(Reading time: 14 - 28 minutes)

 

ல்லை கௌரி, இது கல்யாணம் பண்ணப்போற  எல்லா அம்மா, அப்பாக்கும் வர்ற வருத்தம்தான்.  கல்யாணம் ஒரு குறையும் இல்லாம நடக்கணுமேன்னு.  இந்தக் கவலை உன்னை கௌஷிக் ஆத்துல கொண்டு போய் விடற வரை இருக்கும்.  ஒருத்தருக்கும் ஒரு மனக்குறையும் இல்லாம நடத்தணும் இல்லையா.  அதுதான் அப்பாக்  கவலையா இருந்தார்.  வேற ஒண்ணும் இல்லை.”, என்று பதில் கூறினாள்.

“ஓ சரிம்மா.  அப்பாவைக் கவலைப்பட வேண்டாம்ன்னு சொல்லு.  கௌஷிக் ஆத்துல அப்படி யாரும் தப்பா பேசிட மாட்டா.  அப்படியே பேசினாலும், கௌஷிக் அப்பா எல்லாரையும் சமாளிச்சுடுவார்.  அதனால தைரியமா இருக்க சொல்லு.  அப்பறம் நான் வர்றச்ச ஏதோ கணக்குன்னு பேசிண்டு இருந்தேளே. என்ன அது?”, விடாமல் கேட்டாள் கௌரி.

“ஹ்ம்ம் ஆமாமா, நீ வரும்போதுதான் மொத்தப் பணத்தையும் கணக்குப் போட்டு எது எதுக்கு எத்தனை எத்தனை செலவு பண்ணனும்ன்னு பேசிண்டு இருந்தோம்.  நீ அப்போதான் உள்ள நுழைஞ்ச.  நீ இருக்கும்போது பேசினா, இதுக்கு அத்தனையா, எதுக்கு வீண் செலவு வேண்டாம்ன்னு ஏதானும் குதர்க்கமா சொல்லுவ, அதுதான் அப்பா பேசறதை நிறுத்திட்டார்.”, ஓரளவு பதில் சொல்லி பெண்ணை சமாளித்தார் ஜானகி.

“ஹ்ம்ம் அம்மா, கல்யாணத்துக்கு எது ரொம்ப அவசியமோ அதுக்கு மட்டும் செலவு பண்ணுங்கோ போறும்மா.  தேவை இல்லாம இழுத்து விட்டுக்காதீங்கோ.  நான் கல்யாணம் ஆகிப் போய்ட்டா  ஹரிக்கு வேலை கிடைக்கறவரை அப்பா ஒருத்தர் சம்பளத்துல சமாளிச்சாகணும்.  அதுக்குதான் சொல்றேன்.”

“இல்லை கௌரி.  வீண் செலவு எதுவும் பண்ணப் போறதில்லை.  அதனால நீ இந்தக் கவலை எல்லாம் படறதை விட்டுட்டு சந்தோஷமா இரு.  அப்பறம் ஹரிக்கு காம்பஸ்ல வேலை கிடைச்சுடுத்து.  நீ வந்த உடனே சொல்லணும்ன்னு வெயிட் பண்ணிண்டு இருந்தான்.  அதுக்குள்ள பேச்சு மாறிப் போச்சு.”

“ஹே சூப்பர்மா.  எந்தக் கம்பெனில கிடைச்சிருக்கு.  சரி நீங்க போங்கோ.  நான் டிரஸ் மாத்திண்டு வந்து அவனன்டையே கேட்டுக்கறேன்.”

டிரஸ் மாற்றி ஹாலிற்கு வந்த கௌரியை ராமன் ஐயோ இவ திரும்பியும் நம்மளைக் கேள்வி கேப்பாளோ என்று திகிலுடன் பார்க்க, ஜானகி கண்ணாலேயே அவரை ஆறுதல் படுத்தினார்.

“அப்பா நீங்க ஏதோ என் கல்யாணம் நன்னா நடக்கணும்ன்னு ரொம்பக் கவலைப்படறதா அம்மா சொன்னா.  அதெல்லாம் கவலையே படாதீங்கோப்பா.  சூப்பரா  நடக்கும்.”, என்று கூற, அந்தக் கடவுளே வந்து ததாஸ்து சொன்னதைப் போல சந்தோஷப்பட்டார் ராமன்.

“டேய் ஹரி, கங்க்ராட்ஸ்டா.  உனக்கு வேலை கிடைச்சுடுத்தாமே.  உன்னை நம்பி எந்த ஏமாளிடா வேலைக் கொடுத்தான்.  நான் உன்னை பெரிய லெவெல்ல எதிர்பார்த்தேன் ஹரி.  படிப்பு முடிஞ்ச உடனே “விடுகதையா இந்த வாழ்க்கை”, அப்படின்னு படக்குன்னு ஒரு காவித்துணி கட்டிண்டு இமயமலை நோக்கி போய்டுவேன்னு நினைச்சேன்.  ஆனால் இப்படி நீயும் சராசரியா லோக பந்தத்துல சிக்கிண்டுட்டயேடா, சிக்கிண்டுட்டயே .”, என்று போலியாக வருத்தப்பட்டு நெஞ்சை பிடித்துக் கொண்டு இரும வேறு ஆரம்பித்தாள் கௌரி.

“ஹலோ இந்த நடிப்பெல்லாம் நாங்க சிவாஜி பண்ணும்போதே பார்த்தாச்சு.  உனக்கு என்ன  சாமியார்ன்னா அத்தனை இளப்பமா போச்சா.  அதோட மவுசு தெரியாம பேசற.”, ஹரி ராமனின் மனநிலையை மாற்ற கெளரியிடம் வம்பிழுக்க ஆரம்பித்தான்.

“என்னடா சாமியார் வேலைக்கு Brand ambassador மாதிரி பேசற.”

“சாமியார் வேலைதான் இப்போ இருக்கறதுலயே, செம்ம டப்பு  வர வேலை தெரியுமா உனக்கு.  முதலீடே கிடையாது.  நீ முக்கி முக்கி இத்தனை நாள் சேர்த்து வச்சதை எல்லாம் சாமியாராப் போன  ஒரே மாசத்துல நான் சம்பாதிச்சுடுவேன்.  ஒரு நாலஞ்சு சைக்காலஜி புக்ஸ், அப்பறம் பகவத்கீதா, இதையெல்லாம் மட்டும் கொஞ்சம் மனப்பாடம் பண்ணி வச்சுக்கணும் அவ்வளவுதான்.  மொத்தத்துல வாயாலேயே வடை சுட வேண்டியதுதான் சாமியார் வேலை.  சோ அந்த வேலையைக் கிண்டல் பண்ணாத.”

“ஹரி அப்போ இந்த வேலை நம்ம கௌரிக்குதாண்டா சரியா இருக்கும்.  கௌரியானந்தமயி பேருக்கூட பொருத்தமா இருக்குப் பாரு.  கௌஷிக்கும் இவக்கிட்ட இருந்து தப்பிச்சுடுவார்.  அவதான் வாயால வடை என்ன துப்பாகியே சுடுவா.”, ஹரியைப் பின்பற்றி ஜானகியும்  தன் கணவரின் மனநிலையை மாற்ற கௌரியைக் கிண்டல் பண்ண ஆரம்பித்தார். 

“நீயும் அவன்கூட சேர்ந்துட்டியாமா. ஏண்டா ஹரி, இப்போ சாமியார் அப்படிங்கறது ஒரு வேலைல சேர்த்தியாயிடுத்தா, சூப்பர் போ.  சரி அதை விடு.  இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு அதைப் பார்த்துக்கலாம்.  உனக்கு எங்க வேலைக் கிடைச்சிருக்கு, எப்போ சேர சொல்லி இருக்கா.”, என்று கேட்க ஹரியும் அவனுக்கு கேம்பஸில் வேலைக் கிடைத்த விவரத்தை கெளரியிடம் கூற ஆரம்பித்தான்.  

தொடரும்

Episode # 10

Episode # 12

{kunena_discuss:780}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.