(Reading time: 18 - 36 minutes)

 

"நீ இன்று வித்தியகீர்த்தியை சந்திக்க வேண்டாம் என்று எண்ணுகிறேன்!"

"காரணம்?"

"உனது பாதுகாப்பிற்கு நான் உன்னோடு இருக்க இயலாது!எனக்கு உன் தந்தையிடமிருந்து ஓலை வந்துள்ளது.நான் செல்ல வேண்டும்!"

".............."

"உனது நலனுக்காக கூறுகிறேன்.எனது வாக்கினை ஏற்பாயா?"-ஷைரந்தரி நிமிர்ந்து அவன் கண்களை பார்த்தாள். சொல்ல முடியாத தாபம்,ஏக்கம் அவனிடத்தில் தெரிந்தது.

"............"

"பதில் கூறு கன்னிகையே!"

"தம் வாக்கினை ஏற்கிறேன் இளவரசே!"

"உத்தமம்...விரைவிலே உனது விருப்பத்தை நிறைவேற்றுவேன்!"

"ஆகட்டும் அரசே!தாம் கவனமாக சென்று வாருங்கள்!"-பார்த்திபன் சிரித்தப்படி,

"எனக்காக துடிக்க சில இருதயங்கள் இருக்கும் வரையில் எனக்கு எந்த தீங்கும் நேராது! கவலை கொள்ளாதே!"

"ம்..."-பார்த்திபன் அவளை பிரிய மனமின்றி விலகினான்.

ஆனால்,விதியின் வசத்தில் இருந்து தப்பியவர்கள் எவரேனும் உண்டோ?

அன்று ஆலயத்திற்கு செல்ல வேண்டும் தாதியர்கள் புடைச்சூழ புறப்பட்டாள் ஷைரந்தரி.அங்கே பலமாய் காற்று வீசியது.

"இளவரசி...காற்று நிலையில் இல்லை. திரும்பிவிடலாம் வாருங்கள்!"

"துளசி...என்ன பேசுகிறாய்.?இறைவனை காண வந்து பாதியில் திரும்புவதா?"

"அதற்கில்லை...யுவராஜர் தங்களை பத்திரமாய் பார்த்துக் கொள்ளும்படி கூறினார்!"

"அறிவேன்...நான் அவரிடத்தில் சொல்லி கொள்கிறேன்!"

"ஆகட்டும் இளவரசி!"-ஷைரந்தரி இறைவனை வழிப்பட்டுவிட்டு கங்கை நதி குளத்தில் இறங்கினாள்.

"வந்துவிட்டாள்...காளியின் பலி வந்துவிட்டாள்.ரணதேவ் சென்று ஊரார் முன்னிலையில் அவளது பவித்ரத்தை அழித்து, அவளை பலிப்பீடத்திற்கு இழுத்து வா!"

"அவள்...மகேந்திர குமாரி அல்லவா?அவளை என்னால் எப்படி நெருங்க முடியும்?"

"இன்று...அந்த ஆதிசக்திக்கே தோஷம் பிடித்திருக்கின்ற நாள்! ராகுவானவன் நீச்சம் அடைந்த நாள்.தெய்வ சக்தியை காட்டிலும தீயசக்தி பலம் வாய்ந்த நாள்.உன்னை எதாலும் ஒன்றும் செய்ய முடியாது."

"ஆகட்டும்!"

"ஷைரந்தரி..."

"கூறுங்கள் அத்தை!"

"விரைவிலே அரண்மனை திரும்ப வேண்டும்.வா!"

"அப்படியே ஆகட்டும் அத்தை!"-ஷைரந்தரி அவரோடு சென்றார்.

"நில் மகேந்திர குமாரியே!"-ரணதேவ்வின் குரல் அவளை தடுத்தது.

"ஷைரந்தரி...நிற்காதே வா!"

"நில்!"-அவளைச் சுற்றி நெருப்பு வட்டமிட்டு கொண்டது.

"ஷைரந்தரி!"-ஊரார் அங்கே கூடிவிட்டனர்.ஆனால், ஒருவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

"அடடடடா!திவ்ய பவித்ரம்....பரிசுத்தத்தின் உச்சக்கட்டம்...வேள்வித்தீயில் உதித்தவள்.மகேந்திரனின் வாரிசு...அழகின் சங்கமம்!"-ஷைரந்தரி கனலை கக்கும் பார்வையை அவன் மீது வீசினாள்.

"கொடுமைகளை செய்து கொண்டிருக்கின்ற எங்களை காண வேண்டும் என்று விழைந்தாய் அல்லவா?"

"............"

"இதோ...உன் முன்னே வந்து நிற்கிறேன்.உன்னை காளியின் பாதத்தில் பலியிட வந்துள்ளேன்."-அதிர்ந்தனர் அனைவரும்.

"வீர வசனங்களை நிறுத்து ராஜகுமாரா!இல்லையெனில்,வாழ்வனைத்தும் நரகத்தை அனுபவிப்பாய்!"

"அகங்காரியே! நீ என் சினத்தை தூண்டுகிறாய்."

"துஷ்டனே ரணதேவ் வர்மா! நான் பரிசுத்தத்தின் உச்சமாவேன்.பவித்ரத்தீயில் பிறப்பெடுத்தவள் நான்!உன்னை அழிப்பதற்காக அவதாரம் எடுத்த ஆதிசக்தி நான்!"

"அழிவா?எனக்கா?மகேந்திர குமாரியே!!வரம்பு கடந்து பேசி இருக்கின்றாய்... மரணத்தின் வாயிலில் நிற்கின்றாய் மறவாதே!பரிசுத்தத்தின் உச்சம் அல்லவா நீ?உனது பவித்ரத்தை உன்னிடமிருந்து பறிக்கின்றேன்."-ரணதேவ்,ஷைரந்தரியின் கேசத்தைப் பற்றி இழுத்தான்.வலியில் துடித்தாள் ஷைரந்தரி.

"உனது பவித்ரத்தை நிர்மூலமாக்கி,உன் கன்னித்தன்மையை எனதாக்கி,உன்னை பலியிடுகிறேன் பார்!"-ரணதேவ்,ஷைரந்தரியின் வஸ்திரத்தை பறிக்க இழுத்தான்.ஊரே அழுதது.

"ஷைரந்தரி!"-கதறினர் அனைவரும்.

"மஹாதேவா!"-ஷைரந்தரி.

வானில் பயங்கரமாக இடி இடித்தது.தானாய் பற்றி எரிந்தது அங்கே மூலவராய் அமர்ந்திருந்த சிவலிங்கம்.

வானில் இருந்து இடி மண்ணில் விழுந்து ஷைரந்தரியை சுற்றி நெருப்பு அரனாய் நின்றது.

அங்கே வித்தியகீர்த்தி வந்தான்.

அந்த நெருப்பு அரணை அடக்க ஏற்பாடுகளை செய்தான்.

அணைந்தது.

"ரணதேவ்...ம்..."

"துஷ்டர்களே! நில்லுங்கள்!"

"............."

"நீங்கள் சகல சக்திகளை பெற ஒரு ஸ்திரீயின் பவித்ரத்தை அழிக்க எண்ணம் கொண்டிர்கள் அல்லவா?அந்த சக்தியை பெறுவதற்கு முன் இதோ என் சாபத்தை வாங்கி கொள்ளுங்கள்...மூடனே! வித்தியகீர்த்தி நீ எந்த அறிவுகளை துஷ்பிரியோகம் செய்தாயோ! அந்த அறிவால்,நரக வேதனை அடைவாய்! தலை ஆயிரம் சுக்கலாய் சிதறி மரணிப்பாய்! துஷ்டனே ரணதேவ் வர்மா! நீ ஸ்திரீயின் மங்கலத்தை அழித்ததால்,உன் உடல் முழுதும் வெடித்து செங்குருதி ஆறாய் ஓட மண்ணில் புரண்டு இறுதியில் மரணத்தை வேண்டி ஏற்பாய்!

ஒரு கன்னிகை நிர்மூலமாவதை கண்டு அமைதி காத்த பிரஜைகளே! பரிசுத்தத்தின் உச்சமான என்னை எந்த மண்ணில் அவமதித்தீர்களோ!அந்தப் பூமி தன்னில் இனி கங்கை நதி பாயாது.பஞ்சமானது பாஞ்சாலபுரத்தை சூழும்! இது எனது சாபமாகும். வேள்வியில் உதித்தவள் தரும் சாபம்! மஹாதேவனின் மகள் அளிக்கும் சாபம்! மகேஷ்வரியின் அவதாரம் அளிக்கும் சாபம்!"- ஷைரந்தரி தன் கரங்களை குவித்து,

"மஹாதேவா!"-என்றாள்.உடனே,மண்ணில் இருந்து நெருப்பு அவளை முழுவதுமாக படர்ந்தது.எந்த தீயில் அவதரித்தாளோ?அதே தீயில்,ஐக்கியமானாள்.

அவளின் வாக்கினை ஏற்று கங்கை நதி உள் வாங்கியது.பயிர்கள் கருகி போயின.அகங்கார செருக்கோடு நின்றிருந்த துஷ்டர்கள் இருவரும் அவளின் சாபத்திற்கேற்ப மாண்டனர்.

நடந்த கொடும் நிகழ்வினை கண்டு துடிதுடித்தார் ராஜமாதா.பாவப்பட்ட மண்ணின் வருங்காலத்தை எண்ணி வேதனையுற்றார்.

அப்போது தான் அந்த செய்தி வந்து அவரை முழுதுமாக மண்ணில் சரிய வைத்தது.அது,போருக்கு சென்ற பார்த்திபன் வீர மரணம் அடைந்தான் என்ற செய்தி!!!!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.