க பேசிட்டு சொல்லுங்கோ.  அப்புறம் என்னப் பண்றதுன்னு யோசிக்கலாம்.”

ராமன் பத்மநாபனுக்கு போன் செய்ய, “ஹலோ,  ராமன் சொல்லுங்கோ எல்லாரும் எப்படி இருக்கேள்.  என்ன திடீர்ன்னு இந்த நேரத்துல போன்?.”

பத்துவிடம் ராமன்  கௌரி ஆபீசில் நடந்த விஷயத்தைக் கூற,  “இதுல நீங்களோ, நானோ சொல்றதுக்கு எதுவும் இல்லை, ராமன்.  கௌஷிக்கும்,  கௌரியுமே பேசி முடிவெடுக்கட்டும்.  நாளைக்கு ஒண்ணா சேர்ந்து வாழப் போறது அவாதான்.  அதனால வாழ்க்கைக்கு தேவையான முடிவுகளை இப்போலேர்ந்தே சேர்ந்து எடுக்கட்டும்.  அப்பறம் இன்னொண்ணு, உங்களுக்கு ஏதானும் கேக்கணும்ன்னா நீங்க நேரடியாவே கௌஷிக்குக்கு போன் பண்ணிக்கலாம்.  என்னண்ட சொல்லணும்ன்னு அவசியமே இல்லை.  கௌரி எப்படி எங்களுக்கு பொண்ணு மாதிரியோ, கௌஷிக்கும் உங்களுக்கு புள்ளை மாதிரிதான்.  சரியா, நீங்க அவனோட பேசிட்டு என்ன முடிவு பண்ணி இருக்கான்னு மட்டும் சொல்லுங்கோ.  ஆத்துல எல்லாரையும் கேட்டதா சொல்லுங்கோ.”, மறுபடியும் தான் ஒரு நிறைகுடம் என்பதை நிரூபித்தார் பத்து.

“கௌரி, சம்மந்தி நேரடியா, கௌஷிக்கிட்டயே பேசி முடிவெடுக்க சொல்லிட்டார். இப்போவே பேசப் போறியா.  இல்லை வீக் எண்டு சாட் பண்ணும்போது பேசிக்கறியா”. 

“இல்லப்பா மணி என்ன 7.30 தானே இப்போ அங்க 10 மணிதான் ஆறது.  கண்டிப்பா தூங்கி இருக்க மாட்டார்.  நான் பேசிடறேன்.  ஒரு முடிவு தெரிஞ்சுட்டா எனக்கும்  மண்ட குடைச்சல் இருக்காதுப்பா.”

“சரிம்மா நீ போய் பேசு.  ஜானு நான் போய் அந்த finance கம்பெனி application fill up பண்ணி முடிக்கறேன்.  நாளைக்கு ஆபீஸ்லேர்ந்து வர்றச்ச அங்க போயிட்டு வந்துடறேன்”

“சரின்னா.  கௌஷிக்கோட பேசும்போது பார்த்துப் பேசு கௌரி.  இதுதான் என்னோட முடிவுங்கறா மாதிரி அடிச்சுப் பேசாம என்ன பண்ணலாம்ங்கறா மாதிரி கேளு.  சரியா.  நானும் ராத்திரி சமையல் வேலையைப் பார்க்க போறேன்.”

ஹே கௌரி, என்ன இந்த நேரத்துல கால் பண்ணி இருக்க.  மாம்ஸ் நெனப்பு ஜாஸ்தியாப் போச்சா. “

“அய்யே நெனப்புதான்.  நான் ஆபீஸ் பத்தி முக்கியமா உங்களோட ஒரு விஷயம் பேசணும்.  அதுக்குதான் கால் பண்ணினேன்.”

“அதுதானே எங்க என்னோட கொளவிக்கு ரொமான்ஸ்  மூடு வந்துடுத்தோன்னு தப்புக் கணக்குப் போட்டுட்டேன்.  சரி நீ போனை வை.  நான் திரும்பக் கூப்டறேன்.”

கௌஷிக் கால் பண்ண, கௌரி தன் ஆபீஸ் டீம் ஹெட் சொன்னது அத்தனையும் சொல்லி முடித்தாள்.

“ஹ்ம்ம் ஓகே.  அப்படி அவர் சொன்ன உடனே டக்குன்னு உனக்கு மனசுல ஒரு முடிவு வந்திருக்குமே அது என்னன்னு சொல்லு?”

“அது, அது .....”

“இழுக்காம எதுவா இருந்தாலும் சொல்லு கௌரி.”

“இல்லை கௌஷிக்.  இந்த ப்ராஜெக்ட் ஆரம்பிச்சதுலேர்ந்து நான்தான் fullaa பண்ணிண்டு இருக்கேன்.  ஏகப்பட்ட நல்ல பேர் கிடைச்சிருக்கு.  இந்த ப்ரொஜெக்ட்ல 3 அவார்ட் கூட வாங்கி இருக்கேன்.  கார்த்தால அவர் சொன்ன உடனே எனக்கு அந்த நிமிஷம் தோணினது ஓகே சொல்லிடலாம்ன்னுதான்.”

“ஓ சரி.  அப்போ வேற எதைப் பத்தியும் யோசிக்காம சரி சொல்லிடு.”

“அச்சோ இல்லை கௌஷிக்.  அது அந்த நிமிஷம் நினைச்சதுதான்.  அப்பறம் யோசிச்சதுல அது சரியா வராதுன்னு தோணிடுத்து.  கல்யாணம் ஆன உடனேயே நீங்க ஒரு இடம் நான் ஒரு இடம்ன்னு இருந்தா நன்னா இருக்காது இல்லை.”

“இல்லை கௌரி.  அதை அப்படி பார்க்காதே.  என்ன ஒரு ஒண்ணரை மாசம் தனித்தனியா இருக்கப் போறோமோ.  அதுக்காக நீ இத்தனை நாள் கஷ்ப்பட்டது எல்லாம் வீணாப் போக வேண்டாமே.  இந்த வேலை வேண்டாம்ன்னு நீ இப்போலேர்ந்தே வேலையை விட்டுட்டு, இங்க வந்தப்புறம் தேடினாக் கூட உன்னோட திறமைக்கு கஷ்டமே இல்லாம உடனே கிடைச்சுடும்.   ஆனால் உன்னை நம்பி இருக்கறவாளை அது கஷ்டப்படுத்திடும் இல்லையா.  அந்தக் கம்பெனிலேர்ந்தே கேட்டிருக்கானா கண்டிப்பா உன் தேவை அங்க இருக்கறதாலதானே.  சோ எடுத்த வேலையை முடிச்சுட்டு அப்பறம் சந்தோஷமா இங்க வந்து சேரு.  நம்ம வாழ்க்கை இந்த 2 மாசத்தோட முடிஞ்சு போகப் போறதில்லையே.”

“ஆனா இதை எல்லாரும் சரியாப் புரிஞ்சுப்பாளா கௌஷிக்?  நாளைக்கு யாரானும் தப்பா சொலிட்டா கஷ்டம் இல்லையா.”

“எங்கப்பா, அம்மா அண்ட் உங்க அப்பா, அம்மா நாம எடுக்கறதுதான் முடிவுன்னு சொல்லிட்டா.  அப்புறம் அந்தத் தப்பா சொல்றவாளைப் பத்தியெல்லாம் எதுக்கு யோசிக்கணும்.   இதே எனக்கு இந்த மாதிரி கல்யாணத்துக்கு முன்னாடி  வேலை விஷயமா முடிவெடுக்க வேண்டி வந்தா என்ன பண்ணி இருப்பேனோ. அதைத்தான் உனக்கு சொன்னேன்.  நான் உன்கிட்ட கேட்டதே நீ வேற ஏதானும் யோசிச்சுயோ அப்படின்னுதான்.  சோ கவலையை விடு.  பேசறவா எதுக்கு வேணாலும் பேசுவா.”

“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் கௌஷிக்.  என்னைப் புரிஞ்சுண்டு அதுக்கேத்தா மாதிரி பேசினதுக்கு.”

“ஹே என்னது இது தேங்க்ஸ் எல்லாம் சொல்லிண்டு.  நமக்குள்ள  தேங்க்ஸ், சாரி  இந்த மாதிரி மேஜிக் வோர்ட்ஸ் எல்லாம் வரவேக் கூடாது.  I Love you, I Like you.   I want to kiss you ஒன்லி இந்த மேஜிக் வோர்ட்ஸ் மட்டும்தான் allowed.”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.