(Reading time: 17 - 33 minutes)

07. காற்றாக நான் வருவேன் - Anna Sweety

சில நொடி மௌனம்.

இருவர் மனதையும் முழுமையாய் வியாப்பித்திருந்தது வியத்தகு வகையில் அமைதி.

அடுத்ததாக மனுஷ்யம்.

Katraga naan varuven

மனிதனாய் இருப்பதே எத்தனை அபூர்வமான ஆச்சர்யமான நிலை?

வார்த்தையின்றி வாதடலின்றி அவள் நிலை புரிந்தது அவனுக்கு.

தன் வாகனத்தில் அவளையும் அவள் வாகனத்தையும் ஏற்றியவன் தன் வாகனத்தை செலுத்த தொடங்கும் வரையுமே அங்கு நிலவியது மௌனம்.

“சோ...எனக்கு இது தான் பதில்...?” கேள்வியாக வந்தது அந்த பதில் மஹிபனிடம் இருந்து.

“ம்...”

“எப்போ இருந்து இப்படி....?”

நடந்ததை சொன்னாள் அவள்.

 “இதை நீங்க ...உங்கட்ட எப்படி நம்புற மாதிரி சொல்லனு புரியல....”

“சோ ப்ராப்லம்  சால்வ்ட்...?.”  எதிர்பார்ப்பு ஆக்ரமித்திருந்தது அவன் கேள்வியை. காதல் எதிர்பார்ப்பு.

அவன் ஃபார்சுனர் நின்றிருந்தது.

“ஒரு வகையில்...பட் இன்னும்...சில இருக்குது...இதே மாதிரி இன்னும் என்னவெல்லாமோ நான் ஃபேஸ் பண்ண வேண்டி இருக்கலாம்....அது நம்ம ரிலேஷன்ஷிப்பை எப்படி பாதிக்கும்னு ....குழாப்பமா இருகுது....இந்த கல்யாணம் சரியா வராது மஹிபன்” அவள் காதலுக்கும் குழப்பத்துக்கும் இடையில் நின்றாள். மனம் நிறைப்பது பாவை கொண்ட காதல் மழை.

“எந்த விஷயத்தையும் அதை செய்வது தப்புங்கிறதுக்காக வேண்டாம்னு முடிவு செய்யலாம்....ஆனா  செய்தா ப்ரச்சனை வரும்ங்கிற ஒரே காரணத்துக்காக ஒரு விஷயத்தை வேண்டாம்னு முடிவு எடுக்க கூடாது...

இப்போ நாம கல்யாணம் செய்யலைனா நம்ம வாழ்க்கையில ப்ரச்சனையே வராதா? கடவுளே இந்த கலயாணம் வேண்டம்னு சொன்னார்னா கண்டிப்ப அடுத்து நான் இதை பத்தி பேச மாட்டேன்...பட்  நீயா பயந்துட்டு...” 

அவன் முகம் பார்த்தவள் முகம் தெளிந்திருந்தது. மகிழ்ச்சியின் உதயம்.

வனுக்கு உயிர் திரும்பி வந்தது போலிருந்தது. அவன் முகபாவத்தை பார்த்தவளுக்கு அவன் அதுவரை அனுபவித்த வலி புரிய

“சாரி மஹி....” என்றாள். வலியில் சரி பங்கு சுமந்தவள் அவளுமல்லவா?

அடுத்த நொடி அவனின் இறுகிய அணைப்புக்குள் இருந்தாள்.

அவளுள் தோன்றிய பதற்றம் அவள் மூளையை தொட்டு வாயில் ஒலிவடிவம் பெரும் முன் அணைத்த வேகத்தில் அவளை விலக்கினான் மஹிபன்.

“சாரிடாமா...சாரிடாமா....”என்றவன் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அவளருகில் குனிந்து  கிசு கிசு குரலில்...இதெல்லாம் கூட அவர் பார்ப்பார்ல....”என்றான் தர்மசங்கடமாய்.

அவனது முதல் அணைப்பின் அதிர்ச்சியில் இருந்தவள் அவனது கேள்வியையும் அவன் கேட்ட விதத்தையும், அதில் குடியிருந்த குழந்தைதனத்தையும் ஸ்பரிசித்தவள் வாய் விட்டு சிரித்தாள். அவனுமே அதில் இணைந்து கொண்டான்.

“முதல்ல நம்மை  படைக்கும் போது உங்களுக்குள்ள தான் என்னை செய்து வச்சாராம்....அப்புறமா உங்க விலா எலும்பை எடுத்துதான் எனக்கு உடம்பு செய்தாராம்...சோ ...இதெல்லாம் அவருக்கு டபுள் ஓ.கே...பட் ஆஃப்டர் மேரேஜ்...” குறும்பாக கண் உருட்டி அவள் சொல்ல..

“ஹான்...டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் இவ்ளவு ஈசியா இருக்கே....”.என்றவன் மேலே பார்த்து எனக்கு இந்த டீல் டபுள் ஒகே....”என அங்கீகரித்தான்.

“சோ நமக்கு இப்போ நிறையா வேலை இருக்குது...எல்லாருக்கும் ஃபோன்ல விஷயம் சொல்லிடலாம்.....ஷாப்பிங் இப்போ நைட் முடிச்சிடலாம்.... ....நாளைக்கு வீட்டிலேயே அரேஞ்ச் செய்துடலாம்...அப்புறம அதை ரிஜிஃஸ்டர் செய்துடலாம்.....” என கணக்கிட்டவன்

பாதி புரிந்தும் புரியாமலுமாய் திரு திருவென விழித்திருந்த சுகந்தினியின்  விழி மொழிகளை அசட்டை செய்தவன் அவசரமாக தன் மொபைலில் யாரையோ அழைத்தான்.

“ஆன்ட்டி... நாளைக்கு ஈவ்னிங் எங்க வீட்லயே மேரேஜ் செய்யலாம்னு முடிவு செய்திருக்கோம் உங்களுக்கு ஒன்னும் அப்ஜெக்க்ஷன் இல்லையே...”

என அவன் ஆரம்பிக்கவும் தான் அவளுக்கு புரிந்தது அவன் அழைத்திருப்பது அவளது அம்மாவை என.

“போச்சு..” என இவள் சலித்துக்கொள்ள அவளது அம்மாவும் அவரது வருங்கால மருமகனும் அவசர கல்யாணத்துக்கு அட்டவணை போட ஆரம்பித்தனர்.

மகளிடம் பேசாமலே இணைப்பை துண்டித்தார் தாய். மருமகன் மீது அத்தனை நம்பிக்கை.

“என்ன மஹி இது...உங்களுக்கு இதெல்லாம் விளையாட்டா தெரியுதா என்ன?..” இவள் சிணுங்க

வன் அதற்குள் தனது அண்ணனுக்கு அழைத்திருந்தான். மஹிபனின் ஒரே ரத்த சொந்தம். அவன் விளையாடவில்லை என இவளுக்கு தெளிவாக புரிந்தது அவன் தனது அண்ணனிடம் தனது திடீர் திருமண திட்டத்தை சொன்ன போது.

அவன் பேசி முடிக்கும் வரை பொறுமை காப்பது இவளுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது.

“என்ன மஹி இப்படி செய்றீங்க....கல்யாணம்னா எவ்ளவு வேலை இருக்கும்.....சும்மா எடுத்தோம் கவுத்தோம்னு.....” அவன் இணைப்பை துண்டித்ததும் இவள் பொரிய..

அவனோ அவளை பதிலாக ஒரு பார்வைப் பார்த்தான். கல்லுருக்கும் விழி மொழி. இவள் முதலில் அவனது திருமண கோரிக்கையை ஏற்ற நேரத்தின் அவனது மகிழ்ச்சியும் சமீபத்திய அவளது மறுப்பில் அவன் அவளை தொடர்ந்த விதத்தையும் அதன் உள்காரணமான அவனது தவிப்பையும் அதை தந்த  காதலையும் கண்முன் கொண்டு வந்தது அப்பார்வை.

இவள் தொனி இறங்கி விட்டது  “ அது இல்லை மஹி...எனக்கும்  இதுல எவ்ளவோ ஆசை...கனவு எல்லாம் இருக்குமில்லையா....?”

“இது பாய்ண்ட்...அவன் இயல்பிற்கு வந்திருந்தான். அப்படி என்னல்லாம் இருக்குது சொல்லு...லிஃஸ்ட் போடுவோம்...நளைக்கு எல்லாம் இருகும்..”

“பச்..”

“நம்பி சொல்லிதான் பாருங்களேன் மேடம்ஜி...”

முறைத்தாள். கிண்டலாக என்றாலும் அவன் அவளை எப்பொழுதாவது மேடம் என்றால் சுள்ளென எரிச்சல் வரும் அவளுக்கு....இன்று மேடம்ஜி வேறு

“ம்....எனக்கு நான் கற்பனை செய்து வச்சிருக்கிற ஆரஞ்ச் லேவண்டர் காக்ரா ரிஷப்ஷனுக்கு வேணும்....வெட்டிங் ஃப்ராக் ப்ரின்ஸஸ் டயனாக்குள்ளது மாதிரி வேணும்... வெட்டிங் முடிஞ்சதும் மாத்றதுக்கு  1992 மிஃஸ் வேர்ல்ட் போட்...” பாதியில் இடையிட்டான் பக்கத்திலிருந்தவன்

“ஹேய்.....வெட்டிங் முடிஞ்சதும் ரிஷப்ஷன்தான்டி செல்ல பொண்டாட்டி...”

“ஆங்...”அவனது செல்ல பொண்டாட்டியில் காணாமல் போயிருந்தாள் சுகந்தினி.

வளறிந்த வரை அவன் பக்கா ஜென்டில்மேன் லவர் பாய். காதல் விஷயத்தில் சொல் செயல் எதிலும் எல்லை கோட்டிற்க்கு அருகில் கூட வந்தவன் கிடையாது. மஹிபனின் லீகல் சொலுஷன்ஃஸின் க்ளையண்ட் இவள் வேலை செய்யும் ஃபினான்சியல் ஃபெர்ம்.

தொழில் முறையில் சில சந்திப்புகளுக்கு பின் இவளிடம் மணக்க கோரினான். உடனடியாக  சம்மதம் சொல்லுமளவுக்கு இவளுக்கும் அவன் மீது தலை கால் புரியாத பெரும் காதல் ஒன்றும் அப்போது கிடையாது. ஆனால் பிடிக்கும் என்ற அளவிற்கு அவன் நடவடிக்கைகள் மேல் மரியாதையும் அபிமானமும் இருந்ததுதான். மற்றவகையில் அவன் பொருளாதார உயரம் இவள் மத்திய தர வாழ்க்கைக்கு மிகவும் அதிகம்.

ஆனாலும் அவன் பணத்தை பார்த்து இவள் பயபடும் படி அவனது எந்த செயலும் இருந்தது இல்லை என்றதால் அவன் கோரிக்கையை தன் தாயிடம் தெரிவித்து ஆலோசித்து ஜெபித்து சரியென தோணவும் தான் சம்மதித்திருந்தாள்.

மூன்றாம் மாதம் திருமணம் என தன் சகோதரன் குடும்பத்துடன் இவள் வீட்டிற்கு பெண் கேட்டு வந்த அன்றே பேசி முடித்திருந்தான் மஹிபன். ஆனால் அதன் பின்புமே அவன் மிதவாதிதான் எல்லாவற்றிலும். அடுத்த இவள் குழப்பத்தில் அவனை மறுக்கும் போது இவளுக்கு ஏற்பட்ட வலியில்தான் இவள் எவ்வளவாய் அவனிடம் மனம் இணைந்திருக்கிறாள் என இவளுக்கே புரிந்தது. அந்த அளவிற்கு இருவருமே வெளியரங்கமாய் காதல் உணர்ச்சி அலையில் அதுவரை சுழன்றிருந்தது கிடையாது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.