(Reading time: 17 - 33 minutes)

 

பெசன்ட் நகரா...? திடுக்கென்றது அவளுக்கு. நேற்று மனதில் எழுந்த சந்தேகம் ஊர்ஜிதமாகிறதோ? அங்கிருந்த நாற்காலியில் அப்படியே அமர்ந்தாள் அபர்ணா.

யார்? யார்? இருப்பாங்க அங்கே.?

எங்க அம்மா, தாத்தா இருப்பாங்க. அந்த கடன்காரன் இருந்தா இருப்பான்.

அவனது அந்த பதிலுக்கும் அவளுக்குள்ளே அதிர்வலைகள். நான் நினைத்தது சரிதானோ?.

fire accident என்கிறானே காலையில் பரத் வீட்டில் அதுதானே நிகழ்ந்தது? சிலையாகிப்போயிருந்தாள் அபர்ணா

என்ன அப்பூ அப்படியே உட்கார்ந்திட்டே. போய் பார்த்திட்டு வரியா?

ம். என்றாள் அவள். ஆனால் அவள் மனம் சுழன்று கொண்டே இருந்தது. என்ன நடக்கிறது என்னை சுற்றி?

ஹேய்... பதில் சொல்லு அப்பூ என்றான் விஷ்வா பதற்றம் நிறைந்த குரலில்.

என்ன பதில் சொல்வதாம் அவனிடம். மௌனமாய் அமர்ந்திருந்தாள் அபர்ணா.

அந்த நேரத்திலும் அவள் மனதில் எழுந்த அதிர்ச்சியையும் மீறி, அவன் தவிப்பும், கவலையும் அவளுக்கு சின்ன நம்பிக்கையை கொடுக்கத்தான் செய்தது. சுதாகரன் சொன்னது சரிதானோ? விஷ்வாவின் மனம் மறுபடியும் ஒரு பெண்ணால் மலறதுவங்கி இருக்கிறதா என்ன?

எனக்கு பயமா இருக்கு அப்பூ...

மெல்ல புன்னகைத்தாள் அபர்ணா. 'உன் மாமா பொண்ணுக்கு எதுவும் ஆகலை. நல்லா இருக்கா. போதுமா?

எப்படி  சொல்றே?

அது... அது வந்து... மனதிற்குள் ஏதோ ஒன்று அவளை எதையும் சொல்லவிடாமல் தடுத்தது. வேண்டாம் இப்போது அவனிடம் எதுவும் சொல்ல வேண்டாம். முதலில் அவன் திருமணம் நல்லபடியாக நடக்கட்டும்.

'அது.. வந்து என் மனசு அப்படி சொல்லுது. என் மனசு சொல்றது எப்பவும் சரியா இருக்கும்'. சமாளித்தாள் அபர்ணா.

ஹேய்...இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. நீ போய் பார்த்திட்டு வர முடியாதா அப்பூ.?

முடியாம என்ன விஷ்வா? கண்டிப்பா போய் பார்த்திட்டு வரேன் எழுந்தாள் அவள்.

என்னனு சொல்லிட்டு அவங்க வீட்டுக்குள்ளே போவே நீ? இந்து friendன்னு சொல்லிட்டு உள்ளே போறியா? எதுவும் ப்ராப்ளம் வருமா அப்பூ?

அந்த வீட்டுக்குள் எந்த நேரத்திலும் நுழையும் உரிமை எனக்கு இருக்கிறது சொல்லிக்கொள்ளவில்லை அவள்.

உனக்கு ஏன் அந்த கவலையெல்லாம். அது என் ப்ராப்ளம் நான் பார்த்துக்கறேன். ஓகேவா?

நீ நடு நடுவிலே போன் பண்ணாதே. நான் போய் பார்த்திட்டு போன் பண்றேன். முடிஞ்சா அவளையும் பேச வைக்கிறேன். சரியா? அவங்க வீட்டு அட்ரஸ், இந்து நம்பர் எல்லாம் கொடு. வாங்கிக்கொண்டாள் அவள்.

தனது ஸ்கூட்டியை கிளப்பிக்கொண்டு நகர்ந்தாள். வண்டி பெசன்ட் நகரை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்க, மனதின் ஓரத்தில் சின்னதாய் ஒரு நப்பாசை. ஒரு வேளை  என் சந்தேகம் தப்பாக இருக்குமோ.?

விஷ்வா கொடுத்த முகவரியை நோக்கி சென்றாள் அவள். பெசன்ட் நகரை அடைந்து அந்த தெருவுக்குள் நுழைந்த போது அந்த சின்ன நப்பாசையும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போனது.

அந்த வீட்டு வாசலில் வந்து நின்ற போது, இதயம் சுக்கு நூறாய் போனதைப்போன்றதொரு உணர்வு.

எங்கே மாட்டிக்கொண்டேன் நான்? நட்புக்கும் காதலுக்கும் நடுவிலா? அப்படியே நின்றிருந்தாள் அபர்ணா.

இந்துவிடம் போய் பேசவேண்டும். அவளையும் என் நண்பனையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைக்கவேண்டும். யாரை எதிர்த்துக்கொண்டு? என்னவனை எதிர்த்துக்கொண்டா?

செய்வதறியாது அந்த வீட்டையே பார்த்தப்படி நின்றிருந்தாள் அபர்ணா. 

தொடரும்...

Go to episode # 10

Go to episode # 12

{kunena_discuss:726}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.