(Reading time: 18 - 36 minutes)

 

"ராஜகுமாரிக்கு வணக்கங்கள்!நம் நாட்டின் மகாமந்திரி தம்மை காண விழைகிறார்!"

"வருகிறேன் என்று சொல்!"-ஷைரந்தரி அமைதியாக சென்றாள்.மந்திரியின் முன் பிரவேசித்தாள்.

"பணிக்கின்றேன் மந்திரியாரே!"

"நலம் பெறுவாய் மகளே!உனது நாமம் ஷைரந்தரி அல்லவா?"

"ஆம்!"

"நல்லது...தன் தந்தையானவர்,தன்னுடைய விவாஹத்திற்கு ஏற்பாடு செய்ய விழைகிறார் மகளே!"

"..............."

"அதை குறித்து உன் முடிவை ஆலோசிக்க விரும்புகிறார்!"

"சிறிது காலத்திற்கு நான் ராஜகுமாரியாக இருக்கவே விழைகிறேன்!"

"என்னவாயிற்று மகளே?"

"நான் கூறுவது தவறு என்றால் மன்னியுங்கள், இங்கே தவறு ஏதோ நடக்கிறதல்லவா?"-அதைக் கேட்ட மாத்திரத்தில் அதிர்ந்தார் அவர்.

"மகளே?"

"நான் கூறுவது உண்மை தானே?"

"விடை உரைக்க வார்த்தையில்லை மகளே...இங்கு வந்த சில தினங்களிலே நடப்பதை கூறுகின்றாய்!உன் சிந்தனை சரியே!இங்கே பல தவறுகள் நிகழ்கின்றன."

"என்ன?"

"மன்னித்துவிடு மகளே!மன்னரின் உத்தரவின்றி அவற்றை கூற இயலாது!"

"ராஜகுமாரியின் கேள்விக்கு விடையளிப்பது தம்முடைய கடமை அல்லவா?"

"நிச்சயமாக...ஆனால்,நான் மகாராஜாவின் ஆணைக்கு அடிப்பணிந்தவன். அவருடைய உத்தரவின்றி நான் ராஜகுமாரியின் வினாவிற்கு விடையளிக்க இயலாது மகளே!"

"அப்படியென்றால், மகாராஜாவிடம் கூறுங்கள்...

விரைவிலே என்னுடைய கேள்விக்கு விடை வேண்டும்!"-அவர், தலையசைத்துவிட்டு சென்றார்.

"ளவரசிக்கு வணக்கங்கள்!தம்மைக்கான மகாராஜா விழைகிறார்!"

"அவசியம் ஆகட்டும்!"-சிறிது நேரத்தில் மகேந்திர வர்மர் பிரவேசித்தார்.

"மகளே!"

"வணங்குகிறேன் தந்தையே!"

"மங்களம் பெறுவாயாக!"

"என்னைக் காண தாமே வந்ததன் காரணம் ?"

"மந்திரியிடம் நீ கேட்ட கேள்விக்கான பொருள் என்ன ஷைரந்தரி!"

"என் மனம் நிலையில் இல்லை.அதில்,ஏதோ சஞ்சலம் வாட்டுகிறது.இங்கு ஏதோ தவறு நடக்கிறதல்லவா?அது என்ன?என்னிடம் அதை அனைவரும் மறைபதற்கான காரணம் என்ன?"

"மனதில் உள்ள சலனங்களை தியாகம் செய் மகளே!தந்தையாக உன்னுடைய ஆரோக்கியம் எனக்கு அத்தியாவசியமானதே!"

".........."

"உன் கேள்விக்கு விடை தருகிறேன்.நீ என்ன கேட்டாய்?இங்கு தவறு நடக்கிறதா என்று தானே?ஆம்...நடக்கிறது கோட்டையின் உள் பாதுகாப்பாக விளங்கும் பிரஜைகள்.வெளியே தமது உயிரை காக்க பாடுப்படுக்கின்றனர். காரணம்,வித்தியகீர்த்தி என்னும் ஒருவன்.நான் மறைகளையும் கற்று தேர்ந்தவன்.அசாத்தியமான ஆற்றலை கொண்டவன். ஆனால்,தம்முடைய சக்தியை துஷ்பிரியோகம் செய்தான்.பல்லவ தேசத்தின் சாமானிய பிரஜைகளை, பெண்களை,குழந்தைகளை இரக்கமின்றி நரபலி கொடுத்தான்.அதனால், தீயசக்தியின் உறைவிடமானான்.

இதில்,கொடுமை யாதெனில்,எனது சொந்த தங்கையின் மைந்தன் ரணதேவ் வர்மன் அவனுக்கு அடிமையாகி பல துஷ்ட வேலைகளை செய்தான். அதனால்,இந்நாட்டைவிட்டே விலக்கப்பட்டான். அடுத்தாக,மனித இனசேர்க்கையில் பிறக்காத ஒரு பவித்ர கன்னிகையை பலியிட துடிக்கின்றனர்.உன் தந்தை அச்சம் கொள்கிறேன் மகளே!நீ தேவரின் தவத்தில் பலனாய் பிறந்தவள். மஹாதேவனின் புதல்வி.எங்களை ரட்சிக்க வந்த மஹாதேவி நீ! உன்னை வாழ்வுள்ளவரை காக்க உறுதி பூண்டவன் நான்!"

"இவற்றை ஏன் தாம் என்னடத்தில் உரைக்கவில்லை?நான் அவர்களை சந்திக்க விழைகிறேன்."

"விஷபரீட்சை மகளே!என்னுடைய ஒரே வாரிசு நீ!"

"நான் வேள்வியில் உதித்தவள்.தேவர்களின் தவப்பயன் ஆவேன். நீலக்கண்டனின் நெற்றிக்கண்ணின் தீப்பொறி நான்!என் நிழலையும் நெருங்குவதற்கு சக்தி எவரிடமும் இல்லை."

"அறிவேன்...ஆனால்,சிறிது காலம் செல்லட்டும்.உன்னை காக்கும் வியூகமானது,இங்கு வந்து சேர்ந்தப்பின்,தக்க பாதுகாப்போடு ஏற்பாடு செய்கிறேன்."

"என்னை காக்கும் வியூகமா?"

"ஆம்...பார்த்திபன் பாஞ்சாலபுரத்திற்கு வந்து சேரட்டும்!நீ பாஞ்சாலபுரத்தில் அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்?!"

"சரி தந்தையே!"

பார்த்திபனா?யாரவன்?வேள்வியில் உதித்தவளுக்கு பாதுகாவல் அவனா?யாரவன்?அவன்... காண்டீபதாரி அர்ஜீனனுக்கு இணையாவன்,வீரத்தில் மாவீரன் கர்ணன்.புது சரித்திரத்தை எழுதும் சக்தி பெற்றவன். பாஞ்சாலபுரத்தின் கங்கை நதியில் இருந்து எழுந்தான்.

"மாவீரர் பார்த்திப வர்மருக்கு வணக்கங்கள்!"

"வந்த செய்தியை கூறு மித்ரா!"

"காஞ்சியின் அரசர், தங்கள் தாய்க்கு ஓலை அனுப்பி இருக்கின்றார்!"

"என்ன ஓலை?"

"மன்னிக்கவும்...இச்செய்தி மட்டுமே என்னிடத்தில் வந்தடைந்தது.ஓலை செய்தியை மகாராணியாரே அறிவார்கள்."

"நீ செல்லலாம்!"-பார்த்திபனின் மனதில் குழப்பம் குடிக்கொண்டது. அரண்மனைக்கு சென்று தன் தாயிடமே குழப்பத்தை நிவர்த்தி செய்ய தீர்மானித்தான்.

அரண்மனையில்...

"தாயே!"

"பார்த்திபா!வா மகனே!"

"முக்கிய செய்தி ஏதேனும் உண்டா?மாதா?"-புரிந்துவிட்டது அனைத்தும் அவருக்கு!!!

"விஷமக்காரனடா நீ!!!உனது தாய்க்கும் ஒற்றர்களை போட்டு விட்டாயா?"

"என்னோடு இருப்போர் நலனே எனக்கு பிரதானம் என்னும் பட்சத்தில் ஒற்றர்களை அமைப்பதில் தவறொன்றும் அல்லவே?"

"உன்னையா என்னால் வெல்ல முடியும்?கூறும் வார்த்தைகளை நன்கு கவனித்துக் கொள் பார்த்திபா! நீ ஷைரந்தரியை அறிவாய் அல்லவா?பல்லவ தேசத்தின் ராஜகுமாரி!வேள்வித்தீயில் பிறந்தவள்.எனது தமையனின் பிரதான வாரிசு!"

"அறிவேன்???"

"அவள் பாஞ்சாலபுரத்திற்கு பிரவேசிக்க இருக்கிறாள்."

"காரணம்?"

"இங்கே இருள் நீங்க!"

"இருளா?"-அனைத்தையும் சுருக்கமாக கூறி முடித்தார்.

"இங்கே நடக்கும் அமானுஷ்யங்களை தடுத்து நிறுத்த ஒரு ஸ்திரீ பிறந்திருக்கிறாளா?வேடிக்கை..."

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.